» »இந்தியன் ரயில்வேஸ் - சுவையான தகவல்கள்!

இந்தியன் ரயில்வேஸ் - சுவையான தகவல்கள்!

Written By: Staff

ஆங்கிலேயர்கள் நமக்குத் தந்தவற்றில் மிக முக்கியமானது ரயில்கள். தேசத்தின் உயிர்நாடி எனப்படும் இந்திய ரயில்கள் தினமும் சுமார் 21 லட்சம் பேர்களைத் தாங்கிச் செல்கிறது. இந்தியா முழுவதும் 7000 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ரயில் நிலையங்கள் வெறும் இடங்கள் அல்ல, அவை, பல பேர்களின் நினைவுகளை புதைத்து வைத்திருக்கும், வரலாற்றுச் சிறப்பை ஒளித்து வைத்திருக்கும் நினைவுச் சின்னங்கள். இப்பேற்பட்ட சிறப்புகள் கொண்ட இந்திய ரயில்களைப் பற்றி சில சுவையான தகவல்களைப் பார்க்கலாம்!!

Gatimaan

கடிமான் ரயிலின் உட்புறம்

Photo Courtesy : Wikipedia

மொத்த ரயில்கள்

தினசரி 11000 ரயில்கள் செல்கின்றன நாடு முழுதும் ; அதுவும், 60000 கி.மீ பரப்பளவில்.

உலகின் பெரு நிறுவனங்களில் ஒன்று

புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை எடுத்த கணக்கெடுப்பில், இந்திய ரயில்வே துறையில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை பார்க்கின்றனர். : உலகளவில், இந்திய ரயில்வேத் துறைக்கு ஏழாவது இடம், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இத்தனை பேர் வேலை செய்வது.

இந்தியாவில் அதிக தூரம் பயணிக்கும் ரயில்

திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் விரைவுவண்டி, அசாம் மாநிலம் திப்ருகரில் தொடங்கி கன்னியாகுமரியில் வந்து முடிகிறது. நம் நாட்டின் மிக நீளமான பாதையை கடக்கும் ரயில் இது. பாதையின் நீளம் மொத்தம் 4273 கி.மீ. 80 மணி நேரம்தாண்டி பயணம் நீள்கிறது.

நாக்பூர் - அஜ்னி

Ajni

Photo Courtesy: Superfast1111

இந்த அஜ்னி என்ற இடம் நாக்பூரின் அருகே இருக்கிறது; அதாவது 2.8 கி.மீ. நாக்பூரிலிருந்து இங்கு ஒரு ரயில் வருகிறது. இதில் என்ன சுவாரஸ்யம் என்கிறீர்களா ? இருக்கிறது. இரண்டு ரயில்வே நிலையங்களுக்கும் இடையே இத்தனை சிறிய தூரம், அதற்கும் ஒரு ரயில் வருவது இந்தியாவிலேயே இங்கு ஒன்றுதான்.

நான் ஸ்டாப் - ஃபுல் ஸ்டாப்

திருவனந்தபுரம்-நிஜாமுதின் ராஜ்தானி விரைவு வண்டி, வதோதர - கோட்டா இடையே எங்கும் நிற்காது. இந்த இரண்டு ரயில்வே நிலையங்களுக்கும் இடையே இருக்கும் 528 கி.மீ. தூரத்தை எங்குமே நிற்காமல் செல்லும்.

ஹவ்ரா-அமிர்த்ஸர் - இந்த ரயில் அப்படியே தலைகீழ் - மொத்தம் 115 இடங்களில் நின்று அமிர்த்ஸருக்கு ஆடி அசைந்து வரும்.

முயல், ஆமை:

Toy

Photo Courtesy : Wikipedia

கடிமான் விரைவுவண்டிதான் இந்தியாவின் மிக விரைவு ரயில்,. டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில்வே நிலையத்திலிருந்து ஆக்ரா கண்டோன்மன்ட் செல்லும் இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்கிறது. மொத்தம் உள்ள 188 கி,மீ 100 நிமிடத்தில் கடக்கிறது.

நீலகிரி பொம்மை ரயில்.

10 கி.மீ வேகத்தில் செல்கிறது. ரயிலை தவறா விட்டால்கூர ஓடிச் சென்று தொற்றிக் கொள்ளலாம்.

போலு - ரயில்வே பாதுகாவலன்.

Bholu

Photo Courtesy : Wikipedia

இந்திய ரயில்வேயின் அடையாளச் சின்னமாக யானை இருக்கிறது. 2002'இல் இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது; அதாவது இந்திய ரயில்வே தொடங்கி, 150'ஆவது ஆண்டில். போலு என்ற யானை கையில் ஒரு சிக்னலை ஏந்தியபடி இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது.

கவ்ஹாத்தி - திருவனந்தபுரம் விரைவு(?) வண்டி

இந்த ரயில் எப்போது அதன் இலக்கை அடையும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்தியாவிலேயே இந்த ரயிலுக்குத்தான் இந்த பெருமை; எப்போதும் 10-12 மணி நேரம் தாமதமாக செல்லும் வழக்கம் உடையது.

Read more about: indian railways trains

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்