» »பெங்களூர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? - 2

பெங்களூர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? - 2

Posted By: Udhaya

இந்த பகுதியில் இந்தியாவின் சிலிக்கான் வேலியான பெங்களூரு பற்றி பார்த்து வருகிறோம். பெங்களூருவின் சிறப்புக்களை ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது. அந்த அளவுக்கு எண்ணற்ற சிறப்புக்களையும் பெருமைகளையும் அடக்கியுள்ள இந்த பெங்களூரு நகரம் பற்றி காணலாம் வாருங்கள்.

உழைப்பால் உயர்ந்த பெங்களூரு

உழைப்பால் உயர்ந்த பெங்களூரு

இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பெங்களூரு இந்த அளவுக்கு வளர்ந்துள்ளதற்கு காரணம் பல உள்ளன, அவற்றுள் முக்கியமானவை தொழில்நுட்பம்.

en.wikipedia.org

தொழில் நுட்ப மற்றும் ஆய்வு நிறுவனங்கள்

தொழில் நுட்ப மற்றும் ஆய்வு நிறுவனங்கள்


பெங்களூரில் பல முக்கிய தொழிற்சாலைகளும், தொழில் நுட்ப மற்றும் ஆய்வு நிறுவனங்களும் அமைந்துள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL), பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்(BEML), ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்(HMT) போன்ற பிரபல நிறுவனங்கள் அமைந்துள்ளன.

ISRO

ISRO

இந்திய அரசின் அதிகாரகாரபூர்வ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் (ISRO) அமைப்பின் தலைமை அலுவலகமும் இங்கு உள்ளது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

தகவல் தொழில் நுட்பத்துறையில் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ள இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் தலைமை அலுவலகங்களையும் செயல் தளங்களையும் பிரம்மாண்ட அளவில் பெங்களூரில் நிறுவி இருப்பதால் நகரத்தின் பொருளாதாரம் பெருமளவில் உயர்ந்துள்ளது. இது தவிர சர்வதேச நிறுவன்ங்களான சாம்சங், எல்ஜி, ஐபிஎம் போன்றவையும் இங்கு தங்கள் அலுவலகங்களை உருவாக்கியுள்ளன.

Indianhilbilly

பல இனங்களும் பல சர்வதேச கலாசாரங்களும்

பல இனங்களும் பல சர்வதேச கலாசாரங்களும்

இங்குள்ள வேலை வாய்ப்புச் சூழல் காரணமாக உலகில் எல்லா பகுதிகளிலிருந்தும் பலர் இங்கு குடியேறியுள்ளதால் பெங்களூர் பல இனங்களும் பல சர்வதேச கலாசாரங்களும் கலந்து காட்சியளிக்கும் சமூகமாக மாறியுள்ளது.

Utkarsh Jha

க்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ்

க்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ்


இந்தியாவின் அறிவியல் கழகமான பெருமைமிக்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் (IISC) இங்கு அமைந்துள்ளது. அது தவிர மேலாண்மை பல்கலைகழகமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனஜ்மேண்ட்(IIM) மற்றும் எண்ணற்ற தொழில்நுட்ப, மருத்துவ, மேலாண்மை கல்லூரிகள் போன்றவை பெங்களூரில் உள்ளன.

 ஏன் சுற்றுலாப்பயணிகள் பெங்களூரை முற்றுகையிடுகின்றனர்?

ஏன் சுற்றுலாப்பயணிகள் பெங்களூரை முற்றுகையிடுகின்றனர்?

சிறந்த முறையில் மற்ற நகரங்களுடன் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கும் பெங்களூரில் ஜவஹர்லால் நேரு பிளானட்டேரியம், லால் பாக் மற்றும் கப்பன் பாக் என்றழைக்கப்படும் மிகப்பெரிய தோட்டப் பூங்காக்கள், அக்வாரியம் எனப்படும் மீன் காட்சியகம், வெங்கடப்பா ஆர்ட் காலரி, விதான சௌதா, பானர்கட்டா தேசிய பூங்கா போன்ற பல சுற்றுலா அம்சங்களும் ஸ்தலங்களும் நிரம்பியுள்ளன.

Rishabh Mathur

 பெங்களூரு அரண்மனை

பெங்களூரு அரண்மனை

பெங்களூரின் மையத்தில் உள்ள அரண்மனைப் பூங்காவில் பெங்களூர் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை அமைந்துள்ளது. சதாசிவ நகருக்கும் ஜயமஹாலுக்கும் இடையில் இது இருக்கிறது.

Nagarjun Kandukuru

 லால் பாக்

லால் பாக்

பெங்களூரின் தெற்குப்பகுதியில் புகழ்பெற்ற இந்த லால் பாக் தாவரவியல் பூங்கா என்றழைக்கப்படும் பிரமாண்ட பூங்காத்தோட்டம் அமைந்துள்ளது. லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்' என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் ஹைதர் அலியால் துவங்கப்பட்டு அவரது மகன் திப்புசுல்தானால் முழுதும் உருவாக்கி முடிக்கப்பட்டது.

Naveenkumar

 விதான சௌதா

விதான சௌதா

பெங்களூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் விதான சௌதாவாகும். கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலகமான இது செங்கற்களாலும் கருங்கல்லாலும் எழுப்பப் பட்டுள்ள அற்புதமான கலைப்படைப்பாகும். 46 மீட்டர் உயரத்தில் அரண்மனை போன்று காட்சியளிக்கும் இந்த மாளிகைக்கட்டிடம் பெங்களூரில் உயரமான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Börkur Sigurbjörnsson

 ஹெசரகட்டா ஏரி

ஹெசரகட்டா ஏரி

செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஏரி பெங்களூரிலிருந்து வட மேற்கில் 18 கி.மீ தொலைவின் அமைந்துள்ளது. நகரின் குடிநீர் தேவைக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. 73.84 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து இந்த ஏரியில் மழை நீர் சேகரமாகும்படி அமைந்துள்ளது. அர்காவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த ஏரியின் கரை 1690 மீட்டர் நீளமும் 40.55 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

Nikkul

 கப்பன் பார்க்

கப்பன் பார்க்


1870 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த எழில் மிகுந்த பூங்கா பெங்களுர் மாநகரத்தின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். நகர நிர்வாக வளாகத்தின் அருகிலேயே இது அமைந்துள்ளது. எம்.ஜி ரோடு வழியாகவோ அல்லது கஸ்தூரிபா ரோடு வழியாகவோ இதற்குள் செல்லலாம்.

Samuel Jacob

சுற்றுலா

சுற்றுலா

பெங்களூருவில் ஆர அமர சுற்றுலா செய்து பெங்களூருவின் அழகை ரசிக்கவேண்டுமானால், நீங்கள் கட்டாயம் 1 வாரமாவது பெங்களூருவில் தங்கியிருக்க வேண்டும். அல்லது ஒரிரு நாள்களில் முடிக்கவேண்டுமென்றால் அதற்கும் வசதியுள்ளது. அது பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

prashantby