Search
  • Follow NativePlanet
Share
» »புண்டி - நீல நிறத்தில் நனைந்த ராஜஸ்தான் நகரம்

புண்டி - நீல நிறத்தில் நனைந்த ராஜஸ்தான் நகரம்

நீல நிறத்தில் மட்டுமே வர்ணம் பூசப்பட்ட வீடுகள், மிக குறுகலான வீதிகள், திரும்பும் இடமெங்கும் காணக்கிடைக்கும் கோயில்கள், பெரும் வரலாற்று பின்னணி கொண்ட கோட்டைகள், குளங்கள் என ராஜஸ்தானின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் இருக்கும் அத்தனை விஷயங்களும் இந்த நகரத்தில் இருந்தாலும் ஜெய்பூர், உதய்பூர் போன்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் இன்னும் அதிகம் அறியப்படாத ஓரிடமாகவே இருக்கிறது.

புண்டி - நீல நிறத்தில் நனைந்த ராஜஸ்தான் நகரம்

Photo: Daniel Wabyick

நவீனத்தின் தீண்டல் சற்றும் இல்லாத இந்நகருக்கு சுற்றுலா சென்றால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த உலகத்தில் நுழைந்ததை போன்ற வித்தியாசமான அனுபவத்தை பெறலாம். புகழ்பெற்ற 'பேட் மென்' திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தின் சில காட்சிகளில் இந்நகரத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

தரகர்க்ஹ் கோட்டை:

புண்டி - நீல நிறத்தில் நனைந்த ராஜஸ்தான் நகரம்

Photo: Arian Zwegers

தரகர்க்ஹ் கோட்டை அல்லது நட்சத்திர கோட்டை என அழைக்கப்படும் இந்த இடம் தான் புண்டி நகரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும். 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை காலப்போக்கில் கைவிடப்பட்டு, சிதலமடைந்து காணப்பட்டாலும் சுற்றுலாப்பயணிகள் சென்று காணும் வகையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அந்தக்காலத்தில் இதனுள் சுற்றியிருக்கும் மலைகளை கடந்து செல்வதற்கு ஏற்றவாறு சுரங்கப்பாதைகள் இருந்திருகின்றன. புண்டி நகரின் அழகை இந்த கோட்டையின் மதில்களில் நின்று ரசிக்கலாம்.


ராணிஜி கி பவோரி:

புண்டி - நீல நிறத்தில் நனைந்த ராஜஸ்தான் நகரம்

Photo: Prashant Ram

1699ஆம் ஆண்டு ராணி நாதவதியால் கட்டப்பட்ட இந்த குளம் 46அடி ஆழத்தில் அமைகப்பட்டுள்ளது. இந்த குளத்தை நோக்கி செல்லும் குறுகிய பாதையில் இரண்டு புறமும் பெரும் வேலைப்பாடுகள் நிறைந்த கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த குளத்தின் நுழைவுவாயிலில் யானை முகம் வடிக்கப்பட்ட நான்கு தூண்கள் உள்ளன. அந்தக்காலத்தில் மகாராணி நீர் எடுக்க வரும் குளமாக இது விளங்கியிருக்கிறது.

நாவல் சாகர் :

புண்டி - நீல நிறத்தில் நனைந்த ராஜஸ்தான் நகரம்

Photo: Lev Yakupov

புண்டி நகரின் மையத்தில் சதுர வடிவத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரி தான் இந்த நாவல் சாகர் ஏரியாகும். இதன் மத்தியில் மழைக் கடவுளாக கருதப்படும் வருண பகவானுக்கு பாதி மூழ்கியபடி இருக்கும் கோயில் ஒன்று ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

சௌரசி கம்பொன் சத்ரி:

புண்டி - நீல நிறத்தில் நனைந்த ராஜஸ்தான் நகரம்

Photo: Shakti

1740 ஆம் ஆண்டு ராஜா ராவ் அனிருத் என்பவரால் போரில் வீர மரணம் அடைந்த தன தம்பி தேவாவின் நினைவாக எழுப்பிய நினைவு மண்டபமே இந்த சௌரசி கம்பொன் சத்ரி ஆகும். இங்கு எண்பத்து நான்கு தூண்களுக்கு மத்தியில் சிவ லிங்கம் ஒன்று பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலவும் நம்பிக்கைப்படி யாராலும் குழப்பம் அடையாமல் 84 தூண்களையும் வரிசையாக எண்ணி முடிக்க முடியாதாம்.

எப்படி அடைவது:

புண்டி - நீல நிறத்தில் நனைந்த ராஜஸ்தான் நகரம்

Photo: Chris

புண்டி நகரை விமானம் மூலம் எனில் ஜெய்பூர் விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து வாடகை டாக்ஸி மூலம் 200 கி.மீ தொலைவில் இருக்கும் இந்நகரத்தை அடையலாம்.

ரயில் மூலமாக எனில் புண்டியில் இருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கும் கோட்டா ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பேருந்து அல்லது வாடகை கார் மூலம் இந்நகரை அடையலாம்.

Read more about: rajasthan bundi blue town
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X