» »பிஜேபி எதிர்க்கும் பத்மாவதி கோட்டையில் இத்தனை அம்சங்களா? அப்பப்பா!

பிஜேபி எதிர்க்கும் பத்மாவதி கோட்டையில் இத்தனை அம்சங்களா? அப்பப்பா!

Posted By: Udhaya

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தோர்கர் என்றழைக்கப்படும் நகரம் 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது தன் கம்பீரமான கோட்டைகளுக்காகவும், கோயில்களுக்காகவும், கோபுரங்களுக்காகவும் மற்றும் அரண்மனைகளுக்காகவும் புகழுடன் விளங்குகிறது.

இதுதான் மகாராணி பத்மாவதி வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. உண்மையில் இந்த இடத்தின் வரலாறு பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

மாவீரர்கள்

மாவீரர்கள்

இந்திய வரலாற்றில் சித்தோர்கர் பிரதேச மாவீரர்களின் கதைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. புராணக்கதைகளின்படி, மஹாபாரத இதிகாசத்தின் பாண்டவ சகோதர்களில் ஒருவரான பீமன் இந்த சித்தோர்கர் பிரதேசத்துக்கு வருகை தந்து சாகாவரம் பெறுவதற்கான சித்திகள் குறித்து ஒரு குருவிடம் தீட்சை பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் பீமனுடைய அவசர குணத்தின் காரணமாக அவரால் அந்த சித்தியைப் பெற முடியாமல் போயிற்று. ஆகவே மிதமிஞ்சிய ஏமாற்றத்திலும் கோபத்திலும் அவர் பூமியை ஓங்கி உதைத்த போது உருவான நீர்த்தேக்கமே தற்சமயம் பீம் லாட் என்றழைக்கப்படும் ஏரி என்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

Ssjoshi111

கீர்த்தி தூண்கம்பம்

கீர்த்தி தூண்கம்பம்

இது ஒரு வெற்றித் தூண் ஆகும். சித்தர்கர் கோட்டையில் காணப்படுகிறது. 22மீ உயரம் கொண்ட இது, சமண முனிவர் ஜீஜா பாகர்வால் நினைவாக கட்டப்பட்டது. பத்மினி வரலாற்றில் இது முக்கியமான ஒரு இடமாகும்.

wiki

நினைவுச் சின்னங்கள்

நினைவுச் சின்னங்கள்

சித்தோர்கர் மற்றும் சுற்றிலுமுள்ள விசேஷ அம்சங்கள் இந்நகரத்தின் பிரதான சிறப்பம்சம் 180 மீ உயரத்தில் அமைந்துள்ள சித்தோர்கர் கோட்டையாகும். இந்த கோட்டை வளாகத்தில் பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை இருப்பது குறிப்பிடத்தக்கது.
wiki

விஜயா வெற்றித் தூண்கம்பம்

விஜயா வெற்றித் தூண்கம்பம்

மேவார் அரசன் ரானா கும்பா கட்டிய இது மால்வா குஜராத் பகுதிகளை ஆண்ட முகமத் கிலிஜியை வெற்றிகொண்டதன் நினைவாக கொண்டாடப்படுகிறது.
wiki

 ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை

ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை

மஹாராணா ஃபதேஹ் சிங் மன்னரால் கட்டப்பட்ட ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை ஒரு அழகான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஸ்தலமாகும். இந்த அரண்மனையின் உள்ளே ஒரு அற்புதமான விநாயகர் சிலை, ஒரு பெரிய நீரூற்று மற்றும் அழகிய சுவரோவியங்களைக் காணலாம்.
wiki

கோட்டை நீர்நிலை

கோட்டை நீர்நிலை


கோட்டையில் அந்த காலத்திலேயே அமைக்கப்பட்ட தடுப்பணை. நீர்தேக்கம்.
wiki

 ஆன்மீகத் தலங்கள்

ஆன்மீகத் தலங்கள்

சன்வாரியாஜி கோயில், துல்ஜா பவானி கோயில், ஜோக்னியா மாதாஜி கோயில் மற்றும் மாத்ரி குண்டியா கோயில் போன்ற பலவிதமான ஆன்மீக திருத்தலங்களும் இந்நகரில் அமைந்துள்ளன. இப்பிரதேசத்தின் இயற்கை எழிலை முழுமையாக ரசிப்பதற்கு பயணிகள் இங்குள்ள பாஸி காட்டுயிர் சரணாலயத்திற்கு விஜயம் செய்யலாம். இது 50 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது தவிர சீதாமாதா சரணாலயம் மற்றும் பைன்ஸ்ரோர்கர் சரணாலயம் போன்றவையும் அவற்றிலுள்ள வளமான காட்டுயிர் அம்சங்களுக்காக சுற்றுலாப்பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகின்றன.
wiki

தல வரலாறு

தல வரலாறு

இந்நகரத்தின் தலவரலாறு மற்றும் பாரம்பரியப் பண்பாட்டியல் அம்சங்களை தெரிந்து கொள்ள விரும்பினால் பயணிகள் இங்குள்ள தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு தவறாமல் விஜயம் செய்யலாம். இங்கு வரலாற்று காலத்தைச் சேர்ந்த பல அழகிய கைவினைக் கலைப்பொருட்கள், அபூர்வ ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. குப்தர்கள் மற்றும் மௌரியர்கள் காலத்தோடு தொடர்புடைய கைவினைக் கலைப்பொருட்கள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒரு கூடுதல் தகவலாகும்.
wiki

பிஜாய்ப்பூர் கோட்டை

பிஜாய்ப்பூர் கோட்டை

நேரம் இருப்பின் சுற்றுலாப்பயணிகள் பிஜாய்பூரிலுள்ள ஒரு பழங்காலக் கோட்டையை பார்த்து வரலாம். இந்தக் கோட்டை தற்சமயம் ஒரு விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. பிரதாப்கர் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள தேவ்கர் எனும் இடத்திலுள்ள ஒரு 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டையும் முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு பல பிரசித்தமான கோயில்கள் மற்றும் அரண்மனைகள் போன்றவையும் உள்ளன.
wiki

சிறிய கஜுராஹோ

சிறிய கஜுராஹோ


மேணல்சித்தோர்கர் நகரிலிருந்து 90கி.மீ தூரத்திலுள்ள சிறுநகரம் மேணல் ஆகும். இது ‘சிறிய கஜுராஹோ' என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. இயற்கை வனப்பு கொண்ட சூழல் மற்றும் அழகிய கோயில் கட்டமைப்பு போன்றவற்றை பெற்றிருப்பதால் இப்படி ஒரு புகழை இந்த சிறுநகரம் பெற்றுள்ளது. அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட பல பௌத்த கோயில்கள் இப்பகுதியில் உள்ளன அவற்றில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கோயில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
wiki

கௌமுக் குண்ட்

கௌமுக் குண்ட்

தன் இயற்கை எழில் காரணமாக இந்த நகரம் ஒரு பிரபலமான சிற்றுலாத் தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இவை தவிர, சித்தோர்கர் நகருக்கு வருகை தரும் பயணிகள் கௌமுக் குண்ட் எனப்படும் ஏரிக்கும் விஜயம் செய்யலாம். பசுவின் தலை வடிவத்தில் காட்சியளிப்பதால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்கு அருகிலேயே ராணி பிந்தர் சுரங்கப்பாதை எனும் மற்றொரு பிரசித்தமான விசேஷ சுற்றுலா அம்சமும் அமைந்துள்ளது.
wiki

பத்மினி கோட்டையின் பழைய ஓவியம்

பத்மினி கோட்டையின் பழைய ஓவியம்

1878ம் ஆண்டு வரையப்பட்ட பத்மினி கோட்டையின் ஓவியம் இதுவாகும்.
wiki

தற்போது

தற்போது


இந்த படம் 2010ம் ஆண்டு எடுக்கப்பட்டது. மிகவும் அற்புதமாக எடுக்கப்பட்ட இந்த படம் பலரால் பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது..

Arne Hückelheim

பிள்ளையார் சிலை

பிள்ளையார் சிலை


சித்தர்கர் கோட்டையில் உள்ள சக்திவாய்ந்த பிள்ளையார் சிலை இதுவாகும்.

wiki

ராஜபுத்ர வம்சம்

ராஜபுத்ர வம்சம்


ராஜபுத்ர வம்சத்தினரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ள ஞாட்டாபோலா கோயில்.
wiki

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சித்தோர்கர் நகருக்கான பயண வசதிகள் சித்தோர்கருக்கு அருகில் உள்ள விமானத்தளம் 90கி.மீ தூரத்திலுள்ள தபோக் விமான நிலையமாகும். இது மஹாராணா பிரதாப் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகளைக் கொண்டுள்ளது. மேலும், சித்தோர்கர் ரயில் நிலையமும் அஜ்மேர், ஜெய்பூர், உதய்பூர், கோட்டா மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கு ரயில் இணைப்புகளைக் கொண்டுள்ளது. நல்ல சாலை வசதிகளால் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இந்நகருக்கு செல்வதற்கு மாநில அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.
wiki

எப்போது செல்லலாம்?

எப்போது செல்லலாம்?

சித்தோர்கர் நகரின் தட்பவெப்ப இயல்புகள் சித்தோர்கர் நகரம் கோடைக்காலத்தில் மிகக்கடுமையான உஷ்ணத்துடன் காணப்படுகிறது. அச்சமயம் அதிகபட்சமாக 44° C வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் தொடர்ச்சியற்ற மழைப்பொழிவு காரணமாக ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் 60 செ.மீ முதல் 80 செ.மீ வரையிலான மழையை இப்பகுதி பெறுகிறது. பொதுவாக குளிர்காலமே இந்த சுற்றுலாத்தலத்திற்கு பயணம் செய்து ரசிக்க ஏற்றதாக கருதப்படுகிறது.

wiki

சென்னை - சித்தர்கர்

சென்னை - சித்தர்கர்


சென்னையிலிருந்து சித்தர்கருக்கு இடைப்பட்டத் தொலைவு 1910கிமீ ஆகும். 35 லிருந்து 40 மணி நேரங்கள் நம் செல்லும் வாகனத்தைப் பொறுத்து நேரம் மாறுபடலாம். சென்னையிலிருந்து ஆந்திரபிரதேசம், ஹைதராபாத், மத்தியப் பிரதேசம் வழியாக ராஜஸ்தானை அடையலாம்.

Read more about: travel temple rajasthan forts