Search
  • Follow NativePlanet
Share
» »பட்ஜெட் சுற்றுலாவிற்கு ஏற்ற பறவைகள் சரணாலயம்! கர்நாடகாவுல எங்க இருக்கு தெரியுமா ?

பட்ஜெட் சுற்றுலாவிற்கு ஏற்ற பறவைகள் சரணாலயம்! கர்நாடகாவுல எங்க இருக்கு தெரியுமா ?

எத்தனையோ சுற்றுலாத் தலங்களால் நிறைந்து காணப்படும் கர்நாடகாவில் சிறியதாக பட்ஜேட் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் இங்கே அமைந்துள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு எல்லாம் சென்றுவருவது சிறந்தது.

கர்நாடகாவில் உள்ள மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் மீது அளவுகடந்து காதல் கொண்டுள்ளவர்களுக்கும் பிரத்யேகமான எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் இங்கு அமைந்துள்ளன. கூர்க் முதல் சிக்மகளூர் வரை எத்தனை எத்தனையோ சுற்றுலாத் தலங்களால் நிறைந்து காணப்படும் கர்நாடகாவில் சிறியதாக பட்ஜேட் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் இங்கே அமைந்துள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு எல்லாம் சென்றுவருவது சிறந்தது. இவை, குழந்தைகளுக்கான கோடைகால விடுமுறையினை பயனுள்ளதாகவும் மாற்றும். சரி வாருங்கள், கர்நாடகாவில் எங்கெல்லாம் பறவைகளுக்கு என சரணாலயங்கள் உள்ளது ? எப்படிச் செல்வது என பார்க்கலாம்.

கர்நாடக பறவைகள் சரணாலயங்கள்

கர்நாடக பறவைகள் சரணாலயங்கள்


கர்நாடகாவில் கடக் அருகே மகடி பறவைகள் சரணாலயம், சோன்டாவில் முட்டினகரே பறவைகள் சரணாலயம், ஷிமோகாவில் குடவி பறவைகள் சரணாலயம் மற்றும் மன்டகட்டே பறவைகள் சரணாலயம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

Rama Warrier

மன்டகட்டே பறவைகள் சரணாலயம்

மன்டகட்டே பறவைகள் சரணாலயம்


ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள மன்டகட்டே பறவைகள் சரணாலயம் துங்கா ஆற்றில் அமைந்துள்ள ஒரு தீவுப்படுகை பகுதியில் உள்ளது. இது பலவகையான பறவைகளின் இருப்பிடமாக காட்சியளிக்கிறது. இந்த மன்டகட்டே பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் வழியில் பயணிகள் சக்ரேபைலே யானைப் பயிற்சி முகாம் மற்றும் கஜனூர் அணை ஆகிய இடங்களுக்கும் பயணம் செய்யலாம். மேலும் இந்த பறவைகள் சரணாலயம் ஒரு அழகான பிக்னிக் தலமாகவும், கூடாரத் தங்கலுக்கும் ஏற்ற இயற்கைத் தலமாகவும் காட்சியளிக்கிறது. இந்த சரணாலயத்தில் ஒரு காட்சிக்கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து தொலைநோக்கிகள் மூலம் பலவகையான பறவைகளை கண்டு ரசிக்கலாம். இயற்கை மற்றும் பறவைகளை பார்த்து ரசிப்பதற்காக வனத்துறையினர் படகுச்சவாரி வசதிகளையும் இங்கே செய்துள்ளனர்.

எங்கே உள்ளது ?

மன்டகட்டே சரணாலயம் ஷிமோகாவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள நகரங்களிலிருந்தும் மன்டகட்டே சரணாலயத்திற்கு பேருந்து சேவைகள் உள்ளன. மாலூர் ரயில் நிலையம் இதன் அருகில் அமைந்துள்ளது. மங்களூர் விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும். ஷிமோகா அல்லது தீர்த்தஹள்ளி நகரங்களிலிருந்து வாடகை வாகனங்கள் மூலமாகவும் இந்த சரணாலயத்தை அடையலாம்.

Shrikanth Hegde

குடவி பறவைகள் சரணாலயம்

குடவி பறவைகள் சரணாலயம்


ஷிமோகாவி;ல அமைந்துள்ள மற்றுமொறு பறவைகள் சரணாலயம் அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் இந்த குடவி பறவைகள் சரணாலயம் ஆகும். இங்குள்ள ஏரியின் இயற்கை அழகு இந்த சரணாலயத்தின் முக்கிய அம்சமாகும். 0.73 ச.கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பறவைகள் சரணாலயத்தில் சாம்பல் கொக்கு, காட்டுக்கோழி, சிறு காக்கை, பரையா பருந்து மற்றும் வெள்ளை இபிஸ் கொக்கு ஆகியவை வசிக்கின்றன. கர்நாடகாவில் உள்ள ஐந்து முக்கியமான பறவைகள் சரணாலயங்களில் இந்த குடவி பறவைகள் சரணாலயமும் ஒன்றாகும்.

எப்படிச் செல்வது ?

குடவி பறவைகள் சரணாலயம் ஷிமோகாவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் நகரத்திலிருந்து 41 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள எல்லா சிறு நகரங்களிலிருந்தும் இந்த சரணாலயத்துக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன. சிர்சி எனும் இடத்திலிருந்து 2 மணி நேர பேருந்து பயணத்திலேயே இந்தப் பகுதியை அமையலாம்.

Atulbhats

மகடி பறவைகள் சரணாலயம்

மகடி பறவைகள் சரணாலயம்


கடக்கிலிருந்து 26 கிலோ மீட்டர் தூரத்தில் மகடி குளம் அல்லது மகடி கேரே என்று அறியப்படும் ஏரியில் அமைந்துள்ளது மகடி பறவைகள் சரணாலயம்.இங்கு ஏரியை ஒட்டி காவேரியின் துணை ஆறு ஓடுகிறது. இங்கு பயணிகள் பலவகையான அழகிய பறவைகளை பார்க்க முடியும். நீர் வாழ் உயிரினங்களுக்கு பதிலாக தாவர வகைகளை மட்டுமே உண்ணும் பட்டைத்தலை வாத்து என்னும் புலம் பெயர் பறவையை இங்கு பார்க்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக பல மத்திய ஆசிய புலம் பெயர் பறவைகளையும் மற்றும் 134 வகை பறவைகளையும் இங்கு பார்க்க முடிகிறது. செந்நாரை, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், சீப்பு மூக்கு வாத்து போன்ற பறவை இனங்கள் இங்கு காணப்படுகின்றன.

எப்படிச் செல்வது ?

கடக்கிலிருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹுப்பள்ளியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்திற்கு பேருந்து வசதிகள் அதிகளவில் உள்ளது. கடக்கில் அமைந்துள்ள ரயில்நிலையமே இதன் அருகில் உள்ளதாகும்.

Subramanya C K

முட்டினகரே பறவைகள் சரணாலயம்

முட்டினகரே பறவைகள் சரணாலயம்


முட்டினகரே பறவைகள் சரணாலயம் சோண்டா பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது முட்டினகரே ஏரியில் அமைந்துள்ளது. பல அரிய பறவை இனங்கள் இங்கு ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை இனவிருத்தி காலத்தில் அதிகம் தென்படுகின்றன.

Vikashegde

ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம்

ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம்


ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ரங்கணாத்திட்டு பறவைகள் சரணாலயம் கர்நாடகா செல்லும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலமாகும். ஆறு தீவுத்திட்டுகளை உள்ளடக்கிய இந்த சரணாலயம் 67 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த பகுதிக்கு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான இடைப்பட்ட காலத்தில் பயணம் செய்வது ஏற்றது. இந்த சரணாலயத்தில் பல பிரசித்தமான புலம் பெயர் பறவைகளான கூழைக்கடா, செங்கால் நாரை போன்றவை வாழ்கின்றன. இதைத் தவிர அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், கொக்கு, நீர்க்காகம், கௌதாரி போன்ற பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. படகுச்சவாரி செல்வதன் மூலம் கொக்கு, கரண்டி வாயன், நாரை போன்றவற்றை பார்க்கலாம்.

எப்படிச் செல்வது ?

பெங்களூரில் இருந்து ராமநகரா வழியாக சுமார் 130 கிலோ மீட்டர் பயணம் செய்தால் ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயத்தை அடையலாம். மைசூருக்கு மிக அருகில் 22 கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த பறவை சரணாலயம் உள்ளது. மாநகரத்தின் பிறப் பகுதிகளில் இருந்து பேருந்துகளும், மைசுரில் இருந்து பல தனியார் வாடகைக் கார்களும் இங்கே செல்ல இயக்கப்படுகின்றன.

Likhith N.P

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X