» »இந்த சம்மர் லீவுல எந்தெந்த பூங்காவுக்கு எல்லாம் போகலாம்..?

இந்த சம்மர் லீவுல எந்தெந்த பூங்காவுக்கு எல்லாம் போகலாம்..?

Written By: Sabarish

வார இறுதி நாள் விடுமுறை என்றாலே எங்கையேனும் சுற்றுலாத் தலங்களை நோக்கி செல்ல திட்டமிடும் நாம், கோடை விடுமுறைகளில் எங்கே செல்வது என அறியாமல் தினறுவது வழக்கம். தற்போதைய சூழ்நிலையில் கோடை வெப்பத்தில் இருந்து சமாளிக்க குளிர்ந்த சுற்றுலாத் தலங்களை தேடத் துவங்கியிருப்போம். குழந்தைகள் உள்ள குடும்பம் என்றால் அவர்களுக்கு விருப்பமான இடமாகவும் கூட தேர்வுசெய்யும் கட்டாயம் நம்மில் பலருக்கு உண்டு. அவ்வாறாக கண்களுக்கு குளிர்ச்சியான தலமாகவும் இருக்க வேண்டும், கண்டு ரசிக்க ஏராளமானவையும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்றால் இந்த பூங்காக்களுக்கு எல்லாம் சென்று வருவது இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட ஏதுவாக இருக்கும்.

பிரையண்ட் பூங்கா

பிரையண்ட் பூங்கா


கொடைக்கானலில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் பல வகையான குறுஞ்செடிகள், மரங்கள் மற்றும் கள்ளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. உச்ச பருவத்தின் போது வண்ணமயமான பூக்கள் இங்கு பூத்து குலுங்கும். 1857-லிருந்து இங்கு ஒரு யூக்கலிப்டஸ் மரம் ஒன்று உள்ளது. அதேப் போன்று பழமை வாய்ந்த போதி மரம் ஒன்றும் உள்ளன. இவையிரண்டும் இவ்விடத்திற்கு சமயஞ்சார்ந்த முக்கியத்துவத்தை அளிக்கின்றன. பல அலங்காரச் செடிகள் மற்றும் மரங்களும் இங்குள்ள செடி வளர்ப்புப் பண்ணையில் கிடைக்கும்.

Justinmanohar

வென்லாக் டவுன்ஸ்

வென்லாக் டவுன்ஸ்


வென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும். வென்லாக் டவுன்ஸ் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில், கம்பீரமாக நிற்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் மத்தியில் உள்ளது.

KARTY JazZ

பொடானிக்கல் கார்டன்

பொடானிக்கல் கார்டன்


பொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா ஊட்டியில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற பூங்காவாகும். தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும். இங்கு ஏராளமான தாவர இனங்கள் காணப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் லட்சக் கணக்கில் வருகிறார்கள். செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன. பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.

KARTY JazZ

குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா

குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா


சேலம் மாவட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா சேர்வராயன் மலையடிவாரத்தில், சுமார் 11.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து, பின் பூங்காவாக மாற்றப்பட்டது. இங்கு புள்ளி மான்கள், வெள்ளை மயில்கள், தொப்பித் தலைக் குரங்குகள், சாம்பார் மான்கள், சின்னக் கொக்குகள், சேற்று முதலைகள், ப்ளம் தலை கிளிகள், நட்சத்திர ஆமைகள், இளஞ்சிவப்பு வட்டங்கள் கொண்ட கிளிகள், மஞ்சள் கால்களைக் கொண்ட பச்சை புறாக்கள் மற்றும் 58 வயதான ஒரு யானை ஆகியன இங்கு வாழும் சில அரிய உயிரினங்களாகும். இவ்வளாகத்தில், ஒரு குழந்தைகள் பூங்காவும் உள்ளது. இவ்விடம், இயற்கையான சூழலில் பொழுதைக் கழிப்பதற்கு இனிய இடமாகும்.

Vinc3PaulS

பரவச உலகம் - நீர் விளையாட்டு பொழுதுபோக்குப் பூங்கா

பரவச உலகம் - நீர் விளையாட்டு பொழுதுபோக்குப் பூங்கா


பரவச உலகம் - நீர் விளையாட்டுக்கள் நிறைந்த பொழுதுபோக்குப் பூங்கா, சேலம், மல்லூருக்கு அருகில் உள்ளது. இப்பூங்காவின் இருப்பிடம், மலைகளுக்கும், மரங்களுக்கும் நடுவே அமையப்பெற்று, குளிர்ச்சியானதாகவும், மனதுக்கு இதமானதாகவும் விளங்குகிறது. இங்கு உள்ள விளையாட்டுக்களில், நீர் தேக்கம், மழை நடனம், செயற்குளம், கார்ட் மற்றும் பைக் பந்தயங்கள், விடியோ விளையாட்டுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் ஆகியன மிக்க மகிழ்ச்சியூட்டுவனவாக உள்ளன. மேலும், இங்கு அறிவியல் பூங்கா, நீர்வீழ்ச்சிகள், பனி உலகம் ஆகியனவும் உள்ளன. இது, அனைத்து வயதினரும், வாரயிறுதி நாட்கள் மற்றும் விடுமுறைகளில் சுற்றுலா வருவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

Hannah Olive

மாநகரப் பூங்கா

மாநகரப் பூங்கா


திருவாரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாநகரப் பூங்கா, பொதுமக்களுக்கான சிறந்த பொழுது போக்கு மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது, தோட்டக்கலைக்கு சிறப்பான ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இப்பூங்கா, நகரின் வர்த்தகப் பரிவர்த்தனைப் பகுதியில் அமைந்திருந்தாலும், நகரின் பரபரப்புகளில் இருந்து விலகி, அமைதியான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான நடைபாதைகள், நீரூற்றுகள், மற்றும் குழந்தைகளுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பகுதி என அனைத்து வயதினரையும் கவரக் கூடிய வகையில், இப்பூங்கா அமைந்துள்ளது.

Rasnaboy

முதலைப்பண்ணை

முதலைப்பண்ணை


மாமல்லபுரத்தில் அமைந்துள்ள முதலைப்பண்ணையில் பலவித முதலைகள் மற்றும் பாம்பு வகைகளை பார்க்கலாம். ரோமுலஸ் விட்டேகர் எனும் பிரபல உயிரின ஆராய்ச்சியாளரால் 1976ம் ஆண்டு இந்த பூங்கா துவங்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் பாதுகாப்பான தொலைவிலிருந்து இந்த முதலைகள் இயற்கை சூழலில் திறந்த வெளி குளங்களில் வசிப்பதை பார்த்து ரசிக்கலாம். இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப்பண்ணையான இதுவாகும்.

Kmanoj

ஏலகிரி இயற்கைப் பூங்கா

ஏலகிரி இயற்கைப் பூங்கா


ஏலகிரி இயற்கைப் பூங்கா புங்கனூர் ஏரி அருகே அமைந்துள்ளது. பாறைகள் நிறைந்த இவ்விடத்தின் தன்மைக்கு ஏற்ற பல வகைத் தாவரங்கள் இந்தப் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. இந்தப் பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. இங்கு குளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான பூங்கா, இசை நீருற்று, நீர்வாழ் உயிரினங்களின் கண்காட்சி, தோட்டம், மூங்கில் வீடு, கண்ணாடி வீடு ஆகியன உள்ளன.

Ashwin Kumar

அம்ரிதி விலங்கியல் பூங்கா

அம்ரிதி விலங்கியல் பூங்கா


அம்ரிதி விலங்கியல் பூங்கா எனும் இந்த சுற்றுலாத்தலமானது வேலூரில் அம்ரிதி ஆற்றுக்கு அப்பால் தெள்ளாய் எனும் இடத்தில் உள்ள ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் பலவகையான விலங்கினங்கள் மற்றும் தாவரவகைகளை பார்த்து ரசிக்க முடியும். குரங்கு, புள்ளிமான், முள்ளம்பன்றி, நரி, மயில், வாத்து, காட்டுக்கிளி, முதலை, காட்டுப்பூனை மற்றும் வல்லூறு போன்ற பல உயிரினங்கள் இந்த வனப்பகுதியில் வசிக்கின்றன. மேலும் பல அரியவகை மூலிகைச்செடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றையும் இங்கு காணலாம். இந்த சுற்றுலாத்தலத்தில் இரண்டு ஓய்வு இல்லங்கள் மற்றும் ஒரு குழந்தைகள் பூங்கா ஆகியவற்றோடு ஒரு தியான மண்டபமும் உள்ளது.

Samuelrjn

பாம்பு பண்ணை

பாம்பு பண்ணை


குற்றாலம் பாம்பு பூங்கா ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இப்பூங்கா முதன்மை அருவி அல்லது ஐந்தருவி அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலுள்ள கண்கவர் இடங்கள் சிறுவர் பூங்கா மற்றும் மீன் பண்ணை முதலியன ஆகும். பாம்பு பண்ணையில் பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன.

Sivahari

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்