Search
  • Follow NativePlanet
Share
» »2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா?

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா?

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா?

By Bala Karthik

பொக்கிஷ புதையலை கொண்டு காணப்படும் இந்தியாவில் பார்ப்பதற்கு பல இடங்கள் உண்டு. அழகிய நிலப்பரப்புகள் பரந்து விரிந்து இயற்கையை ஆதாரமாக கொண்டிருக்க, அதீத பாரம்பரியத்தை நகரத்திலும், கிராமங்களிலும் கொண்டு நெகிழவைக்கும் நினைவிடங்களுக்கு வீடாகவும் விளங்க, கடந்த காலத்தை மிளிர்ந்த வண்ணம் பெருமையுடன் விளங்குகிறது. பல்வேறு கலாச்சாரமானது பானையிலிருந்து உருகி வழிந்தோட, இங்கே இயற்கையுடன் இணைந்த இந்தியர்கள் அமைதியாக வாழ்ந்தும் வருகின்றனர்.

இந்திய இலக்குகள் வழியாக நாம் பயணிக்க, ஆகையால், பல பயண ஆர்வலர்களால் பல தனித்துவமிக்க அனுபவத்தையும் கொள்ள முடிய, இருப்பினும்... போதும் என்ற மனதை நமக்கு தருவதில்லை. பனிப்பகுதியான ஜம்மு & காஷ்மீர் அல்லது கேரளாவின் உப்பங்கழி, என நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் காண பல இடம் அமைய, அவை சொல்லும் கதைகளோ பலவிதம்.

2018ஆம் ஆண்டின் மூலையை சுற்றி நாம் வர, நாம் பயணம் செய்ய வேண்டிய இடப்பட்டியலை பற்றியும் இப்போது நாம் பார்க்கலாம். நீங்கள் செல்ல விருப்பம் கொண்டாலும், அந்த இடம் பற்றி தெரியாத காரணத்தால் உங்கள் மனதானது உறுதி அற்று இருப்பின், இதோ உங்களுக்கான விரிவான வழிக்காட்டியாக பல்வேறு இலக்குகள் நோக்கி உங்கள் பாதத்தை படிய வைக்க நாங்கள் உதவ, அந்த இடங்களை நாம் காண எது சரியான சமயம்? என்பதையும் சேர்த்தே காணலாம்.

 குட்ச்:

குட்ச்:

குஜராத்தின் கண்கொள்ளா காட்சியை தரும் குட்ச், தனித்துவமிக்க இடமும் கூட என தெரியவர, புகழ்மிக்க ரான் ஆஃ குட்சின் வீடாகவும் இவ்விடம் விளங்க, இதன் மாபெரும் பரப்பானது வெள்ளை நிற உப்பு பாலைவனத்தை கொண்டிருக்கிறது. குட்சை நாம் ஜனவரியில் காண இதனால் ரான் உட்சவமெனப்படும் மூர்க்கத்தனமான விழாவில் கலந்துக்கொள்ளவும் முடிய, இந்த விழாவானது குளிர்காலம் முழுவதும் நடைபெறுகிறது.

PC: Jyoti Chaurasia

ஷான்ஸ்கர்:

ஷான்ஸ்கர்:

நீங்கள் ஒரு சாகச விரும்பி என்றால், ஜம்மு & காஷ்மீரின் ஷான்ஸ்கரை ஜனவரியில் காண செல்ல வேண்டியது அவசியமாகும். இதனால் ஒருவித அனுபவமானது கிடைத்திட, உறையும் நதியில் ஐஸ் கட்டி பயணமும் ஷான்ஸ்கரில் நாம் செல்ல, வேறு என்ன இடத்தை புகழ்மிக்கதாக காண ஆசைப்படப்போகிறது உங்கள் மனமானது? நெகிழவைக்கும் இயற்கை அழகுடனான லேஹ் மற்றும் லடாக்கும் அத்துடன் இணைந்து நம் பயணத்தை அனுபவமிக்கதாக மாற்றுகிறது.

PC: Sumita Roy Dutta

 ஜெய்சால்மர்:

ஜெய்சால்மர்:

தங்க நகரமான ஜெய்சால்மரின் காட்சிகளானது, ராஜஸ்தான் குளிரின் குளுகுளு கால நிலைக்கு ஏற்றதாக அமைந்து இன்பத்தையும் அனுபவத்தின் மூலமாக நமக்கு தருகிறது. கோட்டைகளையும், ஜெய்சால்மரின் மாளிகைகளையும் நாம் ஆராய்ந்திட, குறிப்பாக ஜெய்சால்மர் கோட்டையானது நகரத்துக்கு மகுடமாக சூட்டப்பட்டு காணப்படுகிறது. அத்துடன், மாபெரும் ஜெய்சால்மர் பாலைவனத்திருவிழாவும் ராஜஸ்தானின் தெளிவான கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாய் அமைந்திடுகிறது.

PC: Koshy Koshy

கோவா:

கோவா:

கடற்கரை மாநிலமான கோவா, வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் செல்லக்கூடிய இடமாக அமைய, கோவா திருவிழாவை நாம் காண ஆசைப்பட்டால் பிப்ரவரி மாதம் வர வேண்டி இருக்கிறது. ஆசியாவில் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழாக்களுள் ஒன்றாக இவ்விழா இருக்க, மாபெரும் காட்சிகள் நிறைந்து காணப்பட, நடனம் மற்றும் நாட்டியத்தையும் நம்மால் காண முடிகிறது. இந்த திருவிழாவின் போது பந்தைக் கையில் எடுத்து நாம் விளையாடி குதூகலித்து மகிழலாம்.

PC: Prasanta Kr Dutta

 ஹம்பி:

ஹம்பி:

உலக பாரம்பரிய தளமாக விளங்கும் ஹம்பி, மாபெரும் நினைவு சின்னத்தையும் ஆலயத்தையும் கொண்டிருக்க, பெருமைமிக்க விஜய நகர பேரரசு ஆட்சியின் போது கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. மென்மையான கால நிலையானது அனுபவத்தை நமக்கு தந்திட, புகழ்மிக்க இடங்களான விருபக்ஷா ஆலய கட்டிடம், ஹேமக்குட்டா மலை நினைவு சின்னம் என பலவற்றையும் நம்மால் காண முடிகிறது.

PC: Sid Mohanty

பிருந்தாவனம்:

பிருந்தாவனம்:

இவ்விடத்தை குறிப்பாக நாம் மார்ச்சில் காண வர, ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதனால் சிறந்த அனுபவத்தை அது நமக்கு தருகிறது. இந்த விழாவின் வண்ணங்களால் மாபெரும் ஆடம்பரம் பொங்க விரிந்தாவனின் ஒவ்வொரு தெருவும் காணப்பட, குறிப்பாக பர்சானாவின் சிறு நகரத்தில் இது மிகவும் பிரசித்திப்பெற்று காணப்படுகிறது.

PC: Narender9

 மணலி:

மணலி:

நெகிழவைக்கும் மலைப்பகுதியாக மணலி இருக்க, அழகிய கால நிலையானது குளிருடன் நம்மை அணைத்திடுகிறது கோடைக்காலத்தின் ஏப்ரல் மாதத்தில். மூட்டை முடிச்சுகளை கட்ட சிறந்த இடமாக இது அமைய, சாகச விளையாட்டுக்களான பாராகிளைடிங்க் அல்லது ட்ரெக்கிங்க் மூலமாக மணலியில் நம் விடுமுறையை கழித்திட, இயற்கையின் அழகை நம் கரம் கொண்டு அடக்கிட ஆசைப்படுகிறது நம் மனம்.

PC: Unknown

வயனாடு:

வயனாடு:

உங்கள் உணர்வை புத்துணர்ச்சி பொங்க மாற்றுகிறது வாசனை தோட்டம், காபி மற்றும் வயனாடின் தேயிலை தோட்டத்திலிருந்து வரும் நறுமணத்தால். வயனாடின் நிலப்பரப்பானது பசுமையான புல்வெளிக்கொண்டும், அமைதியான இடங்களான பானசுரா அணை, பூக்கோட் ஏரி என பலவற்றால் சூழ்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் வயனாடை நோக்கி நாம் நீண்ட பயணம் செல்லலாம்.

PC: Kalidas Pavithran

 கங்க்தோக்:

கங்க்தோக்:


சிக்கிமின் கங்க்தோக் அற்புதமான குளிர்கால நிலையை கொண்டிருக்க, அமைதியான பல கண்கொள்ளா காட்சி தரும் இடங்களான நாது லா கணவாய், சாங்கு ஏரி, ரும்தேக் மடாலயம் என பலவற்றை கொண்டிருக்கிறது. இங்கே காணப்படும் சிக்கிமின் இயற்கை மலையினால் நம் மனதானது நெகிழ்ச்சியின் எல்லையில் பயணித்திடவும் கூடும்.

PC: Vinay.vaars

பிர்:

பிர்:

புகழ்மிக்க உயரத்தில் அமைந்திருக்கும் பிர், இந்தியாவின் பாராகிளைடிங்க் தலைநகரமெனவும் அழைக்கப்படுகிறது. பாராகிளைடிங்க் எடுத்துக்கொள்ளும் அல்லது பாராகிளைடிங்கில் தொங்கும் புள்ளியாக பிர் காணப்பட, பில்லிங்கானது தரை இறங்கு தளமாக அமைகிறது. இயற்கையை நாம் ஆராய்வதனால், மிகப்பெரிய அழகிய வடிவத்தை கொண்டிருக்கும் இவ்விடம், வானத்தில் நாம் மிளிர, மே மாதத்தை கொண்டும் விளங்குகிறது.

 ஸ்பித்தி:

ஸ்பித்தி:

உயரிய குளிர் பாலைவனப்பகுதியாக காணப்படும் ஸ்பித்தி, சாகசங்கள், ஆன்மீகம் மற்றும் இயற்கை அழகு சங்கமிக்கும் ஒரு இடமும் கூட. உங்கள் அட்ரினலின் தாகத்தை தணிக்க காணப்படும் செயல்களாக மலையில் பைக் பயணம், ட்ரெக்கிங்க், நதி நீர் படகு பயணம், ஆன்மீக அனுபவம் என பலவும் ஸ்பித்தியின் மடாலயத்திற்கு நாம் செல்வதனால் கிடைத்திட, அவை கீ மடாலயம், மற்றும் கிப்பர் மடாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

 பஹல்கம்:

பஹல்கம்:

பிடித்தமான கோடைக்காலநிலையை கொண்டிருக்கும் பஹல்கம், ஜம்மு & காஷ்மீரில் காணப்படும் ஒரு இடமாகவும் ஜூன் மாதத்தில் நாம் வந்து செல்ல வேண்டிய ஒரு இடமாகவும் அமைகிறது. பசுமையை தரும் புல்வெளியானது பட்டுக்கம்பளம் விரித்திருக்க, உயரமான பனி மூடிய மலைப்பகுதியும் இவ்விடத்தை படர்ந்து காட்சியளிக்க, மிளிரும் பனிப்பாறையையும் கொண்டு காணப்படுகிறது. நீரோடையானது பைன் மற்றும் கேதுரு காடுகளின் வழியே செல்ல, அவை அனைத்தையும் கைகளில் அடக்க முடியாமல் நம் மனதானது புதுவித அனுபவத்தால் பெருமூச்செறிந்து பார்க்கவும் செய்கிறது.

PC: AnnaER

 மலர்கள் நிறைந்த பள்ளத்தாக்கு:

மலர்கள் நிறைந்த பள்ளத்தாக்கு:

உத்தரகாண்டின் மலர்கள் நிறைந்த பள்ளத்தாக்கு, உலக பாரம்பரிய தளமாகவும் விளங்க, இங்கே பசுமையான பார்வைக்கு பரவசத்தை மூட்டும் ஆல்பைன் மலர்களான நீல கோரிடாலிஸ், ஜெரேனியம் நிற செடி வகை என பலவற்றையும் கருவிழிகளுக்கு விருந்தாய் படைக்கிறது. இந்த மலர்களானது ஜூலையில் பூத்திட, இந்த மாதம் தான் இவ்விடத்தை நாம் காண சிறந்ததாகவும் அமைகிறது.

மௌன்ட் அபு:

மௌன்ட் அபு:


ராஜஸ்தான் சூட்டை தவிர்க்க, நாம் வெளியேற வேண்டிய மாநிலத்தின் மலைப்பகுதியாக அமைகிறது இந்த மௌன்ட் அபு. அதீத வரலாற்று இடங்களையும், நெகிழவைக்கும் காட்சிகளை விருந்தாக்கும் நாக்கி ஏரி, குரு ஷிகார் காட்சிப்புள்ளி என பல இடங்களையும் கொண்டிருக்க, மௌன்ட் அபுவை நாம் காண சிறந்த மாதமாக ஜூலை மாதமானது அமைகிறது.

 சிரபுஞ்சி:

சிரபுஞ்சி:

இந்த கிரகத்தில் ஈரப்பதம் மிகுந்த இடங்களுள் ஒன்றாக காணப்படும் சிரபுஞ்சி நாம் ஆகஸ்ட் மாதத்தில் வரவேண்டிய ஒரு இடமும் கூட. மேகாலயாவின் சிறு நகரமானது பல்வேறு சுவாரஸ்யமான இடங்களான வாழும் வேர் பாலம், மாவ்சை குகைகள், நோக்கலிகை வீழ்ச்சி என பல இடங்களுக்கு வீடாக கொண்டிருக்கிறது. இதன் அருகாமையில் காணப்படும் கிராமமான மாவ்லின்னோங்க் கிராமம் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமும் கூட.

கொடைக்கானல்:

கொடைக்கானல்:


தமிழ்நாட்டின் கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த மலைப்பகுதியாக காணப்படும் கொடைக்கானல், வருடம் முழுவதும் அழகிய கால நிலையையும் கொண்டிருக்கிறது. இருப்பினும், பருவமழையின் தந்திரத்தினால் கொடைக்கானல் எண்ணற்ற அழகுடன் காணப்படுவது வழக்கம். இங்கே நாம் காண வேண்டிய இடங்களாக கோடை ஏரி, வட்டக்காணல், என பலவும் அழகிய மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது.

 கொச்சி:

கொச்சி:


பருவ மழையானது விலகிட, மீண்டும் நம் மனமானது புணையப்பட வேண்டிய ஒரு நகரமாக செப்டம்பர் மாதத்தில் இந்த கொச்சி அமைகிறது. தனித்துவமிக்க கொச்சியின் சீன மீன் பிடிவலையும், கடல் வாழ் உலாவும் என அழகிய சேரை கடற்கரையும் கொச்சி, கேரளா என பல இடங்களில் காணப்படுகிறது.

PC: Shinu Scaria

குன்னூர்:

குன்னூர்:

சுற்றுலா பயணிகளை சமீபத்தில் ஈர்த்த மலையாக தமிழ்நாட்டின் மதிமயக்கும் குன்னூர் காணப்படுகிறது. பசுமையான தேயிலை தோட்டம் பரந்து விரிந்து குன்னூர் மலையில் காணப்பட, பயண ஆர்வலர்களின் கண்களை அங்கும் இங்கும் அலைப்பாய வைத்து அசந்து அசதியுடன் காணப்படவும் செய்கிறது நம் மனதானது.

 அமிர்தசரஸ்:

அமிர்தசரஸ்:

இந்த நகரத்திற்கு நாம் வருவதன் மூலம், உலகிலேயே மிகவும் பிரசித்திப்பெற்ற பொற்கோவிலுக்கு வீடாக கொண்டிருப்பதை நம்மால் காண முடிய, மதிப்பிற்குரிய குருத்வாரா அல்லது சீக்கியர்களின் யாத்ரீக தளத்தையும் உலகில் இங்கே காணப்படுவதை கண்டு களிப்படைகிறது மனம். மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமிர்தசரஸின் இடங்களான ஜாலியன்வாலா பாஹ், வாகா எல்லை, என பலவற்றையும் இந்த அழகிய நகரத்தில் நம்மால் கண்டு ரசிக்க முடிகிறது.

PC: Janjri

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி:

அமைதியான கடற்கரைகளும், அழகான பிரன்ஞ்ச் காலனிகளும், எழில் நயம் வாய்ந்த உணவகமும் என காணப்படும் இவ்விடம், மகிழ்விக்கும் காலநிலையை இரட்டிப்பாக நமக்கு தர, நம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் எண்ணற்ற அழகிய இடத்தை கொண்டு தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு இடமாகவும் அமைய, அக்டோபர் மாதத்தில் நாம் பாண்டிச்சேரி வருவது ஆகச்சிறந்த யோசனையாக அமைகிறது. அரோவில்லி நோக்கிய ஆன்மீக பயணம் அல்லது பாண்டிச்சேரியின் கடற்கரைகள் நம் மனதை ஓய்வின் எல்லையில் பயணிக்க வைத்திடுகிறது.

 வாரனாசி:

வாரனாசி:


கங்கை நதிக்கரையில் காணப்படும் இடமான வாரனாசி, இந்து பக்தர்களின் மதிப்பிற்குரிய யாத்ரீக தளங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. நவம்பர் மாதத்தில் நாம் வாரனாசி பயணிப்பதன் மூலம், மூர்க்கத்தனமான கங்கை மகா உட்சவத்தில் ஒரு அங்கமாக பங்களித்திட, இந்த மாதத்தில் வழக்கமாக நடக்கும் ஒரு விழா இதுவும் கூட. வாரனாசியின் கைவினை, கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டிருக்கும் இவ்விழா, 5 நாட்கள் நடைபெறும் நீண்ட விழாவும் கூட.

PC: Miraage.clicks

சுந்தரவனம்:

சுந்தரவனம்:

அரச குடும்பத்து வங்காள புலிகள் காணப்படும் சுந்தரவனம், அடர்த்தியான அலையாத்தி காடுகளையும் கொண்டிருக்க, இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு மகிழ்வை தரக்கூடிய ஒரு இடமும் இதுவே. சுந்தரவனத்தின் வனவிலங்கு வாழ்க்கையை நாம் ஆராய, மற்ற விலங்குகளாக காட்டு பன்றி, நரி அல்லது கனக் தீவின் புள்ளியிட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் என வங்காளத்து விலங்குகளை கொண்டிருக்கிறது சுந்தரவனம்.

PC: Ali Arsh

 அவுலி:

அவுலி:

வருடத்தின் கடைசி மாதத்தை அவுலியில் நாம் செலவிட, பனி மூடிய மலைப்பகுதியானது பனிச்சறுக்கிற்கு ஏதுவாக அமைகிறது. அழகிய மலைப்பகுதியை நாம் பார்த்திட, மதிமயக்கும் ஆப்பிள் தோட்டத்தையும் உலா வந்திட, தேவதாரு மற்றும் ஓக் மரங்களும் அவுலியில் காணப்படுகிறது.

PC: Anuj Kumar Garg

உதய்பூர்:

உதய்பூர்:

ஏரிகளின் நகரமென அழைக்கப்படும் உதய்பூர், நெகிழவைக்கும் ராஜஸ்தான் நகரத்தில் காணப்பட, பல மாபெரும் கோட்டைகளையும், அரண்மனைகளையும் கொண்டிருக்க, மிளிரும் ஏரிகளும், கண்களை கொள்ளை கொள்கிறது. காலம் கடந்து நம்மை அழைத்து செல்லும் அரண்மனைகளாக, ஏரி அரண்மனை, ஜக் மந்திர், நகர அரண்மனை என பெயர் சொல்லும் பலவும் இங்கே காணப்படுகிறது.

PC: Dennis Jarvis

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X