» »பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பெங்களூரு சிட்டி..! எங்கவெல்லாம் போகலாம் ?

பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பெங்களூரு சிட்டி..! எங்கவெல்லாம் போகலாம் ?

Written By:

தகவல் தொழில் நுட்பத் துறையில் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ள பெங்களூர் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கால நிலையிலும் சற்று குளுமையான பகுதியாகவே உள்ளது. இதனாலேயே பிற பகுதி மக்களும் அவ்வப்போது பெங்களூருக்கு சுற்றுலாவாக செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிகத்தில் இருந்து பெங்களூருக்கு பயணிப்போரின் எண்ணிக்கை இன்னமும் கூடுதலாகவே இருக்கும். நீண்ட நாட்கள் தங்கி பெங்களூரை அனுபவிக்க திட்டமிட்டாலும் சரி, ஓரிரு நாட்கள் தங்கி இங்கே சுற்றிப்பாக்க திட்டமிட்டாலும் சரி அனைத்துத் தரப்பினரின் தகுதிக்கேற்ற சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது பெங்களூரு. ஒருவேளை நீங்கள் பெங்களூருக்கு சின்னதா ஒரு பட்ஜெட்ல ட்ரிப் போக திட்டமிட்டீர்கள் என்றால் இரண்டே நாட்களில் காண வேண்டிய தலங்கள் எது என்பதை பார்க்கலாம் வாங்க.

பெங்களூர் கோட்டை

பெங்களூர் கோட்டை


பெங்களூருக்கு இரண்டு நாள் சுற்றுலாவாக நீங்கள் வந்திருந்தால் முதலில் பார்க்கவேண்டிய தலமாக பெங்களூரு அரண்மனையை வைத்துக் கொள்ளுங்கள். பெங்களூரின் மையத்தில் உள்ள இந்த அரண்மனை சதாசிவ நகருக்கும் ஜயமஹாலுக்கும் இடையில் இருக்கிறது. 1862ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் கோட்டையைப் போன்றே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரெவரெண்ட் காரட் என்பவரால் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது அப்போதைய ராஜாவான உடையார் வம்சத்தை சேர்ந்த சாமராஜ உடையாரால் 1884ம் ஆண்டு வாங்கப்பட்டது. 45,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை கட்டி முடிக்க 82 வருடங்கள் கடந்துள்ளது என்பது வியக்கத்தகுந்த விசயமாகும். இந்த அரண்மனையின் அழகு மிக பிரசித்தி வாய்ந்தது. அரண்மனை வாசல் வழியாக நுழையும்போதே இது உங்களை பிரமிக்க வைத்து விடும். வேறு எதைப்பற்றியுமே நினைக்க விடாமல் அதன் அழகு உங்களை மெய் மறக்க வைக்கும் இயல்புடையது. அரண்மனையின் கீழ் தளத்தில் உள்ள திறந்த வெளி முற்றத்தில் நீல நிற பீங்கான் ஓடு பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கல்லால் ஆன இருக்கைகள் அமைந்துள்ளன. இரவில் இந்த நீல நிற பீங்கான் இருக்கைகள் ஒளிர்வது போன்று தோற்றமளிக்கும் அழகு அற்புதமான ஒன்றாகும். அரண்மனையின் உட்புற சுவர்களில் கிரேக்க மற்றும் டச்சு ஓவியங்களும் புகழ் பெற்ற இந்திய ஓவியரான ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களும் காணப்படுகின்றன. இவை இந்த தொன்மை வாய்ந்த ஓவியங்கள் அரண்மனையின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன.

Nikkul

இன்னோவேடிவ் பிலிம் சிட்டி

இன்னோவேடிவ் பிலிம் சிட்டி


பெங்களூர் - மைசூர் மாநில நெடுஞ்சாலை SH-17 ல் வொண்டர் லா அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இன்னோவேடிவ் பிலிம் சிட்டி அமைந்துள்ளது. பெயருக்கேற்றபடி இது இந்தியாவில் உள்ள தீம் பார்க்குகளில் பல நூதனமான இயல்புகளுடன் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் ஏற்ற கேளிக்கை அம்சங்களை இது கொண்டுள்ளது. பெங்களூரிலிருந்து சாலைவழியாக செல்லும் வகையில் அமைந்துள்ள இந்த பொழுதுபோக்கு தலம் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். இங்குள்ள இன்னோவேடிவ் ஸ்டுடியோ, ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் மியூசியம், 4D தியேட்டர், குழந்தைகள் குகை, லூயி டஸ்ஸாட் மெழுகு மியூசியம் மற்றும் தீம் ரெஸ்டாரண்டுகள் உங்களை சிறு குழந்தையாகவே மாற்றிவிடும்.

Rameshng

லால் பாக்

லால் பாக்


லால் பாக் பெங்களூரில் காதலர்களுக்கான அடையாலம் என்றே சொல்லாம். காலை, பகல், மாலை என அனைத்து நேரங்களிலும் குறிப்பிட்ட அளவு காதல் ஜோடிகளை இங்கே காண முடியும். 240 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் லால் பாக்கில் ஆயிரம் வகையான மலர்ச் செடிகளும், பலவகைப்பட்ட வறண்ட பிரதேச வகைத் தாவரங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள செடிகள் வாடாமல் இருப்பதற்கு நன்கு திட்டமிடப்பட்ட நுட்பமான நீர்ப்பாசன முறை உள்ளது. தாமரை தடாகங்கள், பலவிதமான வடிவங்களில் புல் தரைகள், மலர்ப்படுக்கைகள் என்று எங்கு பார்த்தாலும் பசுமையும் மலர்களுமாக காட்சியளிக்கும் இந்த பூங்காவில் வருடந்தோறும் மலர்க் கண்காட்சிகளும் முகாம்களும் நடத்தப்படுகின்றன. தினமும் காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை இந்த பூங்கா திறக்கப்படும். பெங்களூரின் எல்லா முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்தும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் இந்த பூங்காவிற்கு வருவதற்கு பேருந்து வசதிகள் உள்ளன.

Augustus Binu

யுபி சிட்டி மால்

யுபி சிட்டி மால்


பெங்களூரில் முதல் நாள் மாலை வேலையில் சுற்றிப்பார்க்க ஏற்ற இடமாக யுபி சிட்டி மால் உள்ளது. 16 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள யுபி சிட்டி மால் என்றழைக்கப்படும் மிகப்பெரிய வணிக வளாக திட்டமாகும் கர்நாடகாவிலேயே உயரமான மால் ஆகும். இந்த வளாக கட்டமைப்பு நான்கு வானுயர்ந்த கட்டிடங்களை கொண்டுள்ளது. யு.பி டவர், கோமட், கான்பெரா மற்றும் கான்பெரா என்று அவை நவீன பாணியில் பெயரிடப்பட்டுள்ளன. அதி நவீன கருவிகள் தொழில் நுட்ப சாதனங்கள் போன்றவற்றால் நிரம்பியுள்ள இந்த வளாகத்தில் முன்னணி பிராண்டுகளின் ஷோரூம்கள் நிறைந்துள்ளன. மேலும், யு.பி சிட்டியில் இத்தாலியன் உணவிலிருந்து சைனீஸ் உணவு வரை பலவகை சர்வதேச உணவுவகைகள் கிடைக்கின்றன. 800 இருக்கைகளை கொண்ட பிரமாதமான ஆம்பிதியேட்டர் ஒன்றும் இந்த சிட்டியில் உள்ளது.

Indianhilbilly

வொண்டர் லா

வொண்டர் லா


பெங்களூரில் முதல் நாள் சுற்றுலாவிற்குப் பின் இரவு நேர ஓய்வை முடித்து இரண்டாம் நாள் காலை வேலையில் சென்று மகிழ ஏற்ற இடம் வொண்டர் லா. பெங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவில் பிடதி அருகில் வீ-கார்டு குரூப் நிறுவனத்தால் நடத்தப்படும் கேளிக்கை பூங்கா இந்த வொண்டர் லா. நிலம் மற்றும் நீரில் அமைந்த 53 வகையான கேளிக்கை சவாரி வகைகள் இங்கு காணப்படுகின்றன. மேலும் இந்த பூங்காவில் இசை நீரூரற்று, லேசர் ஷோ, வர்ச்சுவல் ரியலிட்டி ஷோ, எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தக்கூடிய ஷவர்களுடன் கூடிய நடன மேடை போன்றவையும் உள்ளன. குடும்பத்துடன், குறிப்பாக குழந்தைகளுடன் பெங்களூரு சென்றுள்ளீர்கள் என்றால் தவறாமல் இங்கேயும் அழைத்துச் சென்று வாருங்கள்.

IM3847

கமர்ஷியல் தெரு

கமர்ஷியல் தெரு


மாலை நேரத்தில் மிளிரும் விளக்குகள் வெளிச்சத்தில் பெங்களூரில் இறுதி நாளை அனுபவிக்க ஏற்ற இடம் கமர்ஷியல் தெரு. வீட்டிற்கு தேவையான பொருட்கள் என்றாலும் சரி, ஆடவருக்கான ஆடை, அழங்காரப் பொருட்கள் என்றாலும் சரி சுற்றிப் பார்த்தபின் ஷாப்பிங் செய்யவேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் வரவேண்டிய இடம் இது. பிரபல பிராண்டுகளின் ஷோரூம்களுடன் உள்ளூர் காலணிகள், ஆடைகள், கலைப்பொருட்கள், பலவிதமான வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவற்றை விற்கும் கடைகள் இங்கு நிறைந்துள்ளன. பெண்களுக்கான ஆடைகள் அதிக அளவில் பல வகைகளில் இங்கு கிடைக்கின்றன. அசராமல் பேரம் பேசி தடாலடியாக பொருட்களை வாங்க கூடிய ஒரு விதமான நாசூக்கில்லாத மனோநிலைக்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்வதும் அவசியம். பெரும்பாலும் இந்த ஷாப்பிங் தெருவில் முழுக்க முழுக்க பெண்களின் சாம்ராஜ்யம் என்றாலும் துணைக்கு வரும் ஆண்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க சாலையோர டீக்கடைகள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளும் இங்கு உள்ளன.

GatesPlusPlus

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்