» »கப்பன் பார்கிற்கு நிகரான ஜே.பி. பார்க்!!

கப்பன் பார்கிற்கு நிகரான ஜே.பி. பார்க்!!

Written By: Staff

பொதுவாக, பெங்களூருக்குச் சுற்றுலா வருபவர்கள், லால்பாக் அல்லது கப்பன் பார்க்கை பார்ப்பதற்கு அதிக ஆவல் கொள்வார்கள். இந்த இரண்டு பூங்காகளுக்கு இணையாக இன்னொரு பூங்கா இருப்பது வெளியூர் வாசிகளுக்குச் தெரியாது; சொல்லப்போனால் பெங்களூர்வாசிகள் பலருக்குமே தெரியாது.

அந்தப் பூங்காதான் மத்திகரேயில் இருக்கும் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா; 2006'இல் திறக்கப்பட்டது.

பெங்களூர் நகரிலிருந்து சிறிது தள்ளியிருக்கும் வடமேற்கு இடங்களான யஷ்வந்த்பூர், ஜலஹள்ளி, மத்திகரே மக்களுக்கு, இந்தப் பூங்கா நடைபயிற்சிக்கு, குழந்தைகள் விளையாடுவதற்கு, நண்பர்களை சந்திப்பதற்கு என்று பல விதங்களில் பெரும் உதவியாய் இருக்கிறது.

மொத்தம் 85 ஏக்கர்கள் விரிந்திருக்கும் இந்தப் பூங்காவில் பார்ப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன.

நான்கு ஏரிகள் இருக்கின்றன.அதில், கெளுத்தி வகை மீன்கள் கரையோரம் ஒதுங்கவதை நீங்கள் பார்க்கலாம்.

பூங்காவிற்குள், நிறைய கல் பெஞ்சுகள், சிறு மண்டபங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு யோகா, உடற்பயிற்சி வகுப்புகள் தினசரி நடக்கின்றன.

இன்னிசை நீரூற்று!

இன்னிசை நீரூற்று!

இந்தப் பூங்காவில் முக்கிய ஈர்ப்பு இன்னிசை நீருற்று. சனி, ஞாயிறுகளில் இதை காண்பதற்கு பலத்த கூட்டம் வருகிறது.

இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த இன்னிசை நீருற்று, இதமான மெல்லிசையில், பல வண்ணங்களில் தண்ணீர் மேலெழுந்து கிழ் இறங்குவதைப் பார்க்க அரிய காட்சியாக இருக்கும்.

சூரிய அஸ்தமனம்

சூரிய அஸ்தமனம்

Photo Courtesy : Mahesh

ஜாகிங் பாதை

ஜாகிங் பாதை

ஜாகிங், நடைபயிற்சிக்கு 4 கி.மீ நீளம் கொண்ட நடைபாதைகள் இருக்கின்றன. காலை 5 மணி முதலே பூங்கா பரபரப்பாகிவிடும். இளைஞர்கள் முதல் முதியவர் வரை நடைபயிற்சி, ஜாகிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

Photo Courtesy : Mahesh

குழந்தைகள் விளையாடும் கேளிக்கைத் தளம்!!

குழந்தைகள் விளையாடும் கேளிக்கைத் தளம்!!

Photo Courtesy : Mahesh

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

Photo Courtesy : Mahesh

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

Photo Courtesy : Mahesh

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

Photo Courtesy : Mahesh

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

Photo Courtesy : Mahesh

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

Photo Courtesy : Mahesh

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

Photo Courtesy : Mahesh

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா

Photo Courtesy : Mahesh

இதுபோக பாறைத் தோட்டம், மூலிகைத் தோட்டம் என்று தோட்டங்கள் இருக்கின்றன. போட்டோ ப்ரியர்களுக்கு மிகவும் ஏற்ற இடம்.

குழந்தைகளுக்கு ஏகப்பட்ட சறுக்கு ஸ்லைடுகள், ஊஞ்சல் மற்றும் பல விளையாட்டு கேளிக்கை சாதனங்கள் இருக்கின்றன.

இந்தப் பூங்கா எத்தனை பெரியது என்றால் குறைந்தது 3-4 மணி நேரம் ஆகும் நிதானமாய் சுற்ற்ப் பார்ப்பதற்கு.

சனி, ஞாயிறுகளில், பெங்களூருக்குள்ளேயே சுற்றுலா செல்ல ஒரு சிறந்த இடம் இந்த ஜே.பி. பூங்கா

எப்படி செல்வது ?

ஷிவாஜி நகரிலிருந்து மத்திகரேவிற்கு நிறைய பேருந்துகள் இருக்கின்றன.

மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 90 சீரிஸ் பேருந்துகள் இந்த பூங்காவிற்கே செல்கின்றன.

Read more about: bangalore parks jp park

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்