» »கோடை வெயிலுக்கும் கோவைக்கும் அம்புட்டு தூரங்க... ஏன்னு தெரியுமா..?

கோடை வெயிலுக்கும் கோவைக்கும் அம்புட்டு தூரங்க... ஏன்னு தெரியுமா..?

Written By: Sabarish

"கோயம்புத்தூர்", அதிகப்படியாக அன்றாடம் நம் காதில் ஏதோ ஒரு ரூபத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கக்கூடிய ஊர். ஒரு புறம் பேற்குத் தொடர்ச்சி மலை, மறுபுறம் அணைகளால் சூழப்பட்ட வளர்ந்து வரும் மாவட்டங்கள், கரைபுரண்டோடும் கோவைக் குற்றாலம், மலை முகடுகள் எங்கும் கடல்போல் விரிந்த தேயிலைத் தோட்டம் வருடத்தின் ஒரு சில மாதங்கள் கோடை வெயில் வாட்டினாலும் அதற்கு ஏற்ற மாற்று சூழலைக் கொண்ட மாவட்டம்தான் இந்த கோயம்புத்தூர். இப்படிப்பட்ட ஊரில் கோடை விடுமுறையை ஜில்லென்று செலவிட, அதுவும் பட்ஜெட் குடும்பத்திற்கு ஏற்ற சுற்றுலாத் தலங்கள் என்னவெல்லாம் இருக்கு என பார்க்கலாமா..!

மலைக் காடுகள்

மலைக் காடுகள்


கோயம்புத்தூருக்கு சுற்றுலா செல்வதாக திட்டமிட்டாலே முதல் தேர்வாக தோன்றுவது மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு மாவட்டமான நீலகிரி தான். இதற்கு அடுத்தாக இன்றளவும் வளர்ச்சியில் சற்று பின் தங்கியிருக்கும் பொள்ளாச்சியும், வால்பாறையும். இதையெல்லாம் தவிர்த்து வெயிலில் இருந்து தப்பித்து குளுமையின் மடியில் கொஞ்சி விளையாட போலாம் வாங்க.

Anand2202

சுற்றியுள்ள அணைக் கட்டுகள்

சுற்றியுள்ள அணைக் கட்டுகள்


கோயம்புத்தூரைச் சுற்றியும் சிறுவாணி அணை, மலம்புழா அணை, அமராவதி அணை, ஆழியாறு அணை மற்றும் சுற்றுவட்டார மாவட்டமான ஈரோடு, சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணை, கொடிவேரி அணை என சிறந்த சுற்றுலாத் தலங்களுடன் கூடிய அணைக்கடுகள் உள்ளன.

Siva301in

சிறுவாணி அணை

சிறுவாணி அணை


கோயம்புத்தூரில் அமைந்துள்ள இந்த சிறுவாணி உலகின் இரண்டாவது மிக சுவையான நீர் என புகழ்பெற்றது. காவிரியாற்றின் துணை நதியான பவானி ஆற்றின் ஒரு கிளை நதிதான் சிறுவாணி ஆறு. இது கேரள மாநிலம் பாலக்காடு வழியாக பாய்ந்து கோயம்புத்தூரில் நுழைகிறது. இந்த சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான் சிறுவாணி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த சிறுவாணி நீர் உற்பத்தியாகும் இடங்களில் உள்ள பாறைகள் மற்றும் அங்குள்ள மண்ணின் தன்மை காரணமாகவே சிறுவாணி நீர் சுவையுள்ளதாக இருப்பதாக கூறுகின்றனர்.

Ashwin Kumar

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகள் அதிகளவில் உள்ளன. அல்லது பிராதன பேருந்து நிலையங்களான உக்கடம் அல்லது காந்திபுரத்தினை வந்தடைந்து பூண்டி, பூளுவப்பட்டி பேருந்துகள் மூலம் செல்லலாம். இதனருகே உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், கோவைக் குற்றாலம் கோயம்புத்தூரின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

Helen-ann

மலம்புழா அணை

மலம்புழா அணை


கேரளாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன அணையாக கருதப்படும் மலம்புழா அணை கோயம்புத்தூரில் இருந்து சுமார் 51 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வரும் இந்த மலம்புழா அணையுடன் சேர்ந்து ஒரு கேளிக்கை பூங்காவும், அற்புதமான தோட்டம் ஒன்றும் உள்ளது. அணை மற்றும் நீர் வழித் தடத்தில் அமைக்கப்பட்டுள்ள படகுப் பயணம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலமானதாகும்.

Zuhairali

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கோயம்புத்தூரில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவிலும், பாலக்காட்டில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது மலம்புழா அணை. இதனருகே உள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையமாகும். கேரளா மற்றும் கோயம்புத்தூரில் இருந்து ஏராளமான தனியார் வாகன வசதிகள் இந்த அணைக்குச் செல்லும் வகையில் உள்ளது.

Ranjithsiji

அமராவதி அணை

அமராவதி அணை


திருப்பூருக்கு உட்பட்ட உடுமலை அருகே அமைந்துள்ளது அமராவதி அணை. இங்குள்ள தென்னிந்தியாவின் இயற்கைச்சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் பண்ணை, பலவகை மீன்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமைக் காட்சி வருடந்தோரும் சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்த்து வருகிறது. அணையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பூங்கா பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்விக்கும தன்மை கொண்டுள்ளது.

Jaseem Hamza

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக 94 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமராவதி அணைக்கு திருப்பூர், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் என அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாநகர பேருந்து வசதிகள் உள்ளது. அமராவதி அணையின் அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று.

Marcus334

ஆழியாறு அணை

ஆழியாறு அணை


பொள்ளாச்சியிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில், ஆழியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆழியார் அணையின் முக்கிய குறிக்கோள் நீர்ப்பாசனமாகும். இருப்பினும், தற்போது தமிழ்த் திரைத் துறையில் பல்வேறு காட்சிகள் இங்கே படமாக்கப்படுகின்றன. அணையிள் மேலே நின்று மேகக் கூட்டங்களின் ஊடாக வால்பாறையின் வழித்தடத்தை அழகாக ரசிக்கலாம்.

Manojtr5664

எப்படிச் செல்லலாம் ?

எப்படிச் செல்லலாம் ?


கோயம்புத்தூரில் இருந்து 67 கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள ஆழியார் அணைக்கு அனைத்து நேரங்களிலும், தினங்களிலும் பேருந்து வசதிகள் உள்ளது தனிச் சிறப்பு. பொள்ளாச்சி, சமத்தூர், அங்கலக்குறிச்சி வழியாக இந்த அணையை வந்தடையலாம். அணையைக் கடந்து ஒரு சில கிலோ மீட்டரில் உள்ள குரங்கு அருவி தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற அருவிகளில் ஒன்று.

Yuvalatha L

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை


பெரும்பாலும் வெப்பச் சலனம் மிக்க மாவட்டமான ஈரோட்டை சற்று பசுமையாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது பவானிசாகர் அணை. நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உருவாகும் நீரோடைகள் பவானிசாகரின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். குழந்தைகளை கவரும் பூங்கா, பெரியவர்களுக்கு சுடசுட மீன், காதலர்களுக்கு ஏற்ற பசுமைத் திடல்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தகுந்த பவானிசாகரை யாராலும் புறக்கணிக்க முடியாது.

JayakanthanG

ஈரோடு- பவானிசாகர்

ஈரோடு- பவானிசாகர்


ஈரோட்டில் இருந்து கோபிசெட்டிபாளையம் வழியாக 74 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்தியமங்கலத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது பவானிசாகர். இதனருகே உள்ள விமான நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது. மங்களூர் சென்ட்ரல், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், செம்மொழி எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், திருவணந்தபுரம் சென்ட்ரல், கோயம்புத்தூர்- மணிலாடுதுறை சகாப்தி ரயில் என ஏராளமான ரயில்சேவைகள் கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு செல்ல உள்ளது.

Jeganila

கொடிவேரி அணை

கொடிவேரி அணை


தமிழகத்தில் பெரிய அணைக்கட்டுகளில் ஒன்றாக பெயர்பெற்றது கொடிவேரி அணை. ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இது மிகப்பெரிய பரப்பளவில் அழகுற வியக்கும் தன்மை கொண்டுள்ளது. இந்தப் பகுதியின் நீர்ப்பாசனத்திற்கு கொடிவேரி அணை மகத்தான பங்கினை ஆற்றி வருகிறது. ஆற்பறித்து ஓடும் நீர், நீண்ட அருவி போல காட்சியளிக்கும். குழந்தைகளுக்கான சிறப்பு பூங்காயும் இங்கே உள்ளது கறிப்பிடத்தக்கது.

Magentic Manifestations

சத்தி- கொடிவேரி

சத்தி- கொடிவேரி


சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடிவேரிக்கு தனியார் வாகனங்கள் மூலமும், பேருந்துகள் மூலமும் வந்தடையலாம். கொடிவேரிக்கு முன்னதாக அமைந்துள்ள மலைக் கோவில், சாலையின் இருபுறமும் உள்ள வயல்கள் உன வழிநெடுகிழும் பசுமையை ரசித்தவாரே செல்லலாம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்