Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரு அருகே காட்டுயிர் வாழ்க்கைக்கு தேர்ந்த இடம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

பெங்களூரு அருகே காட்டுயிர் வாழ்க்கைக்கு தேர்ந்த இடம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

பெங்களூரு அருகே காட்டுயிர் வாழ்க்கைக்கு தேர்ந்த இடம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

நீங்கள் பெங்களூரில் வசிக்கிறீர்களா? அப்போது உங்களுடைய வார இறுதி நாட்களை குதூகலமாக கழிப்பதற்கான ஒரு சிறந்த இடமாக பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா கண்டிப்பாக இருக்கும்.

அதுமட்டுமில்லை.. நீங்கள் சென்னையிலிருந்து அல்லது தமிழகத்தின் வேறு இடங்களிலிருந்தும் பெங்களூரு வருகிறீர்கள் என்றால், நீங்கள் கட்டாயம் தவறவிடக்கூடாத இடமாக இந்த பன்னார்கட்டா இருக்கிறது. ஏன் தெரியுமா?

குவியும் சுற்றுலாப் பயணிகள்

குவியும் சுற்றுலாப் பயணிகள்

உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பயணிகளை ஈர்க்கும் பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா கர்நாடகாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

bannerghattabiologicalpark

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


இது பெங்களூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூர் காட்டுப் பகுதிளின் கீழ் வரும் பன்னேர்கட்டா பூங்கா 104 சதுர கிலோமீட்டர் பரப்பில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

bannerghattabiologicalpark

பாதுகாப்பட்ட காடுகள்

பாதுகாப்பட்ட காடுகள்

அதுமட்டுமல்லாமல் அனிக்கள் தொகுதியின் பாதுகாக்கப்பட்ட பத்து காடுகளில் ஒன்றாகாவும் இது இருந்து வருகிறது.

bannerghattabiologicalpark

 என்னவெல்லாம் இருக்கிறது

என்னவெல்லாம் இருக்கிறது


1971-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த பூங்காவில் மிருகக்காட்சி சாலை, குழந்தைகள் பூங்கா, மீன்கள் காட்சியகம், முதலை பூங்கா, அருங்காட்சியகம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, பாம்பு பண்ணை முதலியவைகளோடு வளர்ப்பு பிராணிகளுக்கான தனி இடமும் இருக்கிறது.

bannerghattabiologicalpark

 சிங்கங்களுக்கான பூங்கா

சிங்கங்களுக்கான பூங்கா


பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா, புலி மற்றும் சிங்கங்களுக்காக பிரபலமானது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பூங்காக்காளில் சிங்கங்களுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வரும் பூங்காக்களில் பன்னேர்கட்டா ஒன்று.

bannerghattabiologicalpark

 சவாரி

சவாரி

இங்கு வனத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் சவாரி செய்து புலி, சிங்கங்களோடு நீங்கள் மற்ற விலங்குகளையும் பார்த்து ரசிக்கலாம்.

bannerghattabiologicalpark

 சுவர்ணமுகி ஆறு

சுவர்ணமுகி ஆறு

பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவை ஒட்டி நீளவாக்கில் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்ணமுகி ஓடை, பூங்காவின் அழகுக்கு அழகு சேர்க்கக் கூடியது.

bannerghattabiologicalpark

 சுவர்ணமுகி குன்று

சுவர்ணமுகி குன்று

இந்த ஓடை புகழ் பெற்ற விஷ்ணு கோயிலான சம்ப்பக தாம சுவாமி ஆலயம் அமைந்திருக்கும் சுவர்ணமுகி குன்றிலிருந்து உற்பத்தியாகிறது.

bannerghattabiologicalpark

 வெள்ளைப் புலி

வெள்ளைப் புலி

அதோடு பயணிகளுக்கு அதிஷ்டம் இருந்தால் அரிதான வெள்ளை புலிகளையும், அழகான வங்காளப் புலிகளையும் கூட பார்க்கலாம்.

Muhammad Mahdi Karim

 வண்ணத்துப்பூச்சி பூங்கா

வண்ணத்துப்பூச்சி பூங்கா

இங்குள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா தான் இந்தியாவிலேயே முதல் முதலாக பட்டாம்பூச்சிகளுக்கென்று உருவாக்கப்பட்ட பூங்கா. இதில் மொத்தம் 20 வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஏழரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் கண்ணாடிக் கூண்டுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

bannerghattabiologicalpark

Read more about: travel wildlife
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X