Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

இந்தியாவில் நூற்றுக்கணக்கான நகரங்களும், கிராமங்களும், அழகிய மலைத்தொடர்களும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகளும், நினைவுச்சின்னங்களும், கோவில்களும், கோட்டைகளும், கடற்கரை நகரங்களும், தீவுகளும், 9,000 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாத் தலங்களும் உள்ளன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகள் அழகிய சுற்றுலாத் தலங்களாக லட்சக்கணக்கான வெளிநாட்டவரையும் கோடிக்கணக்கான உள்நாட்டவரையும் ஈர்க்க தவறுவது இல்லை! இந்திய எல்லைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் அழகிய சுற்றுலாத் தலங்களைப் பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம் அல்லவா! அவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்!

வாகா எல்லை, பஞ்சாப்

வாகா எல்லை, பஞ்சாப்

கிராண்ட் டிரங்க் சாலையில் உள்ள கடைசி கிராமத்தில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சாலையில் இரு நாடுகளின் எல்லைக்கு அருகில் வாகா அமைந்துள்ளது. இது பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 29 கிமீ தொலைவிலும், இந்தியாவின் அமிர்தசரஸிலிருந்து 27 கிமீ தொலைவிலும் உள்ளது. அட்டாரி-வாகா எல்லையில் இரு நாடுகளின் கொடிகளை இறக்கும் தினசரி விழா கண்டிப்பாக பார்க்க வேண்டிய விழா. ஒவ்வொரு மாலையும் சூரிய அஸ்தமனத்திற்கு முன், நடைபெறும் இந்த தினசரி விழாவைக் காண நாள்தோறும் மக்கள் கூட்டம் திரள்கிறது.

தர்ச்சுலா, உத்தரகாண்ட்

தர்ச்சுலா, உத்தரகாண்ட்

இந்தோ-நேபாள எல்லையில் அமைந்துள்ள இந்த அழகான நகரம், பனி மூடிய பஞ்சுலி சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. தார்ச்சுலா காளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வழியாக நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரியான மானசரோவர் ஏரியைச் சுற்றி பல அழகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

காஞ்சன்ஜங்கா, டார்ஜிலிங்

காஞ்சன்ஜங்கா, டார்ஜிலிங்

உலகின் மூன்றாவது உயரமான மலையான காஞ்சன்ஜங்காவை நாம் இந்திய நிலபரப்பில் இருந்து ரசிக்கலாம். பூட்டான், சீனா, இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படும் காஞ்சன்ஜங்கா நிலப்பரப்பு, டார்ஜிலிங்கின் மலைப்பகுதியிலிருந்து காஞ்சஞ்சங்கா மலை உச்சியின் புகழ்பெற்ற காட்சிகளை வழங்குகிறது. இந்த மலையின் மிக அற்புதமான காட்சிகளை வழங்குவதற்கு டார்ஜிலிங் பிரபலமானது.

பாங்காங் ஏரி, லடாக்

பாங்காங் ஏரி, லடாக்

பாங்காங் ஏரி இந்தியாவின் மிக அழகான ஏரிகளில் ஒன்றாகும், இது இந்தியா மற்றும் சீனாவின் எல்லைக்கு இடையில் அமைந்துள்ளது, இது கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control) வழியாக செல்வதால் இது பாதுகாக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. பல புலம்பெயர்ந்த பறவைகள் உட்பட பலவகையான பறவைகளுக்கு இந்த ஏரி ஒரு முக்கியமான இனப்பெருக்கம் செய்யும் இடமாக செயல்படுகிறது மேலும் பல இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் பாங்காங் த்சோ ஏரியின் காட்சியைக் கொண்டுள்ளனர்.

சுந்தரவனம், மேற்கு வங்காளம்

சுந்தரவனம், மேற்கு வங்காளம்

சுந்தரவனச் சதுப்புநிலக் காடு என அழைக்கப்படும் சுந்தரவன தேசியப் பூங்கா என்பது சதுப்புநிலக் காடுகளால் அடர்ந்த கங்கை டெல்டாவில் உள்ள சுந்தரவனத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் உலகின் வங்காளப் புலிகளுக்கான மிகப்பெரிய காப்பகங்களில் ஒன்றாகும். சுந்தரவனக் காடுகளில் 400க்கும் மேற்பட்ட புலிகள், நீர்வாழ் விலங்குகள், கடல் பாலூட்டிகள், அவிபவுனா மற்றும் ஏராளமான ஊர்வன உள்ளன. இது இந்தியா பங்களாதேஷை இணைக்கிறது.

நாது லா பாஸ்

நாது லா பாஸ்

சீன திபெத் எல்லைக்குள் நீங்கள் நடந்து செல்லக்கூடிய சில இடங்களில் நாது லா கணவாய் ஒன்றாகும். 14200 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான வாகனச் சாலைகளில் ஒன்றான இது கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான பாதையாக சமீபத்தில் திறக்கப்பட்டது. எல்லையில் இந்திய மற்றும் சீன வீரர்கள் இருவரையும் பாதுகாப்பதை நீங்கள் காணலாம்.

மோரே, மணிப்பூர்

மோரே, மணிப்பூர்

மோரே மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய எல்லை நகரம். இந்தோ-மியான்மர் எல்லையில் அமைந்துள்ள நகரம், ஆசிய நெடுஞ்சாலை 1 இல் உள்ளது. இந்த நகரத்தில் பார்க்க அழகான இடங்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் செய்யக்கூடியது, பார்டர் ஹாட் டிரேட் என்று அழைக்கப்படும் சர்வதேச வர்த்தக மையத்திற்குச் செல்வதுதான். அது சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்றது.

மேற்கூறிய இடங்கள் தவிர சிட்குல், நகோ ஏரி, அலிபுர்தார், லாச்சுங், நிலாங் பள்ளத்தாக்கு, மால்டா ஆகியவையும் இந்தியாவின் எல்லைகளுக்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களாகும். இவற்றை சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் சாகசம் நிறைந்ததாக இருக்கும் பயணிகளே!

More News

    Read more about: jammu sikkim
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+