Search
  • Follow NativePlanet
Share
» »ஆண்டியையும் அரசனாக்கும் பங்குனி கோயில்கள்! இந்த ராசிக்காரங்களுக்கு ஜாக்பாட்தான்!

ஆண்டியையும் அரசனாக்கும் பங்குனி கோயில்கள்! இந்த ராசிக்காரங்களுக்கு ஜாக்பாட்தான்!

By Udhaya

தமிழ் வருடத்தின் கடைசி மாதம் பங்குனி. ஆண்டியாக இருந்தாலும் சரி, அரசனாக இருந்தாலும் சரி தங்கள் பிழைகளைத் திருத்திக்கொண்டு நல்வழிப்படும் மாதமாக இந்த மாதம் அமைகிறது. ஆன்மீகத் தலங்களுக்கு செல்லும் பயணங்களின்போது பங்குனி மாதம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் பார்வதி - பரமேஸ்வரன், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஆண்டாள் - ரங்கநாதர் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கீழ்காணும் கோயில்களுக்கு சென்று வழிபட்டால், ஆண்டியாக இருப்பவன்கூட அரசாள்வான். பங்குனி மாதம் யாருக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கபோகுது தெரியுமா?

அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமான் திருக்கோயில்

அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமான் திருக்கோயில்

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில், 500 வருடங்கள் பழமையானதாகும். ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் அருள்பாலிக்கும் கலியுகவரதராஜ பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவராக பார்க்கப்படுகிறார். சித்திரை மாத பவுர்ணமியில் கருட வாகனத்தில் உலா வருகிறார் பெருமாள்.

முதன்மை வளாகத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கிக்கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டுள்ள உருவம் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலில் வேறு சிலைகள் இல்லை.

Ssriram mt

எப்படி செல்வது

எப்படி செல்வது

காலை 6.30 மணி முதல் பகல் 12..30மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்த கோயில் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ளது.

அரியலூர் நகரிலிருந்து கிழக்கே இரும்புலி கிராமம் செல்லும் சாலையில் 6கிமீ தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்து, ஆட்டோக்களில் செல்லமுடியும்.

அல்லது சென்னை - திருச்சி தேநெ சாலையில் 1 மணி நேரத் தொலைவில் இந்த கோயிலை அடையலாம்.

அருள்மிகு மகாலட்சுமி கோயில்

அருள்மிகு மகாலட்சுமி கோயில்

1000 வருடங்கள் பழமையான மகாலட்சுமி கோயில் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு விழா விசேசமானதாகும். இங்கு வருவோர்க்கு தொழில் கைகூடி கைநிறைய செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

இந்த கோயிலுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. இது ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட கோயிலாகும். தொழில் விருத்தி தவிர்த்து மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கவும் இறைவனை தொழுகலாம்.

Summer yellow

எப்படி செல்வது

எப்படி செல்வது

செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமிக்கு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் உள்ள மேட்டூர் மகாதானபுரத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் நடைபெறும் விசித்திரமான வழிபாடு காண்போரை வியக்கச்செய்கிறது.

கரூரிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும் செல்லமுடியும்.

அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்

அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு பங்குனி மாதம் சென்றால் பல பலன்கள் கிடைக்கும். அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் ஜாக்பாட் அடிக்கவிருக்கிறது. ஏனென்றால் அவர்களின் மீதான குருப் பெயர்ச்சியின் தாக்கம் இந்த மாதத்தில் தான் முழு பயனையும் கொடுக்கப்போகிறது.

பல்லவமன்ன ராஜா முதலாம் நரசிம்மவர்மன் கட்டிய இந்த கோயில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிறந்துவிளங்குகிறது. அப்போது திருப்பதி லட்டு இங்கு வழங்கப்படுகிறது.

Nsmohan

எப்படி செல்வது

எப்படி செல்வது

திருவல்லிக்கேணியிலிருந்து பேருந்து, ஆட்டோக்களில் இங்கு செல்லமுடியும். மேலும் இந்த கோயிலில் நடை காலை 6மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திறக்கப்படுகிறது.

 கோவிந்தராஜ பெருமாள் கோயில்

கோவிந்தராஜ பெருமாள் கோயில்

அருள்மிகு கோவிந்த ராஜ பெருமாள் கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 1000 வருடங்களுக்கு முந்தைய கோயில் ஆகும். சித்திரையில் பத்து நாட்கள் உற்சவம் விழா நடைபெறுகிறது. இது 108 திவ்ய தேசங்களுள் நாற்பத்தி ஒன்றாவது திவ்ய தேசம் இதுவாகும். பிரம்ம தேவர் நின்று காட்சியளிக்கும் ஒரே ஒரு தலம் இதுதான்.

Raghavendran

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

கடலூரிலிருந்து 43கிமீ தொலைவில் அமைந்துள்ளது தில்லை. இதன் அருகிலேயே அமைந்துள்ளது திருச்சிற்றக்கூடம் எனும் அழகிய திருத்தலம். இங்குதான் அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

 அருள்மிகு பேட்டைராய சுவாமி கோயில்

அருள்மிகு பேட்டைராய சுவாமி கோயில்

500 வருடங்கள் பழமையாக கருதப்படும் இந்த கோயில் ஓசூர் அருகே அமைந்துள்ளது. இங்கு பங்குனி மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம் சிறப்பானதாகும். திருப்பதி கோயிலைப் போன்று இந்த கோயிலில் ஆனந்த விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

30அடியில் ஒரு தேரும், அதில் மூலவர் நின்ற கோலத்தில் தரும் காட்சியும் காண்போரை கவர்கிறது.

Prof tpms

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேன்கனிக்கோட்டைக்கு ஓசூரிலிருந்து பேருந்து, வாடகை வண்டிகள் மூலம் செல்லலாம். இது பெங்களூருவிலிருந்து 65கிமீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காலை 6 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை அடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படும்.

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில்

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில்

500வருடங்கள் பழமையான இந்த கோயில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தனுசு ராசிக்காரர்களுக்கு அள்ளி அள்ளிக்கொடுக்கப்போகும் குரு இந்த கோயிலுக்கு சென்றால் முழுப்பலனையும் அளிக்கவுள்ளது.

இந்த கோயில் பிரகாரத்தில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரிவர், லட்சுமி பூவராகர் ஆகியோர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பானதாகும். இவர்களை வழிபட்டால் பணக்கஸ்டம் நீங்குவதோடு தொழில் விருத்தியடையும்.

Nsmohan

 எப்படி செல்வது

எப்படி செல்வது

மதுரை ராமேஸ்வரம் சாலையில் திருப்பாச்சேத்தி சந்திப்பில் 8கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.

இங்குள்ள பெருமாள் இடது கையால் நம்மை வரவழைத்து வலது கையால் அருள்பாலிக்கிறார். மற்ற கோயில்களில் இந்த கைகள் மாறியிருக்கும். உளி கொண்டு செதுக்கப்படாமல் கற்களைக்கொண்டு செதுக்கப்பட்டது இந்த சிலையாகும்.

அருள்மிகு பேராற்றுச் செல்வி திருக்கோயில்

அருள்மிகு பேராற்றுச் செல்வி திருக்கோயில்

500வருடங்கள் பழமையானதாக கருதப்படும் கோயில் இதுவாகும். திருமணம், புத்திரதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து செவ்வரளி பூ மாலை சாகத்தி மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் வேண்டியவை நிறைவேறுமாம்.

இந்த கோயிலில் விசித்திரமாக விநாயகர் அருகில் நந்தி அமைந்துள்ளது. இக்கோயிலில் 8 கைகளில் ஆயுதங்களுடன் வடக்கு நோக்கி அருள்கிறாள் அம்பாள். இந்த கோயிலின் அம்மன் சாந்தமானவர் என்பதால் சாந்தசொரூபி என்றும் அழைக்கிறார்கள்.

tirunelveliperathuselviamman

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து புதுப் பேருந்து செல்லும் வழியில் வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ளது இந்த கோயில்.

இந்த கோயிலில் இருக்கும் அம்பாள் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டவராகும்.

திருவாழ்மார்பன் கோயில்

திருவாழ்மார்பன் கோயில்

1000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் இந்த கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மூலவரான திருவாழ்மார்பர் நான்கு கைகளுடன், சங்கு சக்கரம் கொண்டு அமர்ந்திருக்கிறார். இவர் 9 அடி உயரம் கொண்டு, கல்லும் சுண்ணாம்பும் சேர்ந்து கடுகும் சக்கரையும் சேர்த்து செய்யப்பட்ட ஒருவித பசையினால் செய்யப்பட்டவராவார்.

Ssriram mt

 எப்படி செல்வது

எப்படி செல்வது

நாகர்கோயில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பத்து கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த திருப்பதிசாரம் எனும் பகுதி. பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் சிற்றுந்துகள் மூலமாக இந்த கோயிலை எளிதில் அடையலாம்.

 அருள்மிகு பூதநாராயண சுவாமி கோயில்

அருள்மிகு பூதநாராயண சுவாமி கோயில்

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில், 1000வருடங்கள் பழமையானதாக நம்பப்படுகிறது. சித்திரை மாதம் நடைபெறும் மூன்று வாரத் திருவிழா மிகச்சிறப்பானதாகும்.

சுருளியாறு, வெண்ணியாறு, கன்னிமார் ஊற்று ஆகிய மூன்று மூலிகை நீர்களும் சங்கமிக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

Rathishkrishnan

 எப்படி செல்வது

எப்படி செல்வது

தேனியிலிருந்து 51கிமீ தொலைவிலும் கம்பத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், அமைந்துள்ளது சுருளி அருவி,. இதன் அருகில் அமைந்துள்ளது இந்த கோயில். கம்பத்திலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Read more about: travel temple chennai tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more