Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் விரைவில் டிராம் ரயில்களா - சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் சேரும் “லைட் மெட்ரோ”!

சென்னையில் விரைவில் டிராம் ரயில்களா - சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் சேரும் “லைட் மெட்ரோ”!

சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் 'லைட் மெட்ரோ' விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். இது சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்! சென்னையில் லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க சாத்தியக்கூறு மதிப்பீட்டை நடத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வுக்கான நிதி ஏலத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் திங்கள்கிழமை திறந்தது. பணிகள் கூடிய சீக்கிரம் தொடங்கும் என்பதால் விரைவில் சென்னை மக்கள் டிராம் ரயில்களில் பயணிக்கலாம்!

சென்னையில் மெட்ரோலைட்

சென்னையில் மெட்ரோலைட்

ஏற்கனவே மெட்ரோ லைட் ரயில் திட்டம் ஏற்கனவே டெல்லி, கேரளாவின் கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இப்போது சென்னையிலும் மெட்ரோலைட் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

மாற்று போக்குவரத்து யோசனை

மாற்று போக்குவரத்து யோசனை

சென்னை மெட்ரோ ரயில் மற்றும் MRTS வழித்தடங்களை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயிலுக்கு மாற்றாக, செலவு குறைந்த மெட்ரோலைட்டை ஏற்றுக்கொள்வது குறித்து விரிவான இயக்கம் திட்டத்தின் கீழ் சாத்தியக்கூறு ஆய்வு பரிசீலித்து வருவதாக சென்னை மெட்ரோ ரயிலின் நிர்வாக இயக்குனர் M.A சித்திக் கூறியுள்ளார்.

பாதியாக குறையும் செலவு

பாதியாக குறையும் செலவு

மெட்ரோ ரயிலில் ஆகும் செலவில் மெட்ரோலைட்டுக்கு 40-50% செலவாகும் என்று கூறப்படுகிறது. 5-6 கிமீ இடைவெளியில் உள்ள I மற்றும் II கட்டங்களின் கீழ் மெட்ரோ ரயில் பாதைகளை இணைக்க முடியும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மீண்டும் இந்தியாவும் டிராம் சேவைகள்

மீண்டும் இந்தியாவும் டிராம் சேவைகள்

மெட்ரோலைட் இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் இருந்து சற்று வித்தியாசமானது மற்றும் மேம்படுத்தப்பட்ட டிராம் அல்லது தரமிறக்கப்பட்ட மெட்ரோவாக கருதப்படுகிறது. மெட்ரோ லைட் இயங்க தனியாக பிரிட்ஜ், சுரங்கப் பாதை போன்றவை தேவையில்லை. இதை சாலையிலேயே இயக்க முடியும். ஆனால் அதற்கான சிறப்பு டிராக் பாதைகள் மட்டும் அமைக்க வேண்டும். டிராம் ரயில் சேவையின் புதிய வடிவமே மெட்ரோ லைட் எனவும் கூறலாம். இது தரை மட்டத்தில் மட்டுமே கட்டப்படும் மற்றும் வேலி அல்லது சுவர்களுடன் சாலையிலிருந்து பிரிக்கப்பட்ட பிரத்யேக பாதைகளைக் கொண்டிருக்கும்.

ஆய்வுப் பணிகள் தீவிரம்

ஆய்வுப் பணிகள் தீவிரம்

விரிவான இயக்கம் திட்டத்தின் கீழ், மூன்றாம் கட்ட மெட்ரோ பணிகள் சாதாரண மெட்ரோவாகவோ அல்லது அதனை மெட்ரோலைட்டாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் அடிப்படையில், மெட்ரோ ரயில் திட்டப்பணி மேற்கொள்ளப்படும் என, CUMTA சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

மெட்ரோ பாதையுடன் இணையும் மெட்ரோலைட்

மெட்ரோ பாதையுடன் இணையும் மெட்ரோலைட்

நகரின் நீள அகலத்தை இணைக்க சென்னை மெட்ரோ மட்டும் போதாது என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். நகரின் உட்புறங்களை இணைக்க, இரண்டு முறைகள் கருதப்பட்டன ஒன்று சாலை போக்குவரத்து அல்லது மெட்ரோலைட். மெட்ரோலைட்டை மெட்ரோ ரயிலுடன் ஒருங்கிணைக்க வழி ஏதுவாக இருந்ததால் இந்த யோசனைக்கு வந்துள்ளார்கள் என கூறப்படுகிறது. இதன் மூலம் மெட்ரோ ரயில் செல்லாத அனைத்து பாதைகளையும் மெட்ரோ ரயிலுடன் இணக்கவும் முடியும் என கூறப்படுகிறது.

பொதுமக்களின் ஆதரவு

பொதுமக்களின் ஆதரவு

தற்போது, மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், ஆதரவும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் பொதுப் போக்குவரத்து அமைப்புடன் மக்களை இணைப்பதை CUMTA நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் தனியார் வாகனங்களின் பயன்பாடு குறைவதோடு மக்கள் தனியாரை விட பொது போக்குவரத்தை தேர்வு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுக்கிறது.

வேளச்சேரி to தாம்பரம்

வேளச்சேரி to தாம்பரம்

விவரக்குறிப்பின்படி, அதிகபட்சமாக 12டி ஆக்சில் லோட் கொண்ட மெட்ரோலைட் ரயில்கள் 2,000 முதல் 15,000 வரையிலான பயணிகளுக்கு ஏற்றதாக இருக்கும். 300 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மூன்று பிரிக்க முடியாத பெட்டிகளைக் கொண்டிருக்கும். முதற்கட்டமாகச் சென்னை வேளச்சேரி முதல் தாம்பரம் வரையில் 15.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த மெட்ரோ லைட் பாதை அமைக்கப்பட உள்ளது.

ஆகவே சென்னை வாசிகளே! கூடிய சீக்கிரம் நீங்கள் மெட்ரோலைட் எனப்படும் டிராம் ரயில்களில் பயணிக்கப் போகிறீர்கள்!

More News

    Read more about: chennai tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+