Search
  • Follow NativePlanet
Share
» »செம்பரம்பாக்கத்தை விட 4 மடங்கு பெருசு... சென்னையை இரண்டு முறை மூழ்கடிக்கச்செய்யும் அணை!

செம்பரம்பாக்கத்தை விட 4 மடங்கு பெருசு... சென்னையை இரண்டு முறை மூழ்கடிக்கச்செய்யும் அணை!

By Udhaya

2015ம் ஆண்டு நடந்த சென்னை வெள்ளம் பற்றிய நினைவுகள் இன்றும் நம் நினைவை விட்டு நீங்காமல் இருக்கும். இப்போதும் மழை வந்தால், அந்த பயம் சற்று தோன்றி மறையும். செம்பரம்பாக்கம் அணையைத் திறந்து, அடையாற்றில் வெள்ளம். ஊரையே மூழ்கடித்து, உணவில்லாமல் உறக்கமில்லாமல் சுற்றித் திரிந்த மக்களும், அவர்களுக்க இரவு பகல் பாராது உதவிய கருணை உள்ளம் கொண்டவர்களையும் அந்த மழை நன்கு அடையாளம் காட்டிச் சென்றது. அப்படிப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியை விட நான்கு மடங்கு பெரிய அணைகள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றில் பெரிய அணைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

 செருதோணி அணை

செருதோணி அணை

இடுக்கி மாவட்டத்திலுள்ள இந்த செறுதோணி அணை கேரளாவிலுள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இது பெரியார் ஆற்றின் முக்கிய ஆறான செறுதோணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலுள்ள நீர்மின் நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இப்பகுதிக்கே விநியோகம் செய்யப்படுகிறது. கரிம்பன், மஞ்சப்பாறா வாழத்தோப்பே, தடியன்பாடு மற்றும் மணியாரன்குடி போன்ற அருகிலுள்ள கிராமங்கள் இந்த மின் வினியோகத்தால் பயனடைகின்றன. இடுக்கி நீர்த்தேக்கத்திட்டத்தின் மூன்று அணைகளில் இந்த செறுதோணி அணையும் ஒன்றாகும். இயற்கை காட்சிகளை படம் பிடிக்க இது மிகவும் ஏற்ற இடமாகும்.

உயரம்: 450 அடி

நீளம்: 2300 அடி

வகை: கான்கிரீட் அணை

ஆறு: செறுதோணி ஆறு

இடம்: இடுக்கி, கேரளம்

கொள்ளளவு: 1,996,000,000 கமீ

wiki

அருகில் காணவேண்டிய இடங்கள்

அருகில் காணவேண்டிய இடங்கள்

சலிம் அலி பறவைகள் சரணாலயம்

சலிம் அலி பறவைகள் சரணாலயம் என்று அழைக்கப்படும் இந்த தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ளது. பறவை ஆர்வலர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது மிகவும் பிடித்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. பல இந்திய வகை ஊர்வன ஜந்துகளும், விலங்குகளும் இங்கு வசிக்கின்றன.

நவம்பர் முதல் ஜுன் மாதம் வரை இங்கு பலவகை புலம்பெயர் பறவைகளும் விஜயம் செய்கின்றன. இவற்றைப்பார்ப்பதற்காகவே இக்காலத்தில் அதிகமான பறவை ஆராய்ச்சியாளர்கள் இந்த சரணாலயத்துக்கு வருகை தருகின்றனர்.

தட்டேக்காட் பறவைகள் சரணாலயத்தில் கிழக்கு வளைகுடா ஆந்தை எனப்படும் ஒரு அழிந்து வரும் ஆந்தை இனம், மலபார் சாம்பல் இருவாட்சி, இளசிவப்பு மூக்கு பனங்காடை, சிவப்பு தொண்டை குக்குறுவான், பாம்புப்பருந்து, இந்திய மலை இருவாட்சி மற்றும் நீலச்சிட்டு போன்ற அரிய வகை பறவைகள் வசிப்பதால் பார்வையாளர்கள் விசேஷமாக இவற்றைத் தேடி வருகின்றனர்.

அரிய பறவை வகைகள் மட்டுமல்லாமல் இங்குள்ள தோல்பதன அருங்காட்சியகம் மற்றும் வனவிலங்கு மறுவாழ்வு மையம் போன்றவற்றுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். பயணிகளின் வாகனங்களுக்கு இந்த சரணாலயத்தில் அனுமதி இல்லை. உள்ளூர் வழிகாட்டிகளும் இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்த்து ரசிப்பதில் உதவுகின்றனர். தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படுகிறது.

கீழார்குத்து அருவி

நிசப்தம் நிரம்பிய தொடுபுழா நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த கீழார்குத்து அருவி அமைந்துள்ளது. பார்ப்பவரை சொக்க வைக்கும் இந்த அருவி ‘வானவில் நீர்வீழ்ச்சி' என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் ஒரு பாறைப்பகுதியிலிருந்து உருவானதுபோல் இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது.

வருடமுழுதுமே வேகம் குறையாமல் இந்த நீர்வீழ்ச்சி ஊற்றுவது குறிப்பிடத்தக்கது. இந்த நீர்வீழ்ச்சியை சூழ்ந்துள்ள காட்டுப்பகுதியில் பலவிதமான மூலிகைத்தாவரங்களும் நிறைந்துள்ளன. மலையேற்றம், பாறையேற்றம், சிகரமேற்றம், கூடாரவாசம் போன்றவற்றில் ஆர்வவுள்ள சாகசப்பயணிகளுக்கு இது மிகவும் ஏற்ற ஸ்தலமாகும். இயற்கைக்காட்சிகளை படமெடுப்பதில் ஆர்வம் உள்ள புகைப்பட ஆர்வலர்களுக்கும் உகந்த இடமாக இது காட்சியளிக்கிறது.

ராமக்கல்மேடு

இடுக்கி மாவட்டத்தில் அவசியம் பார்க்க வேண்டிய எழிற்தலங்களில் இந்த ராமக்கல்மேடு என்றழைக்கப்படும் மலைவாசஸ்தலமும் ஒன்றாகும். மாசு மறுவற்ற ஒரு வண்ண ஓவியம் போன்று கண்களுக்கு விருந்தாய் வீற்றிருக்கும் இயற்கையின் வனப்பை இங்கு தரிசிக்கலாம். குறத்திமகள் சிலை ஒன்று குறவர் இனத்தாரின் அடையாளமாக இங்கு அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 3500 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை வாசஸ்தலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாகும். இந்த மலையிலிருந்து ஒரு புறம் கேரள பூமியின் வனப்பையும் மறு புறம் தமிழ்நாட்டின் எழிலையும் ரசிக்க முடிவதை இதன் சிறப்பம்சமாக சொல்லலாம். பருவநிலை பாராது எப்போதும் வீசும் இதமான காற்றை இப்பகுதியில் அனுபவிக்கலாம். இந்த காற்றுச்சக்தியை ஆக்க சக்தியாக மாற்றும் நோக்கத்துடன் ஒரு காற்றாலை மின்னுற்பத்தி பண்ணையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

Augustus Binu

இந்திரா சாகர் அணை

இந்திரா சாகர் அணை

கந்த்வாவில் உள்ள நர்மதா நகரில், நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்படிருக்கும் அணை தான் இந்திரா சாகர் அணை. இங்கு தான் ஆசியாவின் சிறப்புமிக்க நீர் மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்திரா சாகர் அணை, 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 23 ஆம் தேதி, முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நட்டு துவங்கப்பட்டது. அணையின் தோற்றமும், அழகும், எழில்மிகு சுற்றுப்புறமும், சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த அணையை கோசிகுர்த் திட்டம் என்றும் அழைப்பர். பந்தரா, நாக்பூர் மற்றும் சந்திராபூர் மாவட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக, இந்திரா சாகர் அணை கட்டப்பட்டது. சுமார் 92 மீ உயரமும், 653 மீ நீளமும் கொண்ட இந்திரா சாகர் அணை, கந்த்வாவில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. இந்திரா சாகர் அணையின் எழிலை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கந்த்வா ரயில் நிலையித்திலோ அல்லது பிர் ரயில் நிலையத்திலோ இறங்கி, அங்கிருந்து கார் அல்லது பேருந்து மூலம் அணையை அடையலாம்.

உயரம்: 92மீ

நீளம்: 653மீ

வகை: கான்கிரீட் அணை

ஆறு: நர்மதை ஆறு

இடம்: கந்த்வா, மத்தியபிரதேசம்

கொள்ளளவு: 12,200,000,000 கமீ

Hariya1234

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

ஆசிகர் கோட்டை

ஆஹிர் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஆசா ஆஹிர் ஆசிகர் கோட்டையைக் கட்டினார். இதற்கு ஆசிகர் குய்லா என்றும் ஒரு பெயர் உண்டு. எவராலும் கைப்பற்ற முடியாத பாதுகாப்பன கோட்டை, ஆசிகர் கோட்டை என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. முகலாயப் பேரரசர் அக்பர் கூட இந்தக் கோட்டையை கைப்பற்ற முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கோட்டையின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதன் கட்டுமானச் நுணுக்கச் சிறப்பு போன்றவற்றால், கோட்டையை கைப்பற்ற முடியவில்லை என்கிறது வரலாறு. கந்த்வாவில் இருந்து சுமார் 69 கிமீ தொலைவில் இருக்கும் ஆசிகர் கோட்டை சத்புரா வரம்பில் அமைந்திருக்கிறது. பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்திருக்கும் இக்கோட்டை, நர்மதா பள்ளத்தாக்கை இணைக்கிறது. மேலும், சத்புறா மலை வழியாக தபதி ஆறும் இங்கும் பாய்கிறது. முகலாய கட்டமைப்பில் அமைந்திருக்கும் ஆசிகர் கோட்டை, பெர்ஷிய, இஸ்லாமிய, துருக்கிய மற்றும் இந்திய பாணிகள் கலந்து கட்டப்பட்ட ஒரு அற்புத கோட்டை. மாடி மாளிகைகள், தூண்கள் மற்றும் கல்லரைகளைக் கொண்டு ஆசிகர் கோட்டை பிரம்மிப்பாக காட்சியளிக்கிறது.

கந்தாகர்

கந்த்வாவின் முக்கியமான மையம் கந்தாகர். கந்தாகரை, முல்தானின் மணிக்கூண்டு என்றும் அழைப்பர். 1884 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட கந்தாகர், அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது. பிப்ரவரி, 12 ஆம் தேதி 1884 ஆம் ஆண்டில் கட்டத்தொடங்கப்பட்ட கந்தாகரை முழுமையாக கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் பிடித்தது. அஹ்மத் கான் சதோசாயின் ஹவேலி என்ற கட்டமைப்பு இங்கு இருந்தது. முல்தான், ஹவேலியை கைப்பற்றி அழித்தபின், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இங்கு கந்தாகர் கட்டப்பட்டது. கந்தாகரை சுற்றிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நான்கு தீர்த்த குண்டங்கள் அல்லது குளங்கள் உள்ளன. சூரஜ் குண்டம், பீம குண்டம், ராமேஷ்வர குண்டம் மற்றும் பத்ம குண்டம் என்பவை அந்த நான்கு குண்டங்களாகும்.

Yashasvi nagda

கிருஷ்ணராஜ சாகர் அணை

கிருஷ்ணராஜ சாகர் அணை

கேஆர் எஸ் அல்லது கிருஷ்ணராஜ சாகர் என்னும் பெயரிலேயே அணையும், அந்த ஏரியும் அழைக்கப்படுகிறது. இந்த அணையிலிருந்து காவிரியில் நீர் பாய்கிறது.

உயரம்: 125மீ

நீளம்: 3.5கிமீ

வகை: கொத்து அணை

ஆறு: காவிரி ஆறு

இடம்: மாண்டியா, கர்நாடகம்

கொள்ளளவு: 1,368,847,000கமீ

Ashwin Kumar

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மேட்டூர் அணை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றாக மேட்டூர் அணை விளங்குகிறது. இந்த அணையில் தயாரிக்கப்படும் மின்சாரம் தருமபுரி மாவட்டும் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது. மேட்டூர் நகரத்தில் அமைந்திருக்கும் இந்த அணை சமய ரீதியலான முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மேட்டூர் அணைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டு இந்த அணையில் ஆடிப்பெருக்கு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த மேட்டூர் அணை ஸ்டான்லி நீர்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணையில் இரண்டு ஹைட்ரோ மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

உயரம்: 170அடி

நீளம்: 1700மீ

வகை: கான்கிரீட் அணை

ஆறு: காவிரி ஆறு

இடம்: தர்மபுரி, தமிழ்நாடு

கொள்ளளவு: 2.64கிகமீ

Vvenka1

பிலாஸ்பூர் அணை

பிலாஸ்பூர் அணை

ராஜஸ்தான் மாநிலத்தின் டாங்க் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை, 1999ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். பனாஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்திருப்பது சிறப்பு.

உயரம்: 130அடி

நீளம்: 1883அடி

வகை: கான்கிரீட் அணை

ஆறு: பனாஸ் ஆறு

இடம்: பிலாஸ்பூர்

கொள்ளளவு: 1,100,000,000கமீ

Siddharth tiwari

கொய்னா அணை

கொய்னா அணை

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சாங்க்லி மாவட்டத்தில் உள்ள இந்த அணை இம்மாநிலத்திலுள்ள பெரிய அணைகளில் ஒன்றாகும். இது கொய்னா ஆற்றின் குறுக்கே 1963ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. 98.78 டி.எம்.சி நீர் கொள்ளளவைக் கொண்டுள்ள இந்த அணையில் 1920 மெகாவாட் மின்னுற்பத்தி சக்தி கொண்ட நீர்மின் நிலையமும் உள்ளது. ஒரு மாலை நேரத்தை மகிழ்ச்சியாக குடும்பத்துடன் கழிப்பதற்கேற்ற அருமையான சிற்றுலாத்தலமாக இந்த அணைப்பகுதி பிரசித்தமாக அறியப்படுகிறது. அருகிலுள்ள நேரு பூங்காத்தோட்டமும் காண வேண்டிய ஒரு அம்சமாகும்.

உயரம்: 339அடி

நீளம்: 2648அடி

வகை: கான்கிரீட் அணை

ஆறு: கொய்னா ஆறு

இடம்: சாதரா

கொள்ளளவு: 2,797,400,000கமீ

wiki

மைதான் அணை

மைதான் அணை

15712 அடி நீளமும், 165அடி உயரமும் உள்ள இந்த அணை வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டப்பட்டுள்ளது. பராகர் நதிக்கரையில், தன்பாதில் இருந்து 48கிமீ தொலைவில் உள்ள இந்த அணை 65சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. பூமீக்கடியில் உள்ள மின்சாரநிலையம் 60000கிலோவாட் மின்சாரத்தை உற்பத்து செய்கிறது. அருகிலேயே மான் மற்றும் பறவைகள் சரணாலயமும் உள்ளன. மின்நிலையத்தைக் காண முன் அனுமதி தேவை. குமார்துபி ரயில் நிலையம் இங்கிருந்து 5கிமீ தொலைவில் உள்ளது, தனியார் பேருந்துகளையும் உபயோகிக்கலாம். மரவீடுகள் பயணிகளின் வசதிக்காகவும், இயற்கையை ரசிப்பதற்காகவும் அரசால் நிர்வகிக்கப்படுகிறது.

உயரம்: 165அடி

நீளம்: 15715அடி

வகை: கான்கிரீட் அணை

ஆறு: பரக்கர் ஆறு

இடம்: தன்பாத்

கொள்ளளவு: 60 MW

Tarunsamanta

பவானி சாகர் அணைக்கட்டு

பவானி சாகர் அணைக்கட்டு

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த அணை. சத்யமங்கலத்திலிருந்து 16கிமீ தொலைவில் உள்ளது.

உயரம்: 105அடி

நீளம்: 1700மீ

வகை: கான்கிரீட் அணை

ஆறு: பவானி ஆறு

இடம்: ஈரோடு

கொள்ளளவு: 1.920 MW

Vkraja

Read more about: travel chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more