Search
  • Follow NativePlanet
Share
» »மகரவிளக்கு பூஜை, திறக்கப்பட்டது நடை - சென்னையிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு அரசு பேருந்துகள், இதர முக்கிய தகவல்

மகரவிளக்கு பூஜை, திறக்கப்பட்டது நடை - சென்னையிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு அரசு பேருந்துகள், இதர முக்கிய தகவல்

கார்த்திகை மாதம் என்றாலே நம் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஹரிஹர சுதனான அய்யன் ஐயப்பனே! இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, தினமும் பூஜைகள் செய்து, விரதமிருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு இன்று முதல் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அந்த வகையில் எப்படி டிக்கெட் புக்கிங் செய்வது, டிக்கெட் இல்லாமல் எப்படி சுவாமி தரிசனம் செய்வது மற்றும் இதர தகவல்களை இங்கே காண்போம்!

விண்ணை பிளந்த 'சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம்'

கேரளாவில் பிரசத்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு முக்கிய நிகழ்வாக கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்கு கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்னும் கோஷம் விண்ணையும் மண்ணையும் அதிர வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

shabrimala darshan

புதிய மேல் சாந்திகள் பதவியேற்பு

தொடர்ந்து சன்னிதானத்தில் புதிய மேல் சாந்திகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி மகேஷ் மோகனரு, மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி முரளி ஆகியோர் இருமுடி கட்டிமேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டனர். அதன்பிறகு 18 ஆம் படி வழியாக மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் கூறி பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

இந்த புனித பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பக்தர்களின் வசதிக்காகவும், வசதிக்காகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. சபரிமலைக்கு சென்னை, திருச்சி, மதுரை, கடலூர்/புதுச்சேரி போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை இயக்கப்படும். பல்வேறு விருப்பங்களை பூர்த்தி செய்யும் முயற்சியில், இந்த சிறப்பு பேருந்துகள் குளிரூட்டப்பட்ட சொகுசு விருப்பங்கள் மற்றும் நிலையான பேருந்துகள் இரண்டையும் உள்ளடக்கியுள்ளது.

shabrimala darshan travel

போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலியில் புக் செய்யுங்கள்

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு அதிக பக்தர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். www.tnstc.in மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலம் பயணிகள் 30 நாட்களுக்கு முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9445014452, 9445017793, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி

சுவாமி தரிசனம் டிக்கெட் புக்கிங் சபரிமலை தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் முன் பதிவு செய்வது அவசியம். https://sabarimalaonline.org/#/login என்ற இணையத்தளத்தில் நீங்கள் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். இதற்காக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் எதாவது ஒன்றின் ஒரிஜினல் கையில் வைத்திருக்க வேண்டும். ஆன் லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

shabrimala online booking

பல் சிறப்பு ஏற்பாடுகளை செய்த தேவசம் போர்டு

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களில் அலங்காரங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலான அலங்காரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டடுள்ளது. மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சன்னிதானம், நிலக்கல், வடசேரிகரை ஆகிய இடங்களில் மூன்று தற்காலிக காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பம்பைக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை ஸ்டேஷனில் நிறுத்த வேண்டும். பக்தர்களின் வசதிக்காக 17 மைதானங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 13 ஆயிரம் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது!

More News

Read more about: sabarimala travel guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+