Search
  • Follow NativePlanet
Share
» »கும்கி படத்துல வந்த நீர் வீழ்ச்சி இந்த ஊர்ப்பக்கத்துலதான் இருக்கு!! இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள்!

கும்கி படத்துல வந்த நீர் வீழ்ச்சி இந்த ஊர்ப்பக்கத்துலதான் இருக்கு!! இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள்!

கும்கி படத்துல வந்த நீர் வீழ்ச்சி இந்த ஊர்ப்பக்கத்துலதான் இருக்கு!! இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள்!!

By Bala Karthik

பெங்களூருவிலிருந்து 360 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கர்நாடகாவின் நகரம் தான் சாகராவாகும். மாநிலத்தின் அன்பான ஜோக் நீர்வீழ்ச்சியை இதன் அருகாமையில் கொண்டிருக்க, அத்துடன் இணைந்து எண்ணற்ற இடங்களும் ஈர்ப்புடன் காணப்படுகிறது. சாகரா என்னும் பெயரானது சதாசிவ சாகராவால் பெயர்பெற்று காணப்பட, இந்த நகரத்து ஏரியாகவும் அமையக்கூடும். இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியானது கேளடி மற்றும் இக்கேரிக்கு இடையில் கட்டப்பட, கேளடி வம்சத்தின் சதாசிவ நாயக்கராலும் எனவும் தெரியவருகிறது. இந்த ஏரியை இன்று கணபதி ஏரி எனவும் நாம் அழைக்கிறோம்.

பல எண்ணற்ற குடிகர் குடும்பத்திற்கு வீடாக சாகரா விளங்குகிறது. இந்த குடிகரானது மரபு ரீதியான அழகிய சந்தனக்கட்டைகளையும், தந்தத்தினால் ஆன கலைப்பொருட்களையும் கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்த நகரத்தின் வறுமானமாக வெற்றிலைப்பாக்கு அதிகளவில் காணப்படுகிறது.

சாகராவை காண சிறந்த நேரங்கள்:

சாகராவை காண சிறந்த நேரங்கள்:

அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்கள் சாகராவை காண சிறந்து விளங்குகிறது. கோடைக்காலமானது கடும் சூட்டுடன் காணப்பட, ஈரப்பதத்துடனும் காணப்பட, குளிர்காலமானது இவ்விடத்தை காண ஏதுவாக அமைய, வெப்ப நிலையானது குறைவானதாகவே காணப்படவும்கூடும்.

PC: Vmjmalali

பெங்களூருவிலிருந்து சாகராவிற்கு செல்லும் வழி:

பெங்களூருவிலிருந்து சாகராவிற்கு செல்லும் வழி:


வழி 1: CNR ராவோ கீழ்வழி/ CV ராமன் சாலை. - தேசிய நெடுஞ்சாலை 75 - T நரசிப்புரா - சிரா சாலை. - தேசிய நெடுஞ்சாலை 150A - பெடிஸ்வேஸ்ட் - திப்தூர் சாலை - துருவெக்கேரி சாலை - தேசிய நெடுஞ்சாலை 73 திப்தூரில் - தேசிய நெடுஞ்சாலை 69 - சாகரா (355 கிலோமீட்டர் - 7 மணி நேரம்)

வழி 2: CNR ராவோ கீழ்வழி - CV ராமன் சாலை - தேசிய நெடுஞ்சாலை 48 - மஹஜெனஹல்லி - வெளியே தேசிய நெடுஞ்சாலை 48 - மாநில நெடுஞ்சாலை 52 - தேசிய நெடுஞ்சாலை 69 அயனூரில் - சாகரா (401 கிலோமீட்டர் - 6 மணி நேரம் 30 நிமிடங்கள்)

சாகரா செல்லும் வழியில் காணப்படும் இடங்களைப்பற்றி மேலும் சில தகவல்

யெடியூர் சித்தலிங்கேஸ்வரா ஆலயம்:

யெடியூர் சித்தலிங்கேஸ்வரா ஆலயம்:

குனிகல் மாவட்டத்தின் யெடியூர் கிராமத்தில் காணப்படும், பழமையான லிங்காயத்துகள் ஆலயம் ஸ்ரீ சித்தலிங்கேஸ்வராவாகும். இங்கே சிவபெருமானால் மறுபிறவி எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. புகழ்பெற்ற துறவியின் கல்லறையானது பதினைந்தாம் நூற்றாண்டின் பெருமையை தாங்கிக்கொண்டு விளங்குகிறது.
வீரப்பத்திர சுவாமியின் சிறு ஆலயமானது இங்கே நிறுவப்பட்டு காணப்பட, ஆலயத்தின் அடிவாரத்திலும் இது காணப்படுகிறது.
இங்கிருந்து பல ஆலயங்கள் செல்லும் வழியில் காணப்பட, ஹொய்சலா வம்சத்தின் பாரம்பரியத்தின் பெருமையையும் தாங்கிக்கொண்டு நிற்கிறது.

PC: Akshatha Inamdar

துருவக்கேரி:

துருவக்கேரி:

பெங்களூருவிலிருந்து 124 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இடமான துருவக்கேரி, யெடியூர் கிராமத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. துருவக்கேரி இடமானது அக்ரஹாரம் நகரத்தில் (கற்றுக்கொள்வதற்கான இடம்) நிறுவப்பட்டது. இங்கே பல அழகிய ஆலயங்கள் ஹொய்சலா காலத்து கைவினைஞர்களால் காணப்படுகிறது. அவற்றுள் சிலவாக கங்காதரேஷ்வரா ஆலயம், பெட்டராயசுவாமி ஆலயம், சென்னிகராய ஆலயம், மூளி சங்கரேஷ்வரா ஆலயம் ஆகியவையும் காணப்படுகிறது.

மூன்றாம் நரசிம்ம அரசனால் இது பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மூளி சங்கரேஷ்வரா ஆலயம் மாபெரும் அமைப்புடன் காணப்படுகிறது. இவ்விடம் ஹொய்சலா கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

PC: Mayasandra

 அர்சிக்கேரி:

அர்சிக்கேரி:

துருவக்கேரியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அர்சிக்கேரி. இந்த அர்சிக்கேரி என்பதற்கு இலக்கிய ரீதியாக "ஏரிகளின் இராணி" என பொருள்தர, இந்த நகரத்தின் அருகாமையிலுள்ள ஹொய்சலா வம்சத்து இராணியால் இது கட்டப்பட்டிருக்கிறது. இந்த நகரமானது பல பிரசித்திப்பெற்ற ஆலயங்களை கொண்டிருக்க, அவற்றுள் ஈஸ்வரா ஆலயம் மற்றும் மலேகல் திருப்பதி ஆலயம் என இரண்டு மிக முக்கிய சுற்றுலா ஈர்ப்பானது காணப்படுகிறது.

சிவ பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டு ஈஸ்வரா ஆலயம் காணப்படுகிறது. இது மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட அமைப்புகளுள் ஒன்றாக ஹொய்சலா கட்டிடக்கலை மரபுடன் காணப்படுகிறது. இந்த ஆலயமானது பதினாறு புள்ளி நட்சத்திர வடிவத்துடன் மண்டபமாக அல்லது அரங்கமாக காணப்பட, அத்துடன் இணைந்து சமச்சீரற்ற நட்சத்திரவடிவ அரங்கமும் காணப்படுகிறது.

PC: Dineshkannambadi

 சிக்கா திருப்பதி:

சிக்கா திருப்பதி:


அர்சிக்கேரியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது சிக்கா திருப்பதி அல்லது மலேகல் திருப்பதி ஆலயம். விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்படும் இந்த ஆலயம் திராவிடக்கட்டிடக்கலை பாணியில் காணப்படுகிறது. இந்த ஆலயம் ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி வெங்கடேஷ்வரா ஆலயத்தை ஒத்து காணப்பட, அதனால் இதனை சிக்கா திருப்பதி (சிக்கா என்பதற்கு குறைவாக நுண்ணிய) என அழைக்கப்படுகிறது.

PC: Ssriram mt

 அம்ருதேஷ்வர ஆலயம்:

அம்ருதேஷ்வர ஆலயம்:

கர்நாடகாவின் சிக்மகளூரு மாவட்டத்தில் காணப்படும் அம்ருதபுரா கிராமம் அர்சிக்கேரியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இவ்விடம் அம்ருதேஷ்வர ஆலயத்தை கொண்டிருக்க, ஹொய்சாலா வம்சத்தின் மற்றுமோர் நினைவு சின்னமாக இது அமையக்கூடும் என்பதோடு, இரண்டாம் வீர பல்லாலாவிற்கு கீழே இது கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயமானது அற்புதமான சுவருடன் காணப்பட, கட்டிடக்கலையின் சிக்கல்களையும் இது கொண்டிருக்கிறது.

PC: Dineshkannambadi

பத்ராவதி:

பத்ராவதி:

இதனை முன்னர் ‘பெங்கிபுரா' (நகரத்தின் தீ என அழைக்க), பத்ரா நதியிலிருந்து இப்பெயரானது இவ்விடத்திற்கு கிடைக்க, நகரத்திலும் பாய்ந்தோடுகிறது. அம்ருதபுராவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் இது காணப்படுகிறது.

பத்ராவதியை சரம்சரமாக கோவில்கள் கொண்டிருக்க, அவற்றுள் லக்ஷ்மி நரசிம்மா ஆலயமும் புகழ்பெற்ற ஒன்றாக காணப்படுகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இது ஹொய்சலா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட, விஷ்ணு பெருமானுக்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பத்ராவதியிலிருந்து 98 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட, இது நம்மை பத்ரா வனவிலங்கு சரணாலயம் நோக்கியும் அழைத்து செல்கிறது.

PC: Dineshkannambadi

சிவமோகாவிலுள்ள சிவப்பா நயக்கா அரண்மனை:

சிவமோகாவிலுள்ள சிவப்பா நயக்கா அரண்மனை:

பத்ராவதியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் சிவப்பா நயக்கா அரண்மனை இரண்டு அடுக்கு கட்டிடமாக அமைய, புகழ்மிக்க அரசனான சிவப்பா நாயக்காவின் பெயருக்கு பிறகும் வைக்கப்பட்டு புகழ்பெற்று விளங்குகிறது. இவர் தான் கேளடி நாயக்கா வம்சத்தின் சிறந்த ஆட்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அரசரின் பெயருக்கு பின்னால், சில தொல்பொருள்துறை வல்லுனர்களால் பதினெட்டாம் நூற்றாண்டில் ஹைதர் அலியால் கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஹொய்சலா காலத்து எண்ணற்ற சிற்பங்களும், கற்களும், கல்வெட்டுகளும் அரண்மனையில் காணப்படுகிறது.

PC: Dineshkannambadi

 இறுதி இலக்கு – சாகரா.

இறுதி இலக்கு – சாகரா.


கேளடியின் ராமேஷ்வரா ஆலயம்:

சிவமோகாவிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கேளடி நாயக்காவின் வம்சத்து தலைநகரம் தான் கேளடியாகும். இந்த வரலாற்று நகரமானது கேளடி நாயக்கா பேரரசுக்கும் ராமேஷ்வர ஆலயத்துக்கும் பெயர்பெற்று விளங்குகிறது.

இந்த ராமேஷ்வர ஆலயமானது மூன்று சன்னதிகளை கொண்டிருக்க, அவை வீரபத்ரேஷ்வரா, ராமேஷ்வரா மற்றும் பார்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயமானது பதினாறாம் நூற்றாண்டில் திராவிடக்கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.

இக்கேரியின் அகோரேஷ்வர ஆலயம்:

இக்கேரியின் அகோரேஷ்வர ஆலயம்:

சாகராவிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நகரம் தான் இக்கேரி. இவ்விடமானது கேளடி நாயக்கா வம்சத்தின் பிந்தைய தலைநகரமாகும். இந்த இக்கேரி என்பதற்கு இலக்கிய ரீதியாக "இரு தெருக்கள்" என பொருள் தருகிறது. அத்துடன் இந்த நகரமானது கேளடி வம்சத்தின் பாரம்பரியத்தின் பெருமையையும் உணர்த்த, இந்த ஆட்சியின்போது அகோரேஷ்வர ஆலயமும் கட்டப்பட்டு காணப்படுகிறது.

சிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்படும் அகோரேஷ்வர ஆலயம், சோழனால் கட்டப்பட்டது. விஜயநகரா மற்றும் ஹொய்சலா கட்டிடக்கலை பாணியில் இது காணப்படுகிறது. இந்த அழகிய ஆலயமானது தூண்களிலும் சிற்பத்திலும் வடிவமைக்கப்பட்டு காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் தனித்தன்மையாக சிற்றின்ப சிற்பங்கள் காணப்பட, இதே விதமான சிற்பங்கள் மற்ற இடங்களில் வழக்கமாக காணப்படுவதுமில்லை.

PC: Dineshkannambadi

ஹொன்னேமர்துவில் கூடாரமுகாம்:

ஹொன்னேமர்துவில் கூடாரமுகாம்:

கிராமமான ஹொன்னேமர்து லிங்கனாமக்கி நீர்த்தேக்கத்தை கொண்டிருக்க, ஷாராவதி உப்பங்கழியிலிருந்து இது உருவாகிறது. ஒரு சிறு தீவானது நீர்த்தேக்கத்தின் நடுவில் காணப்பட, கூடாரமும் இங்கே அனுமதிக்கப்படுகிறது. பரிசல் சவாரிகள், கயாகிங்க், படகு வலித்தல் போட்டி ஆகியவையும் இங்கே காணப்படுகிறது.

இந்த நீர்த்தேக்கமானது அழகிய நீர் நிலையை கொண்டிருக்க, பசுமையான காடுகளும் சூழ்ந்திருப்பதால், தூய்மையான நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இது அமையக்கூடும். அதனால், கவனம் என்பது நமக்கு தேவைப்பட, கூடாரமிடலின்போது கரைப்படிந்த நிலையற்றும் காணப்படுகிறது இவ்விடம்.

PC: Lensman vishy

ஜோக் வீழ்ச்சி:

ஜோக் வீழ்ச்சி:

ஹொன்னேமார்துவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் புகழ்மிக்க இலக்காக இது அமைய, ஜோக் வீழ்ச்சியை, இந்தியாவின் இரண்டாவது சரிவு வீழ்ச்சி என அழைக்கப்பட, உலகிலேயே பதினோறாவது இடத்தில் காணப்படும் உயர்ந்த நீர்வீழ்ச்சியாகவும் இது அமையக்கூடும்!! இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீரின் அழகானது நம்மை வெகுவாக கவர, அற்புதமான காட்சியையும் அது நமக்கு தரக்கூடும்.

830 அடி உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியானது காணப்பட, மழைத்துளி நீரையும் சேர்த்துக்கொண்டுள்ளது. இந்த வீழ்ச்சியானது சரிவுடன் காணப்படுகிறது. அதனால் இந்த வீழ்ச்சியை நாம் காண சிறந்த நேரமாக பருவமழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் அமைய, வீழ்ச்சியிலிருந்து விழும் நீரின் தன்மையானது விசையுடன் காணப்படவும் கூடும்.

PC: Shuba

லிங்கனமக்கி அணை:

லிங்கனமக்கி அணை:


ஷாராவதி நதிக்கரையில் இது பரந்து விரிந்து காணப்பட, ஜோக் வீழ்ச்சியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இந்த லிங்கனமக்கி அணையானது காணப்பட, கர்நாடகாவின் முக்கியமான அணைகளுள் ஒன்றாகவும் இருக்கிறது. இதனை 1964ஆம் ஆண்டு கர்நாடக அரசால் கட்டவும் பட்டது.

இந்த அணையானது மழையினால் நிரம்பிவழிய, சக்ரா மற்றும் சவாஹலு நீர்த்தேக்கத்தையும் இது கொண்டிருக்க, கால்வாய்களுடன் இணைந்து அணையுடன் காணப்படுகிறது. இந்த அணையை காண சிறந்த நேரமாக பருவமழைக்காலமானது அமையக்கூடும்.

PC: Cameron Kay

 டப்பே வீழ்ச்சி:

டப்பே வீழ்ச்சி:


நீங்கள் ஈர்க்கப்படும் வீழ்ச்சியை காண ஆசைக்கொண்டால், கவலை வேண்டாமே! ஹொசகட்டேவிற்கு அருகாமையில் காணப்படும் டப்பே வீழ்ச்சியானது ஜோக் வீழ்ச்சியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. அத்துடன், இந்த டப்பே வீழ்ச்சியானது உயரமாக இல்லை என்பதால், கண்கொள்ளா காட்சியாக நமக்கு இதன் நீர் நிலையானது அமையவும்கூடும்.

இவ்விடமானது பயண ஆர்வலர்களுக்கு விருந்துப்படைக்க, இந்த நீர்வீழ்ச்சியானது 7 முதல் 9 கிலோமீட்டர் பயணமாகவும் அமையக்கூடும். இந்த பயணமானது அழகிய அடர்ந்த காடுகள் வழியே செல்ல, சவாலான பயணமாகவும் நமக்கு இது அமையக்கூடும்.

இந்த பயணத்தின் இறுதி நிலையாக (கிலோமீட்டர்) கடினமானது நம் முதுகில் சவாரி செய்ய, இந்த பயணத்தின் சாய்வாக 80 டிகிரி கீழ் திசையானது அமைய, படிகளானது காணப்படாமல், அடிவாரத்தை நோக்கியும் நம்மை அழைத்து செல்லக்கூடும்.

PC: Manu gangadhar

ஷாராவதி வனவிலங்கு பூங்கா:

ஷாராவதி வனவிலங்கு பூங்கா:

அதீத காடுகளை கொண்டிருக்கும் ஷாராவதி வனவிலங்கு பூங்கா, நீடித்த ஷாராவதி நதியை கொண்டிருக்கிறது. இவ்விடமானது விலங்குகளான குள்ள நரி, கருஞ்சிறுத்தை, புலி, சாம்பார் எனப்படும் ஒருவகை மான், ஒட்டர் எனப்படும் ஒரு வித நாய் என பலவற்றையும் கொண்டிருக்கிறது. அழிந்துக்கொண்டு வரும் இனமான சிங்கவால் குரங்கும் இங்கே காணப்படுகிறது.

பறவை பார்ப்பதற்கான சிறந்த இடமாக இது அமைய, லோரிகீட், நீல நிறத்தொண்டை கொண்ட பார்பெட், மர்ங்கொத்தி என பலவற்றிற்கு வீடாகவும் இது விளங்குகிறது.

நீர் விளையாட்டுகளான கயாகிங்க் மற்றும் படகு வலித்தல் போட்டியும் காணப்பட, இந்த சரணாலயத்தின் உப்பங்கழியில் அவை காணப்படுகிறது.

PC: Prakashmatada

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X