Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ரியல் பேய்கள் பண்ணுற காமெடி என்னனு தெரியுமா? இங்க போங்க

இந்த ரியல் பேய்கள் பண்ணுற காமெடி என்னனு தெரியுமா? இங்க போங்க

இந்த ரியல் பேய்கள் பண்ணுற காமெடி என்னனு தெரியுமா? இங்க போங்க

இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?

பேய் என்றாலே பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படி பேய் கதைகள் பல்வேறு இடங்களிலும் நிலவிவருகின்றன.

அந்த வகையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவிலும் பேய் உலாவும் இடங்கள் இருக்கின்றனவாம்.

அதுபத்து கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.. அந்த பக்கமா போனா எச்சரிக்கையா இருந்துக்கோங்க...

பெங்களூரு போறீங்களா? அப்போ இந்த இடங்களுக்கு மட்டும் போயிடாதீங்க!

கோவா டூர் போனா எதுலாம் அணியக்கூடாது தெரியுமா? தெரிஞ்சிக்கோங்ககோவா டூர் போனா எதுலாம் அணியக்கூடாது தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க

பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம்

பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம்

பெங்களூரு விமான நிலையத்துக்கு போயிருக்கீங்களா.. கண்டிப்பா போகவேண்டிய இடம்தான்.

அன்றாடம் பலர் வெளிநாடுகளுக்கு பயணிக்க இந்த விமான நிலையத்த பயன்படுத்துறாங்க..

sarang

அமானுஷ்யம்

அமானுஷ்யம்

ஒரு சிலர் இந்த விமான நிலையத்துல அமானுஷ்ய நடமாட்டத்த உணர்ந்ததா சொல்லிருக்காங்க.

திடீர்னு வந்து உங்க கண்ணு முன்னாடி நின்னு மறையுமாம்..

பாரீன் பேயோ என்னவோ.. நல்லா கலரா வெள்ளைச் சேலை கட்டிக்கிட்டு தலைவிரி கோலத்துல உங்கள ஒரு பேய் பயமுறுத்துனா என்ன பண்ணுவீங்க சொல்லுங்க..

நாளை வா பேய்கள் உலாவும் இடம்

நாளை வா பேய்கள் உலாவும் இடம்

கன்னடத்தில் நாளே பா என்றால் தமிழில் நாளை வா என்று பொருள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பேய் அசோசியேசன் வைத்துள்ளதாம்.. கும்பல் ஆஃப் கூர்கா பேய்கள் அர்த்த ராத்திரியில வந்துதான் பயமுறுத்துமாம்.. கதவை தட்டும் இந்த பேய்கள பாத்து நாம பயப்பட தேவையில்லைனு சொல்றாங்க.

ஹைலைட் காமெடி

ஹைலைட் காமெடி

அதுலயும் ஹைலைட் காமெடி என்னனா இன்னிக்கு வீட்ல ஆளு இல்ல.. நாளைக்கு வானு சொன்னா போய்டுமாம்.... ஆனா

நாளைக்கு திரும்பவும் வருமாம்பா.. எச்சரிக்கையா இருக்கணும்... முக்கியமா மடிவாலா பக்கம் இருக்குறவங்க..

தேசிய நெடுஞ்சாலை எண் 44 - பேய் ஆக்கிரமித்துள்ள பகுதி

தேசிய நெடுஞ்சாலை எண் 44 - பேய் ஆக்கிரமித்துள்ள பகுதி

இந்த சாலை மிகவும் அசாதாரணமான சூழல் கொண்ட சாலையாகும். பெங்களூரு நகரத்துக்குள் கொண்டு செல்லும் இந்த சாலையில் செல்லும் வாகனங்களில் லிப்ட்க்காக யாராவது கை மறித்தால் நிறுத்தாமல் சென்று விடுவது நல்லது என்கின்றனர் ஓட்டுனர்கள்.

Rishabh Tatiraju

https://commons.wikimedia.org/wiki/File:Road_Network_Highway_NH_4_India.jpg

டிராபிக் போலீசா

டிராபிக் போலீசா

சிலர் அந்த அனுபவத்தைப் பார்த்துள்ளனர். பேய் இவர்களிடத்தில் வழிமறித்து லிப்ட் கேட்குமாம். இவர்களும் பாவம் என்று வண்டியை நிறுத்தினால் மறைந்து விடுமாம்...
அடுத்து அடுத்த வண்டியை நிறுத்துமாம்..

டிராபிக் போலீசா ஆக முடியாம செத்த பேயா இருக்குமோ..

தெர்ரா வேறா

தெர்ரா வேறா

தெர்ரா வேறா என்ற வீடு கிட்டத்தட்ட அழிந்து விட்டாலும், இது பெங்களூருவின் பேய்கள் வசிக்கும் வீடாகத்தான் இப்போதும் இருக்கிறது.

இந்த வீடு 1943ம் ஆண்டு வழக்குரைஞர் ஈஜே வாஸ் என்பவரால் கட்டப்பட்டது. அவரின் மகள்கள் 2002ம் வருடம் வரை இந்த வீட்டில்தான் வாழ்ந்து வந்துள்ளனர். சகோதரியின் கண்முன்னே இன்னொருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவரது தங்கை வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.

ஆவி

ஆவி

அதன்பின்னர் அங்கு வரும் ஆவி, இவரின் பெயரைச் சொல்லி அழைக்குமாம்.. இந்த வழியாக போகும்போது அவரது வீட்டு சன்னலைப் பார்த்தால், அந்த பேய் உருவம் தெரியுமாம். ஆனால் புகைப்படத்தில் விழுவதில்லையாம்.

இதுல என்ன கொடுமைனா.. அந்த பேய் தினமும் நைட்டு மேக்கப் போட்டுட்டு நல்லா இருக்கா நல்லா இருக்கானு கேக்குதாம்..

பேய் மாதிரி மேக்கப் கேள்வி பட்டிருக்கேன். பேயே மேக்கப் போடுதாம்ல.,

விக்டோரியா மருத்துவமனை

விக்டோரியா மருத்துவமனை


பசிப் பேய் கேள்வி பட்டிருக்கீங்களா? பெங்களூருவின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான விக்டோரியா மருத்துவமனையில் பேய் நடமாட்டம் இருப்பதாக பலர் கூறுகின்றனர்.

Adbutha

அட்டகாசம்

அட்டகாசம்

இந்த பேய் என்ன அட்டகாசம் பண்ணும் தெரியுமா... இங்கு நோயாளிகளை காண வரும் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்களை திருடிட்டுப் போயிடுதாம்.

என்னங்கடா பச்ச புள்ளைங்க கிட்ட புடுங்கி திங்குதுங்க.. ச்சை..

எம். ஜி. சாலை

எம். ஜி. சாலை

எம் ஜி ரோடு எனப்படும் இந்த சாலை ஒரு முக்கிய மான இடமாகும். ஏனென்றால் இதுதான் பெங்களூருவின் கொண்டாட்டங்களுக்கு உகந்த சாலையாகும்.

ஆனா இங்க இருக்கும் பேய் ஒரு இளம்பெண்ணாம். அந்த பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி கோரமாக இறந்துவிட்டாராம்.

Varun Shiv Kapur

விநோதமான சத்தம்

விநோதமான சத்தம்

இந்த வழியாக செல்லும் சிலருக்கு விநோதமான சத்தம் கேட்குதாம்... அதாவது ஹெல்ப் மீ.. கால் த ஆம்புலன்ஸ் என்று ஒரு குரல் கேட்குதாம்..

இதுல அந்த பேய்க்கு குறும்ப பாருங்க.. இதுதான் நான் செத்துப்போன வண்டி... இடிச்சிட்டு நிக்காம போயிட்டானும் சொல்லுதாம் அது... என்ன கொடுமை சார் இது..

ஏட்டையா நான் விழுந்து செத்த ரயில் வருது.. பாய்......'

கல்பள்ளி கல்லறைக் காடு

கல்பள்ளி கல்லறைக் காடு

இது இறந்தவர்களை புதைக்கும் காடு என்பதால் இங்கு பேய் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர். அதிலும் சில பேய்கள் நடு ரோட்டுக்கு வந்து லிப்ட் கேட்பதாக கூறுகின்றனர் வாகன ஓட்டிகள்.

நீங்க இந்த இடத்துக்கு போனா கவனமா இருங்க..

நாங்க ஏன்டா நடு ராத்திரி பன்னெட்டுமணிக்கு சுடுகாட்டுக்கு போப்போறோம்.. படுத்துறானே...

விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X