Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் அம்மாவுடன் இந்த அன்னையர் தினத்தில் தமிழ்நாட்டில் உள்ள இந்த அழகான இடங்களுக்கு செல்லுங்களேன்!

உங்கள் அம்மாவுடன் இந்த அன்னையர் தினத்தில் தமிழ்நாட்டில் உள்ள இந்த அழகான இடங்களுக்கு செல்லுங்களேன்!

2023ஆம் ஆண்டின் அன்னையர் தினம் நெருங்கிவிட்டது! நமக்கு எல்லாமுமாக இருக்கும் அம்மாவுக்கு மறக்கமுடியாத பரிசு வழங்க நினைக்கிறீர்களா? வாழ்க்கையை மாற்றும் அனுபவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான விடுமுறையுடன் அவரை ஆச்சரியப்படுத்த இதோ உங்களுக்கு ஒரு சரியான யோசனை!

tamilnaducover

இந்த அன்னையர் தினத்தன்று அவருக்கு ஒரு புடவையோ அல்லது பரிசுப் பொருளோ கொடுப்பதுடன் அவருக்கு நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்த ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் பண்ணலாமே! எனவே இந்த நேரத்தில், உங்கள் அம்மாவுடன் வேடிக்கையான பயணத்தை மேற்கொள்வதன் மூலம் தரமான நேரத்தை செலவிடுங்கள். உங்கள் அம்மாவுடன் நீங்கள் பார்க்கக்கூடிய தமிழ்நாட்டில் உள்ள சில சிறந்த இடங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக!

maduraithirumalainayakkarmahal

வரலாற்றுச் சின்னங்கள் சுற்றுலா

உங்கள் அன்னை ஒரு வரலாற்றுப் பிரியரா? தமிழ்நாட்டில் நிரம்பியுள்ள கோட்டைகள், அரண்மனைகள், நினைவுச் சின்னங்கள், குகைகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்ல நீங்கள் திட்டமிடலாம்.

1. தஞ்சாவூர் பெரிய கோவில், அரண்மனை

2. மகாபலிபுரம் நினைவுச்சின்னங்கள்

3. கன்னியாகுமரி நினைவுச்சின்னங்கள்

4. சென்னையில் உள்ள கோட்டைகள்

5. வள்ளுவர் கோட்டம்

6. செஞ்சி கோட்டை

7. மதுரை திருமலைநாயக்கர் மஹால்

8. செட்டிநாட்டு ஆயிரம் ஜன்னல் வீடு

9. வேலூர் கோட்டை

snorkeling

சாகசச் சுற்றுலா

உங்கள் அன்னை இளைஞரை போன்ற உற்சாகம் கொண்டவரா? நீர் விளையாட்டுகள் மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபட ஆர்வம் கொண்டவராக இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள தீம் பார்க்குகள், கடற்கரைகள், கயாக்கிங் இடங்களுக்கு சென்று வாருங்கள்.

1. மன்னார் வளைகுடாவில் ஸ்னோர்கெலிங்

2. சென்னையின் தீம் பார்க்குகள்

3. முட்டுக்காடு போட் ஹவுஸ்

4. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள்

5. புதுவை போதி பீச் சர்பிங்

6. கொல்லிமலையில் ட்ரெக்கிங்

7. ஏலகிரியில் பாராகிளைடிங்

trichysrirangamtemple1

கோயில் சுற்றுலா

நம்மில் எவருக்குத்தான் கோயில்களுக்கு செல்வது பிடிக்காமல் இருக்கும். அதுவும் நாமே போய் நம் அம்மாவை கோவிலுக்கு அழைத்தால் அவர் எப்படி உணருவார் என்று யூகித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கோயில்கள் நிரம்பி வழிகின்றன. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் சில முக்கிய கோவில்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்!

1. மதுரை - ஸ்ரீமீனாட்சி கோவில், கூடல் அழகர், கள்ளழகர், திருப்பரங்குன்றம்

2. திருச்சி - ஸ்ரீரங்கம் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்

3. சிதம்பரம் - ஸ்ரீ நடராஜர் கோவில், தில்லை காளி கோவில்

4. கும்பகோணம் - காசி விஸ்வநாதர் கோவில், சக்ரபாணி கோவில், சாரங்கபாணி உப்ப்ளியப்பன் கோவில்

5. வேலூர் - ஸ்ரீபுரம் தங்கக்கோவில், ரத்தினகிரி கோவில், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில்

6. தஞ்சாவூர் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம், ஸ்ரீ ராமசுவாமி கோவில்

citytour

நகர சுற்றுலா

உங்கள் அன்னையின் கனவு நகரத்தைப் பற்றிய கதைகள் அல்லது அவர் தனது இளமைப் பருவத்தை ஒரு நகரத்தில் எப்படிக் கழித்தார், அவருடைய வாழ்க்கையின் சிறந்த நாட்கள் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய கதைகளை நீங்கள் கட்டாயம் கேட்டிருக்க வேண்டும். எனவே, நீங்கள் அவருக்கு பிடித்த நகரத்திற்கு ஒரு பயணத்தைத் திட்டமிடலாம் மற்றும் நகரத்தில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிடலாம். நிச்சயம் இந்த பயணம் அவருக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

wildlifeintamilnadu

தேசிய பூங்கா பயணம்

உங்கள் தந்தை வனவிலங்கு பிரியர் என்றால், இந்த தந்தையர் தினத்தன்று அவருடன் தேசிய பூங்காவிற்கு ஒரு பயணத்தை திட்டமிடுங்கள். இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய பூங்காக்களும் ஐநூறுக்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன, அதுவும் தமிழ்நாட்டில் 5 தேசிய பூங்காக்கள், 4 புலிகள் காப்பகங்கள், 15 வனவிலங்கு சரணாலயங்கள், 2 பாதுகாப்பு காப்பகங்கள் மற்றும் 15 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களை நீங்கள் குஷிப்படுத்தலாம்.

1. முதுமலை வனவிலங்கு சரணாலயம்

2. கிண்டி வனவிலங்கு சரணாலயம்

3. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்

4. மன்னார் வனவிலங்கு சரணாலயம்

5. முகுர்த்தி வனவிலங்கு சரணாலயம்

இந்த அன்னையர் தினத்தில் அவருடன் ஒரு பயணத்தை மேற்கொள்வதும், ஒருவரையொருவர் நன்றாக அறிந்துகொள்வதும் நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை உங்கள் அன்னைக்கு காட்ட சிறந்த வழியாக இருக்கும் தானே! எனவே இப்போதே பிளான் பண்ணுங்கள்!

More News

    Read more about: travel ideas travel news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+