Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மறைக்கப்பட்ட பேரதிசயம் !!

இந்தியாவின் மறைக்கப்பட்ட பேரதிசயம் !!

By Staff

இந்தியா போன்ற மிகப்பழமையான வரலாறு கொண்ட மிகப்பெரியதொரு நாட்டில் ரகசியங்களுக்கும், காலத்தால் மறைந்துபோன, வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ரகசியங்களுக்கும் குறையே இல்லை. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தான் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சாந்த் பாவ்ரி என்ற படிக்கிணறு ஆகும்.

இந்தியர்களின் கணிதவியல் வல்லமைக்கும், கட்டிடக்கலை நேர்த்திக்கும் சான்றாக விளங்கும் இந்த இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி படிக்கிணறு ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்பூருக்கு அருகில்ஆபானேரி என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது.

இது ஜெய்ப்பூரில் இருந்து 95கி.மீ தொலைவில் உள்ளது.

brando.n

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

இந்த படிக்கிணறு நிக்கும்பா வம்சத்தை சேர்ந்த சாந்த் மகாராஜாவால் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.

இவர் இந்தசாந்த் பாவ்ரி படிக்கிணறை 'ஹர்ஷத் மாதா' என்ற கடவுளுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார்.

Alena Getman

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

பாலைவன பிரதேசமான ராஜஸ்தானில் தண்ணீர் கிடைப்பது அரிதிலும் அரிது. எனவே அதனை சேமிக்கும் பொருட்டும், தண்ணீர் ஆவியாவதில் இருந்து தடுக்கும் நோக்கத்துடனும் தான்சாந்த் பாவ்ரி படிக்கிணறு கட்டப்பட்டிருக்கிறது.

Ramón

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி படிக்கிணறு 100 அடி ஆழமும், 13 தளங்களும் கொண்டு வட்ட வடிவில் மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் எப்போதுமே குளிர்ச்சியுடன் இருக்கிறது.

manuelcarranza1

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

வெளியில் நிலவும் தட்பவெப்ப நிலையை காட்டிலும் 5-6* வெட்பம் குறைவாகவே இந்த கிணற்றின் அடியில் இருப்பதால் நீர் ஆவியாவது பெருமளவில் குறைகிறது.

Ramón

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

வெறுமனே தண்ணீர் எடுக்கும் இடமாக மட்டுமில்லாமல் இது ஒரு கலாச்சார பண்பாட்டு மைய்யமாகவும் இருந்துள்ளது. கடுமையான கோடை காலங்களில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் இங்கே கூடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றனர்.

Ramón

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

இந்த படிக்கிணற்றில் மொத்தம் 3500 படிகள் இருக்கின்றன. பதிமூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் இந்த படிகள் ஒவ்வொன்றும் அச்சுப்பிசகாமல் ஒரே போல அமைக்கப்பட்டிருப்பது பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிரம்மிப்பை உண்டுபண்ணும்.

Ramón

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

இந்த கிணற்றில் மக்கள் கூடும் இடத்திற்கு எதிரே ராஜ வம்சத்தினர் ஓய்வெடுக்கும் இடமும் இருக்கிறது. இந்த அறைகள் முழுக்க கலைநயத்துடன் குடையப்பட்ட சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன.

Ramón

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

இந்தியாவில் இருக்கும் மற்ற கட்டிடக்கலை அதிசயங்களுக்கு இந்தசாந்த் பாவ்ரி சற்றும் சளைத்தது இல்லை என்றாலும் வெளியுலகிற்கு அதிகம் தெரியாத இடமாகவே இருந்து வருகிறது.

Sammy K

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் 'The Batman Rises' படத்தின் சில காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ராஜஸ்தானுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்றாகசாந்த் பாவ்ரி இருக்கிறது.

LIU JOEY

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி கிணறு தற்போது தொல்பொருள் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கிணற்றை சுற்றிப் பார்க்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

Ramón

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரியை எப்படி அடைவது?

ஜெய்ப்பூரில் இருக்கும் ஹோட்டல்கள்

LIU JOEY

சாந்த் பாவ்ரி:

சாந்த் பாவ்ரி:

அடுத்த முறை ராஜஸ்தானுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தசாந்த் பாவ்ரி கிணற்றை சென்று சுற்றிப்பாருங்கள்.

Ramón

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X