Search
  • Follow NativePlanet
Share
» »கோயம்புத்தூர் - பெங்களூரு இந்த ரூட்டை டிரை பண்ணி பாத்துருக்கீங்களா? #புதியபாதை2

கோயம்புத்தூர் - பெங்களூரு இந்த ரூட்டை டிரை பண்ணி பாத்துருக்கீங்களா? #புதியபாதை2

நாம் ஒவ்வொருவரும் பயணிக்கிறோம். உணவு, உடை, இருப்பிடம் நிலையாக கிடைத்தபின் வேலைக்காகவும், புகழுக்காவும் பயணிக்கிறோம். இதையெல்லாம் தவிர, நாம் பயணிப்பது புத்துணர்ச்சி, புது அனுபவம் முதலியவற்றிற்காகத்தான். அதுதான் நம்மை சுற்றுலாப் பிரியர்களாக மாற்றுகிறது.

கற்பூரம் காட்டும்போது கண்சிமிட்டும் பெருமாள் ஆச்சர்யம் நிகழும் கோயில்

நம்மில் பலர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் செல்வது எப்படி என்று பார்ப்போம். ஆனால் நல்ல அனுபவத்தைத் தேடி ஒரு புதிய பாதையில் பயணிப்பவர்கள் நம்மில் சிலர்தான். அப்படி ஒரு அனுபவத்துக்காக மட்டுமில்லாமல், புதியவர்களையும் புதுப்புது இடங்களையும் தெரிந்துகொண்டு பயணிக்கவும் இந்த புதியபாதை நமக்கு உதவுகிறது. வாருங்கள்.. கோயம்புத்தூர் - பெங்களூர் வழித்தடத்தில் புதிய பாதையைத் தேடுவோம்.

அழகான அம்சங்களைப் பெற்றிருக்கும் பெண்கள் வாழும் டாப் 3 நகரங்கள் எவை தெரியுமா?

வழித்தடம்: கோயம்புத்தூர் - பிலிகிரி மலைக்குன்று - பெங்களூர்

கோயம்புத்தூரிலிருந்து பிலிகிரி மலைகள் வரையில் முதல்பாதியாகவும், அங்கிருந்து பெங்களூர் இரண்டாவது பாதியாகவும் வைத்துக்கொள்வோம். உங்கள் வசதிக்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

 கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

இந்தியாவின் மான்செஸ்டர் நகரமான இது பல்வேறு வகையான பொருளாதார பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கும் வாழ்வாதாரமான மாவட்டமாகும். நம் பயணத்தை இங்கிருந்து தொடங்குவோம்.

கோவை நகரில் அதிகமாக பார்வையிடப்படும் இடங்கள் மருதமலை கோயில், தியானலிங்க ஆலயம், இந்திரா காந்தி வனவிலங்கு காப்பகம் மற்றும் பிளாக் தண்டர் தீம் பார்க் ஆகியன. வெப்பம் நிறைந்த கோடைக்காலம் , மிதமான மழைக்காலம், கடும் குளிர்காலம் என இந்நகரின் காலநிலை மாறுபடுகிறது. கோயம்புத்தூரில் விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியன இருப்பதோடு அருகிலுள்ள நகரங்களோடு சிறந்த சாலை அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரிலிருந்து நாம் முதலில் பயணிக்கப்போவது பவானிசாகர் அணையை நோக்கித்தான். சுற்றுலா என்பது வெறுமனே உலா செல்வதுமட்டுமல்லாமல் அருகாமை இடங்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதுதானே. உங்களுக்கு நேரமிருந்தால் இந்த இடங்களுக்கும் சென்று வாருங்கள்.

மேலும் தெரிந்துகொள்ள:

 மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்

நீங்கள் குழந்தைகளுடன் பயணித்தால், அவர்களுக்காக நேரம் செலவிடுவதையும் கருத்தில் கொள்ளுங்கள். சில சமயங்களில் நீங்களே குழந்தையாய் மாறி குதூகலிக்க விரும்பினால் அருகிலேயே மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது பிளாக் தண்டர் கேளிக்கை பூங்கா. உண்மையில் இது சிறந்த பொழுதுபோக்கான பயணமாக இருக்கப்போகிறது.

இந்தப்பூங்கா நீலகிரி மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் அதன் தேயிலை, காப்பித்தொட்டங்களின் அழகான காட்சியமைப்பு இங்கிருந்து காணக் கிடைப்பதால் இந்த சுற்றுப்பகுதியின் அழகு இன்னமும் மெருகூட்டப்படுகிறது. நுழைவுக் கட்டணம் பத்து வயதுக்கு மேலான பெரியவர்களுக்கு ரூ. 450, பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ. 400.

மேலும் தெரிந்துகொள்ள:

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இப்படி ஒரு ரூட் இருக்கு தெரியுமா?

குன்னூர்

குன்னூர்

மேட்டுப்பாளையத்திலிருந்து சற்று தொலைவிலேயே குன்னூர் அமைந்துள்ளது. சுற்றிலும் பசுமையான இயற்கை அழகுடன் காணப்படும் இந்த இடம் சுற்றுலா பிரியர்கள் அதிகம் விரும்பும் இடமாகும். குன்னூரில் முக்கியமாக தேயிலை மற்றும் சாக்லேட் சுவைக்க மறந்துவிடாதீர்கள்.

குன்னூர்,பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு அபிப்ராயத்தை உண்டுபண்ணக் கூடிய ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இவ்விடம் எளிமையான, மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்த குழைந்தப் பருவ ஞாபகங்களை நினைவுறுத்துகிறது.

மேலும் தெரிந்துகொள்ள:

Titus John

கோத்தகிரி

கோத்தகிரி

குன்னூர் போலவே, கோத்தகிரியும் ஊட்டிக்கு மிக அருகில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த மலைப் பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 1793 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் மலையேறும் (ட்ரெக்கிங்) அனுபவத்திற்கு ஏற்ற இடம் எனப் புகழ் பெற்றது. இங்கே உள்ள மலையேறும் தடங்கள் நீலகிரியில் மனித நாகரீகத்தின் கால்தடம் படாத பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் , கொடநாடு வியூ பாயின்ட் , கேத்தரின் நீர் வீழ்ச்சி , எல்க் அருவி, ஜான் சுல்லிவன் நினைவிடம், நீலகிரி அருங்காட்சியகம், நேரு பூங்கா, ஸ்நௌடன் சிகரம் ஆகியவை கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள காண வேண்டிய இடங்கள் ஆகும்.

மேலும் தெரிந்துகொள்ள:

Shareef Taliparamba

தேனாடு

தேனாடு

கோத்தகிரி அருகிலுள்ள தேனாடு கிராமமும் மிகச்சிறப்பான மலை வாசல்தளமாகும். முடிந்தால் இந்த இடத்துக்கும் சென்று வாருங்கள். அப்படியே நாம் பவானிசாகரை நோக்கி பயணிப்போம்.

கோவை - பவானிசாகர்

கோவையிலிருந்து பவானிசாகருக்கு 55கிமீ தொலைவு ஆகும். இந்த வழித்தடத்தில் செல்வதால் 1.30மணி நேரத்தில் சென்றுவிடமுடியும். மேலும் செல்லும் வழியில் ஓம்சக்தி கோயில், தாக்வாமஸ்ஜித், சிறுவர் பொன்னாரியம்மன் கோயில், ரங்கம்மாள் கோயில், தலைக்காட்டு மாரியம்மன் கோயில் என பல இடங்கள் உள்ளன.

இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் செல்வதில்லை - பக்தர்களை கோடீஸ்வரனாக்கும் கோயில்

 பவானிசாகர்

பவானிசாகர்

கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுடன், நீலகிரியில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் ஒரு அணைக் கட்டப்பட்டுள்ளது. அதுதான் பவானிசாகர் அணை. இது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இது ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும்.இந்த அணையில் இரண்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

நம் பயணத்தைத் தொடர்ந்து சுவர்ணவதி அணை நோக்கி செல்வோம் வாருங்கள்.

Pratheept2000

சுவர்ணவதி அணை

சுவர்ணவதி அணை

அட்டகுலிபுரம் எனும் இடம் அருகே சுவர்ணவதி அணை உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து தொடங்கிய நம் பயணம், பவானி ஆற்றைக் கடந்து, தயிர்பள்ளம் வழியாக செல்லவேண்டும். இந்த வழித்தடத்தில், முத்துமாரிஅம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், சங்குமாரியம்மன் கோயில், பன்னாரியம்மன் கோயில் என நிறையகோயில்கள் உள்ளன. அடுத்த நாம் மலைப்பாதையில் பயணிக்கவிருக்கிறோம். இது சற்று கடினமானது எனினும் முடியாதது அல்ல. காட்டுப்பாதையில் பயணிக்க யாருக்குத்தான் பிடிக்காது சொல்லுங்கள்.

இந்த பாதையில் பயணித்து 78கிமீ தொலைவில் உள்ள சுவர்ணவதி அணையை அடையலாம். இதற்கு ஏறக்குறைய 2 மணி நேரங்கள் ஆகலாம். சொர்ணவதி ஆறு காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது கர்நாடகத்தின் நசுருர் மலைப்பகுதியில் தோன்றி 88 கிமீ ஓடிப் பின்னர் காவிரியில் கலக்கிறது. இது 1,787 சதுர கிமீ நீர்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளது. இதன் குறுக்கே அட்டிகுலிபுரா (Attigulipura) என்ற இடத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. இவ்வணையானது சாம்ராஜ்நகர் வட்டத்தில் உள்ளது. இது சிக்கஹொலே நீர்த்தேக்கத் திட்டத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அணை திட்டமிடப்பட்டபோது எதிர்பார்த்த அளவு தற்போது நீர்வரத்து இல்லாததால் சிக்கஹொலே நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் சொர்ணவதி அணைக்கு 2.8 கிமீ நீளமுடைய கால்வாய் மூலம் கொண்டு வரப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து பிலிகிரி ரங்கா மலையை நோக்கி பயணிக்கலாம். இடையில் பந்திக்கரை ஏரி ஒன்று உள்ளது. இதையும் பார்த்து ரசித்துவிட்டு நம் பயணத்தை தொடரலாம்.

சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்!

 பந்திகரை ஏரி

பந்திகரை ஏரி

சுவர்ணவதி அணையிலிருந்து பந்திக்கரை ஏரி நோக்கி வரும்வழியில் சிக்கோல் அணை உள்ளது. இதுவும் பார்ப்பதற்கு ஏற்ற சுற்றுலா தளமாகும். இது பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் அறியாதவர்களாக இருக்கின்றனர். பந்திக்கரை ஏரியிலிருந்து சற்று தொலைவில் மரகதகரை ஏரி அமைந்துள்ளது. இதன் அருகிலேயே பட்டி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. நெடுஞ்சாலை எண் 948ஐ பின்தொடர்ந்து நம்பயணத்தை அப்படியே தொடர்வோம். வழியில் சக்கரேஸ்வரா மலைக்கோயில், சித்தப்பாஜி கோயில், உப்பின மோலே ஏரி, முத்துராயசுவாமி கோயில், கிருஷ்ணையானா கட்டே எனும் ஏரி, ஜடேஸ்வாமி கோயில், பிலிகுரி ரங்கா ஏரி என நிறைய இடங்களைப் பார்த்துக்கொண்டே செல்லலாம்.

 பிலிகிரி ரங்கா மலைக்குன்றுகள்

பிலிகிரி ரங்கா மலைக்குன்றுகள்

பிலிகிரி ரங்கநாத சுவாமி கோயில் இங்கு மிகவும் பிரபலமான கோயில் ஆகும். இதனால்தான் இந்த மலைகளுக்கு இப்படி பெயர் வந்தது. இது பாதுகாக்கப்பட்ட காடுகளாகும். இங்கு புலிகள் பாதுகாக்கப்படுகின்றன.

பிலிகிரி ரங்கநாத சுவாமி கோயில்

பிலிகிரி என்றால் கன்னட மொழியில் வெள்ளை மலை என்று பொருள். இங்குள்ள மக்களை பிலிகிரி ரங்கநாதர் ஆள்வதாக நம்பிக்கை. ரங்கநாயகி. சில ஆழ்வார்கள் இங்கு இருக்கின்றனர். ஏப்ரல் மாதம் இங்கு தேரோட்டம் நடைபெறும். இந்த நிகழ்வுக்கு இந்தியா முழுவதுமிருந்து பக்தர்கள் வருகின்றனர்.

அகரா ஏரி

அகரா ஏரி

இந்த பாதையில் அமைந்துள்ள மற்றொரு ஏரி அகரா ஏரி ஆகும். இது மிகவும் பெரியது. இதைத் தொடர்ந்து கொல்லிகலா எனும் இடத்துக்கு அருகில் இன்னொரு ஏரி அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் பல ஏரிகள் நிறைந்து காணப்படுகிறது என்பது நிச்சமாக மறக்கமுடியாத உண்மையாகும்.

இதைத்தொடர்ந்து அமைதி பூங்கா ஒன்றும், ஜோஷ்வா ஏரி, சித்யானபுரம் ஏரியும் வருகிறது. முடிந்தால் அங்கு சென்று பார்வையிடலாம்.

சர்க்கூர்

சர்க்கூர்

பெலக்காவடி - கொல்லிகலா வழித்தடத்தில் நீங்கள் இப்போது சென்றுகொண்டிருக்கிறீர்கள். அடுத்து சர்க்கூர் எனும் இடம் வரும். இங்கு தேவையான பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம். இது சற்று வசதிகள் நிறைந்த இடமாகும். அடுத்து ஏரியின் ஓரத்தில் சாலையில் பயணித்துக்கொண்டே ஏரியின் அழகை ரசிக்கலாம். பின்னர் சத்யகலா எனும் இடத்தில் காவிரியாற்றை நாம் கடக்கிறோம்.

Prof tpms

அகத்தியர் மலையில் மறைந்துள்ள தமிழர்களின் மர்ம பொக்கிஷங்கள்!

காவிரி ஆறு

காவிரி ஆறு

காவிரியாற்றைக் கடக்கும் இடமும் மிகுந்த குளிர்ச்சியானதாக இருக்கும். நெடுஞ்சாலை எண் 948ஐ தொடர்ந்து செல்லவேண்டும். வரும் வழியில் மகாதேஸ்வரா கோயில், மன்பீர் குவாட்ரியா சாமன் தர்கா, சித்தப்பாஜிகோயில் என பல இடங்கள் உள்ளன.

Balajiviswanathan

தேவப்பட்டினா

தேவப்பட்டினா

இந்த இடங்களைத் தாண்டியபின் தேவப்பட்னா எனும் இடத்தில் ஏரி ஒன்று உள்ளது. இதுவும் இயற்கை எழில் சூழ்ந்த இடமாக உள்ளது. இதனையடுத்து பாச்சனஹல்லி எனும் இடம் அமைந்துள்ளது.

பாச்சனஹல்லி

பாச்சனஹல்லி

பாச்சனஹல்லி எனும் இடத்தைச் சுற்றி பல இடங்கள் சுற்றுலா அம்சங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. மச்சனஹல்லி ஏரி, பசுவேஸ்வரா கோயில், பிரேஸ்வரா கோயில், அதனருகில் ஒரு ஏரி, மாரஹல்லி கரே எனப்படும் ஏரி ஆகியன உள்ளன. இவையனைத்தும் பெரும்பாலும் யாருக்கும் அதிகம் அறிமுகமில்லாத இடங்களாகும். ஆனால் சுற்றுலாப் பிரியர்கள் சென்றால் நல்ல புத்துணர்வு பெறலாம்.

மாலவல்லி ஏரி

மாலவல்லி ஏரி

இதைத் தொடர்ந்து அமைந்துள்ளது மாலவல்லி ஏரி. இதன் அருகினில் மத்தியாஸ் ஆலயம் உள்ளது. அடுத்து தந்தினமரம்மா கோயில், நீலமகனஹல்லி சிவன் கோயில், பசுவேஸ்வரா கோயில் ஆகியன உள்ளன. இதன் அருகே நிசாரா, சப்தகிரி எனும் உணவகங்கள் உள்ளன. இதையடுத்து அமைந்துள்ளது சனி மகாத்மா கோயில்.

ராமேஸ்வரம் அழியப்போகிறதா? பதைபதைக்கும் அறிவியல் கூற்றுகள்

ஷிம்சா ஆறு

ஷிம்சா ஆறு

மாலவல்லி ஏரியிலிருந்து தொடரும் நம் பயணத்தில் அடுத்து நாம் பார்க்கவிருப்பது ஷிம்சா ஆறு. அந்த பகுதியில் மத்தூரம்மா ஏரி ஒன்றும் உள்ளது. இதன் அருகில் மத்தூரம்மா கோயில் அமைந்துள்ளது. இது கர்நாடகாவில் மிகவும் சக்திவாய்ந்த கோயில் ஆகும்.

 பலகரே

பலகரே

நாம் சென்றுகொண்டிருக்கும் பாதையில் தைலூர் ஏரி, சைதேஸ்வரி ஏரி,செல்லம்மாதாயி கோயில், கப்பலம்மா கோயில் ஆகியன உள்ளன. இதன் இடையில் பலகரே அமைந்துள்ளது.

தோட்டமலூர்

தோட்டமலூர்

தோட்டமலூருக்கு அருகே மங்கள்வார்பேட் அமைந்துள்ளது, இங்கும் ஒரு ஏரி காணப்படுகிறது.

சன்னப்பட்டனா

சன்னப்பட்டனா

சென்னப்பட்ணா பெங்களூருவின் புற நகரில் காணப்படுகிறது. இவ்விடமானது மர பொம்மைகள் விற்கப்பட பிரசித்திப்பெற்று விளங்க, அவை மாடர்னாகவும், மிருதுவான தொடுதிறனையும் நமக்கு தருவதோடு நம் குழந்தைகளையும் ஆரவாரத்தில் குதுகலிக்க செய்திடும். பொம்மைகளை தவிர்த்து, தேங்காய் உற்பத்தி பொருளுக்கும், மூலப்பட்டுக்கும் பெயர் பெற்ற ஓர் இடமாகவும் சென்னப்பட்ணா காணப்படுகிறது. இவை அனைத்தையும் சிறந்த விலைக்கு நீங்கள் பெற்றிட, ஷாப்பிங்க் பிரியர்களுக்கு இவ்விடமானது சிறந்ததாக அமையக்கூடும்! இதனை கடந்து சென்னப்பட்ணாவில் சிறு யாத்ரீக தளங்களும், எண்ணற்ற ஆலயங்களும் பார்ப்பதற்காக நம்மை வரவேற்கிறது.

அப்ரமேயா சுவாமி ஆலயம்:

அப்ரமேயா சுவாமி ஆலயம்:

சென்னப்பட்ணாவிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் மல்லூரில் காணப்படும் ஓர் ஆலயம் தான் அப்ரமேயா சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தின் சிக்கல் அமைப்பாக கிருஷ்ண பெருமானின் (அம்பேகளு கிருஷ்ணா) சிலை ஊர்ந்து காணப்படக்கூடும். PC: Kiranravikumar

கன்வா நீர்த்தேக்கம்:

கன்வா நீர்த்தேக்கம்:

இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 1946ஆம் ஆண்டு கன்வா நதியில் கட்டப்பட்டது. இவ்விடம் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தளமாக அமைய, குறிப்பாக பருவமழைக்காலத்தின்போது இந்த ஏரி நிரம்பி வழிந்து நமக்கு காட்சியளிக்கிறது. இவ்விடம் பறவை ஆர்வலர்களுக்கு மற்றுமோர் சொர்க்கமாக அமையவும்கூடும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பின், இங்கே இடம்பெயர்ந்து வரும் பறவைகளையும் உங்களால் பார்த்திட முடியும். PC: Redolentreef

ராமநகர்:

ராமநகர்:

இந்த ஏழு மலை நிலங்கள், சிறந்த பட்டு மற்றும் நெய்தலுக்கு பிரசித்திப்பெற்று காணப்படுகிறது. மேலும் இந்த ராமநகரில் எண்ணற்ற செயல்களான பறவை பார்த்தல், மலை ஏறுதல், கூடாரமிடல், பயணம் செல்லுதல் எனவும் காணப்படுகிறது. நீங்கள் காளிகாம்பா ஆலயத்தை ராமநகரின் வலதுப்புற தொடக்கத்தில் கண்டிடலாம். ராமநகரின் மற்ற சுவாரஷ்யமான செயல்களாக வைன் டூர் மற்றும் திராட்சை வடித்தல் காணப்படுகிறது. நீங்கள் உங்களுடைய நண்பர்களுடன் இணைந்து மதுவை ருசி பார்த்திடவும் கூடும். இப்பொழுது சென்னப்பட்ணாவை சுற்றி நாம் பார்க்க வேண்டிய இடங்களை பற்றி பார்க்கலாம்.

பிடாடி:

பிடாடி:

இவ்விடம் வழக்கமான நிறுத்தமாக இருக்க, நீண்ட தூர பயணம் செய்யும் மக்களுக்காக இவ்விடத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் காபி ஷாப்பானது திறந்திருக்க, ஹாட்டான காபியை நம்மால் இங்கே சுவைக்கவும் முடியக்கூடும். மேலும் இவ்விடமானது தட்டை இட்லிகளுக்கும் பிரசித்திப்பெற்று காணப்பட! பிடாடியினை சுற்றி ஹக்தகிரி ஏரியையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

 வொண்டர்லா மற்றும் புதுமையான திரைப்பட நகரம்:

வொண்டர்லா மற்றும் புதுமையான திரைப்பட நகரம்:

பிடாடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் நாம் செல்ல, பிடித்தமான நகரத்தை உங்களுடைய கண்களானது காண, அங்கே வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவையும் பார்த்திடக்கூடும். அதோடு, இந்த நாள் முழுவதும் வொண்டர்லாவிலே உங்களுக்கு செல்ல, சேவைகளும், தங்குமிடங்களுமெனவும் இவ்விடமானது உங்களை சிறப்புடன் வரவேற்கிறது. பிடாடியிலிருந்து ஏழு கிலோமீட்டர் இடதுப்புறம் செல்ல, விளையாட்டுகள் நிறைந்த இடத்தை நம்மால் பார்க்க முடிய, இந்த புதுமையான திரைப்பட நகரத்தில் வயது வரம்பின்றி அனைவரையும் வெகுவாக கவர, திரைப்பட ஸ்டூடியோ மற்றும் பொழுதுப்போக்கு பூங்காவையுமென கார்டூன் நகரம், டைனோ பூங்கா, என பிரசித்திப்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான பிக் பாஸ் போன்றவற்றையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. PC: wikimedia.org

மச்சின்பெல்லே அணை:

மச்சின்பெல்லே அணை:

கும்பல்கோட் சந்திப்பிலிருந்து கொஞ்சம் தள்ளி செல்ல, வலதுப்புறத்தில் சோதனை சாவடி ஒன்று காணப்படுகிறது. இந்த சோதனை சாவடியிலிருந்து 13 கிலோமீட்டர் செல்ல, ஆர்காவதி நதியில் கட்டப்பட்டிருக்கிறது இந்த அழகிய மச்சின்பெல்லே அணையானது. இந்த மலையின் உச்சிக்கு சிறுப்பயணம் நாம் செல்ல, பசுமையான காட்சிகளால் சூழ்ந்து இந்த ஆர்காவதி நதியானது நம் கண்களை கொள்ளைக்கொள்கிறது. அதோடு, நம்மால் சவன்துர்கா மலையையும் இதன் உச்சியிலிருந்து பார்க்க முடிகிறது. PC: Manoj M Shenoy

டொட்டா அலாடா மாரா (பெரிய ஆலமரம்):

டொட்டா அலாடா மாரா (பெரிய ஆலமரம்):

ஓர் முக்கியமான சுற்றுத்தளமாக "தொட்ட அலாடா மரா" காணப்பட, அப்படி என்றால் பெரிய ஆலமரமெனவும் பொருளை தர, கும்பல்கோட் சந்திப்பிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் மைசூரு சாலையின் (தேசிய நெடுஞ்சாலை 275) வலதுப்புறத்தில் காணப்படுகிறது. இம்மரமானது சுமார் 4,000 வருடங்களுக்கு பழமையாக காணப்பட, 3 ஏக்கர்கள் பரந்து விரிந்தும் காணப்படுவதால்! இந்த மரத்தின் விழுதுகளாக சுமார் 1000 விழுதுகள் பெருமையுடன் வரலாற்றை பிடித்துக்கொண்டு நிற்கிறது. ஓர் தசாப்தத்தை கடந்த இந்த வேர்கள், இயற்கை நோயால் பாதிக்கப்பட, இதன் வான்வழி வேர்கள் கிளைகளாக பிரிந்து பல மரங்களை போன்ற காட்சியையும் தருகிறது. இதனால், கர்நாடகாவின் பெரிய மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெரிய மரமாக இம்மரம் விளங்குகிறது. PC: wikimedia.org

பெங்களூர்

பெங்களூர்

இவ்வாறாக சென்னப்பட்டினத்திலிருந்து நேரடியாக பெங்களூருவை 1.45மணி நேரங்களில் அடையமுடியும். அதே நேரத்தில் உங்களின் சுற்றுலா நேரம் உங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்க. இந்த கட்டுரையில் பல இடங்களில் காடுகள் வழி பயணிக்கிறோம் என்பதால் வனவிலங்குகளால் உங்களுக்கோ உங்களால் விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படாவண்ணம் நடந்துகொள்வது அவசியமாகிறது. சத்யமங்கலம், பிலிகிரி காடுகள் யானை நடமாட்டம் நிறைந்த பகுதியாகும். கவனத்துடன் செல்லவும்.

Read more about: coimbatore br hills bangalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more