Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபாக

பொருந்திக்கொள்ள கூடிய ஒரு நவீன அடையாளம்.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் ஒரு குறுநில மன்னராக இருந்த கெம்பே கவுடாவால் 1537- ஆண்டு, தற்சமயம் பெங்களூர் என்று அழைக்கப்படும் இந்த நகரம்

உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நகரத்தைப் பற்றி முழுமையாக காண்போம்.

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?


பெங்களூர் பகுதி முதலில் மேற்கத்திய கங்க வம்சத்தினராலும் அதன் பின்னர் ஹொய்சளர்களாலும் ஆளப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பிறகு ஹைதர் அலி அவர் காலத்திற்குப் பின் அவர் மகன் திப்பு சுல்தான் போன்றவர்களால

ஆளப்பட்டது. ‘பெண்டகலூரு' என்று ஆதியில் அழைக்கப்பட்ட இந்த நகரத்தின் பெயர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களால் பெங்களூர் என்று மாற்றப்பட்டு தற்சமயம் பெங்களூரு என்று அதிகாரபூர்வமாக

அழைக்கப்படுகிறது.

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

இந்தியாவின் தோட்ட நகரம்(கார்டன் சிட்டி) என்று முன்னர் அழைக்கப்பட்ட பெங்களூர் தற்போது ஐடி (தகவல் தொழில் நுட்பம்) நிறுவனங்களின் கேந்திரமாக விளங்குவதால் இந்தியாவின் சிலிகான் வேலி என்று அந்தஸ்தை

பெற்றுள்ளது.

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

கர்நாடக மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள பெங்களூர் நகரம் புவியியல் ரீதியாக தக்காண பீடபூமியின் ஒரு பகுதியான மைசூர் பீடபூமியில் மீது அமைந்துள்ளது. 741 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த

மாநகரம் 58 லட்சம் மக்கள் தொகையை கொண்டு இந்தியாவின் அதிக மக்கள் நெருக்கமுள்ள நகரங்களில் மூன்றாவதாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3113 அடியில் (949 மீட்டர்) உள்ளதால் இது மிக இதமான இனிமையான

பருவநிலையை பெற்றுள்ளது.

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

வறண்ட பிரதேச பருவநிலையை கொண்டுள்ள இந்த மாநகரம் வெப்பமான கோடையையும், அதிகமாக குளிரும் குளிர் காலத்தையும், அடிக்கடி மழையையும் பெறும் பருவ நிலை அம்சங்களையும் பெற்றுள்ளது. ஓய்வு

பெற்றவர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் இந்த மாநகரம் ஓய்வு பெற்றபின் தம் வாழ் நாளை அமைதியாக இனிமையாக கழிக்க விரும்பும் பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்த மக்களை ஈர்க்கிறது. இங்கு பொதுவாக

வெப்பநிலை கோடைக்காலத்தில் 20⁰C இருந்து 36⁰C ஆகவும், குளிர் காலத்தில் 17⁰C இருந்து 27⁰C ஆகவும் காணப்படுகிறது.

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூருக்கு உள்ளேயும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பயணம் செய்வது மிக சுலபமாக உள்ளது. மக்கள் போக்குவரத்துக்கு அரசு பேருந்துகளையும், ஆட்டோ ரிக்‌ஷாக்களையும் மற்றும் வேன் போன்றவற்றையும்

பயன்படுத்துகின்றனர். தற்சமயம் மெட்ரோ ரயில் வசதியும் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாயு வஜ்ரா பேருந்து சேவைகள் பெங்களூர் விமான நிலையத்தையும் நகரத்தையும் இணைக்கின்றன. பெங்களூர்

எல்லா முக்கிய பெருநகரஙளுடனும் சாலை, ரயில் மற்றும் விமான மார்க்கத்தால் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?


இந்திய தென்மேற்கு ரயில்வே பிரிவின் முக்கியமான கேந்திரங்களில் ஒன்றான பெங்களூரில் சிட்டி சென்ட்ரல், யஷ்வந்த்பூர், கண்டோன்மெண்ட் மற்றும் கே.ஆர் புரம் போன்ற ரயில் நிலையங்கள் உள்ளன. நகரத்திலிருந்து 40

கி.மீ விலகி தேவனஹள்ளி என்ற பகுதியில் அமைந்துள்ள பெங்களூர் விமான நிலையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளைக் கொண்டுள்ளது.

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

உள்ளூர் கலாச்சாரமும் பாரம்பரியமும்:

பெங்களூர் மாநகரம் நவநாகரிக பன்முக கலாச்சாரத்தை கொண்டுள்ள போதிலும் பெரும்பான்மையான மக்கள் இந்து கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். பன்னாட்டு கலாச்சார இயல்பு இங்கு காணப்படுவதால் பல்வேறு

மாநிலங்களை சேர்ந்த மக்கள் இங்கு குடியேறி வாழ்கின்றனர். அதிகாரபூர்வ மொழியாக கன்னடம் பேசப்பட்டாலும் பெரும்பாலான பெங்களூர் வாசிகள் ஆங்கிலம் புரிந்து கொள்ளக்கூடியவர்களாகவும் நல்ல ஆங்கிலத்தில்

உரையாடக் கூடியவர்களாகவும் உள்ளனர்.

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற இதர திராவிட மொழிகளுடன் இந்தியும் பேசப்படுகிறது. எழுத்தறிவு விகிதாசாரத்தில் மும்பைக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தை பெங்களூர் பெற்றுள்ளது (87%).

உன்னதமான பண்பாட்டுக் கலைப் பாரம்பரிய பின்னணியைப் பெற்றுள்ள இந்த நகரம் ரங்க சங்கரா, சௌடையா மெமோரியல் ஹால் மற்றும் ரவீந்திர காலஷேத்ரா போன்ற பாரம்பரிய கலை மற்றும் நவீன நாடகக்கலை

தொடர்பான அமைப்புகளை ஆதரித்து அவை நிலைத்து நிற்பதற்கு உதவியுள்ளது.

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

பெங்களூரு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

வருடம் ஒரு முறை பெங்களூரில் நடத்தப்படும் ‘பெங்களூரு ஹப்பா' எனும் நிகழ்ச்சி பல புதிய கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவும் நிகழ்ச்சியாக விளங்குகிறது. தீபாவளி மற்றும் கணேஷ் சதுர்த்தி

போன்ற திருவிழாக்கள் பெங்களூரின் சிறப்பான மதக்கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றன.

Read more about: travel shopping
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X