» »உங்கள் இதயத்தை கொள்ளையடிக்கப் போகும் குஜராத்தின் 7 அருமையான சுற்றுலாத் தளங்கள்!!

உங்கள் இதயத்தை கொள்ளையடிக்கப் போகும் குஜராத்தின் 7 அருமையான சுற்றுலாத் தளங்கள்!!

Written By: Balakarthik

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கலாச்சாரமும், பாரம்பரியமும் மிகுதியாக விளங்க, இந்தியாவில் காணப்படும் ஓர் அழகிய மற்றும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு இடமும் இதுவேயாகும். பாரம்பரிய நகரமான அஹமதாபாத் அழகிய ஒளியை பாதி திருடியது என்றால், மீதமுள்ளவற்றை குஜராத் மாநிலத்து நிறைய பொக்கிஷங்கள் திருடியது என்பதே உண்மை.

யாத்ரீக தளங்களுக்கு புகழ்பெற்ற இந்த மாநிலம், எண்ணற்ற இந்து மற்று ஜெய்னின் ஆழகிய ஆலயங்களையும் கொண்டுள்ளது. குஜராத் கிராமத்தினரால் ஆடைகளில் அழகிய கலையை புகுத்த, சரிகை வேலைப்பாட்டிலும் இவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இவற்றை கடந்து அனைவராலும் பெரிதும் போற்றப்பட கட்ச்சின் ரன்னும், சம்பானரின் பாரம்பரியமும், மற்றும் குஜராத்தின் பல ஆலயங்களும் அனைவராலும் பேசப்படும் ஒன்றாக அமைந்து நம்மை வரவேற்கிறது. மேலும், இந்த மாநிலத்தில் கம்பீரமான விடுமுறைக்கேற்ற இடங்கள் காணப்பட, அவை வார விடுமுறைக்கு ஏற்றதாகவும் அமைகிறது.

இப்பொழுது குஜராத்தின் விடுமுறைக்கு ஏற்ற சில இடங்களை நாம் பார்க்கலாம்.

 கோப்நாத் கடற்கரை:

கோப்நாத் கடற்கரை:


கம்பட் விரிகுடாவில் அமைந்திருக்கும் இந்த கோப்நாத் கடற்கரை, நகரத்திற்கு வெளியில் அமைந்து அழகிய காட்சியை நமக்கு தருகிறது. விடுமுறைக்கு ஏற்ற இந்த கடற்கரையின் பாறைகளில் சுண்ணாம்பு படிந்திருக்க, பெருமூச்செறிந்து பார்க்க வைக்கும் அழகினையும் நமக்கு பரிசாய் அளிக்கிறது.


இந்த கடற்கரையில் நம் ஓய்வை கழிக்க ஏதுவாக அமைவதோடு மட்டுமல்லாமல், 700 வருடங்களுக்கு பழமைவாய்ந்த கோப்நாத் ஆலயத்தின் அழகையும் நம்மால் பார்க்க முடிகிறது. பாவ்நகர் நகரத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த கடற்கரை காணப்படுகிறது. இந்த கடற்கரைக்கு அருகில் அரண்மனை ஒன்று காணப்பட, குஜராத் வரலாற்றின் பண்டைய நினைவுகளை இது தாங்கிக்கொண்டு நிற்கிறது.

વિહંગ

 நரரா தீவு:

நரரா தீவு:

குஜராத்தில் காணப்படும் 42 தீவுகளுள் ஒன்றான நரரா தீவின் உள்ளே நம்மை அனுமதிக்கப்படுகிறது. பிரோட்டன் தீவால் இது பாதிக்கப்பட, நிரோட்டன் தீவானது சிறிய பகுதியில் அமைந்திருப்பதோடு, 3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சூழ்ந்தும் காணப்படுகிறது.

இந்த தீவு சதுப்பு நிலக்காடுகளால் சூழ்ந்திருக்க, நீரின் அலைகளும் உயர்ந்து நம் மனதினை ஆள்கிறது. அதனால், இங்கே நீண்ட தூரத்தில் சென்று நீச்சலடிக்க வேண்டாமென அறிவுரைகளும் வழங்கப்படுகிறது. இங்கே 82 அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று காணப்பட, பரந்த கடலில் இது காணப்படுவதோடு, ஊடுருவல் தகவலையும் நமக்கு இது தருகிறது.

S Ballal, Ahmedabad, India

 நவலாகா ஆலயம்:

நவலாகா ஆலயம்:

பிரசித்திபெற்ற ஆலயங்கள் குஜராத்தில் நிரம்பி காணப்பட, அவற்றுள் கம்பீரமிக்க சோம்னாத் ஆலயம், சூரியதேவர் ஆலயம், சுவாமி நாராயணன் அக்சர்தம் ஆலயம் என பலவும் அடங்கும். அவற்றுள் பெரிதும் பார்த்திடாத நவலாகா ஆலயமும் கூட நம் மனதினை அமைதிக்கொண்டு ஆள்கிறது.

கும்லியில் அழகிய ஆலயம் காணப்பட, அதனை ஜெத்வா ஆட்சியின்போது பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டியதும் நமக்கு தெரிய வருகிறது. குஜராத்தில் காணப்படும் பழமையான ஆலயங்களுள் இதுவும் ஒன்றாக இருக்க, கடவுள் கதிரவனிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. அதோடுமட்டுமல்லாமல், கும்லியை, ஜடேஜா ஜாம் பர்மனியாஜி 1313இல் தாக்க, அந்த ஆட்டிவிப்பிலும் அசையாமல் அப்படியே கம்பீரமாக இந்த ஆலயம் நின்றதோடு, கட்டிடக்கலையின் பெருமையை இன்றும் தாங்கிக்கொண்டு வீரத்துடன் விளங்குகிறது.

Nileshbandhiya

 கிர்மல் நீர்வீழ்ச்சி:

கிர்மல் நீர்வீழ்ச்சி:


பசுமையின் மத்தியில் இந்த நீர்வீழ்ச்சியானது நூறு அடி உயரத்தில் காணப்பட, குஜராத்தின் உயரிய நீர்வீழ்ச்சி இதுவே எனவும் தெரியவருகிறது. சுற்றுலா ஆர்வலர்களுக்கு ஏற்ற சிறந்த இடமாக இது காணப்பட, இந்த அழகிய காட்சியை காண குஜராத்திற்கு பலரும் வந்து செல்கின்றனர்.

பருவமழைக்காலத்தின்போது, இந்த வீழ்ச்சியிலிருந்து விழும் நீரானது மானாவாரியாக அமைவதோடு ஏற்றத்துடன் காணப்படுகிறது. இந்த மாய வளிமண்டல சூழலானது சூரிய கதிர்களால் வானவில்லை பருவமழைக்காலத்தின்போது அழகிய காட்சியை உருவாக்கி, நம் மனதில் தவிர்க்கமுடியாத ஒரு காட்சியை தந்து இதமாக்குகிறது.

jenis Patel

 பத்தன்:

பத்தன்:

குஜராத்தின் அழகிய இடமான பத்தன் ஒரு பழமையான நகரமாகும். இந்த நகரம், கி.பி 745இல் சவ்தா வம்சத்தால் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் இந்த நகரமானது ராணி கி வாவ்வால் பல சுற்றுலா கூட்டங்களாலும் பெரிதாக ஈர்க்கப்பட்டிட, இது ஒரு அழகிய படிக்கிணறு என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடம் யுனொஸ்கோவின் உலக பாரம்பரிய தளப்பட்டியலில் 2014ஆம் ஆண்டு இணைந்தது என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

சவ்தா வம்சத்தின் தலைநகராக பத்தன் காணப்பட, பதின்மூன்றாம் நூற்றாண்டில் இது அழிக்கப்பட்டது. அதன்பின்னர் வரலாற்று ஆர்வலர்களுக்காக பத்தன் சிறந்த பிரம்மாண்டத்தை தந்து விளங்க, கிராமிய நினைவு பொருட்கள் இங்கே படிக்கிணறுகளிலும், ஆலயங்களிலும் காணப்படுகிறது.

Rashmi.parab

 நினை நீர்வீழ்ச்சி:

நினை நீர்வீழ்ச்சி:

நர்மதா நதியால் உருவாகும் இந்த நினை சிறியதாக இருப்பினும், சுற்றுலா பயணிகளின் மனதினை கொள்ளைக்கொள்ளும் அழகிய காட்சிகள் நிறைந்த ஒரு இடமாகும். இந்த நீர்வீழ்ச்சியை ஒரு காடு சூழ்ந்து இனிமையான உணர்வினை தந்து மனதினை குளிரூட்டுகிறது. நாம் நடந்து செல்ல, இவ்விடத்தை காணும் நம் மனது நிற்க சொல்லும் முன்னே நம் கால்கள் நிற்கும் என்பதே உண்மை.

இவ்விடம் அரசின் சூழல் சுற்றுலா இடமாக காணப்படுகிறது. இந்த வீழ்ச்சியிலிருந்து விழும் நீரின் உயரமானது முப்பது அடி இருக்க, இவ்விடம் குடும்பத்தினருடன் நட்புறவாடும் ஓர் சிறந்த இடமாக அமைந்து இயற்கை அன்னையின் மடியில் தலை வைத்து தூங்கவும் ஆசைக்கொள்கிறது மனம்.

jenis Patel

 சபுத்தரா:

சபுத்தரா:

டங்க் காடுகளின் பீடபூமியை தழுவி காணப்படும் இந்த சபுத்தரா, மிகவும் அழகிய மலைப்பகுதியாகும். கால தாமதமாக, சபுத்தராவை சுற்றுலா தளமாக கொள்ளப்பட, இன்று விடுமுறைக்கு ஏற்ற நம் இடப்பட்டியலில் இது பெரும்பங்கினை வகிக்கிறது. இங்கே அழகிய கதிரவனின் எழுச்சியில் உறைந்து நிற்கும் நம் மனம், சூரிய அஸ்தமனத்தின் அழகையும் மனதார ரசிக்கிறது.

இவற்றை கடந்து, பல ஜெய்ன் மற்றும் இந்து ஆலயங்களுக்கு வீடாக இவ்விடம் விளங்க, சபுத்தரா ஏரியானது மிகவும் பிரசித்திபெற்ற படகு பயணத்திற்கு ஏற்ற இடமாக காணப்படுவதோடு, வன்ஸ்டா தேசிய பூங்கா, ரோஸ் மற்றும் ஏரி தோட்டமென எண்ணற்ற இடங்களின் அழகினையும் நம்மால் ரசிக்க முடிகிறது.

JB Kalola

Read more about: travel gujarat

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்