» »பெங்களூருல ராணுவ ஹோட்டலுக்கு ஒரு தடவையாவது போயிருக்கீங்களா? அங்க அப்படி என்ன தாங்க இருக்கு?

பெங்களூருல ராணுவ ஹோட்டலுக்கு ஒரு தடவையாவது போயிருக்கீங்களா? அங்க அப்படி என்ன தாங்க இருக்கு?

By: Balakarthik Balasubramanian

சிறு வயதிலிருந்தே நான் பார்த்து மனதில் கேட்டுகொள்ளும் ஒரு வார்த்தை தான் 'இராணுவ ஹோட்டல்' நகரங்களில் நான் கண்ட இந்த பலகை என் மனதில் பல கேள்விகளை உண்டாக்கியது. அந்த வார்த்தை மீது எனக்கிருந்த ஈடுபாடு, நான் வளர்ந்த பின், என் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகளையும் அதற்கான பதிலையும் பிம்பமாய் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. இருப்பினும், இந்த ஹோட்டல் பலகைக்கும் இந்திய இராணுவத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆனால், இந்த வார்த்தைக்கும் மராட்டிய இராணுவத்துக்கும் தொடர்பு இருப்பதையும் நான் தெரிந்துகொண்டேன்.

பெங்களூருல ராணுவ ஹோட்டலுக்கு ஒரு தடவையாவது போயிருக்கீங்களா? அங்க அப்படி என்ன தாங்க இருக்கு?

PC: Pranav

ஆதாரங்களின் கூற்றுபடி, மராட்டிய ஆட்சியாளரான ஷாஜி போன்ஸ்லே 1638ஆம் ஆண்டு பெங்களூருவை கைப்பற்றினார். அவர்களுள் சிலர் அங்கே ஒரு ஹோட்டலை திறந்தனர் என்றும் அவர்கள் இராணுவ வீரர்கள் என்பதும் நமக்கு தெரிய வருகிறது. இத்தகைய காரணத்தினாலே இதனை 'இராணுவ ஹோட்டல்' என்று அனைவரும் அழைக்கின்றனர். மேலும், இந்த ஹோட்டலில் ஒரு பிரிவை பெங்களூரு சிப்பாய் வீரர்களுக்கு உணவளிக்கவும் வகுக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள், இந்தியர்கள் என அனைவரும் அதனை பயன்படுத்த இத்தகைய காரணத்தாலே இப்பெயர் இந்த ஹோட்டலுக்கு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

நான் என் மனதை குழப்பத்துடன் கொண்டு மெஜெஸ்டிக் பகுதியின் கூட்ட நெரிசலில் நின்றுகொண்டிருக்க, அதன்பின் நீல வண்ணத்தால் தீட்டப்பட்ட மரக் கதவினை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். அதன்பிறகு, நொடிபொழுதில் நான் திரும்ப, புகைக்கரியால் சுவற்றின் கற்கள் அலங்கரிக்கப்பட்டிருக்க அந்த சிவப்பு ஆக்சைடு தரை கொண்ட வீட்டுக்குள் நான் சென்றேன். என்னுடைய பாட்டி வீட்டிற்கு வந்ததோர் உணர்வினை அவ்விடம் எனக்கு தர, நான் உண்மையிலே இப்பொழுது இருப்பது எஸ். கோவிந்தராவோ இராணுவ ஹோட்டலின் உள்ளே என்பதனை என் மனம் எனக்கு அவ்வப்போது நினைவு படுத்தியது.

பெங்களூருல ராணுவ ஹோட்டலுக்கு ஒரு தடவையாவது போயிருக்கீங்களா? அங்க அப்படி என்ன தாங்க இருக்கு?

PC: Pranav

இன்றைக்கு என்னவெல்லாம் இருக்கிறது என்பதை அங்கே இருப்பவர்கள் அட்டவணையாய் தயார் செய்து முன்னே வைத்திருக்க, நான் என்னுடைய பூ போன்ற கரங்களை கொண்டு பஞ்சுபோன்ற இட்லியில் வைத்தேன். பின் இட்லியின் ஒரு துண்டை எடுத்து சுடசுட எனக்கு தரப்பட்ட கீமா கறியை தொட்டு நாவில் வைத்து ருசித்தேன். அந்த உறுதியான இறைச்சி உருண்டைகள் என் கைகளில் மறைக்கப்பட்டிருக்க அதனுடன் போராடி கடித்துகொண்டிருந்தேன். அதனை சுவைத்த என் நாக்கு மெய்மறந்து பார்க்க, என் முன்னே தட்டில் வைக்கப்பட்ட இலையானது வெற்றிடமாக அதனை நிரப்ப ஆசைகொண்ட என் மனதின் சொற்களை புரிந்துகொண்டு ஒருவர் இலையில் மட்டன் பிரியாணியை பரிமாறினார்.

இந்த ஹோட்டலின் குடும்ப முத்திரையாக குறைவான உணவே பட்டியலில் இடம்பெற அதற்கு ஏற்ற உண்ணுமிடங்களும் காணப்படுகிறது, அவை அனைத்தும் நெருக்கமான பாதுகாக்கப்பட்ட உணவாகவே இருக்கிறது. இந்த உண்ணுமிடங்கள் பொதுவாக நகரங்களின் பாதைகளில் காணப்பட, அதுவும் கலாசிப்பாளையா, மெஜெஸ்டிக், பீட்டே பகுதி, மல்லேஷ்வரம் ஆகிய முக்கிய இடங்களிலே காணப்படுகிறது.

பிஸியான நகர சந்தைகளின் இதய துடிப்பான கே.ஆர் சந்தையில் என் வி. நாயுடு இராணுவ ஹோட்டல் காணப்படுகிறது. ஒரு சிறு வழியில் நாம் செல்ல, பரந்த தாழ்வாரம் ஒன்று தென்படுகிறது. அந்த தாழ்வாரத்தில் கற்களால் ஆன டேபிள்களும், நாற்காலிகளும் கிடந்தது. இங்கே மிகவும் ஸ்பெஷலான பெப்பர் சிக்கன் ப்ரை கிடைக்க, அதற்கு சிறந்த உணவாக சுட சுட மட்டன் புலாவ் கிடைத்தது. அதில் கறியானது எழும்பு துண்டை பிய்த்துகொண்டு நிற்க, இரண்டு விரல்களை கொண்டுதான் எடுக்க முடியும்.

பெங்களூருல ராணுவ ஹோட்டலுக்கு ஒரு தடவையாவது போயிருக்கீங்களா? அங்க அப்படி என்ன தாங்க இருக்கு?


PC: Pranav

அந்த சுவையான உணவை நான் ருசித்து முடிக்க, முழுச்சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்த உணவானது அனைத்து சமூகத்துக்கும் ஏற்றார் போல் இராணுவ ஹோட்டல்களில் தரப்படும் ஒன்றாகும். இவை இப்படி இருப்பினும், பெங்களூருவின் சமையல் வரலாற்றை நாம் கண்டுபிடிப்பது என்பது அரிதானதோர் காரியமாகும். இதோடு எதேனும் சேர்ப்பினும், அதுவும் உண்மை வரலாற்றை அற்று ஒருபோதும் வரலாறு ஆகாது.

ஷாஜி போன்ஸ்லே மற்றும் அவருடைய வாரிசான சிவாஜியின் இறைச்சி உணவு படை மூலமாக பதினேழாம் நூற்றாண்டில் இந்த இராணுவ ஹோட்டலுக்கான தோற்றம் தரப்பட்டதாக சிலரின் மூலம் நமக்கு தெரியவருகிறது.

மற்றுமோர் புராண கதைபடி, புபனிக் பிளேக் 1800 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெங்களூருவை தாக்க, பெண்களும், குழந்தைகளும் தொலைதூர கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அப்பொழுது இராணுவ ஹோட்டல்கள் தொடங்கி ஊட்டச்சத்தினை விவசாயிகளுக்கு வழங்கியதாகவும்...அதனால் அவ்விவசாயிகள் அவரவர் வயல்களை தக்கவைத்து கொண்டதாகவும் தெரிய வருகிறது.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர்களது அடித்தளத்தைக் குறிக்கும் மற்றொரு கதையாக திப்பு சுல்தானின் போரிடும் படைகளுக்காகவும், அதன்பின்னர் ஆங்கிலேயர்களுக்காகவும் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. பழைய பெங்களூரு அல்லது கண்டோன்மென்ட் பகுதி, கறிவகைகளை ஒருபோதும் பரிமாறுவதில்லை என்றும்...இராணுவ ஹோட்டல்கள் மட்டுமே அதனை பரிமாறியதாகவும் சொல்லப்படுகிறது.

பெங்களூருல ராணுவ ஹோட்டலுக்கு ஒரு தடவையாவது போயிருக்கீங்களா? அங்க அப்படி என்ன தாங்க இருக்கு?

PC: Pranav

இந்த ஹோட்டலின் தொடக்கத்தில் இந்து மக்களுக்கான அடையாளங்கள் காணப்பட, அவர்கள் தொடக்கத்தில் மாட்டிறைச்சி, மற்றும் பன்றி இறைச்சியை பரிமாறுவது கிடையாது என்பது தெரிகிறது. பெரும்பாலான இராணுவ ஹோட்டல்களில் நாட்டு மதுபானம், பட்டியலில் இடம்பெறுகிறது. அதன்பின்னர் சாப்பாட்டின் நிரப்புதல் கட்டுபாட்டிற்கு வர, மதுபானங்களுக்கும் 'நோ' சொல்லப்பட்டது.

காலங்கள் கடக்க தொடங்க, ஹோட்டலுக்கான நம்பகத்தன்மை அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றும் இந்திரா நகரிலுள்ள கௌத்ரூவுக்கும், மல்லேஷ்வரத்திலுள்ள சந்துவுக்கும், என பல இடங்களுக்கு இதன் ஆதரவாளர்கள் நிறைய பேர் வந்துகொண்டு தான் இருக்கின்றனர்.

ரங்கண்ணா இராணுவ ஹோட்டலானது ஜெயா நகரில் உள்ள வணிக வளாகமான புதிய தள கடைக்கு இடம்பெயர்ந்து புதைந்த வளிமண்டலத்தில் காணப்படுகிறது. இந்த உணவகத்தில் தலைக்கறி அல்லது தலை மாமிசம் தரப்படுகிறது, மேலும் பாயா எனப்படும் தட்டான் சூப்பும், கைமா உருண்டை ப்ரையும் தரப்படுகிறது.

மதிப்பிற்குரிய சிவாஜி இராணுவ ஹோட்டலில் நறுமணமிக்க ஆட்டிறைச்சி திட்டாக காணப்படும் 'தொன்னே' எனப்படும் புலாவும் தரப்பட, இங்கே வருபவர்கள் அதனை சுவைக்க ஆசைகொண்டு அது தட்டில் எடுத்துவரப்படும் நேரம் பார்த்து உற்று நோக்கியபடியே இருக்கின்றனர். அதனை அவர்கள் எடுத்து வரும்வரை நிமிர்ந்து உட்காரமுடியாமல் நான் தவிக்க, அந்த கணம் அதனை சுவைத்து என் மனதை முழு திருப்தியுடன் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவெடுத்தேன்.

Read more about: travel, bangalore