Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரில் ஷாப்பீங்கா..! எங்கவெல்லாம் போகலாம்..?

பெங்களூரில் ஷாப்பீங்கா..! எங்கவெல்லாம் போகலாம்..?

வெளிநாட்டில் இருந்து அறிமுகமாகும் ஆடைகள் முதல் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடவருக்கான அலங்காரப் பொருட்கள் என ஒவ்வொன்றும் குவிந்து கிடப்பது தென்னிந்தியாவிலேயே பெங்களூருதான். ஷாப்பிங் ஏன்றாலே பெங்களூருதான் என்று இன்று நம்மில் பலருக்கும் தெரியும். இந்நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆனாலும் சரி, தொழில் ரீதியாகப் பயணிப்போரும் சரி ஊர் திரும்புகையில் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்காவது ஷாப்பிங்கை முடித்துவிட்டுதான் திரும்புகின்றனர். இதில், இந்த நகரை சுற்றுப் பார்க்க ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் ஷாப்பிங்குக்கு என மட்டுமே வருடத்தில் ஒரு சில நாள் வெளி மாநிலங்களில் இருந்து பயணிகள் வருவதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர். பெங்களூரைச் சுற்றிலும் ஏராளமான கடைவீதிகளும், ஷாப்பீங் மால்களும் உள்ள நிலையில் பட்ஜெட்டுக்கு ஏற்ற சந்தைகள் எங்கவெல்லாம் உள்ளது? இளைஞர்களைக் கவரும் ஷாப்பீங் ஏரியாக்கல் எது என பார்க்கலாம் வாங்க.

எம்.ஜி.ரோடு

எம்.ஜி.ரோடு

பெங்களூர், கப்பன் பார்க் சாலை வழியாக சுமார் இரண்டு கிலோ மீட்டர் பயணித்தால் மகாத்மா காந்தி சாலைடை அடைந்துவிடலாம். இதுதான் எம்.ஜி. ரோடு என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. மகாத்மா காந்தி சாலைக்கும் அங்கே நடப்பதற்கும் துளிகூட தொடர்பே இருக்காது. புதிதாக வரும் எவருக்கும் வெளிநாட்டினுடைய தோற்றத்தை அளிக்கும் இந்த சாலை முழுவதுமே மார்க்கெட் பகுதிகளையும் பல்வேறு விதமான ஷாப்பிங் அம்சங்களையும் கொண்டுள்ளது. இங்கு மாடர்ன் பெண்களுக்கு ஏற்ற புடவைகள், ஜார்ஜெட் புடவைகள் தொடங்கி கல்லூரி பெண்களைக் கவரும் வகையிலான அனைத்துவித ஆட்டைகளும் கொட்டிக் கிடக்கிறது. இவை தவிர இந்த மார்க்கெட் பகுதியில் காஸ்டியூம்ஸ் ஐட்டங்களான விதவிதமான பைகள், காலணிகள், ஆபரணங்கள் என பல கலைப்பொருட்கள் போன்றவற்றை வாங்க ஏதுவாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டு உபயோகத்திற்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களையும் வாங்கிச் செல்லலாம்.

Marc Smith

ரெசிடென்சி ரோடு

ரெசிடென்சி ரோடு

பொதுவாக அதிகப்படியான குடியிருப்புகள், காலனிகள் ரெசிடென்சியல் ஏரியா என நாம் அறிந்திருப்போம். ஆனால், பெங்களூரில் உள்ள இந்த ரெசிடென்சி ரோடு அப்படி இல்லைங்க. வார இறுதி நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்ற மால்கள், பெண்களுக்கு ஏற்ற வகைவகையான அலங்கார அங்காடிகள் என ஒரு மார்க்கெட் போலவே காட்சி தரும் இந்த சாலை. கைவினைப் பொருட்களின் மீது அதிக நாட்டமுடையவர்களுக்கு ஏற்ற இடமும் இதுதான். மரத்தால் ஆன வளையல்கள், காதணிகள் என பலவகை ஆபரணங்களை இங்கே அள்ளிச் செல்லலாம்.

ArnoLagrange

கமர்சியல் தெரு

கமர்சியல் தெரு

பெங்களூரை சுற்றிப் பார்த்தபின் ஷாப்பிங் செய்யவேண்டும் என்று நினைக்கும் சுற்றிலாவாசிகளுக்கும் சரி, ஷாப்பிங் ஏரியா மட்டுமே சுத்துர பயணிகளுக்கும் சரி அனைத்துத் தரப்பினரும் வரத் தகுந்த இடம் இந்த கமர்சியல் தெரு. நகரின் மையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தெரு இரவில் பயணிப்போருக்கு பல கண்கொள்ளாக் காட்சிகளை தரவல்லது. பிரிகேட் ரோடு மற்றும் காமராஜ் சாலை வழியாக இந்த கமர்ஷியல் தெருவை எளிதில் அடையலாம். நகைகள், புத்தகங்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வாங்க இங்க வந்தாலே போதும். என்ன பாஸ் எல்லாமே பெண்களுக்கு மட்டும் தானா ? என வருத்தப்பட வேண்டாம் பாய்ஸ், உங்களுக்காகவே சாலையோரங்களில் சுவையான உணவுப் பொருட்களும் விற்கப்படுகின்றன. அப்புறம் என்ன, நம்ம ஒரு ஓரமா பெங்களூரு புட்ஸ்ச ரசிப்போமே.

Purshi

பிரைகேட் ரோடு

பிரைகேட் ரோடு

பெங்களூரில் சாலையோரக் கடைகளுக்கு புகழ்பெற்ற தலங்களில் ஒன்றுதான் இந்த பிரைகேட் ரோடும். இந்த நகருக்கு பயணம் செய்யும் இளைஞர்களில் பெரும்பாலானோர் தவறவிடக் கூடாத இடமாகவும் இது இருக்கு. விதவிதமாக பிராண்டட் கடைகள், நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்ற சாலையோரக் கடைகள் என ஏராளமானவற்றை இங்கே காணலாம்.

Kwanyatsw

மரதஹல்லி

மரதஹல்லி

கப்பன் பார்க், எம்.ஜி.ரோடு வழியாக விமான நிலைய சாலையில் உள்ளது மரதஹல்லி. எங்கு பார்த்தாலும் தோழில் நிறுவனங்கள் நிறைந்த ஏரியாதான் இந்த மரதஹல்லி. விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ள இப்பகுதி எப்போதும் பிஸியாகவே இருக்கும். குறைந்த விலையில் பேரம் பேசி அதிகமாக வாங்கும் பெண்களை இங்கே அதிகமாக காணலாம்.

Amol.Gaitonde

சாம்பிகே ரோடு

சாம்பிகே ரோடு

ஷேஷாஸ்திரி சாலையில் ரேஸ்கோர்ஸ், மல்லேஸ்வரம் சாலையில் பயணித்தால் சாம்பிகே ரோட்டை எளிதில் அடையலாம். உள்ளூர் மக்கள் அதிகமாக பயணம் செய்யும் சாலையில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் இந்த ஷாப்பிங் தெருவில் முழுக்க முழுக்க பெண்களின் சாம்ராஜ்யம் என்றாலும் துணைக்கு வரும் ஆண்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க சாலையோர டீக்கடைகள் மற்றும் ரெஸ்டாரெண்டுகள் இங்கு உள்ளன. சுத்தமான அல்லது நவீன உணவு விரும்பிகளுக்கு கேஎஃப்சி மற்றும் பீட்ஸா ஹட் போன்ற உணவகங்களும் இந்த தெருவில் உள்ளன.

Mahesh.n

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more