Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்தில் நீங்கள் செல்ல வேண்டிய அழகான சுற்றுலாத் தலங்கள் இவைகள் தான்!

தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்தில் நீங்கள் செல்ல வேண்டிய அழகான சுற்றுலாத் தலங்கள் இவைகள் தான்!

செப்டம்பர் மாதத்தின் வருகை என்பது தமிழ்நாட்டில் மழைக்காலம் மற்றும் குளிர்ந்த குளிர்காலம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மாயாஜால இடைவேளையை வழங்குகிறது. இந்த சீசனில் தமிழ்நாட்டின் பல இடங்கள் ரம்மியமாகவும், அழகாகவும் காட்சியளிப்பதால், இந்த நேரத்தில் இந்த இடங்களுக்கு செல்வது நிச்சயம் உங்களுக்கு ஒரு சூப்பரான சுற்றுலாவாக அமையும். செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட் இதோ!

1

மாஞ்சோலை

மாஞ்சோலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள அழகிய மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள், மணிமுத்தாறு அணை மற்றும் மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலைகள் போன்ற இயற்கை சூழலால் சூழப்பட்ட அழகிய மலைவாசஸ்தலமாகும். டார்சன் குளம், காக்காச்சியில் உள்ள மினி கோல்ப் மைதானம், காக்காச்சி ஏரி, குதிரைவெட்டி, குட்டியார் அணை, மணிமுத்தாறு தேயிலை எஸ்டேட், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட், நாலுமூக்கு, சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை, வானபெட்சி அம்மன் கோயில், மணிமுத்தாறு அருவி, மேல் கோதையார் அணை ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

2

மேகமலை

'ஹைவேவிஸ் மலைகள்' என்று பிரபலமாக அழைக்கப்படும் மேகமலை, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு ஆராயப்படாத சொர்க்கமாகும். நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான ஒரு இடைவெளியை நீங்கள் தேடுகிறீர்களானால், மேகமலை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாகும். மேகமலை வனவிலங்கு சரணாலயம், ஹைவேவி அணை, மேகமலை வியூபாயின்ட், மணலார் அணை, சுருளி நீர்வீழ்ச்சி, இரவங்களார் அணை மற்றும் மகாராஜா மெட்டு ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

3

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை எப்பொழுதுமே சூடாக இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். சென்னையின் வெயிலில் இருந்து தப்பித்து சென்னையின் சுற்றுலாத் தலங்களை காண இதுவே சரியான நேரமாகும். இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்ட கோயில்கள், கடற்கரைகள், கோட்டைகள், பல வகையான வித்தியாசமான உணவகங்களைக் கொண்டுள்ளது.

4

பன்றிமலை

திண்டுக்கல்லின் பழனிமலை தொடரில் அமைந்துள்ள பன்றிமலை அதன் இதமான வானிலைக்காகவும், அழகிய வியூபாயின்ட்களுக்காகவும் மினி கொடைக்கானல் என்றழைக்கப்படுகிறது. திண்டுக்கல் மெயினில் இருந்து 50 கிமீ தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 1300 அடி உயரத்தில் அமைந்துள்ள பன்றிமலை பல நீர்வீழ்ச்சிகளையும், அருவிகளையும், பள்ளத்தாக்குகளையும், வியூபாயின்ட்களையும் கொண்டுள்ளது. இந்த இடத்தில் ட்ரெக்கிங் செய்வதும் கேம்பிங் செய்வதும் மிகவும் அருமையான அனுபவத்தை கொடுக்கும். கூட்டம் இல்லாத ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இடம் தன் பெஸ்ட் சாய்ஸ்.

5

ஜவ்வாது மலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஜவ்வாது மலை ஒரு அழகிய மலைபிரதேசமாகும். இங்கு நீங்கள் முக்கியமாக பார்க்க வேண்டியது பீமன் அருவியும் கோமட்டேரி ஏரி பூங்காவும் தான், இந்த ஏரியில் படகு சவாரி செய்ய மிஸ் பண்ணிடாதீங்க. கூடவே இந்த மலையில் இருக்கும் வைக்கம் பாப்பு ஆய்வகத்தை ஆராயுங்கள். குள்ள மனிதர்கள் என்று அழைக்கப்படும் வாளியர்கள் வாழ்ந்த வாளியம்பாறையையும் இங்கே நீங்கள் காணலாம். இந்த இடத்திற்கு நீங்கள் போளூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை வழியாக அணுகலாம்.

6

கன்னியாகுமரி

இந்தியாவின் கடைகோடி முனையான கன்னியாகுமரி அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் சங்கமிக்கும் அதிசயத்தை நீங்கள் காணலாம். செப்டம்பரில், இது ஒரு அதிசயமாக பிரகாசிக்கிறது மற்றும் மக்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது. மேலும், கன்னியாகுமரியில் உள்ள நினைவுச்சின்னங்களால் அற்புதமான மற்றும் மயக்கும் இடமாக அறியப்படுகிறது. ராக் நினைவுச்சின்னம் போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நீங்கள் பார்வையிடலாம்.

7

பச்சைமலை

பெயருக்கு ஏற்றார்போல் பச்சை பசேல் என்று காட்சியளிக்குமாம் இந்த பச்சை மலை. திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 80 கிமீ தொலைவில் இந்த பச்சை மலைத் தொடரை ஸ்வேதா நதி மற்றும் கல்லாறு ஆறுகள் சூழ்ந்து இந்த இடம் முழுவதையும் பசுமையாக்குகின்றன. கல்லார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வீர ராமர் அணை, கோரையாறு அருவி, மங்கலம் அருவி, மயில் ஊத்து அருவி, தோப்செங்காட்டுப்பட்டி, செம்பூர், பெரியபாகளம், பெரிய நாகூர், மாயம்பாடி போன்ற அழகிய மலைவாழ் கிராமங்கள் ஆகியவை இங்கு நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

8

கொல்லி மலை

'மௌண்டெய்ன் ஆஃப் டெத்' எனப்படும் மிரட்டலான பெயர் கொண்ட இந்த கொல்லி மலை தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கண்கவர் மலைவாசஸ்தலமாகும். இயற்கை அழகும் மத முக்கியத்துவமும் வாய்ந்த கொல்லி மலை தமிழ்நாட்டின் ஒரு ஆராயப்படாத இயற்கை அதிசயமாகும். புகழ்பெற்ற அரபளீஸ்வரர் கோயில், சித்தர் குகைகள், அகயா கங்கை நீர்வீழ்ச்சிகள், தாவரவியல் பூங்கா, மாசிலா நீர்வீழ்ச்சி, மற்றும் செல்லூர் வியூ பாயிண்ட் ஆகியவை இப்பகுதியின் பிரபலமான இடங்களாகும். இப்பகுதியில் பயணிகளை கவரும் வகையில் தமிழக அரசு படகு இல்லம் அமைத்துள்ளது.

More News

    Read more about: tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+