» » இந்த காதலர் தினத்த உங்க காதலி மறக்கமுடியாத அளவுக்கு மாற்றணுமா அப்போ இத படிங்க

இந்த காதலர் தினத்த உங்க காதலி மறக்கமுடியாத அளவுக்கு மாற்றணுமா அப்போ இத படிங்க

Posted By: Udhaya

காதல் மட்டும் இருந்துட்டா இந்த உலகத்துல யாரையும் கட்டி போடலாம்னு சொல்லுவாங்க.. அந்த அளவுக்கு காதலுக்கு சக்தி இருக்கிறது. கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால் என்று ஒரு வாக்கு. ஒரு பெண்ணின் பார்வை ஒரு ஆண்மகன் மீது விழுந்துவிட்டால் அதுவரை ஊதாரியாக இருந்தவன் பொறுப்பாகிவிடுவான் என்பார்கள். காதல் எல்லாரிடமும் எல்லாரும் செலுத்துவதுதான். அன்பு... இவ்வுலகின் அச்சாணி அதுதான். மனிதர்களிடத்து காட்டும் அன்பிற்கு ஈடான எதுவும் இவ்வுலகில் இல்லை.

தாய், தந்தையர்க்கு தினம் கொண்டாடுவதைப் போல காதலுக்கென்று ஒரு தினம் வருடத்தின் இரண்டாவது மாதமான பிப்ரவரி 14ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. நீங்களும் காதலிக்குறீங்களா.. காதலர் தினத்த பெங்களூரில் சிறப்பா கொண்டாடனும்னு நினைக்குறீங்களா எங்கெல்லாம் உங்க காதலிய கூட்டிட்டு போகணும்னு ஒரு சின்ன ஐடியா தர்றோம் நினைவில் வச்சிக்கோங்க

பார்லேஸ் ரெஸ்ட்டாரெண்ட் பெங்களூரு

பார்லேஸ் ரெஸ்ட்டாரெண்ட் பெங்களூரு

அன்பிற்கு முன்னாடி காசு என்ன பணம் என்ன... உங்கள் காதலியை பெங்களூரின் மிகச் சிறந்த ஹோட்டல்களுள் ஒன்றான பார்லேஸ் ரெஸ்ட்டாரெண்டுக்கு அழைத்துச் சென்று ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுங்க...

உங்க காதலி அப்படியே ஷாக் ஆகிடுவாங்க...

ஒரு வேள நீங்க இன்னும் காதல சொல்லியா அப்போ உங்க புரபோஸுக்கு இது மிகச் சரியான இடம்... அதுக்குமுன்னாடி உங்க காதலி மனசுல என்ன இருக்குனும் கொஞ்சம் தெரிஞ்சி வச்சிக்கோங்க... ஆர்வக்கோளாறுல கூட்டிட்டு போயி அடி வாங்குனா நிர்வாகம் பொறுப்பாகாது..

PC: Official website

லும்பினி கார்டன், பெங்களூரு

லும்பினி கார்டன், பெங்களூரு

சுற்றிலும் ரம்மியமான சூழல், இயற்கை எழில் கொஞ்சும் பார்க் இந்த லும்பினி கார்டன். கூட்டிட்டு போங்க..ஜி... லைஃப் நல்லா இருக்கும்.. வாழ்க வளமுடன்


PC: Official website

லும்பினி கார்டன், பெங்களூரு

லும்பினி கார்டன், பெங்களூரு

பின்குறிப்பு இடம் வசமா இருக்கேனு ஆர்வத்துல அங்கேயே தங்கிடக் கூடாது. அப்றம் வாட்ச்மேன் பேச்சலாம் கேக்கனும்.. பாத்து நிதானமா காதலர் தினத்த என்ஜாய் பண்ணுங்க...

Pc: InOutpeaceproject

தொட்டிக்கல்லு, பெங்களூரு

தொட்டிக்கல்லு, பெங்களூரு

குளிக்கலாம்.. குடிக்கலாம்.. குதூகலிக்கலாம்... அது மற்ற நாள்கள்ல.... இப்போ உங்க காதலியோட போயி குளிச்சி குதூகலிங்க....

என்ன சிரிக்குறீங்க.... ஓ... சகோ ரொமாண்டிக்கா மாறிட்டீங்க போல

தொட்டிக்கல்லு, பெங்களூரு

தொட்டிக்கல்லு, பெங்களூரு

நீர் வீழ்ச்சி, மலைகள், மரங்கள் என இயற்கை எழில் சூழ அமைதியை அனுபவித்து காதலியுடன் மகிழ்ந்திருங்கள்.

PC: Akash Nambiar

நந்தி மலைகள்

நந்தி மலைகள்

நந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல கதைகள் உள்ளன. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது என்று கூறுவதுண்டு. இம்மலை உச்சியில் சோழர்கள் கட்டிய போகா நந்தீசுவர கோவிலொன்றும் உள்ளது. இம்மலை துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் இருப்பதால் இம்மலைக்கு நந்திமலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு

Pc:Rameshng

ஒண்டர்லா பெங்களூரு

ஒண்டர்லா பெங்களூரு

காதலர் தினம் முழுமைக்கும் ஒண்டர்லா ல என்ஜாய் பண்ணுங்க... நீங்களும் உங்க காதலியும் சந்தித்து பேசி, ஆடி மகிழ இத விட சிறந்த இடம் எங்க கிடைக்கும்?

PC: Official website

ஹேசரகட்டா ஏரி

ஹேசரகட்டா ஏரி

Pc: Nikkul

லால் பாக் தாவரவியல் பூங்கா

லால் பாக் தாவரவியல் பூங்கா

லால் பாக் என்பது பெங்களூருவில் இருக்கும் ஒரு அழகிய தாவரவியல் பூங்கா. இந்த பூங்கா மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலி காலத்தில் நிறுவப்பட்டது. இங்கு புகழ்மிக்க கண்ணாடி குடில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மலர் கண்காட்சி நடைபெறும். எழில்மிகு ஏரி, திருவக்கரை கல்மரம், மீன்தொட்டி, கெம்பகௌடா கோபுரம் மற்றும் பல சுற்றுலா ஈர்ப்புகள் இங்கு அமைந்துள்ளன.


PC: Muhammad Mahdi Karim

அல்சூர் ஏரி

அல்சூர் ஏரி

அலசூர் ஏரி ஆசியாவில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றாகும். அலசூர் M. G ரோட்டின் கிழக்கு முனையில் உள்ளது . இது தமிழரின் பழைய குடியேற்ற பகுதிகளில் ஒன்றாகும். இங்கு குறுகலான தெருக்களுக்கும் , தமிழ் கோயில்களும் நிறைந்த பகுதியாகும்.

இது பெங்களூரு நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள பகுதியான அல்சூர் பகுதியின் பெயரிலேயே ஏரி பெயரிடப்பட்டுள்ளது. 123 ஏக்கர் பரப்புள்ள இந்த ஏரியில் பல சிறு தீவுகள் அமைந்துள்ளன.

இந்த ஏரியை ஒட்டி நீச்சல் குளம் ஒன்றும் உள்ளது.

Swaminathan

Read more about: travel, பயணம்