» »சுவிட்சர்லாந்து போகலாம், ஸ்பெயின் போகலாம் அதெல்லாம் இந்தியாவுக்குள்ளேயே போகலாம். எப்படி ?

சுவிட்சர்லாந்து போகலாம், ஸ்பெயின் போகலாம் அதெல்லாம் இந்தியாவுக்குள்ளேயே போகலாம். எப்படி ?

Posted By: Staff

நம்ம சினிமா ஹீரோக்கள் எல்லாம் சும்மா கண்ண மூடி கண்ணா திறந்தா எங்கயாவது வெளிநாட்டுல டூயட் பாடிகிட்டு இருப்பாங்க. அதை பார்க்குற நமக்கும் இப்படி எப்பவாவது மனைவி, மக்களோட வெளிநாட்டுக்கு சுற்றுலா போகணும்னு ஒரு கனவு இருக்கும். ஆனால் அப்படி லட்சக்கணக்குல செலவு செய்து வெளிநாட்டில் போய் பார்க்கும் இடங்களை விடவும் அழகான இடங்கள் நம்ம இந்தியாவிலேயே இருக்கிறது.

வாங்க, அப்படிப்பட்ட வெளிநாடுகளில் இருக்கும் இடங்களுக்கு இணையான இந்திய சுற்றுலாத்தலங்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Goibibo தளத்தில் விமானம் மற்றும் ஹோட்டல் கட்டணங்களில் ரூ.6000 தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன்களை இங்கே பெற்றிடுங்கள் 

சுவிட்சர்லாந்தின் பனி மலைகள் :

சுவிட்சர்லாந்தின் பனி மலைகள் :

உலகத்துக்கே 'ஊட்டி' எதுவென்றால் ஐரோப்பாவில் இருக்கும் சுவிட்சர்லாந்து நாடு தான். அல்ப்ஸ் மலைகள் சூழ்ந்திருக்கும் இந்த அழகு சொர்க்கத்தில் உலகத்திலேயே நமக்கு காணக்கிடைக்கும் மிக அழகான இயற்கை காட்சிகளை காணும் வாய்ப்பு இங்கே நமக்கு கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் இங்கே தான் உலகத்திலேயே மிகச்சிறந்த சாக்லெட்டுகளும் கிடைக்கின்றன. என்ன ஒன்று இங்கே சென்று வர குறைந்தது 2-3 லட்சங்களாவது ஆகும். ஆனால் சுவிட்சர்லாந்துக்கு நிகராக இந்தியாவில் என்ன இடம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? வாங்க அடுத்த பக்கத்துக்கு.

குல்மார்க், ஹிமாச்சல பிரதேசம் :

குல்மார்க், ஹிமாச்சல பிரதேசம் :

சுவிட்சர்லாந்துக்கு எப்படி அல்ப்ஸ் மலைகளோ அப்படி இந்தியாவுக்கு இமய மலை. அந்த இமய மலையில் அமைந்திருக்கும் அற்புதமான சுற்றுலாத்தலம் தான் குல்மார்க். ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரினாக்ரில் இருந்து வெறும் 52 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த நகரம் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு புகழ் பெற்றதாகும்.

 குல்மார்கில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் உள்ளன ? :

குல்மார்கில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் உள்ளன ? :

குல்மார்கில் இருக்கும் முக்கிய சுற்றுலா இடம் என்றால் அது குல்மார்க் கோண்டோலா என்னும் கேபிள் கார் சேவை தான். கூன்க்தூரி மலை சிகரத்தில் இருந்து அபார்வாத் சிகரம் வரையிலான 4.2 கி.மீ தூரத்துக்கு இயக்கப்படும் இந்த கேபிள் காரில் பயணிக்கையில் குல்மார்கின் மொத்த அழகையும் பார்த்து மெய் மறந்து போவீர்கள்.

 குல்மார்கில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் உள்ளன ? :

குல்மார்கில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் உள்ளன ? :

கிலான் மார்க் :

குல்மார்கின் பசுந்தோட்டம் தான் இந்த கிலான் மார்க். வசந்த காலத்தில் கோல்ப் விளையாடவும், குளிர் காலத்தில் பனிச்சறுக்கில் ஈடுபடவும் சிறந்த இடமாக இந்த கிலான் மார்க் திகழ்கிறது. இந்த இடத்தில் இருந்து நமக்கு பார்க்க கிடைக்கும் இமய மலை சிகரத்தின் காட்சிக்கு ஈடு இணை வேறெதுவுமே இருக்க முடியாது. குல்மார்க் நகர மையத்தில் இருந்து வெறும் 6 கி.மீ தொலைவிலேயே இருப்பதால் நிச்சயம் இங்கே சென்று வாருங்கள்.

எப்போது செல்லலாம் ?

எப்போது செல்லலாம் ?

டிசம்பர் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை குல்மார்க் செல்ல ஏற்ற நேரமாகும். குல்மார்கில் ஆடம்பர ஹோட்டல்கள் முதல் பட்ஜெட் ஹோட்டல்கள் வரை நிறையவே இருக்கின்றன. அவற்றை அப்ற்றிய விவரங்களையும், குல்மார்கை எப்படி அடைவதற்கான தகவல்களையும் எங்கள் தளத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்பெயின் நாட்டில் ஸ்குபா டைவிங் :

ஸ்பெயின் நாட்டில் ஸ்குபா டைவிங் :

கடலுக்கு அடியில் சுவாசக் கவசங்களுடன் நீந்தி சென்று மீன்களுடன் ஒன்றாக கடல் என்னும் பேருலகை தரிசிக்க கூடிய வாய்ப்பை தரும் சாகச விளையாட்டு. இந்த விளையாட்டுக்கு மிகவும் பிரசித்தமான இடம் ஸ்பெயின் நாடு. ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ஹிந்தி படமான 'சிந்திகி நா மேலேகி தோபாரா' என்ற அற்புதமான திரைப்படத்தில் இதனை அவ்வளவு அழகியலோடு காண்பித்திருப்பார்கள். சரி, இந்தியாவில் ஸ்குபா டைவிங்கை எங்கு மேற்கொள்ளலாம்.

அந்தமான் என்னும் அற்புத தீவு :

அந்தமான் என்னும் அற்புத தீவு :

வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் யூனியன் பிரதேசமான அந்தமான் குறைந்த செலவில் ஹனிமூன் செல்லவோ அல்லது குடும்பத்துடன் பிக்னிக் செல்லவோ ஆசைப்படுபவர்களுக்கு ஏற்ற இடம். இங்கிருக்கும் வெள்ளை மணல் தீவுகளில் நீங்கள் மனதை பறிகொடுத்து விடுவீர்கள். அது மட்டும் இல்லாமல் இங்கே ஸ்குபா டைவிங் விளையாட்டும் நடத்தப்படுகிறது.

 ஹெவேலோக் தீவு :

ஹெவேலோக் தீவு :

வெளிநாட்டவர்களே இதுபோல அழகான இடத்தை நாங்கள் பார்த்ததில்லை என்று வியக்கும் ஓரிடம் என்றால் அது ஹெவேலோக் தீவு தான். மாசுபடாத வெள்ளை மணல் கடற்கரையும், நீல நிறக்கடலும் நம் மனதுள் மாயாஜாலம் செய்யும். இந்த எல்லாவற்றை காட்டிலும் சிறப்பம்சம் இந்த கடற்கரையில் யானை மீது அமர்ந்து சவாரி செய்யலாம். அந்தமான் தீவை எப்படி அடைவது எங்கு தங்குவது என்பது பற்றிய தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்காட்லாந்து நாடும், வாகமன் என்ற இந்திய ஸ்காட்லாந்தும் :

ஸ்காட்லாந்து நாடும், வாகமன் என்ற இந்திய ஸ்காட்லாந்தும் :

பிரிட்டிஷ் இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் ஸ்காட்லாந்து அதன் நவ நாகரீக கலாச்சாரத்துக்கும், பசுமை கொஞ்சும் இயற்கை அழகு கொண்ட இடங்களுக்கும் பெயர் போனது. இந்த நாட்டைப் போலவே இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கபப்டும் இடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு?.

ஸ்காட்லாந்து நாடும், வாகமன் என்ற இந்திய ஸ்காட்லாந்தும் :

ஸ்காட்லாந்து நாடும், வாகமன் என்ற இந்திய ஸ்காட்லாந்தும் :

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று செல்லமாக அழைக்கப்படும் வாகமன், கேரளா மாநிலத்தில் கோட்டயம் இடுக்கி மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் அற்புதமான மலை வாசஸ்தலம். குளுமையான கால நிலை, மலையேற்றம், பாறை ஏற்றம் மற்றும் பாராக்ளிடிங் செய்ய தகுந்த புவியமைப்பு, தங்கல் பாறா, வாகமண் ஏரி, சூசைட் பாயிண்ட், வாகமண் அருவி போன்ற அற்புதமான சுற்றுலாத்தலங்கள் என கேரளாவின் மற்றுமொரு அற்புதமான சுற்றுலாத்தலமாக வளர்ந்து வருகிறது.

ஸ்காட்லாந்து நாடும், வாகமன் என்ற இந்திய ஸ்காட்லாந்தும் :

ஸ்காட்லாந்து நாடும், வாகமன் என்ற இந்திய ஸ்காட்லாந்தும் :

எந்த தொந்தரவும் இல்லாமல் வர்த்தகத்தனங்கள் இன்றி அமைதியாக ஒரு மலைவாசஸ்தலத்திற்கு செல்ல வேண்டும் ஆனால் அப்படி ஒரு இடமுமே இல்லையே என நினைப்பவரானால் நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடம் இந்த வாகமன் தான். இயற்கை காட்சிகள் நிறைந்த பள்ளத்தாக்குகள், பசுமை போர்வை போர்த்தியது போன்ற தேயிலை தோட்டங்கள், பைன் மரக்காடுகள், அருவிகள் என இங்கே ஒரு இயற்கை அழகுப்புதையலே இருக்கிறது.

ஹவாய் தீவுகளும், லட்சதீவுகளும் :

ஹவாய் தீவுகளும், லட்சதீவுகளும் :

பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சுற்றுலாத்தீவு தான் ஹவாய். நமக்கு அந்தமான் தீவுகள் இருப்பது போல அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவு பூலோக சொர்க்கம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு போக முடியாதவர்கள் கொச்சியில் இருந்து 450 கி.மீ தொலைவில் இருக்கும் இருக்கும் லட்ச்சதீவுகளுக்கு செல்லலாம்

ஹவாய் தீவுகளும், லட்சதீவுகளும் :

ஹவாய் தீவுகளும், லட்சதீவுகளும் :

அசுத்தமே இல்லாத கடற்கரைகள், சுற்றிலும் கடலால் சூழ்ந்திருப்பதால் கிடைக்கும் பேரமைதி, இனிமையாக பழகும் மக்கள் என இரைச்சல் மிகுந்த இந்த நகர வாழ்கையில் இருந்து தப்பித்து நண்பர்களுடன் இயற்கையின் மடியில் தவழ்ந்து விளையாட மிகச்சிறப்பான இடம்.

ஹவாய் தீவுகளும், லட்சதீவுகளும் :

ஹவாய் தீவுகளும், லட்சதீவுகளும் :

மினிகாய் தீவு, கவராட்டி தீவு, அகத்தி தீவு போன்றவை லட்சத்தீவில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலங்கலாகும். இங்கே ஸ்குபா டைவிங், ஸ்நார்க்ளிங் போன்ற கடல் விளையாட்டுகள் உள்ளன. ரம்யமான இந்த லட்சத்தீவுகளுக்கு செல்லும் முன்பு லட்ச்சதீவு அரசிடம் முன்னனுமதி பெற வேண்டும். கேரளாவில் இருந்து தொடர்ச்சியாக கப்பல் போக்குவரத்து இந்த தீவுக்கு உள்ளது. மேலும் பெங்களுருவில் இருந்து விமான சேவையும் உள்ளது. வாழ்கையில் ஒருமுறையாவது நீங்கள் நிச்சயம் செல்லவேண்டும் இடங்கள் இவை.