Search
  • Follow NativePlanet
Share
» »பிரபலமான சுற்றுலத்தலங்களில் இருக்கும் வித்தியாசமான அம்சங்கள்

பிரபலமான சுற்றுலத்தலங்களில் இருக்கும் வித்தியாசமான அம்சங்கள்

பெரும்பாலும் நாம் சுற்றுலா செல்வதென்றால் தெளிவான திட்டமிடல் இல்லாமல் அவசரகதியில் தான் கிளம்பிச்செல்வோம். இப்படி ஓரிடத்திற்கு சென்றால் அங்கே எல்லோரும் வழக்கமாக செல்லும் இடங்களுக்கு மட்டும் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு திரும்பிவிடுவோம். அதிலுமே கூட சில நேரங்களில் சில இடங்களில் நுழைவுக்கட்டணம் நாம் நினைத்ததை விட அதிகமாக இருக்கும் அல்லது நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். அதைவிட கொடுமையாக ஓரிடத்தை சுற்றிப்பார்த்து வந்துவிட்ட பிறகு அங்கே இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்படுவதும் நிகழும்.

இதுபோன்ற சங்கடங்களை தவிர்க்க இந்தியாவில் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் இருக்கும் வித்தியாசமான அம்சங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அடுத்தமுறை இங்கே சொல்லப்பட்டிருக்கும் இடங்களுக்கு சுற்றுலா செல்ல நேர்ந்தால் அதனை என்றும் மறக்கமுடியாதபடி வித்தியாசமாக கொண்டாடி மகிழுங்கள்.

வாரணாசி:

வாரணாசி:

இன்று உலகில் மக்கள் தொடர்ந்து வசித்துவரும் பழமையான நகரம் காசி (அ) வாரணாசி ஆகும். திட்டத்தட்ட 2,000 வருடங்களாக தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் காசி இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் ஆகும். ஹிந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியோரின் புனித நகரமாக காசி திகழ்கிறது.

butforthesky.com

வாரணாசி:

வாரணாசி:

காசியில் இருக்கும் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலம் விஸ்வநாதர் கோயிலாகும். இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதன்மையானதாக இக்கோயில் திகழ்கிறது. வரலாற்று காலத்தில் பலமுறை இக்கோயில் அந்நியர்களின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. கடைசியாக முகலாய மன்னனால் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. பின் 1780ஆம் ஆண்டு அந்த மசூதிக்கு அருகிலேயே புதிதாக விஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

வாரணாசி:

வாரணாசி:

காசியில் பாய்ந்தோடும் கங்கை நதியில் ஸ்நானம் செய்தால் பாவங்கள் கழியும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை ஆகும். அதே போல கங்கை நதியில் தங்களின் அஸ்தி கரைக்கப்பட்டால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருப்பதால் தங்கள் இறப்பை நோக்கி காத்திருக்கும் பலரும் காசிக்கு வந்து தங்களின் இறுதி நாட்களை செலவிடுகின்றனர். காசியில் இருக்கும் கங்கை படித்துறைகளில் தினமும் நூற்றுக்கணக்கான சவங்கள் எரியூட்டப்படுகின்றன.

வாரணாசி:

வாரணாசி:

காசியில் சுற்றுலாப்பயணிகளை அதிகமாக கவரும் விஷயம் ஒவ்வொரு நாளும் மாலையில் நடக்கும் கங்கா ஆரத்தி தான். கங்கைக்கரையில் மாலை 6.45 மணி அளவில் காசியின் புகழ்பெற்ற படித்துரையான தஸ்வமேத கட்-இல் மந்திர கோஷங்கள் முழங்க புனித கங்கை நதிக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. இது பார்க்க கண்கொள்ளக் காட்சியாக இருக்கும்.

வாரணாசி:

வாரணாசி:

இந்த கங்கா ஆரத்தியை நேருக்கு நேராக பார்க்க விரும்புகிறவர்களும், இதனை புகைப்படம் எடுக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளும் ஒரு படகை வாடகைக்கு அமர்ந்திக் கொள்ளும் வசதி காசியில் இருக்கிறது.

Magalie L'Abbé

வாரணாசி:

வாரணாசி:

காசிக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் பலருக்கும் பார்க்கபார்க்க மனதில் பரவசம் தொற்றிக்கொள்ளும் கங்கா ஆரத்தியை படகில் சென்றும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதை அறியாமல் கூட்ட நெரிசலில் சிக்கி அவதியுறுகின்றனர்.

எனவே நீங்கள் அடுத்தமுறை காசிக்கு சென்றால் இக்காட்சியை நேருக்கு நேராக கங்கையில் மிதந்தபடி கண்டு மகிழுங்கள்.

வாரணாசி:

வாரணாசி:

காசி நகரை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழில் இருக்கும் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Magalie L'Abbé

ஒட்டக சவாரி :

ஒட்டக சவாரி :

இந்திய நாடு துணைக்கண்டம் என்று அழைக்கப்பட காரணமே ஒரு கண்டத்துக்குரிய அனைத்து புவியியல் அமைப்பையும் கொண்டிருப்பது தான். பனி நிறைந்த மலைகள், பசுமைக்கடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் பாலைவனம் என அத்தனை வகையான நிலங்களும் இந்தியாவில் உண்டு.

அப்படி இந்தியாவில் இருக்கும் பாலைவன மாநிலம் தான் ராஜஸ்தான் ஆகும். என்னதான் பாலைவனம் நிறைந்த பகுதியாக இருந்தாலும் இந்தியாவின் சுற்றுலா தலைநகராக இருப்பது ராஜஸ்தான் தான். அங்கே நாம் நிச்சயம் தவறவிடக்கூடாத விஷயம் ஒன்றிருக்கிறது. அது என்ன தெரியுமா?.

Mirza Asad Baig

ஒட்டக சவாரி :

ஒட்டக சவாரி :

ராஜஸ்தானுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் பாலைவனத்தின் கப்பல் என்றழைக்கப்படும் ஒட்டகத்தில் சவாரி செய்யாமல் திரும்பக்கூடாது.

ஒட்டகத்தின் மேல் அமர்ந்து சவாரி செய்வது மணலின் மேல் மிதப்பது போல இருக்கும். ஜெய்சால்மர் மற்றும் புஷ்கர் ஆகிய இடங்களில் ஒட்டக சவாரியில் ஈடுபடும் வாய்ப்பை பெறலாம்.

Stephen Bugno

ஒட்டக சவாரி :

ஒட்டக சவாரி :

குறிப்பாக புஷ்கர் நகரில் நவம்பர் மாதத்தில் உலகப்பிரசித்தி பெற்ற ஒட்டக சந்தை நடைபெறுகிறது. அதில் 50,000க்கும் மேற்ப்பட்ட ஒட்டகங்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.

இச்சந்தையில் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக ஒட்டக சவாரி, ஒட்டகங்களுக்கான அழகுப்போட்டி போன்றவை நடைபெறுகின்றன.

Viator.com

ஒட்டக சவாரி :

ஒட்டக சவாரி :

ஜெய்சால்மர் நகரம் இந்திய ராஜாக்களின் வாழ்கையை புரிந்துகொள்ள அற்புதமான இடமாகும். இங்கிருக்கும் ஜெய்சால்மர் கோட்டை ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய கோட்டைகளுள் ஒன்றாகும்.

ஒட்டக சவாரி செய்வதோடு மட்டுமில்லாமல் ஜெய்சால்மர் நகரையும் முழுமையாக சுற்றிப்பாருங்கள்.

டெல்லி

டெல்லி

இந்தியாவின் தலைநகரமான புதுதில்லி பழமை,புதுமையின் அற்புத கலவையாகும். மிகப்பெரிய வரலாற்று பின்னணியுடைய இந்நகரம் தேசத்தின் தலைநகரான பிறகு நவீன யுகத்திற்கு ஏற்ப வேறொரு பரிமாணத்துக்கு தன்னை தகவமைத்துக் கொண்டது. அப்படிப்பட்ட புதுதில்லியில் நாம் நிச்சயம் தவற விடக்கூடாத சில இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஜம்மா மசூதி:

ஜம்மா மசூதி:

புதுதில்லியில் இருக்கும் ஜம்மா மசூதி தான் இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய மசூதி ஆகும். ஒரே நேரத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் இது கட்டப்பட்டிருக்கிறது. தாஜ்மஹால் என்னும் அற்புதத்தை கட்டிய ஷாஹ் ஜகான் தான் இந்த மசூதியையும் கட்டியுள்ளார்.

ஜம்மா மசூதி:

ஜம்மா மசூதி:

அளவில் பெரியது என்பதை தாண்டி இந்த மசூதியின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கே தான் மான் தோளில் எழுதப்பட்ட குரானின் மூல நூலின் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளது.

அதோடு நபிகள் நாயகத்தின் தலை முடியும் இங்கே வைக்கப்பட்டுள்ளதாம்.

More News

    Read more about: varanasi andaman delhi rajasthan
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+