» »முக்தி தரும் அந்த ஏழு நகரங்கள் பற்றிய சுவாரசியமான விசயங்களை கேள்விபட்டிருக்கிறீர்களா?

முக்தி தரும் அந்த ஏழு நகரங்கள் பற்றிய சுவாரசியமான விசயங்களை கேள்விபட்டிருக்கிறீர்களா?

Written By: Udhaya

முக்தி தரும் ஏழு நகரங்கள் அனைத்தும் இந்தியாவில்தான் உள்ளன. அவை பொதுவாக சப்த மோட்ச புரிகள் என அழைக்கப்படுகின்றன.

அமெரிக்காவுக்கு போக விசா வழங்கும் கடவுள் பற்றி தெரியுமா?

முக்தி என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையின்படி இறைவனை அடைவது அல்லது அவன் அருளை நீங்காமல் பெருவது என்று பொருள்.

மந்த்ராலயம் - குரு ராகவேந்திர சுவாமியின் பிருந்தாவனம்!!!

அதன்படி இந்தியாவில் ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவைகள் என சான்றோர்களால் வகைபடுத்தப்பட்டுள்ளது. புரி எனும் சமக்கிருத மொழிச் சொல்லிற்கு நகரம் என்று பொருள். இந்த ஏழு புனித நகரங்களில் உள்ள புனித நீரில் நீராடினாலேயே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நீங்க பேயை மீட் பண்ணிருக்கீங்களா..அப்போ இங்க வந்தா நீங்க பேயை பாக்கலாம்

நீங்களும் தயாராகிட்டீங்களா வாங்க அந்த ஏழு நகரங்களுக்கும் எப்படி போலாம்னு பாப்போம்.

அடுத்தக் கட்டுரை:

சபரிமலையில் ஐயப்பனாக காட்சி தருவது இவரா? திடுக்கிடும் தகவல்கள்

அந்த ஏழு நகரங்கள்

அந்த ஏழு நகரங்கள்

வாரணாசி

அயோத்தி

காஞ்சிபுரம்

மதுரா

துவாரகை

உஜ்ஜைன்

ஹரித்வார்

வாரணாசி

வாரணாசி

வாரணாசி புனித நகரம், இது காசி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்துள்ள இது, கங்கைக் கரையில் அமைந்த பண்டைய புனித நகரம் ஆகும்.

Penyulap

முக்தி அடைய

முக்தி அடைய

முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இதனை பனாரஸ் என்றும் அழைப்பர்.

வாரணாசியில் அமைந்த ஜோதி சிவலிங்கம், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும்.

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

வருணா ஆறும் மற்றும் அசி ஆறும் இந்நகரில் பாயும் கங்கை ஆற்றில் கலப்பதால், இந்நகருக்கு வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது.

இங்கு பாயும் புனித ஆறான கங்கையில் நீராடிவதால் அனைத்து பாவங்கள் நீங்கி மோட்சம் பெறுவர் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கை.

அயோத்தி

அயோத்தி

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.

Ramnath Bha

ராமர் பிறந்த இடம்

ராமர் பிறந்த இடம்

ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமி இந்த அயோத்தியில் தான் அமைந்துள்ளது. இங்குள்ள புனித ஆறான சரயுவில் நீராடி ராமரை வழிபட்டால் மோட்சம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

Bhelki

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நகரம் ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்புகழ் பெற்றது. "நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி.

Keshav Mukund Kandhadai

வில் வடிவம்

வில் வடிவம்

பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன.

Karthik Prabhu

 மக்கள்

மக்கள்

சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

SINHA

கோயில் நகரம்

கோயில் நகரம்

காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை.

SINHA

மதுரா

மதுரா

புனித மதுரா நகரம், உத்தரப்பிரதேசத்தில், அமைந்துள்ளது. மதுராவில் ஓடும் யமுனை ஆற்றில் நீராடி கிருஷ்ணரை வழிபடுவர்.

மதுரா இந்து தொன்மவியலின்படி கிருஷ்ணனின் பிறப்பிடமாகும்.

Diego Delso

மகாபாரதம்

மகாபாரதம்

மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி மதுராவை தலைநகராகக் கொண்டு சூரசேன இராச்சியத்தை கிருட்டினனின் மாமன் கம்சன் ஆண்டு வந்தான். கிருஷ்ண ஜென்ம பூமி எனப்படும் இடத்தில் பாதாள சிறையொன்றில் கிருட்டினன் பிறந்ததாக அந்த இடத்தில் கேசவ தேவ் கோவில் கட்டப்பட்டுள்ளது..

Bhadani

துவாரகை

துவாரகை

துவாரகை, எழு மோட்ச நகரங்களில் ஒன்று. இது குஜராத் மாநிலத்தின் தேவபூமிதுவாரகை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

யதுகுல அரசர்கள் ஆண்ட ஆனர்த்தா நாட்டின் தலைநகராக விளங்கிய துவாரகையை, ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. துவாரகை ஏழு மோட்சபுரிகளில் ஒன்றாக உள்ளது.

Shishirdasika

துவாரவதி

துவாரவதி

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துவாரகை இங்கு அமைந்துள்ளது குறிக்கத்தக்கது. துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள்.

Scalebelow

உஜ்ஜையினி

உஜ்ஜையினி

உஜ்ஜையினி, மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பழைய புனித நகரமாகும்.

மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி அவந்தி அரசின் தலைநகரமாகும். உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் இங்கேயே உள்ளது.

Ashwinikesharwani

அரித்துவார்

அரித்துவார்

அரித்துவார் ஏழு வீடுபேறு வழங்கும் புனித நகரங்களில் ஒன்று. இந்நகரம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹிந்தியில் ஹரித்வார் என்பது, ஹரியின் த்வாரம் அல்லது கடவுளின் வழி, அதாவது ஹரி என்றால் கடவுள் மற்றும் த்வார் என்றால் வழி எனும் பொருளில் வழங்கப்படுகிறது. இங்கு பாயும் கங்கை ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும்.

Sanatansociety

Read more about: travel, places
Please Wait while comments are loading...