
வழக்கமான வர்த்தகத்தனம் நிறைந்த இடங்களுக்கு சென்று அலுத்து விட்டதா உங்களுக்கு. இயற்க்கையின் அழகை அமைதியாக ரசித்தபடி, குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ எங்காவது சென்று வரலாம் என பிரியப்படுகிறீர்களா. ஹிமாலய மலையின் மடியில் அமைந்திருக்கும் ஹிமாச்சல பிரதேச மாநிலம் உங்களுக்கு அப்படி ஒரு அனுபவத்தை தரும் இடங்களை நிறையவே கொண்டுள்ளது. மலைகளால் சூழப்பட்ட மாநிலம் என்பதால் இங்கு பள்ளத்தாக்குகள் நிறையவே உண்டு. அவற்றில் நாம் பயணம் செய்கையில் தூய்மையான இயற்கையோடு நாம் நெருங்கி வந்துவிட்டதை உணரலாம். வாருங்கள் நமது பயணத்தை துவங்குவோம்.
த்ரிதன் பள்ளத்தாக்கு:

புகைப்படம்: Holidayextras
இன்னும் மாசுபடாத இயற்க்கை அன்னை வாழுமிடம் இது. கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்காவினை ஒட்டி அமைந்திருக்கும் இந்தப்பள்ளதாக்கில் த்ரிதன் நதி ஆர்ப்பரித்து ஓடுகிறது. அந்த நதிக்கரையில் காலாற நடந்தபடி அங்கு பறவைகள் தத்தமது மொழிகளில் பேசும் சத்தத்தை ரசிப்பது தான் எத்தனை சுகமாக இருக்கும். த்ரிதன் நதியில் குழந்தைகளுடன் மீன் பிடிக்கலாம், சிறு கூடாரம் அமைந்து அங்கே பிடித்த மீனை சமைந்து உண்ணலாம். இப்படி வேறெங்கும் நாம் நினைத்துகூட பார்க்க முடியாத எளிமையான அதே சமயம் உண்மையான மகிழ்ச்சியை நமக்கு தரும் செயல்களை செய்யலாம். பூக்கள் பூத்துக்குலுங்கும் வசந்த காலத்தில் இங்கு வந்தால் அந்தப்பயணம் நீங்கள் வாழ்க்கை முழுவதும் நினைத்துப்பர்க்க கூடியதாய் அமையும்.
விமான டிக்கெட்டுகளில் 5000 வரை தள்ளுபடி பெற இங்கே கிளிக்கவும்.
பாப்பர் பள்ளத்தாக்கு:

புகைப்படம்: Ronile35
இயற்க்கை நல்கும் அமைதியை தாண்டி த்ரில்லிங்கான அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் வர வேண்டிய இடம் இந்த பாப்பர் பள்ளத்தாக்கு. மலையேற்றம், கேம்பிங், மலை சைக்கிள் பயணம், பாராக்ளிடிங் என ஒரு முழுமையான சாகச விளையாட்டுகள் நடக்கும் இடமாக இது பிரபலமாகி வருகிறது. என்ற போதும் இன்னும் அசுத்தம் நிறைந்த வர்த்தக சுற்றுலாத்தலமாக இன்னும் மாறவில்லை. எனவே அப்படிப்பட்ட இடமாக இது மாறும் முன் எவ்வளவு விரைவாக இங்கே சென்று வர முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கே செல்வது நல்லது.

புகைப்படம்: Priyambada Nath
பசுமை போர்த்திய காடுகளின் மத்தியில் நின்றபடி மேகங்கள் தொட்டு செல்லும் ஹிமாலய மலையை ரசிப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.
சிந்தி மற்றும் கர்சொக் பள்ளத்தாக்கு:

ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மற்றுமொரு பேரழகு ததும்பும் இடம் சிந்தி. மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் குக்கிராமமான சிந்தியில் இரைச்சல் மிகுந்த அன்றாட வாழ்க்கையில் இருந்து தப்பித்து நிறைவாக சில நாட்களை கழிக்கலாம். சுற்றிலும் மலைகள், வளமான வயல்கள், அங்கிருக்கும் கோயில்கள் என திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்திருக்கும் விஷயங்களை நேரடியாக கண்டுணரலாம். சிந்தி கிராமத்திற்கு கீழே கர்சொக் பள்ளத்தாக்கு அமைந்திருக்கிறது. நம் அன்பானவர்களிடம் மனம் விட்டு பேச அருமையானதொரு சூழ்நிலையை அள்ளி வழங்குகிறது இப்பள்ளத்தாக்கு.
தரன்காதி:

சே குவேராவின் 'The Motor Cycle Diaries' போல ஒரு மோட்டார் சைக்கிள் பயணம் செல்ல நீங்கள் விரும்பியிருந்தால் உங்கள் ஆசையை நிஜமாக்க வாழ்க்கையில் மறக்கவே முடியாததொரு மோட்டார் சைக்கிள் பயணம் செல்ல நீங்கள் போக வேண்டிய இடம் தரன்காதி. ஷரஹன் என்னும் இடத்திற்கு அருகில் உள்ள தரன் கிராமத்தில் இருந்து தரன்காதி சாலை துவங்குகிறது. இங்குள்ள சாலைகளில் பயணிக்க நீங்கள் தேர்ந்த ஓட்டுனராக இருப்பதும் அவசியம். உங்களுக்கு பிடித்தமான வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். கிடைத்த ஒரு வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்து அனுபவிப்போம்.



Click it and Unblock the Notifications





