» »காவிரி மட்டுமல்ல பெங்களூர் தமிழர்களுக்கு இதுவும்தான் முக்கியம்..!

காவிரி மட்டுமல்ல பெங்களூர் தமிழர்களுக்கு இதுவும்தான் முக்கியம்..!

Written By: Sabarish

அப்பப்பப்பா... எங்க பாத்தாலும் காவிரி, காவிரி... அதுவும் குறிப்பா நம்ம தமிழ்நாட்டுல தினம்தினம் போராட்டம், எல்லாம் இந்த காவிரி தண்ணிக்காக... தமிழ்நாட்டுக்கும், கார்நாடகாவுக்கும் நடுவுள பாயுரதனால என்னவோ நம்ம நாட்டு காவிரியில கலவரம் மட்டும் கரைபுரண்டு ஓடுது. சரி விடுங்க, அதெல்லாம் இருக்கட்டும். கர்நாடகாவுல தமிழர்கள் 40 சதவிகிதத்துக்கும் மேல வசிக்குர பெங்களூருக்கு தண்ணி எங்க இருந்து வருதுன்னு உங்களுக்கு தெரியுமா..?

பெங்களூரு தமிழர்களே...

பெங்களூரு தமிழர்களே...


19 ஆம் நூற்றாண்டுல தான் இந்த பெங்களூரு இரட்டை நகரமாய் உருமாறியது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட கன்டோன்ட்மென்ட் பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். இங்கதான் நம்ம தமிழர்களின் ஆதிக்கம் சற்றே உயரத்துவங்கியது. இன்றளவும் பெரும்பாலான பெங்களூரு நிறுவனங்களில் தமிர்களின் ஆதிக்கமே அதிம்னா பாருங்களேன்.

wikipedia

குடிக்க தண்ணி குடுங்க பாஸ்...

குடிக்க தண்ணி குடுங்க பாஸ்...


"வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியா" சொல்லும் போதே சிரிப்பு வரலயா... அதவிடுங்க... பண்முகத் தன்மைகொண்ட இந்தியாவுல அதுவும் குறிப்பா திராவிட நாடான தென்னிந்தியாவுல நமக்குள்ள தண்ணி பகிர்ந்துக்க நடக்குற பிரச்சனைகள்தான் எத்தனை எத்தனையோ... ஆனா அதையெல்லாம் மீறி கர்நாடக வாழ் தமிழர்களுக்கு தண்ணி எங்க இருந்து கிடைக்குது தெரியுமா..?

Ranjithkumar.i

திப்பகொண்டனஹல்லி

திப்பகொண்டனஹல்லி


பெங்களூரில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் பனஸ்வாடி அருகே உள்ளது திப்பகொண்டனஹல்லி. தற்போது நகருக்கான நீர் வழங்கலில் சுமார் 80 சதவிகிதம் பங்கினை காவிரி நதி அளிக்கிறது. மீதி 20 சதவிகிதம் திப்பகொண்டனஹல்லியில் இருந்தும், ஹெசராகட்டாவில் இருந்தும் தான் கிடைக்குதுன்னா உங்கனால நம்ம முடிகிறதா ?.

Avoid simple2

இணைப்பு ஆறு

இணைப்பு ஆறு


திப்பகொண்டனஹல்லியின் இணைப்பு ஆறாக உள்ளது ஆர்க்காவதி ஆறு. கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் இந்த ஆறு கோலார், பெங்களூரு வழியாக பாய்ந்து ராமநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கனகபுரா அருகே காவிரியுடன் சங்கமிக்கிறது. இந்த ஆற்றின் மூலமே பெங்களூரின் ஒரு சில பகுதிகள் பயணடைந்து வருகின்றன.

Sanjaykattimani

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து முசாபார்பூர் எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், பாகமதி எக்ஸ்பிரஸ், லால்பா எக்ஸ்பிரஸ், காவிரி எக்ஸ்பிரஸ், சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. கேம்பகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரில் அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து தனியார் வாகனம் அல்லது பேருந்துகள் மூலம் திப்பகொண்டனஹல்லிiய சென்றடையலாம்.

Venkat Mangudi

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்