» »பெங்களூர் போனா கொஞ்சம் இங்கயும் போயிட்டு வந்துடுங்க

பெங்களூர் போனா கொஞ்சம் இங்கயும் போயிட்டு வந்துடுங்க

Written By: Bala Karthik

பெங்களூருவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இராமநகரா மாவட்டத்தில் காணப்படும் சிறு நகரம் தான் கனகப்புராவாகும். இந்த நகரத்தை நாம் அடைய 2 மணி நேரங்கள் ஆகுவதால், உங்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறப்பான சாலைப்பயணமாக இது அமையக்கூடும். இதன் முதலில் "கங்கனஹல்லி" என அழைக்க, பட்டு மற்றும் கிராணைட் உற்பத்திக்கு பிரசித்திப்பெற்ற ஒரு இடமாகவும் இது காணப்படுகிறது. இந்த நகரமானது எண்ணற்ற சாகச கூடாரங்கள் மற்றும் இயற்கையை நோக்கிய அமைதியான சுற்றுலாவிற்கு ஏதுவாக அமைகிறது. ட்ரெக்கிங்க், கூடாரமிடல், பறவை பார்த்தல் மற்றும் இயற்கை உலா என கனகப்புரா பலவித சுவாரஸ்யங்களுக்கு சுற்றுலாத்தளமாகவும் காணப்படுகிறது. இந்த நகரத்தை நாம் பார்ப்பதற்கு ஏதுவாக பருவமழைக்காலங்கள் அமைய, இயற்கையும் சிறந்த மன நிலையை நமக்கு தரக்கூடும்.

பெங்களூருவிலிருந்து கனகப்புரா வரை காணப்படும் வழிகள்

பெங்களூருவிலிருந்து கனகப்புரா வரை காணப்படும் வழிகள்

:

வழி 1: ராஜா ராம்மோகன் ராய் சாலை/ மைசூரு சாலை - NICE பெங்களூரு - மைசூரு விரைவு வழி - தேசிய நெடுஞ்சாலை 209 - கனகப்புரா (1 மணி நேரம் 35 நிமிடங்கள் - 62 கிலோமீட்டர்)

வழி 2: ராஜா ராம்மோகன் ராய் சாலை/ மைசூரு சாலை - NICE பெங்களூரு - மைசூரு விரைவுவழி - தேசிய நெடுஞ்சாலை 275 - பில்லக்கெம்பனஹல்லி - அப்பனக்குப்பே பாலம் - தேசிய நெடுஞ்சாலை 209 - கனகப்புரா (1 மணி நேரம் 45 நிமிடங்கள் - 70 கிலோமீட்டர்)

வழி 3: ராஜா ராம்மோகன் ராய் சாலை/ விட்டல் மல்லைய்யா சாலை - க்ராண்ட் சாலை - ஒசூர் சாலை - தேசிய நெடுஞ்சாலை 44/ தேசிய நெடுஞ்சாலை 48 - சந்தப்புரா - அனேகல் சாலை - ஜிகானி - அனேகல் சாலை - தேசிய நெடுஞ்சாலை 209 - கனகப்புரா (2 மணி நேரம் 30 நிமிடங்கள் - 83 கிலோமீட்டர்கள்)

நாம் செல்லும் வழியில் காணப்படும் இடங்களை இப்போது பார்க்கலாம்.

வாழும் கலைப்பற்றி:

வாழும் கலைப்பற்றி:

நகரத்து நெரிசல் வாழ்க்கையை தவிர்த்து அமைதியை நாட சிறந்த இடமாக வாழும் கலை சர்வதேச மையமானது காணப்படுகிறது. ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் என்பவரால் நிறுவப்பட்ட இந்த யோகா மற்றும் தியான மையம், கனகப்புரா சாலையில் அமைந்து பசுமையாலும் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த ஆசிரமத்தில் விசாலாட்சி மண்டபமானது காணப்பட, ஆன்மீக ஆர்வலர்களுக்காக பயிற்சிகளும் நடத்தப்படுவதால், இங்கே சில மணி நேரங்களை நாம் செலவிடவும் முடிகிறது. தோட்டத்தில் மாலை நேரங்களில் நடப்பதற்கு சிறந்த இடமாக இராதா குஞ் காணப்படுகிறது. இவ்விடம் குருக்களையும் கொண்டிருக்க வளாகத்தில் ஆயுர்வேத மருத்துவமனையையும் கொண்டிருக்கிறது.

PC: Akshay Deokar

 கக்களிப்புரா:

கக்களிப்புரா:


பறவை பார்க்கும் ஆர்வலராக நீங்கள் இருந்தால், அமைதியான மறைந்துக்கொள்வதற்கு ஏதுவான இடமாகவும் கக்களிப்புரா அமைய, பென்னர்ஹட்டாவின் தேசிய பூங்காவின் ஆளுமையையும் கொண்டு காணப்பட, குளிர்காலத்தில் இடம்பெயர்ந்து வரும் கம்பி போன்ற தலையைக்கொண்ட வாத்துகளுக்கு பெயர்பெற்ற ஒரு இடமாகவும் விளங்குகிறது. இவற்றை கடந்து, இந்த ஏரியானது பல துடிப்பான பறவைகளான பொதுவான ஒரு வகை பருந்தான கெஸ்ட்ரல், இந்திய சாம்பல் கொம்புகள் கொண்ட பறவை, சிறப்பு பிடரியைக்கொண்ட இபிஸ் பறவை என பலவற்றையும் காண முடிகிறது. அதனால், தொலை நோக்கியை நீங்கள் எடுத்து செல்ல வேண்டியது அவசியமாக, இந்த கக்களிப்புரா ஏரியை ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் பார்க்க, நம்மால் இடம்பெயர்ந்து வரும் பல பறவைகளையும் இங்கே பார்க்கவும் முடிகிறது.

PC: Vaibhavcho

பிரமிட் பள்ளத்தாக்கு:

பிரமிட் பள்ளத்தாக்கு:


கெப்பிட்டோடி கிராமத்தின் இடப்புறத்தில் கனகப்புரா சாலை அமைந்திருக்க, உலகிலேயே பெரிய தியான பிரமிடை கொண்டிருக்கும் இந்த பிரமிட் பள்ளத்தாக்கு, பிரம்மரிஷி பட்ரிஜி என்பவரால் 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட, இந்த அமைதியான பள்ளத்தாக்கானது மக்கள் அமரும் நடைமேடையாக பயன்பட, தியானத்திற்கும் ஓய்விற்கும் இவ்விடத்தை பயன்படுத்துகின்றனர். இது மாபெரும் சிலையாக இருக்க, இதன் அகலமானது 160 அடியும், உயரமானது 102 அடியாகவும் இருக்க, இதன் நுழைவாயிலின் வலப்புறத்தில் மைத்ரீய - புத்தாவானது காணப்படுகிறது.

PC: Pranabandhu Nayak

பெயிண்ட்பால் மற்றும் குவாட் பைக்கிங்:

பெயிண்ட்பால் மற்றும் குவாட் பைக்கிங்:

கனகப்புரா சாலையில், நீங்கள் பெயிண்ட்பால் மற்றும் குவாட் பைக்கிங்கான மையங்களை காணலாம். விளையாட்டு தனமான பெயிண்ட்பால் அனைத்து தரப்பு வயதினரையும் கவர, குவாட் பைக்கிங் என்பது பைக் பிரியர்களுக்கு பிடித்தமான ஒன்றாக அமைய, சேற்று சாலைகளிலும் பைக்கானது விர்ரென பறக்கிறது.

PC: Harsha K R

பனந்திமாரி பேட்டா:

பனந்திமாரி பேட்டா:

கனகப்புராவின் வலதுப்பக்கத்தில் 13 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் பனந்திமாரி பேட்டாவை (மலையை) மாரிப்பேட்டா அல்லது கரடிப்பேட்டா எனவும் அழைக்கப்படுகிறது. சாகச ஆர்வலர்களுக்கு பிடித்த இடமாக இது அமைகிறது. மலையை அடையும் முன்னரே, பனந்திமாரி ஆலயத்தையும் நீங்கள் கண்டுபிடித்திடலாம். இந்த மலையின் கொஞ்சம் மேல்புறத்தில், ஆலயம் காணப்பட, அழகிய குட்டையும் வலப்புறத்தில் காணப்படுகிறது.

PC: youtube.com

பிலிகல் இரங்கசுவாமி பேட்டா:

பிலிகல் இரங்கசுவாமி பேட்டா:


‘பில்லிகல் பேட்டா' என்றால் இலக்கிய ரீதியாக ‘வெள்ளை மலை' என அர்த்தம்தர, உச்சியின் அருகாமையில் காணப்படும் வெள்ளை நிறப்பாறையால் இப்பெயர் பெற்றதாகவும் தெரியவருகிறது. இங்கே மலையின் உச்சியில் ரங்கசுவாமி ஆலயம் காணப்படுகிறது. கனகப்புரா நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இடப்புறம் காணப்பட, பயணத்துக்கான சிறந்த இலக்காகவும் இது அமையக்கூடும். இங்கே சில பயண சேவைகள் காணப்பட, கூடாரமிடலுடன் கூடிய முழு நேர பயணமாகவும் அமையக்கூடும்.

PC: VikasHegde

சுஞ்சி நீர்வீழ்ச்சி:

சுஞ்சி நீர்வீழ்ச்சி:

கனகப்புராவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பெருமூச்செறிந்து பார்க்க வைக்கும் ஓர் நீர்வீழ்ச்சிதான் சுஞ்சி நீர்வீழ்ச்சி. கனகப்புராவை பார்க்கும் நீங்கள், மற்றுமோர் இரண்டு மணி நேரம் செலவிட இந்த அழகிய காட்சியை கண்டிடலாம். ஆர்காவதி நதியினை தழுவிக்காணப்படும் இந்த வீழ்ச்சி, பாறை தொடர்ச்சிகளால் சூழ்ந்திருக்க, பல இடங்களில் எச்சரிக்கை குறியீடுகளையும் கொண்டிருக்கிறது. இந்த பாறையில் நாம் சிறுப்பயணம் செல்ல, மலையின் உயர்ந்த புள்ளியை நோக்கி நம்மை அழைத்து செல்ல, இங்கிருந்து மாபெரும் வீழ்ச்சியின் அழகை நம்மால் பார்க்கவும் முடிகிறது. நீங்கள் மலிவான விலைக்கொடுத்து உள்ளூர் வழிக்காட்டியாளர்களையும் அழைத்துக்கொண்டு பயணிக்கலாம்.

PC: Srushti K

சங்கமா:

சங்கமா:


சூஞ்சி வீழ்ச்சியோடு இணைந்து அதே சாலையில் காணப்படும் சங்கமாவை நீங்கள் கண்டிட, ஆர்காவதி மற்றும் காவேரி நதி சங்கமிக்கும் இடமாகவும் இது அமைகிறது. இந்த சுற்றுலா தளமானது, பருவமழைக்காலத்தில் நீரால் சூழ்ந்தும் காணப்படுகிறது. அத்துடன் அற்புதமான அனுபவமாக பரிசல் பயணமும் இங்கே சிறப்பாக அமையக்கூடும்.

மேகதாது:

மேகதாது:


சங்கமாவிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது காணப்பட, கன்னடாவின் ‘ஆடு குதித்து விளையாடும்' எனவும் இலக்கியரீதியாக சொல்லப்படுகிறது. இவ்விடத்தின் சுவாரஸ்யமான இதிகாச முக்கியத்துவமாக இப்பெயரானது காணப்படுகிறது. புலியால் ஒரு ஆடு துரத்தப்பட, அந்த ஆடு புலியிடமிருந்து தப்பிக்க குதித்த இடமாக சொல்லப்படுகிறது. அந்த ஆடினை சிவபெருமானாகவும் நம்பப்படுகிறது. இந்த அழகிய இடத்தில் காவேரியானது பாய்ந்தோடுகிறது.

நீங்கள் மூன்றாம் வழியாக செல்வீர்களென்றால், அனெக்கலை சுற்றி சில பார்க்க வேண்டிய இடங்கள் காணப்படுகிறது.

PC: Nagarjun Kandukuru

முத்தையலா மடுவு:

முத்தையலா மடுவு:

அனெக்கலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நீர் வீழ்ச்சிதான் முத்தையலா மடுவாகும். இவ்விடம் சிறிதாக இருக்க, அழகிய நீர்வீழ்ச்சியையும் கொண்டிருக்க, இவ்வழியில் காணப்படும் பாறை வழியாக நீரானது குதித்து ஓடுகிறது. இந்த குதித்தோடும் நீரானது சூரிய வெளிச்சத்தில் பார்ப்பதற்கு முத்துக்கள் போன்று தெரிய, அதனால் முத்து பள்ளத்தாக்கு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஒதுக்குப்புறமான இடத்தை பருவமழைக்காலத்தில் நாம் பார்க்க சிறந்ததாக அமைய, சிறந்த நீர் நிலை ஓட்டத்தையும் கொண்டிருக்கிறது. இவ்விடமானது நல்லதொரு உணவகத்தையும், ஓய்வு அறையையும் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து பார்க்க ஒரு சிறிய சிவனாலயமும் தென்படுகிறது.

PC: Karthik Prabhu

தட்டக்கேரி ஏரி:

தட்டக்கேரி ஏரி:

பறவை ஆர்வலர்களுக்கு ஏற்ற இந்த தட்டக்கேரி ஏரி, அனெக்கலிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. மறைந்திருக்கும் இந்த ஏரியானது பறவைகளுக்கு வீடாக விளங்க, ஈக்ரெட், மரங்கொத்திப்பறவை, சாண்ட் பைபர் மற்றும் க்யூலையும் கொண்டிருக்கிறது. இந்த ஏரியை நாம் அடைய வழியாக யானை தாழ்வாரம் காணப்பட, திறந்த வெளியில் நீங்கள் தங்குவதில் கவனம் தேவைப்பட, அடர்ந்த இடத்தை தேர்ந்தெடுப்பதையும் தவிர்த்திட வேண்டும். நீங்கள் அருகிலிருக்கும் சிறிய மாதேஷ்வர ஆலயத்தையும் கண்டிடலாம்.

PC: Unni.hariharan