Search
  • Follow NativePlanet
Share
» »நாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..!

நாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..!

நம் நாட்டில் நடைபெற்ற போர்கள், அதில் மரணமடைந்த மன்னர்கள் என பல வரலாற்றுக் கதைகளை பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். அக்காலத்தில் நடைபெற்ற ஒவ்வொரு போரிலும் போர் வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அதோடு, பல செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. போரின் போது மட்டுமல்ல, உலக நாடுகளே வியந்து நோக்கிக் கொண்டிருந்த சில செழுமைமிக்க நகரங்களும் இயற்கைச் சீற்றத்தால் அழிந்தது. இருநாட்டுப் போரின் போதும், இயற்கைச் சீற்றத்தின் போதும் இந்த நாட்டையே ஆண்டு, வாழ்ந்து வந்த மன்னர்களின் கோட்டை இப்போது பேய் பங்களா எனும் அளவுக்கு மாறிவிட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம், அப்படி அழிந்த அல்லது அழிக்கப்பட்ட கோட்டை இப்போது எப்படி உள்ளது என பார்க்கலாம் வாங்க.

காலவன்டின் துர்க்

காலவன்டின் துர்க்

மும்பை மாநகரத்துக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ளது காலவன்டின் துர்க். மிகப் பழமையான பிரபால்கட் கோட்டையே இப்பகுதியின் அடையாலமாக உள்ளது. இந்த இடத்தை ஆட்சி செய்துவந்த மன்னர் காலவன்டின் எனும் ராணியின் பெயரில் இந்த கோட்டையைக் கட்டியுள்ளார். இந்திய அளவில் மிகவும் பயங்கரமான கோட்டைகளில் இதுவும் பெயர்பெற்றுள்ளது. உலகின் மிக ஆபத்தான கோட்டையும் இதுவாகும். இதற்குக் காரணம் இக்கோட்டை சுமார் 2300 அடி உயரத்தில் அமைந்திருப்பதாலோ என்னவோ. இன்றும் கூட இப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் ராணி காலவன்டியின் பேய் இங்கு உலவுவதாகவும், மாலை நேரத்தில் அவ்வப்போது அமானுஷ்யம் நிறைந்த சம்பவங்களும், சத்தமும் இங்கே இருப்பதாக கூறப்படுகிறது.

Opencooper

சிக்தன்

சிக்தன்

கார்கில்லில் அமைந்துள்ளது சிக்தன் கோட்டை ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இப்போது அமைதியாகிவிட்ட இடமாகும். கார்கிலிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோட்டை 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது 9 மாடிகளைக் கொண்ட இது தற்போது இன்று எதுவும் இல்லாமல் பாழாகி கிடக்கிறது. இரவு நேரங்களில் இப்பகுதிக்குச் செல்வோர் மர்மமான நபர்கள் கோட்டையின் கட்டிடக் கழிவுகள் மீது நடந்து செல்வதாகவும், அழுகுரல் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

123shob123

ராஸ் தீவு

ராஸ் தீவு

ராஸ் அல்லது ரோஸ் எனப்படும் தீவு, அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒன்றாகும். வழக்கமாக சுற்றுலாவுக்கு பயணிக்கும்போது சில இடங்களில் அமானுஷ்ய சக்திகள் இருக்கும் என்று கூறுவார்கள். உள்ளூர் மக்களுக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால் வெளியூரிலிருந்து சுற்றுலா செல்பவர்கள் எந்த பயமும் இன்றி ரசித்துவிட்டு வருவார்கள். அப்படி ஒரு இடம்தான் ராஸ் தீவுகள். 1941ம் ஆண்டு வரை அந்தமானின் அலுவலக தலைநகராக இருந்தது ராஸ் தீவுதான். இங்குதான் அரசியல் ரீதியான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டு வந்தன. அந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இதை நிலைகுலையச் செய்தது. அதுவரை மற்ற தீவுகளைப் போலத்தான் ராஸ் தீவும், அழகிலும், அமைதியிலும் சிறப்பானதாக இருந்தது. இங்கு இரவு நேரங்களில் மர்ம மரணங்களும் நிகழ்வதாக பரவலாக நம்பப்படுகிறது. இங்கு பழைய தேவாலயம் ஒன்று பாழடைந்து காணப்படுகிறது. மேலும் சில நினைவுச் சின்னங்களும் காணப்படுகின்றன. உள்ளூர் மக்கள் இங்கு பேய் உலாவுவதாக கூறுகின்றனர்.

Tejasi vashishtha

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

இன்று எத்தனையோ அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் வந்த பின்பும் நம்மால் சென்னை வெள்ளத்தை தடுக்க முடியவில்லை. அப்படியிருக்க 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சூறாவளி வந்து ஒரு ஊரையே விழுங்கப் போகிறது என்று யாருக்குத் தெரிந்திருக்கும். துயரமான இச்சம்பவம், மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஆழிப் பேரலைகள் தனுஷ்கோடி நகரத்தை மூழ்கடித்தது. இன்று இந்த ஊர் வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி ஒரு அருங்காட்சியகம் போல், சிதிலமடைந்த தேவாலயம் மற்றும் சில கட்டிடங்களும், ஒரு துயரத்தின் மெளன சாட்சியாக இருக்கிறது. இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு மீன் பொறித்துத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

rajaraman sundaram

குல்தாரா

குல்தாரா

வெப்பம் தகிக்கும் ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் ஜெய்சால்மர் நகருக்கு அடுத்துள்ள குக்கிராமம் தான் இந்த குல்தாரா. முற்றிலும் சிதலமடைந்து காணப்பட்டாலும் இங்குள்ள வீதி அமைப்புகள் மற்றும் வீடுகளை பார்க்கும் போது நேர்த்தியாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகரை போன்றே இருக்கிறது. 1291ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த கிராமம் தான் சுற்றுப்பகுதியில் உள்ள 84 கிராமங்களுக்கு தலைமை கிராமமாகவும் இருந்துள்ளது. நாட்டிலேயே மழை வளம் அற்ற பகுதியான இங்கு விவசாயம் மட்டும் மிகப்பெரிய அளவில் நடைபெறுவது வியக்கத்தகுந்த ஒன்றாகும். ஆனால், தற்போது பெரும்பாலானோர் இப்பகுதியை கைவிட்டு இடம்பெயர்ந்துவிட்டனர்.

Suryansh Singh

உனகோடி

உனகோடி

சுற்றுலாப் பயணிகளை பெரும்பாலும் தன்வசம் ஈர்க்கும் அளவிற்கு பெரிய சுற்றுலாத் தளமாக இல்லாமல் இருந்தாலும், உனகோடி ஓர் சிற்றுலாவுக்கு ஏற்றத் தலம் தான். இன்றயவும் ஏராளமான செல்வங்கள் இங்கே புதையுன்டு கிடப்பதாக நம்பப்படுகிறது. இந்த இடம் சுற்றுலாத் தளம் மட்டுமின்றி தொலைந்துபோன மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் இடமுமாகும். இந்த இடத்துக்கு நீங்கள் பயணித்தால் அங்கு நிறைய கற்பாறையில் செதுக்கப்பட்ட உருவங்கள் பலவற்றைக் காணமுடியும். ஏழாம் நூற்றாண்டில் மிகச் சிறந்து விளங்கிய சைவ தலம் இதுவாகும். இந்த இடம் ஒரு காலத்தில் செல்வமும், புகழும் மிக்கதாக இருந்துள்ளது. இங்குள்ள சிற்பங்களின் வாயிலாக அதை அறிய முடியும். ஆனால், ஒருகட்டத்தில் இந்த இடம் சாபத்தால் சீரழிந்துவிட்டதாகவும், தொலைந்துபோன நகரமாகிவிட்டதாகவும் உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.

Atudu

மார்தாண்ட சூரியன் கோவில்

மார்தாண்ட சூரியன் கோவில்

மார்த்தாண்ட சூரியன் கோவில் என்பது காஷ்மீரில் உள்ள மிகப் பழமையான கோவில் ஆகும். தமிழரால் கட்டப்பட்டதாக கூறப்படும் இஇக்கோவில் இரணாதித்யன் எனும் அரசனின் காலத்தில் துவக்கப்பட்டது. எனினும் இசுலாமிய ஆட்சியாளர் ஒருவரால் இது சிதைக்கப்பட்டு தன் பெருமையை இன்றும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

Bodhisattwa

பங்கார்க்

பங்கார்க்

பாங்கர் கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சரிஸ்கா வனப்பகுதில் அமைந்திருக்கிறது. இந்த பங்கார்க் கோட்டை நம் நாட்டில் இருக்கும் திகிலான தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த கோட்டையில் மாலை நேரத்திற்கு பின் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கோட்டையை பற்றிய பல அமானுஷமான கதைகள் உலாவருகின்றன.

C980040

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X