» »பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!

Posted By: Bala Karthik

வாரவிடுமுறை வருகிறதென்றால்! வீட்டை விட்டு வெளியேற திட்டமிடுவதோடு உங்களுடைய மனம் கவர்ந்த நபருடன் நகரத்தின் பல இடங்களுக்கு செல்லவும் மனமானது ஆசைக்கொள்ளக்கூடும். ஒரு சிலர் உணவகங்களுக்கு செல்ல நினைப்பார்கள். ஒரு சிலரோ ஷாப்பிங்க், அல்லது சில பப் துள்ளல் என செல்ல, ஒரு சிலரோ கலை நயத்தை ரசித்திட கிளம்ப, எண்ணற்ற அமைப்புகளையும் கண்டு காணப்படும் ஓவியங்களுக்கும் தனி ஒரு அர்த்தத்தை அதிசயித்து புதுப்பித்திடக்கூடும்.

கலை விரும்பிகள், அருங்காட்சியகம் மற்றும் காட்சியகங்களில் நேரத்தை செலவிட, இந்த நகரத்தில் சில சிறந்த கலை காட்சியகங்களை நம்மால் கொண்டுவரவும் முடிகிறது. அப்பேற்ப்பட்ட சில அழகிய இடங்களை தேடி வாரவிடுமுறையை குதுகலத்துடன் க(ளி)ழிக்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நவீன கலைக்கொண்ட தேசிய காட்சியகம், பேலஸ் ரோடு:

நவீன கலைக்கொண்ட தேசிய காட்சியகம், பேலஸ் ரோடு:


மாணிக்யா வேலுவின் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்ட இந்த நவீன கலைத்தன்மைக் கொண்ட காட்சியகம், பரந்து விரிந்து 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட, 2009ஆம் ஆண்டு இது பொதுவாக திறக்கப்பட்டது. மற்ற மூன்று NGMA (National Gallery of Modern Art)களுள் ஒன்றாக இவ்விடம் காணப்பட, மற்ற இரண்டும் தில்லி மற்றும் மும்பையில் காணப்படுகிறது. இந்த காட்சியகமானது இயக்கப்பட்டுவர, இந்திய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சகத்தால் இவ்விடம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த காட்சியகத்தில் ராஜா ரவி வர்மா, ரபீந்திர நாத் தாகூர் மற்றும் வெவ்வேறு காலத்தின் பல புகழ்பெற்ற கலைஞர்களின் வேலைப்பாடுகள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கலைப்பணி காட்சியகத்தில் ஓவியங்கள் மட்டும் வைக்கப்படாமல் சிற்பங்களும், சிறுவடிவமைப்புகளும் என பலவும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிரந்தர காட்சிகளை கடந்து வழக்கமான சர்வதேச மற்றும் தேச கண்காட்சிகளும் நடத்தப்படுகிறது.

PC: Pranav

கிங்கினி கலை, இன்பேன்ட்ரி சாலை:

கிங்கினி கலை, இன்பேன்ட்ரி சாலை:

சமகால கலை காட்சியகமான தோட்டத்து நகரத்தின் கிங்கினி கலை காட்சியகம், 2004ஆம் ஆண்டு ஒரு கணவன் மற்றும் மனைவியால் நிறுவப்பட்டது. இந்த காட்சியகத்தின் முக்கிய நோக்கமாக கலை விரும்பிகளுக்கான சக(கா) இடைவெளியும், சேகரிப்பவர்களின் விருப்பமாகவும், முதல் முறை வாங்குபவர்களாகவும் என இந்திய கைவினைஞர்களின் எழுச்சியானது காணப்பட, தேவையான தகவலையும், வழிக்காட்டுதலையும் இந்த மாயாஜால உலகத்தின் கலைகள் உணர்த்துகிறது. இந்த காட்சியகத்தின் 300 இந்திய கைவினைஞர்களின் திறனும் பார்வைக்கு வைக்கப்பட, இந்தியா மற்றும் அயல் நாடுகளின் பல்வேறு கண்காட்சிகளுக்கும் பரிந்துரை செய்யவும்படுகிறது.

PC: Offical Page

சாந்தி சாலை, சாந்தி நகர்:

சாந்தி சாலை, சாந்தி நகர்:

2003ஆம் ஆண்டு சுரேஷ் ஜெயராம் என்பவரால் இந்த காட்சியகமானது இலாபமில்லா கலை வெளியில் நிறுவப்பட, இதன் கதவுகள் வருங்காலத்து கலைஞர்களுக்காக எந்நேரமும் திறந்தே காணப்பட, இந்த தொழில்வெளியை சார்ந்த வேலைகளானது காணப்படுவதுமில்லை. இதனை கடந்து, இந்த காட்சியகத்தில் எண்ணற்ற திரையிடல், உரையாடல், வேலைப்பணிகள் என காணப்பட உள்ளூர் கலைஞர்களின் ஆக்கப்பூர்வமான செயல்களும் தெள்ளத்தெளிவாய் தெரிகிறது.

PC: Offical Site

கேலரி ஜீ, லாவெல்லே சாலை:

கேலரி ஜீ, லாவெல்லே சாலை:

கீதாஞ்சலி மாலினியால் 2003ஆம் ஆண்டு இது நிறுவப்பட, இங்கே காணப்படும் கலை யோசனைகள் யாவும், ஆன்மீக காட்சியக சிந்தனையுடன் காணப்பட, தீவிரமான கலை சேகரிப்பாளர்கள் வாங்கியும் செல்கின்றனர். மற்ற பிற சேவைகளாக, திருத்துதல், சீர்ப்படுத்துதல், கலைஞர்களின் தொடக்க வேலைகள் என காணப்பட, கேலரி ஜீயானது தீவிர கலை ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக அமைகிறது.

PC: Offical Page

க்ரிம்சன் கலை காட்சியகம், கன்னிங்கம் சாலை:

க்ரிம்சன் கலை காட்சியகம், கன்னிங்கம் சாலை:

பரந்து விரிந்து காணப்படும், விரிவான சேகரிப்பாக நவீன மற்றும் சமகால கலைகள் இங்கே காணப்படுகிறது. ஷபினா ப்ளாஷாவில் 1989ஆம் ஆண்டு இந்த முதல் காட்சியகமானது நிறுவமுடிவுசெய்ய, இந்த காட்சியகமானது பெங்களூருவின் சமகால கலை, காட்சி வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தது. இதன் இரண்டாவது காட்சியகம் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட, வீட்டு ஓவியங்கள், கலவையான ஊடக பணிகள், புகைப்படங்கள், சிற்பங்கள், என நாட்டின் புகழ்பெற்ற பல கலைஞர்களின் திறமையையும் நம்மால் பார்க்க முடிகிறது.

PC: Offical Page

வெங்கடப்பா கலை காட்சியகம், கஸ்தூரிபா சாலை:

வெங்கடப்பா கலை காட்சியகம், கஸ்தூரிபா சாலை:

கர்நாடகா அரசு அருங்காட்சியகத்தின் வளாகத்தில் இந்த வெங்கடப்பா கலை காட்சியகம் காணப்பட, 600 ஓவியங்களுக்கு இது வீடாக அமைந்து மூன்று மாடிகளையும் கொண்டு அதீத கலை மற்றும் நகரத்தின் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கிறது. இந்த கலை காட்சியகத்தின் பெயராக நீர் நிற ஓவியங்களுக்கு பெயர் பெற்ற கே. வெங்கடப்பா பெயரை வைத்திட, விவேகமான யதார்த்தத்தை அது காண்பிக்கிறது.

இந்த காட்சியகமானது வெங்கடப்பாவின் புகழை மட்டும் பேசாமல் மற்ற கலைஞர்களின் திறமையையும் காட்டிட, கல் சிற்பங்கள், மர சிற்பங்கள், என பலவும் அவற்றுள் அடங்க, நாள் முழுவதும் நாம் கலை நயத்தின் அழகில் மூழ்கியும் போகிறோம்.

Read more about: travel bangalore