Search
  • Follow NativePlanet
Share
» »சுட்டெரிக்கும் வெயிலில் மீன்பிடித்து விளையாடப் போகலாமா ?

சுட்டெரிக்கும் வெயிலில் மீன்பிடித்து விளையாடப் போகலாமா ?

சுட்டெரிக்கும் வெயில் குளுமையான இடம் தேடி அழையும் மனம், கொடைக்கானல், ஊட்டியெல்லாம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. இந்த வாரம் புதுசா எங்கதான் போவது ?. இதே மனநிலையோடதான் நீங்களும் இருக்கீங்களா

சுட்டெரிக்கும் வெயில் குளுமையான இடம் தேடி அழையும் மனம், கொடைக்கானல், ஊட்டியெல்லாம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. இந்த வாரம் புதுசா எங்கதான் போவது ?. இதே மனநிலையோடதான் நீங்களும் இருக்கீங்களா..! அப்ப வாங்க, ஜாலியா மீன் பிடிச்சு விளையாட கலிபோரே போகலாம்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சுமார் 102 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கலிபோரே. காவேரி வனவிலங்கு சரணாலயத்தின் அடர் வனங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இப்பகுதி காவேரி ஆற்றின் கரையோரங்களில் இருப்பதால் இதன் மீன்பிடி முகாம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். பேருந்து அல்லது வாடகைக் கார் மூலம் எளிதில் இதனை அடைய முடியும்.

 தூண்டிற்காரன் சொர்க்கம்

தூண்டிற்காரன் சொர்க்கம்


எப்போதும் சலசலத்து ஓடும் காவிரி ஆறு, காட்டில் ரிங்காரமிடும் தேனிக் கூட்டம், வானுயர்ந்து நிற்கும் மரங்களின் தொகுப்பு என சுற்றுவட்டாரம் முழுவதும் இயற்கை அம்சங்கள் நிறைநத பகுதி இது. குறிப்பாக, காவிரி ஆற்றில் அதிகப்படியாக நீந்தும் மீன்கள் இப்பகுதி தூண்டிற்காரனின் சொர்க்கம் என்ற புகழைப் பெற்றுள்ளது.

 பெரிய பெரிய மீன்கள்

பெரிய பெரிய மீன்கள்

1980 காலகட்டத்தில் இப்பகுதியில் ஆங்கிலேயர் ஒருவர் பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்துள்ளார். அப்போது சுமார் 40 கிலோ எடையுள்ள மாபெரும் மீன் சிக்கியுள்ளது. இது அன்றாடம் நடக்கவே இப்பகுதி மீன் பிடிப்பு பகுதிக்காக பெயர் பெற்றுவிட்டது. கறிப்பாக, இங்கே மீன் பிடிக்க வருவோர் அதனை உணவுக்காக எடுத்துச் செல்வதை விட பொழுதுபோக்கிற்காக மட்டும் பிடித்துவிட்டு மீன்டும் அதனை ஆற்றிலேயே விட்டுவிடுகின்றனர்.

 விளையாட்டு மையங்கள்

விளையாட்டு மையங்கள்

இந்த இடத்திற்கு அருகிலேயே பீமேஸ்வரி, தொட்டம்கலி, காவிரி மீன்பிடி முகாம் என மூன்று மீன்பிடித்து விளயாடும் மையங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் காட்டுக்குள்ளேயே உள்ளதால் நதியின் கரையோரத்தில் நடந்து செல்ல பாதைகளும் உள்ளது. மலையேற்ற விரும்பிகளுக்கு இந்த பாதை மிகவும் பிடித்தமனாகவும் இருக்கும்.

ஆங்லிங் தூண்டில்

ஆங்லிங் தூண்டில்

இப்பகுதிதஹயில் மீன்களைப் பிடிப்பதற்காகவே பிரத்யேகமான ஆங்லிங் என்னும் தூண்டில் வாடகைக்கு விடப்படுகிறது. இத்தூண்டிலின் சிறப்பு என்னவென்றால் தூண்டிலில் மாட்டிக் கொண்ட மீன் சிறிது நேரத்தில் தானாகவே தப்பித்து விடும். ஒவ்வொரு போட்டியாளரும் எத்தனை மீன்களைப் பிடித்தார்கள் என்பதே விளையாட்டு.

 என்ன என்ன மீன்கள் ?

என்ன என்ன மீன்கள் ?

இப்பகுதியில் மகாசீர் என்னும் பெரிய மீன்கள் அதிகளவில் காணப்படுன்றன. அதனைத் தவிர்த்து கெளுத்தி, கெண்டை உள்ளிட்ட பல வகையான மீன்களும் காணப்படுகின்றன. இதன் சுற்றுவட்டாரத்தில் மின் பிடி தொழிலாளர்களும் தொழில் முறையில் மின்களைப் பிடித்து விற்பனை செய்கின்றனர்.

 வனவிலங்க சரணாலயம்

வனவிலங்க சரணாலயம்

கலிபோரே பகுதி மீன்பிடிக்கு மட்டும் புகழ்பெற்றதல்ல. காவிரிக் கரையோரம் அமைந்துள்ள இப்பகுதியில் சாம்பார் மான், புள்ளி மான், ராட்சத மலை அணில், குள்ள நரி, முதலைகள், யானை என பல விலங்குகளுடன் சரணாலயம் என்னும் சிறப்பையும் பெற்றுள்ளது.

 பரிசல் சவாரி

பரிசல் சவாரி

இங்கே காவிரி ஆற்றில் படகு, பரிசல் சவாரியும் பலரால் விரும்பத்தக்க சுற்றுலா அம்சமாக உள்ளது. அகன்று ஓடும் காவிரி ஆற்றில் சுற்றுவட்டார வனத்தையும், நீர் அருந்த வரும் வன விலங்குகளையும் ரசித்தபடியே நீரில் நீந்திச் செல்லும் அனுபவம் மறக்க முடியாத நினைவாக இருக்கும்.

All Photos Taken From Here

More News

    Read more about: travel bangalore
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+