» »காவிரியில் தண்ணீர் விட அடம்பிடிக்கும் கர்நாடகத்தில் இத்தனை அணைகளா?

காவிரியில் தண்ணீர் விட அடம்பிடிக்கும் கர்நாடகத்தில் இத்தனை அணைகளா?

Written By: Udhaya

காவிரி காவிரி காவிரி.. எங்க பாத்தாலும் இதே பேச்சுத்தான். ஐபிஎல்ல காமிச்சி திசை திருப்பிடுவீங்களானு அதுக்கும் சேர்த்து போராட்டம். சரி... இவ்ளோ போராடுறோமே இதுக்கு பின்னாடி இருக்குறத அறிவியல் பூர்வமா சிந்திச்சி யாரும் பேசிருக்கோமான்னா இல்லனுதான் பதில் வருது.. கர்நாடகத்துக்கும் தண்ணி தேவ.. தமிழகத்துக்கும் தண்ணி தேவ. அப்போ இரு மாநிலங்கள்ல இருக்குற தண்ணி அளவு பத்தி எப்பவாச்சும் ஒப்பீட்டு பாத்துருக்கோமா. அத விடுங்க கர்நாடகத்துல எத்தன அணைகள் இருக்குனு தெரியுமா?

 கர்நாடக அணைகள்

கர்நாடக அணைகள்

கர்நாடக மாநிலத்தில் சிறியதும் பெரியதுமாக 17 அணைகள் இருக்கின்றன. மேலும் சிற்றணைகள், தடுப்பணைகளும் இருக்கின்றன. இரு பருவமழைகளின்போதும் மழை பெறும் கர்நாடக மாநில விவசாயிகளுக்கு இவ்வளவு அணை இருந்தும் ஏன் தண்ணீர் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். 903.6 டிஎம்சி தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட அணைகள் இவையாகும். சரி ஒவ்வொரு அணையாக மொத்த அணைகளை குறித்தும் பார்க்கலாம் வாருங்கள்.

 அல்மட்டி அணை

அல்மட்டி அணை

கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 49.29 மீ உயரமும், 1565 மீ நீளமும் கொண்டது. பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 2005ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 123.25 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கும், நீர் மின்சாரத்துக்கும் இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

Murughendra

பசவா சாகர அணை

பசவா சாகர அணை

கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 29.79 மீ உயரமும், 10637 மீ நீளமும் கொண்டது. பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1982ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 37.965 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கும், நீர் மின்சாரத்துக்கும் இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

பத்ரா அணை

பத்ரா அணை


பத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 194 அடி உயரமும், 1708மீ நீளமும் கொண்டது. சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1965ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 71.50 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கும், நீர் மின்சாரத்துக்கும் இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

Amarrg

 துங்கபத்திரா அணை

துங்கபத்திரா அணை

துங்கபத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 49.39 மீ உயரமும், 2443 மீ நீளமும் கொண்டது. பல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1953ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 132.47 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கும், நீர் மின்சாரத்துக்கும் இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

Sanyam Bahga

கிருஷ்ணராஜசாகர் அணை

கிருஷ்ணராஜசாகர் அணை


காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 42.62 மீ உயரமும், 2621 அடி நீளமும் கொண்டது. சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1931ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 45.05 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கும், நீர் மின்சாரத்துக்கும் இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

Vaishu2

லிங்கனமாக்கி அணை

லிங்கனமாக்கி அணை

ஷாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 61.26 மீ உயரமும், 2749.29 மீ நீளமும் கொண்டது. சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1964ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 156.62 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கும், நீர் மின்சாரத்துக்கும் இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

USAID

ஹாரங்கி நீர்த்தேக்கம்

ஹாரங்கி நீர்த்தேக்கம்

ஹாரங்கி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 53 m மீ உயரமும், 845.8 மீ நீளமும் கொண்டது. குடகு மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1982ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 8.07 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கும், நீர் மின்சாரத்துக்கும் இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
wiki

 ஹேமாவதி நீர்த்தேக்கம்

ஹேமாவதி நீர்த்தேக்கம்


ஹேமாவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 58.50 மீ உயரமும், 4692 மீ நீளமும் கொண்டது. ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1965ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 35.76 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கு இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

Technofreak

சாந்தி சாகரா

சாந்தி சாகரா

ஹரித்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 27 அடி உயரமும், 290 மீ நீளமும் கொண்டது. தேவநாகரே மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1965ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 3.5 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கு இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

Siddarth.P.Raj

 ராஜலக்மா அணை

ராஜலக்மா அணை


காட்டபிரபா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 53.34 மீ உயரமும், 10183 மீ நீளமும் கொண்டது. பெலகாம் மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1977ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 51.16 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கும், நீர் மின்சாரத்துக்கும் இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

Shishirmk

 ரேணுகா சாகர் அணை

ரேணுகா சாகர் அணை


மலபிரபா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 43.13 மீ உயரமும், 154.52 மீ நீளமும் கொண்டது. பெலகாம் மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1972ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 37.73 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கும், நீர் மின்சாரத்துக்கும் இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

Manjunath Doddamani.

கட்ரா அணை

கட்ரா அணை


காளி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 40.50 மீ உயரமும், 2313 மீ நீளமும் கொண்டது. உத்தரகன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1997ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 13.74 டிஎம்சி ஆகும். நீர் மின்சாரத்துக்கு இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

PP Yoonus

சுபா அணை

சுபா அணை


காளி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 101 மீ உயரமும், 331.29 மீ நீளமும் கொண்டது. உத்தரகன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1987ம் ஆண்டு கடப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 147.54 டிஎம்சி ஆகும். நீர் மின்சாரத்துக்கு இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

solarisgirl

 கன்வா நீர்த்தேக்கம்

கன்வா நீர்த்தேக்கம்

கன்வா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 22.57 மீ உயரமும், 1422 மீ நீளமும் கொண்டது. ராமநகரா மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1946ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 0.85 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கு இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

Redolentreef

 கோடசல்லி அணை

கோடசல்லி அணை

காளி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 52.1 மீ உயரமும், 534 மீ நீளமும் கொண்டது. உத்தரகன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 2000 ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 10.14 டிஎம்சி ஆகும். நீர் மின்சாரத்துக்கு இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

Karthickbala

 வாணி விலாச சாகரா

வாணி விலாச சாகரா

வேதாவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 43.28 மீ உயரமும், 405.4 மீ நீளமும் கொண்டது. சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள அணை 1965ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மொத்தக்கொள்ளளவு 28.34 டிஎம்சி ஆகும். விவசாயத்துக்கும், நீர் மின்சாரத்துக்கும் இதன் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்