» »கபாலிடா!! மல்டிப்ளக்ஸ் நோடா!! Single Screen தூள்டா!!!

கபாலிடா!! மல்டிப்ளக்ஸ் நோடா!! Single Screen தூள்டா!!!

Written By: Staff

நேற்று பிறந்த பொடிசுகள் கபாலிடா என்கிறது.யார் சந்தித்துக் கொண்டாலும் இரண்டொரு வார்த்தையில் கபாலியில் வந்து முடிகிறது. பாஸ், ஜுலை 22 எந்தக் காட்சி புக் பண்ணியிருக்கீங்க என்று எங்கும் பேச்சு.

கபாலி : பாட்ஷாவிற்குப் பிறகு ரஜினி டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; ரஞ்சித்தின் இயக்கம்; சந்தோஷ் நாராயணின் இசை என அட்டகாசமான இளைஞர்கள் கூட்டணி. போதாக்குறைக்கு டீஸர், பாடல்கள் ரசிகர்களைப் பித்துப் பிடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மொத்த ரசிகர்களும், கொண்டாட்டத்திற்குத் தயாராகி விட்டனர்.

பொதுவாகவே, ரஜினி படங்களை எல்லோரும் முதல் இரண்டு வாரங்களில் பார்க்க பெரிதும் விரும்புவார்கள்; சூப்பர் ஸ்டார் என்ற வாசகத்தைப் பார்ப்பதற்கும், அதற்கு, ரசிகர்கள், தியேட்டரில் அடிக்கும் மரண விசில்கள்; டிக்கெட்டுகளை கிழித்து திரையில் தூவுவதற்கு; திரைக்கு முன்னால் சென்று ஆடுவதற்கு; ஒவ்வொரு பஞ்ச் வசனத்திற்குப் போடும் கூச்சல்கள் என மூன்று மணி நேர துள்ளலான கொண்டாட்டம்.

ஆனால், மல்டிப்ளக்ஸ்கள் வந்தபிறகு இதில் எத்தனை சாத்தியம்? தியேட்டர் கெடுபிடிகள் ஒரு புறம்; டிக்கெட் விலை மறு புறம். இதற்கும் மேல், இடைவேளை தீனிகளின் விலையை கேட்டே பலர் நெஞ்சைப் பிடித்து சரிந்து விடுகின்றனர்.

சென்னையிலாவது பரவாயில்லை; டிக்கெட் விலை 120ரூபாய். ஆனால, பெங்களூரில், மல்டிப்ளக்ஸிற்குச் சென்றால் 270-300 வரை ஆகிறது ஒரு நபருக்கு. மூன்று பேர் சென்றால் நம் அண்டர்வேர் வரை உருவிவிடுகின்றனர். இங்குதான் நமக்கு கை கொடுக்கிறது ஒற்றைத் திரை தியேட்டர்கள்.

Kabali

பெங்களூரில், கபாலியைக் காண சிறந்த தியேட்டர்கள் எவை ? ஒரு ரவுண்ட் வரலாம்.

ஊர்வசி தியேட்டர் - லால்பாக் அருகே இருக்கிறது.

பெங்களூரின் பழமையான தியேட்டர்களில் ஒன்று. பெங்களூரின் சிறந்த தியேட்டர் இதுதான் என்று எளிதாய் சொல்லி விடலாம். ஒரே நேரத்தில், ஆயிரம் பேர் உட்கார்ந்து படம் பார்க்கலாம்; அதிலும், பால்கனியின் பரப்பளவு பெரியது. அற்புதமான ஒலியமைப்பு; 70mm கொண்ட அகன்ற திரையில் ரசிகர்களின் ஆரவாரத்தில் அட்டகாசமாய்ப் பார்க்கலாம்.

டிக்கெட் விலை 150-200 ரூபாய்க்குள். இடைவேளையில் வாங்கும் பண்டங்களின் விலை 70-100ரூபாய்க்குள் முடிந்துவிடும்.

பாலாஜி - விவேக் நகர், கோரமங்களா அருகே

அனைத்து தமிழ்ப் படங்களும் இங்கு வரும். ஊர்வசி அளவிற்கு பெரிய தியேட்டர் கிடையாது என்றாலும் திரை பெரிய திரைதான். சற்றே உயர்ந்த இருக்கை வரிசைகளை பால்கனி என்கின்றனர். நல்ல ஒலியமைப்பு, குறைந்த டிக்கெட் விலை.

புஷ்பாஞ்சலி - கே.ஆர்.புரம்

ஒரளவிற்கு சின்ன தியேட்டர்; பால்கனி கிடையாது; 150க்குள் டிக்கெட் விலை. தியேட்டரை நன்கு பராமரிக்கின்றனர்; சுத்தமான கழிப்பறைகள். கே. ஆர். புரம் ரயில் நிலையம் அருகே இருக்கிறது.

ரெக்ஸ் தியேட்டர் - ப்ரிகேட் ரோடு.

பெங்களூரின் புகழ்பெற்ற ஷாப்பிங் தளமான‌ ப்ரிகேட் ரோட்டில் இருக்கிறது. இந்த இடத்தின் காரணமாக, எத்தனை சுமாரான படம் வந்தாலும் இளைஞர்கள், காதலர்கள் கூட்டத்திற்கு குறைவிருக்காது. அப்படிபட்ட சூழலில் கபாலி எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

சின்ன தியேட்டர்; குறைந்த டிக்கெட் விலை ; ரசிகர்கள் கொண்டாட அருமையான சூழல்.

சந்தியா - மடிவாலா

மடிவாலா ஆஞ்சநேயர் சிலைக்கு அருகில் இருக்கிறது சந்தியா தியேட்டர். சமீபகாலமாக, இளைஞர்கள் மத்தியில். அதிகம் விரும்பபடக்கூடிய தியேட்டர்களில் இது ஒன்று.

திரைகள் ரெடியாகி விட்டன; ரசிகர்கள் தயாராகிவிட்டனர் கபாலியின் வருகைக்காக!

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்