Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரு டூ கன்னியாகுமரி - கேரள வழியா இப்படி ஒரு பயணம் போயிருக்கீங்களா? #புதியபாதை 5

பெங்களூரு டூ கன்னியாகுமரி - கேரள வழியா இப்படி ஒரு பயணம் போயிருக்கீங்களா? #புதியபாதை 5

By Udhaya

பெங்களூருவிலிருந்து கன்னியாகுமரி பயணிப்பவர்கள் வெறுமனே வேகத்தையும் நேரத்தையும் கருதி பயணித்தால் சேலம் மதுரை வழியாக எளிதாக வந்தடையலாம். ஆனால் நீங்கள் அந்த வழியில் சென்றால் நிறைய விசயங்களை இழப்பீர்கள். உங்களின் இழப்புகளில் முதல் விசயம் கேரள மண்ணின் அருமணம். நறுமணமிக்க கேரளத்தின் காற்று. சுவை மிகுந்த பண்டங்கள்... கவலை வேண்டாம்.. பெங்களூரு - கன்னியாகுமரி எந்த வழியில் சுலபமாக செல்லலாம் என்பதையும் இதே பதிவில் குறிப்பிடுகிறோம். நாங்க ரெண்டு பேரு.. என் பேரு சுரேஷ்.... இவரு ரமேஷ்... பெங்களூரு டூ கன்னியாகுமரி இரண்டு வழிகள்ல பயணிச்சி அந்தந்த வழிகள்ல நாங்க என்னெல்லாம் பாத்தோம்னு இந்த பதிவுல சொல்லப்போறோம். சரி பயணத்த திட்டமிடலாமா?

பெங்களூரு - கன்னியாகுமரி செல்ல இரண்டு வழித்தடங்கள் உள்ளன.

1 பெங்களூரு சேலம் மதுரை கன்னியாகுமரி

2 பெங்களூரு கோயம்புத்தூர் கொச்சி கன்னியாகுமரி

முதல் வழியில ரமேஷ் போறாரு.. எவ்ளோ சீக்கிரமா போனாலும், அந்தந்த வழிகள்ல என்னலாம் இருக்குனு பாத்துட்டு நமக்கு சொல்வாரு.. நா உங்களுக்கு ஒரு மாற்று வழிய காட்டப்போறேன்.. பெங்களூர்ல இருந்து சேலம் வரைக்கும் ஒன்னா தான் பயணிக்க போறோம். ஸோ வாங்க ரமேஷ் நம்ம பயணத்த தொடர்வோம்.

 சேலம் மதுரை வழியாக

சேலம் மதுரை வழியாக

சேலம் மதுரை வழியாக கன்னியாகுமரியை அடைவது என்பது, சற்று சிறப்பான விசயம்தான். பெங்களூருவிலிருந்து சேலம் 202கிமீ ஆகும். சேலத்திலிருந்து 238கிமீ ஆகும். மதுரையிலிருந்து கன்னியாகுமரி 245கிமீ ஆகும். இந்த வழியில் பயணிக்கும்போது 664 கிமீ தூர பயணத்தில் 10 மணி நேரத்துக்கும் சற்று அதிகமான கால அளவில் கன்னியாகுமரியை அடையமுடியும்.

பெங்களூருவிலிருந்து சேலம்

பெங்களூருவிலிருந்து சேலம்

பெங்களூருவிலிருந்து சேலம் செல்லும் வழியில் முக்கியமாக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களில்தான் காவிரி ஆறு தமிழகத்தில் அடியெடுத்து வைக்கிறது. இங்கு பல சுற்றுலாத் தளங்களும் அமைந்துள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டிணம், அஞ்செட்டி, கெலவரப்பள்ளி, பகலூர், தளி, வீரமலை, பெட்டமுகிலாளம், சின்னாறு, புரம், தொட்டி, கொலட்டி, ஜவாலகிரி, நாச்சிக்குப்பம், எக்கூர், சானமாவு உள்ளிட்ட இடங்கள் இருக்கின்றன.

தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சென்ராய பெருமாள் கோயில், சிவசுப்ரமணியசுவாமி கோயில், காந்தி சிலை, தீர்த்தகிரீஸ்வரர் கோயில், விலங்கு பூங்கா, கோட்டை முனீஸ்வரன் கோயில், காலபைரவர் கோயில் ஆகிய இடங்கள் இருக்கின்றன.

L.vivian.richard

சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், ஆயிரத்தெட்டு சிவன் கோயில், பரவச உலகம், கஞ்சமலை, சுகவனேஸ்வரர் கோயில், குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா, ஜருகுமலை காடுகள், மசினாயக்கன்பட்டி ஆலமரம், சிங்கமேத்தாய், முல்லை நகர் குழந்தைகள் பூங்கா, மூக்கனேரி, மாடர்ன் தியேட்டர், பொய்மான் கரடு, அரசு அருங்காட்சியகம், கள்ளிப்பட்டி கந்தசாமி கோயில் என எண்ணற்ற இடங்கள் காணப்படுகின்றன.

mv.sankar

 சேலம் - கன்னியாகுமரி

சேலம் - கன்னியாகுமரி

சேலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு இரண்டு வழிகள் நாம் நம் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்வோம். இந்த வழியில மேற்கொண்டு ரமேஷ் போவாரு... நான் உங்களுக்கு மாற்று வழி ஒன்ன காமிக்கிறேன்.. நேயர்களே... இந்த பாதையில் பயணிப்பது உங்களோட காலத்தை விரயம் பண்ணுதுனு நீங்க நினைச்சா இந்த வழியில் பயணிக்கவேண்டாம். நேர் வழியான சேலம் மதுரை கன்னியாகுமரி தான் சிறந்தது. நா போற வழி சுற்றுலாவுக்கானது.. உங்களுக்கு இந்த இயற்கையோட இணஞ்சி பின்னி பிணஞ்சி கேரளத்தையும் ஒரு சுத்து பாத்துட்டு வந்துடலாம்னு தோணிச்சினா வாங்க... போலாம்... ஏலே ரமேஷ்... நீ அப்டிக்கா போ... நா இப்டிக்கா போறேன்..

நண்பர்களே... ரமேஷ் ஒரு சோம்பேறி.. அவருக்கு.. டிராவல் பண்றதே பிடிக்காது.. அதனால அவர கழட்டிவிட்டுட்டு நாம மட்டும் இந்த பாதையில பயணிக்கலாம். ரெடியா...

 சேலம் - கோயம்புத்தூர்

சேலம் - கோயம்புத்தூர்

என்னலே.. தெக்கால போவேண்டிய எடத்துக்கு.. இப்டி மேக்கால போவ வழிச்சொல்லுறனு நீங்க யோசிக்குறது புரியுது.. நாந்தா சொன்னேல.... அப்ளேயே.. இது சுத்துலா போற வழி.. வரு..வரு... நாம இப்போல் கேரளத்தில் கறங்காம்.. போவாம்..

சேலத்ல இருந்து கோயம்புத்தூருக்கு போற தூரம் 168கிமீ வர கெடக்கு பாத்துக்குங்க.. இதுல ஈரோடு வழியாவும், கரூர் வழியாவும் ரெண்டு தடம் இருக்கு.. 3மணி நேரத்துல வெரசா போய் சேரணுமுன்னா ஈரோட்டு வழிதானுங்க பெஸ்ட்..

போற வழியில 1008 சிவன் கோயில், வாணியம்பாடி. வீரபாண்டி, பொய்மான் கரடு, காக்காபாளையம், பவானி, சென்னிமலைனு நிறைய இடங்கள் இருக்கு.. சும்மா சுத்திட்டு வரலாம்ல... அப்டியே கோயம்புத்தூரையும் போயி சேரலாம்.

கோயம்புத்தூர்ல பட்டறயப் போட்டுட்டு, சும்மா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குவோம். அதுக்குள்ள இங்கன என்னவெல்லாம் சுத்திப் பாக்க கெடக்குனு பாத்துட்டு வந்திறியலா..

கோயம்புத்தூரில் இருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பற்றிய விரிவா தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

கோயம்புத்தூர்ல என்னலா இருக்கு...

கோயம்புத்தூர்ல என்னலா இருக்கு...

மருதமல கோயிலு, குருந்த மல சாமி, சிங்காநல்லூர் ஏரி, தியானலிங்க கோயிலு, கோவ குத்தாலம், பிளாக்தன்டரு, புரூக்பில்டு, காரமட கோயிலு, வனபத்ரகாளி கோயிலு, பட்டீஸ்வரர் கோயில்னு நிறய கிட்டக்க இருக்கு.. போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துபுடலாம்ல.. சரி வேணான்னா விடுங்க.. நம்மள பொழுதனயக்குள்ள கேரளத்து பக்கமா ஒதுங்கிடுவோம்.

Booradleyp1

 கோயம்புத்தூர் - பாலக்காடு

கோயம்புத்தூர் - பாலக்காடு

ஏல மக்கா... அன்னாச்சி கேட்டுகிடுங்க.. பாலக்காடு கொள்ள பயவுள்ளைங்களுக்கு தெர்ல.. அது கேரளத்து ஊருதான்.. ஆனா கொஞ்சம் நிறையவே தமிழ் பேசுற ஆளுங்க வாழ்றாவல்லா.. அதான் அது நம்ம ஊருகணக்காதான்.. கவலப்படாதீய அங்கயும் எறங்கி சுத்திப்புடுவோம்..

கோவைல இருந்து 54கிமீ தூரம் போனியனா பாலக்காடு டவுன்னு வந்துப்புடும். கோவைலேந்து உக்கடம் வழியா அப்டியே நொய்யலாத்த கடந்து போனோமுன்னா, குனியாமுத்தூர் வந்துடும். அப்டியே மதுக்கரையில ரைட் எடுத்து திருமலையம்பாளையம் வழியா வலயனூர தொட்டா, அங்கதாம்ல இருக்கு தமிழ்நாடு, கேரளா பார்டரு.. அன்னாச்சி, எளவட்டப்பயலுவ ரெம்ப வேகமா வண்டிய முறுக்கிட்டு கெடப்பானுவ.. நீங்கதான் புத்திமதி சொல்லி ஒழுங்கா கூட்டிட்டு போனும் பாத்துகிடுங்க..

வாலையாரு ஏரிய தாண்டுனாலே தமிழ்நாட்ட தாண்டுனகணக்காதான்.. கேரளம் நிங்கள சுவாகதம் செய்யு.. அட வரவேற்குவுப்பா.. வாங்க வாங்க.. பாலக்காட்டுல நீங்க சுத்தியாடவேண்டிய எடமெல்லாம் நிரய கெடக்கு..

அதபத்தி முழுசா தெரிஞ்சிக்கணும்னாக்கா இந்த லிங்க்க சொடுக்குங்கங்க்றேன்..

பாலக்காட்டுல என்னலா இருக்கு

பாலக்காட்டுல என்னலா இருக்கு

ஒட்டப்பாலம், காஞ்சிரப்புழா, பரம்பிக்குளம், ஜெயின்கோயில், கல்பாத்திக் கோயில், தோணி அருவி இப்பிடி நிரய எடத்துக்கு நாம போவேண்டி கெடக்கு.. அதுலயும் அந்த தோணி அருவிய மறந்துராதீய.. கண்டிப்பா பாக்கவேண்டிய எடங்கள்ல ஒன்னுலா அது..

DEEPAK SUDARSAN

பாலக்காடு - கொச்சி

பாலக்காடு - கொச்சி

எல சவத்த மூதி.. ஏம்ல இப்டி நேரா போவேண்டிய எடத்துக்குலாம் குறுக்காலயும் மறுக்காலயும் ஓடி, தலைய சுத்தி மூக்க தொடுறனு எங்க ஆச்சி கேட்டுட்டே கெடக்கும். அவுங்களுக்கு தெரியுமா.. இதுல கெடைக்குற சுகமே தனினு..

பாலக்காட்டுலேர்ந்து கொச்சிக்கு 144கிமீ தான். ஆனா போற எடமெல்லாம் பச்சப்பசேல்னு.. உங்கள போகவே உடாது.. வண்டிய நிறுத்திப்புட்டு, அப்டியே ஒரு செல்பி எடுக்கலாம்னு தோணும். இந்த பாதையில வேற சாலக்குடி, அங்கமாலி, ஆலுவானு நல்ல பசுமையான எடங்கள்லாம் கெடக்குங்குறப்ப.. சொல்லியாத் தெரியணும். கேமராவோ, மொபைல்லோ சார்ஜ் போட்டு வச்சிக்கிடுங்க...

 இந்த வழியில் பாக்கவேண்டிய முக்கியமான தளங்கள்

இந்த வழியில் பாக்கவேண்டிய முக்கியமான தளங்கள்

பாலக்காடு கோட்ட, தச்சன்கோடு, குழவன்முக்கு, அருவுக்காடு ஸ்ரீதேவி கோயில், காளிமுத்து கோயில், வெல்லப்பாற, சித்தலி, வானூர் கோயில், மங்களப்பாலம், தேனிடுக்கு, சுவட்டுபாடம், பந்தலம்படம், நெல்லிப்பாற, முடிகோடு , அங்கமாலி, ஆலுவா உள்ளிட்ட நிறைய இடங்கள் இருக்குவுலா..

ஆமா.. இந்த ரமேஷ் எங்கன கெடக்காம்னு தெர்லயே.. ச்சரி ஒரு போனப்போடுவோம். அலோ.. ரமேஷு.. எங்க இருக்க.. நாந்தா சொன்னேம்லா.... நா வர இன்னும் நெரய நேரம் ஆவும்லே.. ம் சரிலே,.. வை.. கன்னியாகுமரி சந்திப்போம்.

ஏலே மக்கா,... ரமேஷு இப்ப திருநெவேலி கிட்ட போய்ட்டிருக்காராம்.... இன்னும் 2மணி நேரத்துக்குள கன்னியாகுமரி போய்டுவாப்டியாம். அதான் திநெவேலில எறங்கி அந்த சாந்தி சுவீட்ஸ்ல கொஞ்சம் அல்வா வாங்கிட்டு போக சொல்லிருக்கேன்.. திரும்பி வரப்ப இருட்டுக்கடைக்கி போய்க்கலாம்.. ச்சரியா.. கொச்சி வந்தாச்சி... கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பாத்தா... இங்க நிறைய எடங்க நாம பாக்கவேண்டி கெடக்கு.. நம்ம பிரண்டு ஒருத்தரு இருக்காரு... கொஞ்சம் தமிழ் தெரியும் அவருக்கு.. அவரு கூட கொச்சிய சுத்திப்பாத்துட்டு வாரியலா.. கோச்சுககிடாதீங்க.. நா கொஞ்சம் சாஞ்சி எந்திருக்கேன்..

Augustus Binu/

 கொச்சியிலே காணானுள்ள ஸ்தலங்கள்

கொச்சியிலே காணானுள்ள ஸ்தலங்கள்

என்ட பேரு ஜார்ஜ் ஆனு.. எனக்கு கொஞ்சம் தமிழ் தெரியும்.. நா நல்லா பேசுவேன். உங்களுக்கு கொச்சிய சுத்திக்காட்டத்தான் என்னய சுரேஷ் வரச்சொல்லிருந்துச்சி,.. எனக்கும் கன்னியாகுமரி பக்கம்தான்.. திருவனந்தபுரத்துலர்ந்து ஒரு 40கிமீ.. நாம கொச்சியில பாக்கவேண்டிய ஸ்தலங்கள்னு சோதிச்சால், மியூசியம் ஆஃப் கேரளா ஹிஸ்டரி காணனும், மங்களவனம் போகணும், அக்வா டூரிஸ்ட் வில்லேஜ், காஷி ஆர்ட் கஃபே, ஹில் பேலஸ் மியூசியம், பொல்கட்டி அரண்மனை, டூரிஸ்ட் வில்லேஜ், மட்டஞ்சேரி அரண்மன, கொச்சி கோட்டா, மலயாட்டூரு சர்ச், பீச், எர்ணகுளத்தப்பன் கோயிலுனு கொறய ஸ்தளங்கள் உண்டு.. இங்கன இந்த இடங்கள் குறிச்சி நிறைய அறியணும்னா இத கிளிக் செய்தால் மதி.. https://tamil.nativeplanet.com/kochi/attractions/#museum-of-kerala-history.

Augustus Binu

கொச்சி - கொல்லம்

கொச்சி - கொல்லம்

எப்பப்பா.. நல்ல உபசரிப்பு... என்னதான இருந்தாலும் மலயாளி மலயாளிதன்னே.. நல்லாத்தான்யா பழகுறானுங்க... என்ன ஒன்னு தண்ணி மட்டும் தரமாட்றானுங்க.. ச்சேரி, நாம மாத்ரம் தண்ணிய சேத்தா வச்சிட்டுருக்கோம். நம்மளயும் சொல்லி மாலாது... அடுத்ததா கொச்சியிலேர்ந்து கொல்லம் பயணிக்கலாமா..

கொச்சியில இருந்து கொல்லம் 138கிமீ தான். 4மணி நேரத்துக்குள்ளாடி கொல்லத்துக்கு போயி சேந்துடலாம். அடுத்ததா நம்ம பிளான்ல ஒரு சேஞ்ச். திருவனந்தபுரம் போவாம, கொல்லத்துல கட் அடிச்சி, குத்தாலம் வழியா நம்ம திநெவேலிக்கு போய்டலாம்.. அங்கன இருந்து கன்னியாகுமரிக்கு போவலாம்.

நீங்க குத்தாலத்த பத்தி இன்னும் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கியலா.. வாங்க போவலாம்.

கொல்லம் - திருநெல்வேலி

கொல்லம் - திருநெல்வேலி

கொல்லத்துலேர்ந்து திநெவேலிக்கு 159கிமீ . வழியில குத்தாலம், தென்காசிலாம் பாத்துட்டு வரலாம். 5 மணிக்கூர் ஆவும். ஏன்னா மலப்பாத பாத்தியலா.. நம்ம டூர் டைம் பொறுத்துலாம் இல்ல... ஏன்னு கேக்குறியலா அண்ணாச்சி, உங்க வசதிக்கு ஏத்தமாரி திட்டத்த போட்டுகிடுங்க.. நா எங்க உங்க நேரத்த வளைக்குறது.. உங்க நேரம் உங்க உரிமைலா.. நா வழிய மட்டும் சொல்லுதேன். என்ஜாய் மட்டுந்தே பண்றோம் இந்த டிரிப்ல... கவலய மறந்து ஓ ஓனு சிரிச்சிட்டு வாங்கனுதே..

தின்னவேலிய அடஞ்சிட்டோம்

தின்னவேலிய அடஞ்சிட்டோம்

அடேய்.. என்னடா இது பித்தலாட்டமா இருக்கு.. கன்னியாகுமரிக்கு கூட்டிட்டு போறேனுட்டு, தின்னவெலிக்கு கூட்டியாந்துருக்க னு நீங்க சிந்திக்குறது புரியுது.. ஆனா அந்த ரமேஷு.. கன்னியாகுமரிய பத்தி நிறைய வாட்டி சொல்லியாச்சி.. இப்படி ஒரு ரூட்டத்தான் சொல்லலனு.. இப்டி ஒரு சர்ப்ரைஸ சொல்லலாம்னு யோசன சொன்னான்.. அதான். நீங்க கவல படாதீய..

உங்களுக்கு இங்கன திருநெவேலி, மதுர, ராமேஸ்வரம், கன்னியாகுமரிய சுத்துரதுக்கு சூப்பர் பிளானு போட்டு வச்சிருக்கேன்.. இத பாத்தா போதும்ல..

இரண்டே நாட்களில் மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி டூர் : இந்த ரூட்ல போயிருக்கீங்களா?

சரிங்க அண்ணாச்சி.. இன்னிக்கு டிரிப்பு நல்லா இருந்துச்சி.. நா வேற டிரிப் போவும்போது உங்களயும் கூட்டிட்டு போறேன்.. அந்த செத்தப்பய ரமேஷு எங்கன போயி தொலஞ்சான் தெரியல.. எப்டியும் கன்னியாகுமரி போய்ருக்கமாட்டான்.. தின்னவெலி டவுன் நெல்லயப்பரு கோயிலு முன்னாடி இருக்குர இருட்டுக்கடயிலத்தான் கியூ வரிசைல நிப்பான்.. நா போயி புடிச்சிக்குறேன்.. நல்லா சுத்திப்பாருங்க.... எதாது தகராறு கிகராறு வந்துச்சி வைங்க.. ஒரு போன போடுங்க.. டான்னு வந்துபுடுறேன்..

ILAKKIA KAMARAJ

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more