» »"விசில்போடு எக்ஸ்பிரஸ்"யில் புனே கிளம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..!

"விசில்போடு எக்ஸ்பிரஸ்"யில் புனே கிளம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..!

Written By: Sabarish

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஐபிஎல் வாரியம் மாற்றுப் பகுதியில் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்தது. இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தவர்கள் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தான். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று மாலை புனேவில் நடைபெற உள்ள நிலையில் இந்தப் போட்டியைக் காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயில் மூலம் புனே சென்றுள்ளனர்.

சென்னை - புனே

சென்னை - புனே


சென்னையில் இருந்து புறப்பட்ட விசில்போடு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் பயணித்த வழித்தடங்களில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களையும், சென்னை - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று மோதும் விளையாட்டு மைதானத்தைச் சுற்றியுள்ள தவறவிடக் கூடாத பகுதிகளையும் சுற்றுப் பார்க்கலாம் வாங்க.

Superfast1111

வழித்தடம்

வழித்தடம்


சென்னையில் இருந்து புறப்பட்ட விசில்போடு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலங்களில் திருப்பதி, கடப்பா, ரிச்சலூர் வழியாக கர்நாடக பகுதியான குல்பர்காவின் ஊடாக, மகாராஸ்டிர மாநிலப் பகுதியான சோலாப்பூரைக் கடந்து புனேவை அடைகிறது. ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகாராஸ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் (எம்சிஏ) மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது.

கடப்பா

கடப்பா


ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் அமைந்திருக்கும் கடப்பா நகரம் திருமலை திருப்பதியின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இதற்கேற்றார் போல தெலுங்கு மொழியில் 'வாயில்' என்ற அர்த்தத்தில் இந்த நகரின் பெயர் அறியப்படுகிறது. கடப்பா நகரம் இன்று ஆந்திர மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாக அமீன் பீர் தர்கா, பகவான் மஹாவீர் அருங்காட்சியகம், சாந்த் பீரா கும்பாத், தேவுனிகடப்பா, மஸ்ஜித்-இ-ஆஸாம் ஆகியவை அறியப்படுகின்றன. அதோடு மும்பை-சென்னை வழித்தடத்தில் அமைந்திருப்பதால் கடப்பா நகர ரயில் நிலையத்தில் முக்கியமான ரயில்கள் அனைத்தும் வந்து செல்கின்றன. அதுமட்டுமல்லாமல் கடப்பா நகருக்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Nikhilb239

அனந்தபூர்

அனந்தபூர்


மாந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் லேபாக்ஷி எனும் அழகிய குக்கிராமம் அதன் மதச் சிறப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோவில், விஷ்ணு கோவில், வீரபத்ரா கோவில் ஆகிய மூன்று ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதைத்தவிர ஆமையின் முதுகு போல காட்சியளிக்கும் சிறிய குன்று ஒன்று சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவரும் தலமாகும். கூர்ம சிலா என்று அழைக்கப்படும் இந்தக் குன்றில் ஸ்ரீராமர் கோவில், ரகுநாதர் ஆலயம், வீரபத்ரர் ஆலயம், பாபனாதேஷ்வரா ஆலயம், துர்கா கோவில் போன்ற கோவில்கள் அமைந்திருக்கின்றன. லேபாக்ஷி கிராமத்தில் அமைந்திருக்கக்கூடிய ஒவ்வொரு கோவிலும் விஸ்வகர்மா பிராமணர்களின் கலை நுணுக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. இந்தக் கோவில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள் புகழ்பெற்ற விஸ்வகர்மா சிற்பியான அமரஷில்பி ஜனாக்ஷரி என்பரின் மேற்பார்வையில் படைக்கப்பட்டவையாக கருதப்படுகின்றன.

R.K.Lakshmi

சோலாபூர்

சோலாபூர்


மஹாராஷ்டிரா மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று சோலாப்பூர். இதன் மாவட்டம் 14,850 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சோலாப்பூர் மாவட்டத்துக்கு வடக்கில் ஓஸ்மானாபாத், அஹ்மத்நகர் மாவட்டங்களும் மேற்கில் சதாரா புனே மாவட்டங்களும் தெற்கில் பீஜாபுர் சாங்க்லி மாவட்டங்களும் கிழக்கில் குல்பர்கா மாவட்டமும் அமைந்துள்ளது. தக்‌ஷிண் காசி என்று அழைக்கப்படும் பந்தர்பூர் ஸ்தலத்துக்காக சோலாப்பூர் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்குள்ள விட்டோபா கடவுளின் கோவிலுக்காக இது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இந்தியா முழுவதும் அறியப்பட்டுள்ளது. கார்த்திகை மற்றும் ஆஷாதி ஏகாதசி போன்ற திருவிழாக்களின் போது இங்கு நான்கிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் வரை இங்கு கூடுகின்றனர். சோலாப்பூரை ஒட்டிய அக்கல்கோட் எனும் இடமும் ஒரு புனித யாத்ரீக தலமாகும்.

Akshatha Inamdar

சோலாபூர்

சோலாபூர்

இங்குள்ள வடவிருக்‌ஷா கோவிலும் சுவாமி மடமும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். இங்குள்ள ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்றாக துல்ஜா பவானி தெய்வத்துக்கு உருவாக்கப்பட்டுள்ள துல்ஜாபூர் விளங்குகிறது. ஒரு ஏரியில் நடுவில் அமைந்துள்ள அழகிய கோவிலான சித்தேஸ்வரர் கோவில் சோலாப்பூரில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இவை தவிர வரலாற்று பிரியர்களுக்கான சுற்றுலா அம்சமாக புயிகோட் கோட்டை அமைந்துள்ளது. இங்குள்ள மோதிபாக் நீர்த்தேக்கம் பலவித பறவைகள் வாழும் சரணாலயமாக திகழ்கிறது.

drigoonmath

லோனாவலா

லோனாவலா

இப்படியாக, சென்னையில் இருந்து புனே பயணத்தில் கடப்பா, அனந்தபூர், சோலாபூர் உள்ளிட்ட இந்தியாவில் பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கடந்து வர புனேவில் உள்ள விளையாட்டு மைதானமான எம்சிஏ மைதானத்தை அடையலாம். என்றாவது ஒரு நாள் கிடைக்கும் இது போன்ற வாய்ப்புகளில் மேட்ச் முடிந்தவுடன் ஊர் திரும்புவதை விட அங்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வருவது சிறந்தது தானே. அப்படி, அந்த மைதானத்தில் அருகே உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் பிரசிதிபெற்றது லோனாவலா. மும்பை மற்றும் புனே நகரத்திலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த லோனாவலாவை புனேவில் இருந்து எளிதில் அடைய முடியும். மிதமான சீதோஷ்ண நிலை, அமைதியான சூழல் மற்றும் மாசற்ற காற்று போன்றவை லோனாவலாவை ஒரு ஒப்பற்ற விடுமுறை பொழுதுபோக்கு தலமாக விளங்கச் செய்கிறது. இங்குள்ள நீர்வீழ்ச்சிகள், பசுமையான புல் தரை பூங்காக்கள், மலை ஏற்றம் உள்ளிட்டவை நிச்சயம் உங்களை அப்பகுதியில் இருந்து விலகச் செய்யாது.

Ravinder Singh Gill

புனேவில் எங்கெல்லாம் போகலாம் ?

புனேவில் எங்கெல்லாம் போகலாம் ?


புனேவிலேயே முல்ஷி ஏரி, சனிவார் வாடா, ஷிண்டே சாத்ரி, ஆகா கான் கோட்டை, விஸாபூர் கோட்டை, கத்ரஜ் பாம்பு பண்ணை சுற்றுலாத் தலங்கள் உங்களது பயணத்தை பயனுள்ளதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இருக்கும். அப்புறம் என்ன பாஸ் "நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு பெரிய விசில அடிங்க"... அப்படியே, ஜாலியா ஊர் சுத்தியும் பாத்துட்டு வந்துடுங்க...

Dinesh Valke

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்