Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூர் டூ வடைக்கு ஃபேமஸான மதூருக்கு போலாமா? அங்க என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

பெங்களூர் டூ வடைக்கு ஃபேமஸான மதூருக்கு போலாமா? அங்க என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

By Bala Karthik

காஸ்மோபாலிட்டன் நகரமான பெங்களூரு, இந்தியாவின் ஆர்வமிக்க, வளர்ந்த நகரமாகும். இந்தியாவின் தோட்டத்து நகரமென நாம் அழைக்க, எண்ணற்ற மரங்களும், பூங்காக்களும் வழியில் காணப்படுகிறது. இருப்பினும், கடந்த இருபது வருடங்களில் இந்த நகரத்தின் வெறிக்கொண்ட வளர்ச்சியை நம்மால் பார்க்கவும் முடிகிறது. தற்போது பெங்களூருவை இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது.

நெருக்கடியான சூழ்நிலை மற்றும் மாசு பிரச்சனைகள் காணப்படுகிறது. பழமையான பெங்களூருவிற்கும், புதுமையான ஒன்றுக்கும் பிரதிபலிப்பானது காணப்படக்கூடும். வருடமுழுவதும் பெங்களூரு சிறந்த கால நிலையில் நம்மை பரவசப்படுத்துகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியுடன் இது இணைக்கப்பட்டிருக்க, சர்வதேச அளவிலான இடங்களையும் கொண்டிருக்கிறது. கன்னடாவை அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இவர்கள் கொண்டிருக்க, பெங்களூருவில் பெரும்பாலும் இரு மொழிகளை பேசியும் வருகின்றனர்.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் காணப்படும் ஒரு சிறு நகரம் தான் மத்தூர். பெங்களூருவிலிருந்து 82 கிலோமீட்டர் தூரத்தில் காணப்பட, 662 மீட்டர்கள் சராசரி உயரத்தில் சிம்ஷா நதிக்கரையில் மத்தூர் காணப்படுகிறது. இந்தியாவின் மென்மையான தேங்காய் மூலதனமாக மத்தூர் இருக்கிறது. சுமார் 300 லாரிகளில் மென்மையான தேங்காயானது கோவா, ஹைதராபாத், அஹமதாபாத், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவிற்கும் அனுப்பப்படுகிறது.

 மத்தூரை நாம் காண சிறந்த நேரங்கள்:

மத்தூரை நாம் காண சிறந்த நேரங்கள்:

வருடமுழுவதும் மத்தூரானது நடுநிலை கால நிலையை கொண்டிருக்கிறது. கோடைக்காலத்தில், இவ்விட காலநிலையானது 34 டிகிரி செல்சியஸை எட்டுகிறது. குளிர்காலத்தில் குளுமையானது பெருமளவில் காணப்படுவதுமில்லை. குளிர்மாதமாக ஜனவரியானது காணப்பட, இரவு நேரத்தில் இதன் வெப்ப நிலையானது 16 டிகிரி செல்சியஸும் காணப்படக்கூடும்.

PC: Shailesh.patil

மத்தூரை நாம் அடைவது எப்படி?

மத்தூரை நாம் அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூருவின் கெம்பி கௌடா சர்வதேச விமான நிலையமானது மத்தூரின் அருகாமையில் காணப்படுமோர் விமான நிலையமாகும். நீங்கள் டாக்சி அல்லது பேருந்து மூலமாக மெஜெஸ்டிக்/கெம்பி கௌடா பேருந்து நிலையத்திலிருந்து மத்தூரை அடையலாம்.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூருவிலிருந்து மத்தூருக்கு பத்து இரயில்கள் வந்த வண்ணம் இருந்துக்கொண்டிருக்கிறது. மத்தூரை நாம் அடைவதற்கான முறையாக இரயில் பயணமானது சிறந்து காணப்படுகிறது. சராசரியாக, பெங்களூருவிலிருந்து மத்தூரை நாம் அடைய 2.5 மணி நேரங்கள் ஆகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

வழி 1: பெங்களூரு - இராமநகரா - சன்னாப்பட்னா - மத்தூர், வழி மைசூரு சாலை & தேசிய நெடுஞ்சாலை 275. இலக்கை நாம் எட்ட 2 மணி நேரங்கள் ஆக, 82 கிலோமீட்டரையும் நாம் கடக்கிறோம்.

வழி 2: பெங்களூரு - குனிகல் - ஹுலியுர்துர்கா - துபினக்கேரி - மத்தூர், வழி தேசிய நெடுஞ்சாலை 75 மற்றும் குனிகல் - மத்தூர் சாலை. 123 கிலோமீட்டர் நாம் பயணம் செய்ய, 2 மணி நேரம் 39 நிமிடங்களும் ஆகிறது.

இரண்டாம் வழியைக்காட்டிலும் முதலாம் வழியானது குறைவான தூரமாக இருக்க, சிறந்த சாலைகளையும் கொண்டிருக்கிறது, அதனால், முதலாம் வழியை பயணத்திற்கு நாம் தேர்ந்தெடுப்பது நல்லதாகும்.

பெங்களூருவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.PC: flickr.com

கப்பன் பூங்கா:

கப்பன் பூங்கா:


பெங்களூரு பார்ப்பதற்கான இடங்களின் பங்களிப்பாக குறைவாகவே காணப்படுகிறது. இந்த நகரமானது வாழ்வதற்கு ஏற்றதாக அமைய, சுற்றுலா இடங்களை குறைவாகவே கொண்டிருக்கிறது. இருப்பினும், சில வழக்கமான விதமாக விதான் சௌதா, லால் பாஹ், கப்பன் பூங்கா, பெங்களூரு அரண்மனை, பென்னர்கட்டா தேசிய பூங்கா என பலவும் காணப்படக்கூடும்.

PC: Yair Aronshtam

விதான சௌதா:

விதான சௌதா:

அழகிய கட்டிடமான விதான சௌதா, நியோ திராவிடக்கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடமானது கர்நாடகாவின் மாநில சட்டமன்றத்தை இருக்கையாக கொண்டிருக்க கெங்கல் ஹனுமந்தையாவால் கருத்தாக்கமும் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பிரதியாக விகாஷ் சௌதாவானது 2005 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட, இதன் இடைவெளியானது எளிதாகவும் அமைந்திருக்கிறது.

கர்நாடகாவின் உயர் நீதிமன்றமானது விதான சௌதாவின் வலப்புறத்தில் அமைந்திருக்க, அழகுடன் கூடிய செங்கோட்டையில் நிகழ்ச்சி நிரல இதனை ‘அட்டார கச்சேரி' என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களால் இது கட்டப்பட, க்ரேக்க - ரொமானிய கட்டிடக்கலை பாணியிலும் ஈடுபாட்டுடன் காணப்படுகிறது.

PC: flickr.com

 லால் பாஹ்:

லால் பாஹ்:

பெங்களூருவின் தெற்கில் காணப்படும் பிரசித்திப்பெற்ற தாவரவியல் தோட்டம் தான் லால்பாஹ். இங்கே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலரைக்கொண்டு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் தொகுக்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் 1000 வகையான மலர்கள் காணப்படுகிறது. கப்பன் பூங்காவானது 300 ஏக்கர் இடத்தைக்கொண்டிருக்க, தாவரங்களும், மலர்களும் எண்ணற்ற அளவில் காணப்படுகிறது. இங்கே குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகளும் காணப்படுகிறது. இந்த பூங்காவில், ஷெஷாத்ரி ஐயர் நினைவக நூலகமும் காணப்படுகிறது.

PC: Prasanth M J

 விடுதலை பூங்கா:

விடுதலை பூங்கா:

மத்திய சிறைச்சாலை முன்பிருந்த இடமாக விடுதலை பூங்கா காணப்படுகிறது. தற்போது, இவ்விடம் பூங்காவாக மாற்றப்பட்டு விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் சிற்பங்களை கொண்டிருக்கிறது. இந்த பூங்காவின் ஒரு அங்கத்தை போராட்டம் மற்றும் கண்காட்சிகளுக்கு பயன்படுத்தவும்படுகிறது.

PC: nanuseena

பெங்களூரு அரண்மனை:

பெங்களூரு அரண்மனை:

டூடர் பாணியில் காணப்படும் விரும்பத்தக் கட்டிடக்கலைகளை கொண்டிருக்கிறது பெங்களூரு அரண்மனை. மேலும் இவ்விடமானது மைசூரு மகாராஜாவினால் 1878ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இந்த அரண்மனையானது காட்சிகள், திருமணங்கள், கண்காட்சிகள் ஆகியவை கொண்டு திறக்கப்பட்டிருக்கிறது.

PC: Masaru Kamikura

 பென்னர்கட்டா தேசிய பூங்கா:

பென்னர்கட்டா தேசிய பூங்கா:

1970ஆம் ஆண்டு பென்னர்கட்டா தேசிய பூங்கா நிறுவப்பட்டது. விலங்கியல் பூங்காவான இவ்விடம், பட்டாம் பூச்சி பார்வை, மீன் வாழ் இடங்கள், பாம்பு வீடு, பெட் கார்னர் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது. இங்கே வன சவாரி வசதிகளும் காணப்படுகிறது.

PC: Karunakar Rayker

ISKCON ஆலயம்:

ISKCON ஆலயம்:

உலகிலேயே மாபெரும் ISKCON ஆலயங்களை கொண்டிருக்கும் இடங்களுள் பெங்களூருவின் ISKCON ஆலயமும் ஒன்றாகும். கிருஷ்ண பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், ஹரே கிருஷ்ண மலையில் காணப்படுகிறது. இவ்வாலயம், 1997ஆம் ஆண்டு மது பண்டிட் தாசாவால் கட்டப்பட்டது.

PC: Shiva Shenoy

ராமநகரா:

ராமநகரா:

பெங்களூருவிலிருந்து அதிகாலையில் நீங்கள் புறப்படுவதால் தேவையற்ற கூட்ட நெரிசலை உங்களால் தவிர்க்க முடிகிறது. பெங்களூருவிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராமநகராவை நீங்கள் அடையவேண்டும். இவ்விடத்தை நீங்கள் அடைய 1 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகிறது. பாலிவுட்டில் பட்டையை கிளப்பிய புகழ்பெற்ற ஷோலே திரைப்படமானது இங்கே தான் பதிவுசெய்யப்பட்டதாம். ஆம், மேலே காணப்படும் ராமதேவர பேட்டாவில் தான் கப்பர் சிங்க் தங்கியிருப்பதாக காட்சிகளானது வடிவமைக்கப்பட்டது. இந்த பேட்ட மலைமீது நீங்கள் ஏற, இந்த மலையின் உச்சியில் காணப்படும் கடவுளையும் வணங்குகிறீர்கள்.

PC: Navaneeth KN

சன்னப்பட்னா:

சன்னப்பட்னா:


ராமநகராவிலிருந்து 30 நிமிடத்தொலைவில் சன்னப்பட்னாவானது அடுத்ததாக காணப்படுகிறது. இவ்விடமானது 15 கிலோமீட்டர் வெளியில் காணப்படுகிறது. மரப்பொம்மைகளுக்கு பெயர்பெற்ற இடம் தான் சன்னப்பட்னா. இந்த சன்னப்பட்னா தெருக்கள் முழுவதும் வண்ணமயமான மரப்பொம்மைகள் காணப்படுகிறது. இதனை ‘கொம்பேகலா நகரா (பொம்மைகள் நகரம்) என்றும் அழைக்கப்படுகிறது. மரப்பொம்மை உருவாக்கும் கலையை திப்பு சுல்தான் ஊக்குவிக்க, இந்தியாவிற்கு பெர்சியர்களையும் வரவழைத்த அவர், உள்ளூர் கைவினைஞர்களின் திறனையும் கற்றுக்கொடுக்க வைத்தார்.

இந்த பொம்மைகள் ஐவரி மரம் மற்றும் காய்கறிகள் சாயம் கொண்டு தயாரிக்கப்பட, குழந்தைகளின் பற்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது. சன்னப்பட்னா பொம்மைகளானது, பொம்மைகளால் மட்டும் சூழாமல், கனித புதிர்கள், மற்றும் கேமையும் கொண்டிருக்கிறது. சன்னப்பட்னாவின் வரதராஜ ஆலயமானது அழகாக காணப்படுவதோடு, விஜய நகர பேரரசின் கட்டிடக்கலையையும் கொண்டிருக்கிறது.

PC: Hari Prasad Nadig

இலக்கு – மத்தூர்:

இலக்கு – மத்தூர்:

சன்னப்பட்னாவிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் மத்தூர் காணப்படுகிறது. சன்னப்பட்னாவிலிருந்து புறப்படும் நாம், 30 நிமிடங்களில் இவ்விடத்தை அடையலாம். மத்தூரில் மிகவும் பிரசித்திப்பெற்ற மத்தூர் வடை கிடைக்க, அது நம் மனதை ருசியால் மூழ்கடிக்கவும் செய்கிறது. இந்த சுவைமிக்க, உடையும் தன்மைக்கொண்ட மத்தூர் வடை, மெதுவான தன்மைக்கொண்டிட, மத்தூரில் வரிசையாக நிற்கும் இரயில்களில் விற்கவும்படுகிறது.

இருப்பினும், கஃபே சிற்றுண்டிகளுக்கு நீ..! நான்..! என அனைவரும் போட்டிப்போட்டுக்கொள்ள, மத்தூரிலே அனைத்தும் விற்று தீர்ந்துவிடுகிறது. இது அரிசி மாவு, ரவை, அனைத்துவிதமான மாவு, வெங்காயம், கறி இலைகள், தேங்காய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றினாலும் தயாரிக்கப்படுகிறது. இந்த மூலப்பொருட்கள் கலந்து, தட்டையாக தட்டி, நன்றாக வறுக்கவும் வேண்டும்.

மத்தூர் மிகவும் பிடித்தமான இலக்காகவும், நீண்ட பயணத்திற்கும், பெங்களூருவிலிருந்து ஜாலியான விடலை பருவ பைக் பயணத்திற்கும் ஏற்றதாக அமைகிறது. எந்த நேரத்திலும் நம்மால் இங்கே வர முடிய, நண்பர்களுடனும், குடும்பத்துடனும், இருபத்து நான்கு மணி நேர காபியையும் சுவைத்திடலாம். இந்த சிறிய நகரத்தில் அதீதமாக பார்ப்பதற்கு காணவில்லையென்றாலும், மத்தூரை சுற்றி நம்மால் இங்கே பலவற்றையும் பார்க்க முடிகிறது.

PC: Charles Haynes

 செளுவநாராயண சுவாமி ஆலயம்:

செளுவநாராயண சுவாமி ஆலயம்:

செளுவநாராயணனுக்கு இந்த ஆலயமானது அர்ப்பணிக்கப்பட, விஷ்ணு பெருமானின் தோற்றம் கொண்ட இந்த சிலையை ‘திருநாராயணா' என்றும் அழைக்கப்படுகிறது. மத்தூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மெல்கொட்டேவில் இவ்விடமானது காணப்படுகிறது. இந்த ஆலயமானது மைசூரு மகாராஜாவின் சிறப்பு சலுகைகளை கொண்டிருக்கிறது. இங்கே மூன்று மகுடங்கள் காணப்பட, அவை ராஜமுடி, கிருஷ்ணராஜ முடி மற்றும் வைரமுடி எனவும் அழைக்கப்பட - மைசூரு ராஜாவின் ஆலயத்தையும் கொண்டிருக்கிறது. வைரமுடி எனப்படுவது வருடாந்திர விழாவாக அமைய, இங்கே நம்மால் 4 இலட்சத்திற்கும் மேலே கூட்டத்தை காணமுடிகிறது.

PC: Prathyush Thomas

சௌமிய கேஷவா ஆலயம்:

சௌமிய கேஷவா ஆலயம்:


மத்தூரிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் காணப்பட, மத்தூரை நாம் அடைய ஒன்னே கால் மணி நேரமானது தேவைப்படுகிறது. விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், இப்பகுதியில் காணப்படும் முக்கியமான ஆலயமும் கூட. கலை வரலாற்று ஆர்வலர்களின் கூற்றுபடி, முலப்ரசாதா நட்சத்திரவடிவம் கொண்டிருக்க, இது அதன் நேரத்தைக்காட்டிலும் அதிகமாக இருக்கிறது

ககனசுக்கி மற்றும் பரச்சுக்கி வீழ்ச்சி:

ககனசுக்கி மற்றும் பரச்சுக்கி வீழ்ச்சி:


காவேரி நதியால் உருவாகும் இவ்விடம், 75 மீட்டர் அழகாக ஓடிவந்து நம் மனதை தூக்கி செல்கிறது. இதனை ‘சிவானசமுத்ர நீர்வீழ்ச்சி' எனவும் அழைக்கப்படுகிறது. மத்தூரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் காணப்படுகிறது. இந்த இரண்டு வீழ்ச்சியும் கண்கொள்ளா காட்சியால் பார்ப்பவர்களை வெகுவாக கவர. உலகிலே காணப்படும் 100 சிறந்த வீழ்ச்சிகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.

PC: wikimedia.org

டரியா தௌலத் பாஹ்:

டரியா தௌலத் பாஹ்:

இவ்விடம் தான் திப்பு சுல்தானின் கோடைக்காலத்து வாசஸ்தலமாகும். இவ்விடத்தின் அற்புதமான கட்டிடக்கலையும், அக்காலத்து அதிசயிக்கவைக்கும் கலை வடிவத்தையும் கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற பெரிய புல்வெளி காணப்படுகிறது. இருப்பினும், இந்த அரண்மனை உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.

PC: Ahmad Faiz Mustafa

பீமேஷ்வரி கூடாரம்:

பீமேஷ்வரி கூடாரம்:

மாண்டியா மாவட்டத்தில் காணப்படும் பீமேஷ்வரி கூடாரம், இயற்கை மற்றும் சாகச ஆர்வலர்களுக்கான சொர்க்கமாக விளங்குகிறது. இங்கே காணப்படும் சில சாகச செயல்களாக கயாகிங்க், படகு சவாரி, ஷிப்லைனிங்க், கயிறுப்பிடித்து நடக்கும் பயணம் என பலவும் காணப்படுகிறது. இந்த காடுகள் சிறந்த வனவிலங்கு வாழ்க்கையையும், விலங்குகள் நிறைந்தும், ஊர்வனைவைகளுமென, 200 பறவையினங்களையும் கொண்டிருக்கிறது.

PC: Jagadish Katkar

கொக்ரேபெள்ளூர் பறவைகள் சரணாலயம்:

கொக்ரேபெள்ளூர் பறவைகள் சரணாலயம்:

பறவை ஆர்வலர்களுக்கான சொர்க்கம் தான் இந்த கொக்ரேபெள்ளூர் பறவைகள் சரணாலயம். இவ்விடத்தை காண சிறந்த நேரமாக டிசம்பர் மற்றும் மார்ச் காணப்பட, பறவைகள் கூடுக்கட்டுவதற்கான காலமாகவும் இது அமைகிறது. இங்கே 500 வகையான வாழிட மற்றும் இடம்பெயர்ந்து வரும் பறவைகளையும் நம்மால் பார்க்கமுடிகிறது.

PC: flickr.com

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more