Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரின் பல முகங்கள்!!!

பெங்களூரின் பல முகங்கள்!!!

By

இந்தியாவின் புதிய முகங்களில் ஒன்றாக வேறுபட்ட கலாச்சாரங்களுடனும், எண்ணற்ற தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களுடனும், எக்கச்சக்கமான அடுக்குமாடி கட்டிடங்களுடனும் பெங்களூர் மாநகரம் நவீனத்தின் சின்னமாகத்தான் அனைவராலும் அறியப்படுகிறது.

அதே நேரத்தில் எண்ணற்ற சுற்றுலாத் தலங்களுடன் உலகம் முழுவதுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பெங்களூர் மாநகருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்போம் வாருங்கள்!

பெங்களூரின் சுற்றுலாத் தலங்கள்

பெங்களூர் ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்!

ஒட்டகச் சவாரி

ஒட்டகச் சவாரி

பெங்களூரின் வீதிகளில் வாகனங்களுக்கு மத்தியில் அவ்வப்போது நீங்கள் ஒட்டகங்களையும் காணலாம். நீங்கள் ஒட்டகத்தில் சவாரி செய்ய விரும்பினால் ஒரு குறிப்பிட்ட தொகையை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு பெங்களூர் மாநகரிலேயே கொஞ்ச தூரம் சவாரி செய்யலாம்.

படம் : Harrieta171

கே.ஆர்.மார்க்கெட்

கே.ஆர்.மார்க்கெட்

பெங்களூரின் மிகப்பெரிய காய்கறி மற்றும் பூச்சந்தை.

படம் : Akash Bhattacharya

கெம்பே கௌடா பேருந்து நிலையம்

கெம்பே கௌடா பேருந்து நிலையம்

மெஜெஸ்டிக் பேருந்து நிலையம் என பிரபலமாக அழைக்கப்படும் கெம்பே கௌடா பேருந்து நிலையம்.

படம் : Stan Dalone & Miran Rijavec

இன்ஃபோசிஸ் கட்டிடம்

இன்ஃபோசிஸ் கட்டிடம்

எலெக்ட்ரானிக் சிட்டியில் பிரமிட் வடிவில் கட்டப்பட்டுள்ள இன்ஃபோசிஸ் நிறுவன கட்டிடம்.

படம் : proxygeek

இராட்சஸ ஆலமரம்

இராட்சஸ ஆலமரம்

கன்னட மொழியில் 'தொட்ட ஆலத மர' என்று அழைக்கப்படும் இந்த இராட்சஸ ஆலமரம் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலமரம் பெங்களூரின் கெட்டோஹள்ளி என்ற கிராமப்பகுதியில் 3 ஏக்ரா இடத்தை அடைத்துக்கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

பெங்களூர் டிராஃபிக்

பெங்களூர் டிராஃபிக்

பெங்களூரின் டிராஃபிக்கை சமாளித்து வாகனம் ஓட்டுவதற்கு நிறைய பொறுமை வேண்டும்!!!

படம் : Eirik Refsdal

துர்கா பூஜையின்போது...

துர்கா பூஜையின்போது...

பெங்களூரில் வங்காளிகள் அதிகமாக வசிக்கும் காரணத்தால் இங்கு ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அந்த சமயங்களில் இதுபோன்ற கடைகள் பூஜை நடைபெறும் இடங்களுக்கு அருகே ஆங்காங்கு காணப்படும்.

படம் : Travelling Slacker

ஆட்டோ பயணம்

ஆட்டோ பயணம்

தமிழ்நாடு போலல்லாமல் பெங்களூரில் கட்டாயம் அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பயன்படுத்தப்படுகிறது.

படம் : Peter Rivera

பிரம்மாண்ட சிவன் சிலை!

பிரம்மாண்ட சிவன் சிலை!

பெங்களூர் ஏர்போர்ட் சாலையில் உள்ள கெம்ப் கோட்டையின் பின்னே இந்த பிரம்மாண்ட சிவன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 65 அடி உயரத்தில் மிகவும் நுணுக்கமாக கலைநயத்துடன் அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது.

பெங்களூர் மெட்ரோ

பெங்களூர் மெட்ரோ

பெங்களூர் மெட்ரோ ரயில் பாலத்தின் மீது மெட்ரோ ரயில் ஒன்று செல்லும் காட்சி.

படம் : Ramnath Bhat

யு.பி.சிட்டி

யு.பி.சிட்டி

பெங்களூரில் உள்ள யு.பி.சிட்டியில் மொத்தம் 3 டவர்கள் உள்ளன. அவற்றில் மிகவும் உயரமானதாக திகழும் யு.பி.டவர் 128 மீட்டர் கொண்டது.

படம்

மகாபோதி சொசைட்டி

மகாபோதி சொசைட்டி

கன்னட சினிமாவின் கோடம்பாக்கமாக அறியப்படும் பரபரப்பு மிகுந்த பெங்களூர் காந்திநகர் பகுதியில் அமைதியின் இருப்பிடமாய் திகழும் மகாபோதி சொசைட்டி அமைந்திருக்கிறது.

வளையல் கடை

வளையல் கடை

பெங்களூர் எம்.ஜி.ரோட்டில் இதுபோன்று எண்ணற்ற வளையல் கடைகளை நீங்கள் பார்க்கலாம். அதோடு மிகவும் குறைந்த விலையில் அட்டகாசமான வண்ண வண்ண வளையல்களை வாங்கியும் செல்லலாம்.

படம் : Ramnath Bhat

ஸ்கை பார்

ஸ்கை பார்

பெங்களூர் யு.பி. சிட்டியின் உச்சியில் அமையப்பெற்றுள்ள ஸ்கை பார்.

படம் : Ming-yen Hsu

பெங்களூரில் ஒரு மழைக்காலம்!

பெங்களூரில் ஒரு மழைக்காலம்!

அடைமழை பெய்யும் ஒரு தருணத்தில் பெங்களூர் மாநகரம்.

படம் : anandrr

பிரமிட் வேல்லி

பிரமிட் வேல்லி

பெங்களூர் எல்லையில் உள்ள ஹாரோஹள்ளி என்ற இடத்தில் பிரமிட் வேல்லி அமைந்துள்ளது.

கட் அவுட்

கட் அவுட்

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு வைக்கப்பட்டுள்ள கட் அவுட்.

படம் : Ryan

அலசூர் ஏரி

அலசூர் ஏரி

பெங்களூர் மாநகரத்தை நிர்மாணித்த கெம்பே கௌடா அவர்களின் காலத்திலிருந்து அலசூர் ஏரி பெங்களூர் நகரில் இருந்து வருகிறது. இந்த ஏரி பழைய மதராஸ் சாலையில் M.G ரோட்டின் கிழக்கு முனையில் அலசூர் பகுதியில் அமைந்துள்ளது.

இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி

இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி

இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி என்ற பெயருக்கேற்றபடி இந்தியாவில் உள்ள தீம் பார்க்குகளில் பல புதுமையான மற்றும் நூதனமான அம்சங்களுடன் இது காணப்படுகிறது. பெங்களூர்-மைசூர் மாநில நெடுஞ்சாலை SH 17-ல், வொண்டர் லா அமைந்திருக்கும் இடத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி அமைந்துள்ளது.

படம் : Rameshng

அவுட்டர் ரிங் ரோடு

அவுட்டர் ரிங் ரோடு

இரவு நேரத்தில் பெங்களூர் அவுட்டர் ரிங் ரோடின் தோற்றம்.

படம் : Bharath Achuta Bhat

கண்ணாடி இல்லம்

கண்ணாடி இல்லம்

லால்பாக் பொட்டானிக்கல் கார்டனில் உள்ள கண்ணாடி இல்லம்.

படம் : Prasanth M J

HAL ஏர்போர்ட்

HAL ஏர்போர்ட்

1947-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பெங்களூர் HAL ஏர்போர்ட்டின் புகைப்படம்.

படம் : Aiel

காலை வேளை

காலை வேளை

கடைகள் ஒன்றும் திறக்கப்படாத காலை வேளையில் தேநீரும், அரட்டையுமாக நாளைத் துவங்கும் பெங்களூர்வாசிகள்.

படம் : Soham Banerjee

இசை நிகழ்ச்சி

இசை நிகழ்ச்சி

பெங்களூர் மாநகரில் தினந்தோறும் எங்காவது இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கும்.

படம் : Saad Faruque

குதிரை வண்டி

குதிரை வண்டி

இன்றும்கூட பெங்களூர் மாநகரில் நீங்கள் ஜட்கா (குதிரை வண்டி) வண்டியைப் பார்க்கலாம். ஆனால் இவை வணிகப் பயன்பாட்டுக்காக சரக்குகளை எடுத்துச் செல்ல மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

படம் : Indi Samarajiva

ஷாப்பிங் மாலுக்கு வெளியே!

ஷாப்பிங் மாலுக்கு வெளியே!

ஷாப்பிங் மாலுக்கு உள்ளே நவநாகரிகமான தோற்றத்தை பார்க்கக்கூடிய அதே நேரத்தில், மாலுக்கு வெளியே இதுபோன்ற காட்சியையும் காண முடியும்.

படம் : Christopher Neugebauer

ப்ரிகேட் ரோடு

ப்ரிகேட் ரோடு

பெங்களூரின் ஷாப்பிங் கேந்திரம் என்று வர்ணிக்கப்படும் ப்ரிகேட் ரோடு.

படம் : Ryan

ஓரினச் சேர்கையாளர்கள் ஊர்வலம்

ஓரினச் சேர்கையாளர்கள் ஊர்வலம்

பெங்களூரில் சில ஆண்டுகளாக வருடத்துக்கொருமுறை நடத்தப்படும் ஓரினச் சேர்கையாளர்கள் ஊர்வலம்.

படம் : Nick Johnson

யாஹூ அலுவலகம்

யாஹூ அலுவலகம்

இணைய உலகில் கொடிகட்டி பறக்கும் யாஹூவின் அலுவலகம்.

படம் : Eirik Refsdal

பூ பாலக்கி

பூ பாலக்கி

பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் அலசூர் பகுதியில் கொண்டாடப்படும் 'பூ பாலக்கி (பூ பல்லக்கு)' எனும் திருவிழா.

படம் : Akash Bhattacharya

மெஜஸ்டிக் ரயில் நிலையம்

மெஜஸ்டிக் ரயில் நிலையம்

எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலையம்.

படம் : McKay Savage

ஸ்டேட் சென்ட்ரல் லைப்ரரி

ஸ்டேட் சென்ட்ரல் லைப்ரரி

பெங்களூர் ஸ்டேட் சென்ட்ரல் லைப்ரரியும், அதற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள மைசூர் திவான் சேஷாத்ரி ஐயரின் சிலையும். 1883 முதல் 1901 வரை மொத்தம் 18 ஆண்டுகள் மைசூரின் திவானாக இருந்த சேஷாத்ரி ஐயர், நீண்ட காலம் மைசூர் திவானாக இருந்தவராக அறியப்படுகிறார்.

படம் : Soham Banerjee

பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம்

பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம்

பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்தின் உள்ளே செல்பவர்களும், வெளியே வரும் பயணிகளும்.

படம் : Herry Lawford

நாவற்பழம்

நாவற்பழம்

பெங்களூரில் சில இடங்களில் நாவற்பழக்கடைகளை காண முடியும். அப்படி பார்க்க வாய்ப்பு கிடைத்தால் சுவைக்க மறக்காதீர்கள்!

படம் : Greg Younger

காத்திக் பாணி கட்டிடம்

காத்திக் பாணி கட்டிடம்

பெங்களூரில் காத்திக் பாணியில் கட்டப்பட்ட இதுபோன்ற பழைய கட்டிடங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

படம் : Charles Haynes

Read more about: பெங்களூர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X