உலகிலே மிகப் பிரபலமான நாடாக இந்தியா இருப்பதற்கு காரணம் இயற்கையுடன், செயற்கையும் சேர்ந்து நம் நாட்டில் காணப்படும் பல அதிசயங்கள்தான். அமைதியான காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள், பிரகாசமான, இயற்கை பின்னணியுடன் கூடிய ஆன்மீக ஸ்தலங்கள், மனிதனால் செய்யப்பட்ட செயற்கை அற்புதங்கள் என நம் நாட்டில் கொட்டிக்கிடக்கும் அதிசயங்களால்தான் உலகெங்கிலும் உள்ள மக்கள் நம் நாட்டின் உண்மைத்தன்மையையும், நம்பமுடியாத வரலாற்றையும் ஒப்புக்கொள்கிறார்கள். இதுதான் சுற்றுலா வளர்ச்சியில் இந்தியா மிகப்பெரிய நாடாக வளர்ச்சி பெற்றதற்கு காரணம். இந்த வகையில், பசுமையான இயற்க்கைச் சூழல், கவர்ச்சியான இடங்கள், வரலாற்று முக்கியத்துவம் ஆகிய காரணங்களால் பிரபலமாக உள்ள ' நெல்லூர் ' சுற்றுலாப் பய்ணிகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
வாரக்கடைசியில், விடுமுறை நாட்களில் ஓய்வையும், உற்சாகத்தையும் விரும்புபவர்களுக்கு சுற்றுலா செல்ல நெல்லூர் மிகவும் சிறந்தது. அழகிய பெண்ணா நதிக்கரையில், பழமையான இந்துக் கோவில்கள், அழகிய ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான நெல் வயல்களுக்கிடையே அமைந்துள்ள அமைதியான நகரம்தான் நெல்லூர். தெலுங்கு மொழி பேசும் இந்த நகரம் சோழ மன்னர்களாலும், மௌரிய , பல்லவ, விஜயநகர மன்னர்கள் மற்றும் முகலாய, ஆங்கில ஆட்சிகளின் கீழ் இருந்துள்ளது. இந்த நகரம் மிகவும் பழைய மற்றும் சுவாரசியமான கதைகளை வரலாறாகக் கொண்டது.

நெல்லூருக்கு சுற்றுலா செல்ல உகந்த காலங்கள்:
சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நெல்லூருக்கு சுற்றுலா செல்ல அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாத இறுதி வரை உகந்த காலங்களாகும். அதன் பிறகு வெய்யிலின் உக்கிரம் கூடும் என்பதால் கோடை காலத்தில் இப்பகுதியில் பயணம் செய்ய வேண்டாம் என கூறப்படுகிறது. சென்னையிலிருந்து, நெல்லூரை அடைவதற்கான வரைபடம் இங்கே தரப்பட்டுள்ளது. நீங்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்திருந்தால், அங்கிருந்து வாடகைக் கார் பிடித்து, நேராக நெல்லூரை அடையலாம். அல்லது விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்னைப் புறநகர் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் நெல்லூரை அடையலாம். சென்னை விமான நிலையத்திலிருந்து, 190 கி.மீ தொலைவில் நெல்லூர் உள்ளது. திருப்பதி விமான நிலையம் நெல்லூருக்கு அருகில் உள்ளது. 2 நகரங்களுக்கு இடையிலான தூரம் 122 கி.மீ மட்டுமே.
PC- Raj

எப்படி செல்லலாம்
ரயில் வழி பயணம் : சென்னையிலிருந்தும், மற்ற நகரங்கங்களிளிருந்தும் நெல்லூர் செல்ல அதிக ரயில் இணைப்பு வசதிகள் உள்ளன. சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து, நெல்லூர் செல்ல நேரடி ரயில்கள் உள்ளன. 3 மணி நேரத்தில் சென்னையிலிருந்து நெல்லூர் சென்றுவிடலாம் என்பதால் இரயில் வழி சிறந்ததாகும்.
சாலை வழி பயணம் : சென்னை - நெல்லூருக்கு இடையே சாலை வழி தூரம் 175 கி.மீ. சென்னையிலிருந்து கார் மூலம் சென்றாலோ அல்லது பஸ் மூலம் சென்றாலும் பயணம் சுலபமானதுதான். நீங்கள் சொந்த வாகனம் மூலம் வருவதாக இருந்தால், சென்னையிலிருந்து, என்.எச்.16 வழியாக நெல்லூரை கீழ்கண்ட வழியில் 3 மணி நேரத்தில் அடையலாம்.
சென்னை - புழல் - பழவேற்காடு (Pulicat) - நெலப்பட்டு
சென்னையிலிருந்து மேற்கண்ட வழித்தடத்தின் மூலம் நீங்கள் சொந்தமாக ஏற்பாடு செய்துள்ள வாகனத்தில் குறைந்த நேரத்தில் நெல்லூரை அடையலாம். வழியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்கள். ஏரிகள், அழகிய நீர் தேக்கங்கள், வண்ணமிகு இயற்க்கை காட்சிகளைக் கண்டுகளிப்பதன் மூலம் உங்கள் பயணம் இனிமையாகவும், த்ரில்லாகவும் இருக்கும்.

இந்த வழியில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. புழல் ஏரி : சென்னையிலிருந்து நெல்லூருக்கு செல்லும்போது முதலில் காண வேண்டிய இடம் செங்குன்றத்திலுள்ள மிகப்பெரிய புழல் ஏரியாகும். 1876 ம் ஆண்டு பிரிட்டிஷார் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி மிகப்பெரிய மழைநீர் சேமிப்புத தேக்கமாகும். சென்னை மாநகருக்கும், அருகே உள்ள பல்வேறு நகரப்பகுதிகளுக்கும் குடி நீர் வழங்கும் இப்பிரம்மாண்ட ஏரியும், இப்பகுதியின் அமைதியான சூழ்நிலையும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதாக உள்ளது. இதை ரெட் ஹில்ஸ் ஏரி எனவும் கூறுவர். நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
PC- Puzhal2015

பழவேற்காடு (Pulicat) :
சென்னையின் வடக்கே கடலோரம் அமைந்துள்ள அழகான ‘ தீவு ஏரி ‘ பழவேற்காடு ஏரியாகும். இந்த ஏரி பறைவகள் சரணாலயமாக அமைந்துள்ளது. ஏரியின் இயற்கை அழகைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் இங்கு குவிந்த வண்ணமுள்ளனர். புலிக்கட் என்று அழைக்கப்படும் இந்த கடற்கரை ஊர் டச்சு மற்றும் போர்த்துகீசியர்கள் வசித்த இடமாகும். இங்கு டச்சுக்காரர்களின் அழகிய கல்லறைத் தோட்டம் உள்ளது. நேர்த்தியாக, மேற்கத்திய கலையம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அழகிய இந்த கல்லறைப் பகுதியை ஏராளமான பயணிகள் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்
PC- Santhosh Janardhanan

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்:
நெல்லூரை நெருங்கும் வழியில் பழவேற்காட்டுக்கு அடுத்தாற்போல் நீங்கள் காண வேண்டிய இடம் நெலப்பட்டு பறவைகள் சரணாலயம். இங்கு பிரசித்தி பெற்ற அபூர்வ பறவை இனங்களான பெலிக்கான், நைட் ஹெரான், ஒபன்பில் ஸ்டார்க், கூட் மற்றும் டார்ட்டர் ஆகியவை அழகிய கூடுகள் கட்டி ஒரு காலனி போல் வாழ்கின்றன. இதைப் பார்த்து உற்சாகம் அடையும் நீங்கள் இந்த பறவைகளை போட்டோ எடுக்காமல் வர மாட்டீர்கள். பறவைப் பிரியர்களுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கபுரியாகும்.
PC- Cprogrammer

நெல்லூரில் காண வேண்டிய இடங்கள்:
1. ரங்கநாதர் கோயில்
அழகிய நகரமான நெல்லூரை அடையும் நீங்கள், இந்த நகரத்துக்கு அடையாளமாக திகழும் ஸ்ரீ ரங்கநாதசாமி கோவிலை அடையலாம். இந்த புராதன கோவில் 12 ம நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலின் மிக உயர்ந்த கோபுரத்தில் காணப்படும் அழகிய வேலைப்பாடுகளாலான சிலைகள் மிகவும் ரசிக்கத்தக்கவை. மார்ச் - ஏப்ரல் மாதங்களில் இக் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
PC- YVSREDDY

2. மைப்பாடு கடற்கரை
நெல்லூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள மைப்பாடு கடற்கரை ரசிக்கத்தக்க ஒன்றாகும். அதிகாலையிலும், விடுமுறை காலங்களிலும், ஏராளமான பேர் தங்கள் நேரத்தை இங்கு இனிமையாக செலவழிக்கின்றனர். காலை, மாலைகளில் இங்குள்ள அழகிய வான் தோற்றமும், குளிர்ச்சியான தென்றல் காற்றும் பயணிகளுக்கு இதமானது. இங்கு நடைபெறும் சிறிய படகுகள் இடையிலான போட்டிகளும், கடல் விளையாட்டுகளும் பிரபலமானவை.
PC- ManojKRacherla

பெஞ்சல்கொனா நீர் வீழ்ச்சி
நெல்லூரிலிருந்து, 70 கி.மீ தொலைவிலுள்ள ராப்பூர் மண்டலத்திலுள்ள, சிறிய கிராமத்தில் உள்ள நீர் வீழ்ச்சி பெஞ்சல்கொனா நீர் வீழ்ச்சி. இந்த இடம் அழகிய இயற்க்கை காட்சிகளால் மிகவும் ரம்மியமாக உள்ளது. இங்குள்ள இலட்சுமி நரசிம்ம கோவில் மிகவும் புகழ் பெற்றது. நெஞ்சையள்ளும் பெஞ்சல்கொனா பகுதிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இயற்கை சுற்றுலாத தளங்களில் ஒன்றாகும்.
PC- Andrew Malone



Click it and Unblock the Notifications




