» »சென்னை - ஒக்கேனக்கல் ஈசியா போக இப்படி ஒரு வழியா...! பைக் ரைடர்ஸ்

சென்னை - ஒக்கேனக்கல் ஈசியா போக இப்படி ஒரு வழியா...! பைக் ரைடர்ஸ்

Written By: Sabarish

ரம்மியமான சூழல், எங்கு காணிணும் பாறை முகடுகள், உயர்ந்த பாறைகளின் ஊடாக நீண்டதூர பரிசல் பயணம், பொரித்து எடுத்த மீன், புத்துணர்ச்சியூட்டும் ஆயில் மசாஜ்... வருடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே காணக்கிடைக்கும் காவிரி நீர்... இத்தனை அம்சங்களையும் ஒருங்கே கொண்டதுதான் ஒக்கேனக்கல் அருவி. கோடை காலத்தில் ஜில்லுன்னு பொழுதைக் கழிக்க விரும்வோர், அதுவும் வாலிப வயசு இளைஞரா நீங்க இருந்தா பைக்குல ஒக்கேனக்கல் போக ப்ளேன் பன்னி ஜாலியா ஒரு ட்ரிப் போய்ட்டு வாங்க பாஸ்.

பைக்குல போறீங்களா..?

பைக்குல போறீங்களா..?


சென்னையில் இருந்து ஒக்கேனக்கலுக்கு பைக்குல போக திட்டமிட்டா, ஈசியாகவும், அதே நேரம் செல்லும் வழியிலேயே பல சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தபடியும் செல்ல இந்தக் கட்டுரைய தொடர்ந்து படியுங்க. உங்களது பயணத்தின் நேரத்தைக் குறைத்து, மகிழ்ச்சையியை அதிகரிக்கும் வகையிலான தகவல்கள் பல இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை - காஞ்சிபுரம்

சென்னை - காஞ்சிபுரம்


சென்னை எழும்பூரை மையமாகக் கொண்டு பைக்கில் பையணம் மேற்கொள்ள தொடங்குகிறீர்கள் என்றால் ஸ்ரீபெரம்புதூர் வழியாக காஞ்சிபுரத்தினை 73 கிலோ மீட்டர்களில் அடைந்து விடலாம். இந்த இடைப்பட்ட ஒவ்வொரு கிலோ மீட்டரையும் பயனுள்ளதாக மாற்றும் வகையில் அருகருகே உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வருவது சிறந்தது. இது பயணத்தால் ஏற்படும் சோர்வை நீக்கி உலுக்கும், மனதிற்குற்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டை முருகன் கோவில், 25 கிலோ மீட்டர் தொலைவில் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தாம்பரம் விளையாட்டு பூங்கா, சென்னை அணு மின் நிலையம் மற்றும் பிரம்மகுமாரி அருங்காட்சியகம் ஆகியவை முக்கியமான சுற்றுலாத் தலங்களாகும்.

Rsmn

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்


தமிழகத்தில் ஆன்மீக பூமியாக இருக்கும் காஞ்சிபுரத்தில் சிவ பெருமான் மற்றும் மஹா விஷ்ணுவிற்காக எழுப்பப்பட்ட பல கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுள் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள வரதராஜ பெருமாள் கோவிலும், சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள ஏகாம்பரநாதர் கோவிலும் மிகப் பிரபலமானவை. இவை உங்களது பயணத்தை வெறும பொழுதுபோக்காக மட்டுமின்றி சிறந்த ஆன்மீகப் பயணமாகவும் மாற்றும்.

Hiroki Ogawa

காஞ்சிபுரம் - வேலூர்

காஞ்சிபுரம் - வேலூர்


காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 70.5 கிலா மீட்டர் தொலைவில் உள்ள வேலூரை திருப்புக்குழி, இராணிப்பேட்டை வழியாக எளிதில் அடையலாம். பாலாற்றுப் பாலத்தைக் கடந்து ஆற்காடு வழியாக அடுத்தடுத்து வரும் விலப்பாக்கம் வனப்பகுதி, பெறுமுகை, ஜமாதி மலை உள்ளிட்டவை பசுமைக் காட்சிகளுடன் நம்மை அழைத்துச் செல்லும்.

Praveen Kumar.R

வேலூர்

வேலூர்


தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர் நகரத்தில் தவறவிடக்குடாத பல பகுதிகள் உள்ளன. அவற்றில் உலகப் புகழ்பெற்ற வேலூர் கோட்டையைத் தவிர ஸ்ரீபுரம் தங்கக்கோவில், அம்ரிதி விலங்கியல் பூங்கா, வள்ளிமலை, ஜலகண்டேஷ்வரர் கோவில் உள்ளிட்ட சிலவற்றை தேர்வு செய்து அப்படியே ஒரு ரவுண்ட் போய் வருவோம் வாருங்கள்!

Harrisask

வேலூர் - திருப்பட்டூர்

வேலூர் - திருப்பட்டூர்


வேலூரில் இருந்து மும்பை தேசிய நெடுஞ்சாலை வழியாக சுமார் 88 கிலோ மீட்டர் பயணித்தால் திருப்பட்டூரை அடையலாம். பள்ளிகொண்டா, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இதனை அடைய வேண்டும்.

Dranjith

இடையே உள்ள சுற்றுலாத் தலங்கள்

இடையே உள்ள சுற்றுலாத் தலங்கள்


ஆம்பூரை அடுத்து வரும் ஜவ்வாது மலைப் பகுதி இந்தப் பயணத்தில் தவறவிடக்கூடாத முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இதனை அடுத்துள்ள ஏலகிரி மலையில் பல கோவில்களும் உள்ளன. இவை ஏலகிரியை இளையவர்களையும் முதியவர்களையும் ஒருசேர ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக மாற்றுகிறது. புங்கனூர் ஏரி ஏலகிரியின் குறிப்பிடத்தக்க இடங்களுள் ஒன்று. இங்கு படகு சவாரி செய்வது மலைகளால் சூழப்பட்ட இந்த இடத்தின் இயற்கை அழகை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. மலையின் மீதிருந்து விரிந்து கிடக்கும் பசுமை நிறைந்த சமவெளிகள் காணக் கிடைக்கின்றன.

Sayowais

திருப்பட்டூர் - தர்மபுரி

திருப்பட்டூர் - தர்மபுரி


ஏலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாவை முடித்து விட்டு திருப்பட்டூரில் இருந்து பயணத்தை துவங்குனீர்கள் என்றால் அடுத்த 73 கிலோ மீட்டரில் தர்மபுரியை அடைந்து விடலாம். வழித்தடம் : கண்ணாலபட்டி, இருமாத்தூர், குண்டலபட்டி, தர்மபுரி.

ஆன்மீகத் தலங்கள்

ஆன்மீகத் தலங்கள்


திருப்பட்டூரில் இருந்து தம்ரபுரி சாலையில் இருபுறங்களிலும் ஏராளமான சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்கள் காணப்படுகின்றன. அதில், கண்ணாலபட்டி அடுத்துள்ள ஓம் சக்தி கோவில், பூங்காவனத்தம்மன், இதனை அடுத்து பசுமை வயல் நடுவே ஸ்ரீ மாரியம்மன் கோவில், எளிதில் காணக்கிடைக்காத நரசிம்ம பெருமாள் கோவில், இருமாத்தூர் அடுத்து சொக்கநாதர் சிவன் கோவில் என பல கோவில்களில் ரம்மியமாக சற்று ஓய்வெடுத்து பயணத்தை மேற்கொள்ளலாம்.

Michael Coghlan

தர்மபுரி - பென்னாகரம்

தர்மபுரி - பென்னாகரம்


பெரும்பாலும் வானுயர்ந்த கட்டிடங்கலற்ற இருபுறமும் வனப் பகுதிகளும், பசுமைத் தோட்டங்களும் நிறைந்த சாலை தர்மபுரி - பென்னாகரம். இந்த இடைப்பட்ட 32 கிலோ மீட்டர் தூரத்தை போக்குவரத்து நெரிசலின்றி சிட்டியில் இருந்து மாறுபட்ட ஓர் பைக் ரைடை மேற்கொள்ளலாம்.

Soham Banerjee

பென்னாகரம் - ஒக்கேனக்கல்

பென்னாகரம் - ஒக்கேனக்கல்


பென்னாகரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒக்கேனக்கல் அருவி. கல்நாடக- தமிழக எல்லையில் அமைந்துள்ள இங்கு தான் காவிரி நீர் தமிழகத்திற்குள் நுழைகிறது. வரிசையாக அருவிகள் விழும் இந்த பிரமாண்ட ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியில் காணப்படும் கார்பானைட் பாறைகள் தெற்காசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானவையாகவும் கருதப்படுகின்றன.

Mukesh Barnwal

பரிசல் சவாரியும், பொரிச்ச மீனும்

பரிசல் சவாரியும், பொரிச்ச மீனும்


கோடைக்காலத்தில் ஆற்றின் வேகம் குறையும் போது இந்த பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் பரிசல் சவாரி செய்வது ஒரு வித்தியாசமான அனுபவமாகும். நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு அருகிலேயே அப்போதே நீரில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக பயணிகளுக்கு பொரித்து தரப்படுவது மற்றொரு சுவாரசியம்.

Selvaraj Saravanan

அழகாக அச்சுறுத்தும்..!

அழகாக அச்சுறுத்தும்..!


எங்கு காணிணும் மிரளவைக்கும் மலைப்பாறைகள், அவற்றின்மீது ஆக்ரோஷமாக விழுந்து சிதறும் நீரின் அசுரத்தனம், பெருகி ஓடும் பிரவாகத்தின் ஓட்டத்தில் தெறிக்கும் நீரின் சக்தி இவை யாவுமே ஒகேனக்கல்லுக்கு பயணம் செய்யும் பயணிகளை திகைக்க வைத்து விடும் என்பதில் ஐயமில்லை.

Chitrinee

இயற்கையின் பிரம்மாண்டம்

இயற்கையின் பிரம்மாண்டம்


அருவிப்பகுதிக்கு அருகில் இடி இடிப்பது போன்று நீர்வீழ்ச்சி உருவாக்கும் ஒலியை வார்த்தைகளில் விவரிப்பது மிகக்கடினம். ஒக்கேனக்கல் பகுதியில் எங்கு திரும்பினாலும் நம் விழிகளை அகற்ற முடியாத அளவுக்கு இயற்கையின் பிரம்மாண்டமானது விதவிதமான பரிமாணங்களில் நம் கண் முன் விரிகிறது.

Kiran.bhusam

சுடசுட மீன் வருவல்

சுடசுட மீன் வருவல்


அப்போதே பிடிக்கப்பட்டு எண்ணையில் பொரித்துக்கொடுக்கப்படும் சுவையான மீன்கள், உற்சாகத்தை தரும் எண்ணெய்க்குளியல் போன்ற சுவாரசியமான அம்சங்கள் ஒக்கேனக்கல் அருவிப்பகுதியில் உங்களுக்காக காத்திருக்கின்றன. விசேஷ மூலிகைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் பாரம்பரிய அனுபவம் போன்ற அம்சங்களை கொண்ட எண்ணெய் மசாஜ் குளியலை உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் ஒருவித சிகிச்சை என்றே சொல்லலாம்.

ezhuttukari

சாகச விரும்பிகளுக்காக...

சாகச விரும்பிகளுக்காக...


சாகச விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் அருவிப்பகுதியில் நீச்சலில் ஈடுபடலாம். ஆனால் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை. இது தவிர அருவி அமைந்திருக்கும் மேலகிரி மலையில் நீண்ட மலையேற்றம் மற்றும் நடைபயணம் போன்றவற்றிலும் சாகச விரும்பிகள் ஈடுபடலாம்.

Thamizhpparithi Maari

பாதுகாப்பாக மகிழுங்கள்...

பாதுகாப்பாக மகிழுங்கள்...


பாறை முகடுகளும், ஆற்பறித்துக்கொண்டு ஓடும் நீரின் வேகமும் காண்போரை ஈர்க்கும் வல்லமைகொண்டது. நீரில் விளையாடும் முன், பரிசலில் செல்லும் முன் அனுபவம் வாய்ந்த பரிசல் காரர்களாக தேர்வு செய்வது நல்லது. மேலும், மிதவை தன்மைக் கொண்ட பிரத்யேக ஆடைகளை பசிரலில் செல்லும் முன் அணிந்துகொள்வது கட்டாயம். என்ன இளைஞர்களே, இந்தக் கோடைய ஜாலியா பைக் ரைடுல ஒக்கேனக்கல் சென்று மகிழ ரெடியா...!

ezhuttukari

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்