Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரியில் சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகிய மூவரும் ஒரே ரூபமாக இருக்கும் கோயில் எது தெரியுமா?

கன்னியாகுமரியில் சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகிய மூவரும் ஒரே ரூபமாக இருக்கும் கோயில் எது தெரியுமா?

By Super Admin

ஹிந்து நம்பிக்கையில் சைவம், வைணவம், கணபதியம், கௌமாரம் என சில உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு கடவுள் முதன்மையானவராக இருப்பார். கோயில்கள், புராணங்கள், சங்ககால பாடல்கள், மடங்கள் போன்றவையும் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக இருக்கும். பழங்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒரே கோயிலில் விஷ்ணுவையும், சிவனையும் மூலவராக பார்ப்பது மிகமிக அரிது.

மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவுக்கோ இந்தியாவில் மொத்தம் மூன்றே கோயில்கள் தான் இருக்கின்றன. இப்படியிருக்க இந்த மூன்று கடவுள்களுக்கும் உரித்தான ஒரு கோயில் தமிழகத்தில் இருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் இந்த கோயிலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சுசீந்தரம் தனுமலயான் கோயில்

சுசீந்தரம் தனுமலயான் கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது தாணுமாலயன் கோயில்.

இக்கோயிலானது வைணவம் மற்றும் சைவம் ஆகிய இரு பிரிவுகளுக்கும் உரிய கோயிலாக திகழ்கிறது.

Ankur Dave

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

தாணுமாலயன் என்ற இக்கோயிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது.

தாணுஎன்பது சிவபெருமானையும்,மால என்பது பெருமாள் விஷ்ணுவையும்,அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது.

Senthil Kumar

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலானது கேரளத்தை சேர்ந்த நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பூதிரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோயிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர்.

Ankur Dave

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

இந்த கோயிலின் மூலவராக மும்மூர்த்திகளான சிவன்,விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்து ஒரே ரூபமாக தாணுமாலயனாக அருள்பாலிக்கின்றனர்.

இப்படி முமூர்த்திகளையும் ஒரே ரூபமாக பார்ப்பது அரிதிலும் அரிதானதாகும்.

Harikrishnan Tulsidas

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

17ஆம் நூற்றாண்டு திராவிட கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக திகழும் இக்கோயிலில் ஏழு அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட கோபுரம் ஒன்றும் இருக்கிறது.

இது தவிரவும் இன்னும் ஏராளமான கட்டிடக்கலை அதிசயங்கள் இக்கோயிலினுள் இருக்கின்றன.

Harikrishnan Tulsidas

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

தாணுமாலயன் கோயிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5.5மீட்டர் உயரமுள்ள நான்கு மிகப்பெரிய இசைத்தூண்கள் இருக்கின்றன.

அலங்கார மண்டபம் என்ற பகுதியில் இருக்கும் இந்த இசைத்தூண்களை தட்டினால் சப்தசுவரங்களில் இசை வெளிப்படுவது பிரம்மிப்பின் உச்சம்.

Vinayaraj

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

மேலும் இக்கோயிலில் தான் 22அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13அடி உயரமும், 21அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் இருக்கின்றன. இந்த நந்தி சிலை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

Sugeesh

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

இக்கோயிலின் தல புராணத்தின் படி தேவர்களின் தலைனவான இந்திரன் மும்மூர்த்திகளின் ஏக ரூபமானதாணுமாலயனை வழிபட்டு தனக்கு விதிக்கப்பட்டிருந்த சாபத்தில் இருந்து விமோச்சனம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

இதற்கு நன்றிக்கடனாக இன்றும் இந்திரன் தினமும் இக்கோயிலுக்கு வந்து தாணுமாலயனுக்கு அர்த்தஜாம பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் ஏக லிங்க ரூபத்தில் இருக்கும் இக்கோயிலில் ராமர், கிருஷ்ணர், முருகன், அம்மன் போன்ற முக்கிய கடவுள்களின் சிலைகளும் இருப்பது சிறப்பு.

Infocaster

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

தாணுமாலயன் கோயிலின் முக்கிய திருவிழாவாக இருப்பது டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் தேர் திருவிழா தான். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்கூடி தேர் இழுக்கின்றனர்.

Ganesan

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

ஏப்ரல் அல்லது மார்ச் மாதங்களில் கொண்டாடப்படும் 'தெப்பம்' என்ற திருவிழாவும் இங்கு நடக்கும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும்.

சமஸ்கிரதத்தில் எழுதப்பட்டுள்ள 'சுசிந்த்ரஸ்தல மகாமத்யம்' என்ற நூலில் தாணுமாலயன் கோயில் எப்படி தோன்றியது?, இதற்கு பின்னால் இருக்கும் புராண கதைகள் என்னென்ன என்பவற்றை மிகவிரிவாக விளக்குகின்றது.

 சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்தரம் தாணுமாலயன் கோயில்

அடுத்த முறை கன்னியாகுமரிக்கு செல்ல நேர்ந்தால் நிச்சயம் இந்ததாணுமாலயன் கோயிலுக்கும் தவறாமல் சென்று வாருங்கள்.

இக்கோயிலை எப்படி சென்றடைவது?, இதற்கு அருகில் இருக்கும் தங்கும் விடுதிகள் என்னென்ன என்பது பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+