Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரின் மிக அருகிலுள்ள புகழ்பெற்ற மேல்கோட்டையைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக!!

பெங்களூரின் மிக அருகிலுள்ள புகழ்பெற்ற மேல்கோட்டையைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக!!

By Balakarthik

பல்வேறு இடங்களை சார்ந்த மக்களும், பல்வேறு கலாச்சாரம், பல்வேறு மதமென வகைப்படுத்தப்பட்டு நல்லிணக்கத்துடன் இணைந்து வாழும் ஒரு நகரம் தான் பெங்களூரு. மெட்ரோ நகரமான பெங்களூருவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமும் காணப்படுகிறது. மலர்ச்சியடையும் ஐ.டி கம்பேனிகளும், மற்ற தொழிற்சாலைகளுமென இந்த மாறுதல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வார நாட்கள் வேலையால் சூழப்பட்டு அதற்கான கெடுவும் உங்கள் கழுத்தை நெறிக்க, வார விடுமுறையை எப்படி உங்களால் சிறந்த நிலையில் செலவிடமுடியாமல் செல்லக்கூடும்?

பெங்களூருவின் அருகாமையில் பல இடங்களானது காணப்பட, அவ்விடங்களை வாரவிடுமுறையில் நீங்கள் சென்றும் பார்த்திடலாம். இந்த நகரத்தின் இடங்கள் யாவும் பிரசித்திப்பெற்று ஆராய்ந்திடாத சுற்றுலா இலக்காகவும் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சரான ஜெயலலிதா பிறந்த இடமான மேல்க்கோட்டே, வாரவிடுமுறைக்கு ஏற்ற சிறந்த இடங்களுள் ஒன்றாக காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து மெல்கோட்டேவிற்கு சாலை பயணம் செல்லலாமே வாருங்கள்.

வழி

வழி


பெங்களூருவிலிருந்து மேல்கோட்டேவிற்கு இரண்டு புகழ்பெற்ற வழிகளானது காணப்படுகிறது.

வழி 1: பெங்களூரு - யாடியூர் - மேல்க்கோட்டே (148 கிலோமீட்டர்)

இந்த வழியானது மேல்க்கோட்டேவிற்கு தேசிய நெடுஞ்சாலை 75 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 150A வழியாக அழைத்து செல்லும்.

வழி 2: பெங்களூரு - ராமநகரா - மத்தூரு - மாண்டியா - மேல்க்கோட்டே (159 கிலோமீட்டர்)

இந்த வழியானது தேசிய நெடுஞ்சாலை 275 செல்ல, சில அழகிய இடங்களையும் இந்த வழியில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வழியை தேர்ந்தெடுத்து நாம் பெங்களூருவிலிருந்து மெலுக்கோட்டிக்கும் செல்லலாம் வாருங்கள்.

இந்த பயணத்தில் 160 கிலோமீட்டர் நீங்கள் செல்ல, சில இடங்களில் நிறுத்தியும் புத்துணர்ச்சியை புதுப்பித்துக்கொண்டு புறப்படக்கூடும் என்பதால், அதிகாலையில் நீங்கள் புறப்படுவது நல்லதாக அமைய, அவசரமின்றி அனைத்து இடங்களையும் நம்மால் பொறுமையாக பார்ப்பதற்கான கால அவகாசமும் நமக்காக கிடைத்திடக்கூடும்.

அதிகாலையில் உங்கள் பயணமானது தொடங்க, நீங்கள் காலை உணவை காமட் பலாட் கோர்னர் அல்லது குட்லா உணவகத்தில் நிறுத்தி உண்ண, இங்கே சில ஆடம்பரமான தென்னிந்திய உணவானது உங்களுக்கு கிடைத்திடக்கூடும். மற்ற உணவகங்களாக ஸ்பைஸ் இட், ஸ்ரீவாரி சைவ பாஸ்ட் புட், மற்றும் KBR பாஸ்ட் புட் உணவகங்களும் காணப்படுகிறது.

ராமநகர்

ராமநகர்

காலை உணவை முடித்தபின், அடுத்த நிறுத்தமாக ராமநகரானது காணப்பட, நகரத்திலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடமானது காணப்படுகிறது. இவ்விடமானது சூப்பர் ஹிட் பாலிவுட் திரைப்படமான ஷோலைக்கு புகழ்பெற்று விளங்குகிறது. இந்த இலக்கானது உங்கள் பயணத்துக்கு ஏதுவாக அமைய, இந்த பகுதிகளின் காட்சிகளை ரசிக்கும் நீங்கள், புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு, அடுத்த இடமான மத்தூருவை அடைகின்றீர்.

ராம நகராவிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் மத்தூரு காணப்படுகிறது. இவ்விடம், வரலாற்றை தாங்கிக்கொண்டு நிற்க, மகாபாரதக்காலத்து வரலாற்றின் பெருமையையும் இதன் மூலம் நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது. இதன் புராணமானது துவாபரா யுகத்துடன் முடிவடைய, பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனர் நரசிம்ம அவதாரம் கொண்ட கிருஷ்ண பெருமானை காண ஆசைக்கொண்டதாகவும் தெரியவருகிறது. இருப்பினும், கிருஷ்ணப்பெருமான் அவரை காண மறுக்க, பிரம்ம தேவனால் ஒரு சிலையானது உருவாக்கப்பட்டு அதனை அர்ஜூனர் வணங்கியதாகவும் தெரியவருகிறது.

மத்தூருவில் காணப்படும் உக்கிர நரசிம்ம ஆலயத்தில் உக்கிர நரசிம்ம சிலையானது காணப்பட, அதனை பக்தர்கள் வணங்குகின்றனர். இந்த ஆலயத்தின் தரிசனத்தை முடித்தப்பின்னர், உங்களுடைய அடுத்த இலக்காக மாண்டியாவானது மத்தூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. மாண்டியாவை ‘சக்கர நாடு' என அழைக்க இங்கே சர்க்கரை ஆலைகளும் காணப்படுகிறது. மாண்டியாவில் காணப்படும் இரண்டு முக்கியமான ஆலயங்களாக ஸ்ரீ வரதராஜ சுவாமி ஆலயமும், ஸ்ரீ பட்டபிராம ஆலயமும் காணப்படுகிறது.

மாண்டியாவிலிருந்து நீங்கள் தேசிய நெடுஞ்சாலை 150A வழியாக பயணம் செய்ய, இங்கிருந்து மேல்கோட்டேவிற்கு 53 கிலோமீட்டர்கள் ஆகிறது. சில அபூர்வ சுற்றுலா ஈர்ப்புகளை மேல்கோட்டே கொண்டிருக்க, நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு இடமாக இது அமைகிறது. இங்கே நாம் பார்க்க வேண்டிய இடங்கள்...

 யோகா நரசிம்மா சுவாமி ஆலயம்:

யோகா நரசிம்மா சுவாமி ஆலயம்:


யாதுகிரி மலை உச்சியில் காணப்படுகிறது யோகா நரசிம்ம சுவாமி ஆலயம். ஹொய்சலா ஆட்சியின்போது கட்டப்பட, இந்த ஆலயத்தின் கோபுரமானது தூரத்தில் தெரிகிறது. இந்த ஆலயமானது யோக நரசிம்மப்பிரபுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்பட, பிரகலாதாவால் இந்த சிலையானது நிறுவப்பட்டதாக நம்பப்பட, இவர் தான் ஹிரன்யகசாபுவின் மகன் என்பதும் தெரியவருகிறது. இந்த ஆலயம், ஏழு முக்கிய நரசிம்ம ஆலயங்களுள் ஒன்றாகவும் காணப்படுகிறது.

PC: Philanthropist 1

 செளுவநாராயண ஆலயம்:

செளுவநாராயண ஆலயம்:

இந்த ஆலயத்தை யாதுகிரி மலை என்றும் அழைக்கப்படுகிறது. பழங்காலத்திலிருந்து இந்த ஆலயமானது நம்பப்பட, இந்த ஆலயமானது விஷ்ணுபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. ஸ்ரீ வைஷ்ணவ குலத்தை சேர்ந்த முக்கியமான யாத்ரீகத்தளங்களுள் ஒன்றாக இந்த செளுவநாராயண ஆலயமானது காணப்படுகிறது. இவ்விடமானது ராமர், தன் மகனான குஷனுடன் வந்து நாராயணரை வணங்கிய ஆலயமாகவும் நம்பப்படுகிறது. இங்கே சம்பத் குமராந்த் என்ப்படும் சிலை காணப்பட, இதனை ராமப்பிரியா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேவியை வணங்கிட அதனை யாதுகிரி நாச்சியார் எனவும் அழைக்கப்படுகிறது.

PC: Philanthropist 1

ராய கோபுரம்:

வரலாற்றின் மீது ஆர்வம் செலுத்தம் ஆர்வலர்களின் ஈர்ப்புகளுள் ஒன்றாக ராய கோபுரமானது காணப்படுகிறது. இது முழுமையற்ற அமைப்பை கொண்டு கட்டப்பட்டு காணப்பட, விஜய நகர பேரரசின் ஆட்சியில் இது கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஓர் இரவில் கட்டப்பட்டதாக நம்பப்பட, இந்த ஆலயமானது நான்கு சிக்கலான சிற்பங்களை கொண்டு, எத்தகைய ஆலய கோபுரமற்று காட்சியளிக்கிறது. இவ்விடமானது பல தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பதிவு செய்யப்பட்ட பிரசித்திப்பெற்ற இடமாகவும் விளங்குகிறது.

 தொண்டனூர் ஏரி:

தொண்டனூர் ஏரி:

இங்கே வாழ்ந்த சுவாமி ராமானுஜரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது தொண்டனூர் ஏரி. இந்த ஏரியானது பத்மகிரி சிறுகுன்றை சூழ்ந்திருக்க, திப்பு குகைகள், நீர்வீழ்ச்சியையும் கொண்டிருக்க அதன்பெயர் ராமானுஜ கங்கை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரியானது மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதாகவும் தெரியவருகிறது. அத்துடன் சுவாரஸ்யமான விஷயமாக, இந்த ஏரியை திப்பு சுல்தான் பார்க்க வர, இந்த ஏரியின் நீரானது தூய்மையுடன் காணப்படுவதை உணர்ந்து ‘மோத்தி தலாப்' எனவும் அழைக்க, அப்படி என்றால்... பாரிசின் ஏரி எனவும் பொருள் தருகிறது.

வனபிரஷ்த ஆசிரமம்:

2010ஆம் ஆண்டு ISKONஆல் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டுள்ளது. இவ்விடமானது போதனை கூடமாக காணப்பட, பழங்காலத்து வேதங்களும் இங்கே போதிக்கப்படுகிறது.

மேல்கோட்டேவின் சுற்று வெளிப்புறங்களில் காணப்படும் தங்கக்கூடிய இடங்கள்:

மேல்கோட்டேவில் நீங்கள் இரவில் தங்க திட்டமிட்டிருந்தால், மண்டயம் ஸ்ரீ வைஷ்ணவ சபை எனப்படும் யாத்ரீக தளத்தில் சிறந்த தங்கும் வசதிகளுடன் தங்கிடலாம். ஹோட்டல் மற்றும் ஓய்வு விடுதிகளில் சிறந்த வசதிகள் காணப்பட, மைசூரு சாலையை நீங்கள் அடைவதன் மூலம் பார்த்திடலாம். இங்கே காணப்படும் சில சிறந்த தேர்வுகளாக அம்பீலீ விடுமுறை ஓய்வுவிடுதி, ஹோட்டல் லீ ருச்சி, தீ பிரின்ஸ், மற்றும் ஹோட்டல் மயூரா ரிவர் வீயூவும் காணப்படுகிறது.

PC: sai sreekanth mulagaleti

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more