» »21600 தங்க ஏடுகள்! 72000 ஆணிகள்! மறைந்துள்ள மகா ரகசியங்கள்!

21600 தங்க ஏடுகள்! 72000 ஆணிகள்! மறைந்துள்ள மகா ரகசியங்கள்!

Written By: Staff

சிதம்பர ரகசியம் என்பதற்கு பலரும் பற்பல கதைகள் கூறிவரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன.

அதாவது இந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் மையைப் பகுதி என்று சொல்லப்படுகிறது.

இதுபோல நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் காஸ்மிக் நடனம் (cosmic dance) என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

காய்ச்சலுக்கும் கடவுள் இருக்கு தெரியுமா? நீராடினால் எப்பேர்பட்ட நோயும் பறந்தோடும்! #Travel2Temple 3

மேலும் மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலின் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் உள்ள 9 வாயில்களை குறிக்கின்றது. இவைபோன்று இன்னும் எக்கச்சக்கமான சிதம்பர ரகசியங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

சாஸ்திரங்களும், புராணங்களும்!

சாஸ்திரங்களும், புராணங்களும்!

அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

படம் : BishkekRocks

நடராஜன் ஆன நடனராஜன்!!!

நடராஜன் ஆன நடனராஜன்!!!

நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜன் என ஆனதாக சொல்லப்படுகிறது.

படம்

நாட்டியாஞ்சலி

நாட்டியாஞ்சலி

சிவராத்திரியின்போது நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது. அப்போது உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் நடனக்கலைஞர்களும், நாட்டியம் பயிலும் மாணவர்களும் நாட்டியத்தை நடராஜருக்கு அர்ப்பணமாக செலுத்துகின்றனர். இவ்வாறு நாட்டியார்ப்பணம் செய்வதை பெருமையாகவும், பேராகாவும் கருதுகின்றனர்.

படம் : Arunankapilan

நந்தவனம்

நந்தவனம்

வெளிவாசலை கடந்தவுடன் முதல் பிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி கோட்டைசுவர் அமைப்பினால் நாற்புறமும் சூழப்பட்டு இடம்பெற்றுள்ளது. கோயில் வளாகத்தின் முதல் அங்கமான இந்த நந்தவனப்பகுதி ஒரு வனம் போன்று அமைந்துள்ளது.

படம் : Arunankapilan

கருங்கற்கள் பதிக்கப்பட்ட பிரகாரம்

கருங்கற்கள் பதிக்கப்பட்ட பிரகாரம்

நந்தவனப்பகுதியை அடுத்து ராஜகோபுர வாசல் வழியாக உள் நுழைந்தபின் கருங்கற்கள் பதிக்கப்பட்ட அடுத்த பிரகார வளாகப்பகுதி காணப்படுகிறது. இந்தப் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோயில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் போன்றவை அமைந்துள்ளன.

படம் : Ryan

நடைக்கூடம்

நடைக்கூடம்

தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதிற்சுவரையொட்டியே காணப்படுகிறது. கலைநயம் மிளிரும் இந்த நடைக்கூடம் அவ்வளவாக கவனிக்கப்படாது இருந்தாலும் இது கோயிலின் நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்புக்கான சான்றாய் தோற்றமளிக்கின்றது.

படம் : Vijayanarasimhan

தீர்த்தங்கள்

தீர்த்தங்கள்

சிவகங்கை தீர்த்தம், பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் கோயிலில் அமைந்துள்ளன.

படம் : Sankar.s

சிவகங்கை தீர்த்தம்

சிவகங்கை தீர்த்தம்

கோயிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது. மேலிருந்து ஒரே சீராக படிகள் குளத்தின் அடிப்பகுதியை நோக்கி இறங்குவதைக்காணலாம். குளத்தின் அடிப்பகுதி ஒன்பது கிணறுகளுடன் முடிவடைதாக சொல்லப்படுகிறது.

படம் : BishkekRocks

கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர் என்பதை இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.

படம் : Sankar.s

சிவகாம சுந்தரி அம்மன் கோயில்

சிவகாம சுந்தரி அம்மன் கோயில்

கோயிலின் வடக்கு கோபுர வாயிலுக்கு அருகேயுள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோயில் ஒரு தனியான கோயில் வளாகமாக கலைநயம் மிக்க கற்சிற்ப அலங்கார நுணுக்கங்களோடு அமைந்துள்ளது.

படம் : Azzam AWADA

சபைகள்

சபைகள்

பேரம்பலம், சிற்றம்பலம், கனகசபை, நிருத்தசபை, இராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ளன. இவற்றில் பேரம்பலம் என்பது தேவசபை என்ற பெயரில் அறியப்படுகிறது.

படம் : Arian Zwegers

உற்சவ மூர்த்தியின் வாயில்

உற்சவ மூர்த்தியின் வாயில்

கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பு உள்ளது. இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது.

படம் : G.Raghav

பெயர்கள்

பெயர்கள்

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில், சிதம்பரம் கோயில் என்று நடராஜர் கோயில் அழைக்கப்படுகிறது. இது சைவ இலக்கியங்களில் 'கோயில்' என்ற பெயராலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் பூலோக கைலாயம் என்றும் கைலாயம் என்றும் நடராஜர் கோயில் அறியப்படுகிறது.

கோயில் வீதி

கோயில் வீதி

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு முன்னாலுள்ள வீதி.

படம் : BishkekRocks

பஜனை கோஷ்டி

பஜனை கோஷ்டி

சிதம்பரம் கோயில் வீதிகளில் செல்லும் பஜனை பாடிச் செல்பவர்கள்.

படம் : Sankar.s

கோயில் யானை

கோயில் யானை

நடராஜர் கோயில் வாசலில் பாகனுடன் நிற்கும் கோயில் யானை.

படம் : BishkekRocks

கொடிமரம்

கொடிமரம்

நடராஜர் கோயிலிலுள்ள கொடிமரம்.

படம் : Sankar.s

சோழ மன்னன்

சோழ மன்னன்

கோயிலுக்குள் காணப்படும் சோழ மன்னன் ஒருவனின் சிலை.

படம் : Vijayanarasimhan

கோயில் தேர்

கோயில் தேர்

நடராஜர் கோயிலின் தேர்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்