Search
  • Follow NativePlanet
Share
» »யம்மாடி...! இவ்வளவு பெரிய சிவன் சிலைகளும் இந்தியாவுல இருக்கா!

யம்மாடி...! இவ்வளவு பெரிய சிவன் சிலைகளும் இந்தியாவுல இருக்கா!

இந்தியாவின் மிக பிரம்மாண்ட சிவன் சிலைகளை நேரில் தரிசிக்க ஆசையா?

சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வந்தாலும், சிவபெருமான் 27 அவதாரங்கள் எடுத்துள்ளதாக கூர்மபுராணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல சிவனின் அவதாரங்களை போன்றே பல்வேறு உருவங்களில், வெவ்வேறுபட்ட உயரங்களில் சிவனின் பிரம்மாண்ட சிலைகள் இந்தியாவில் நிறைய இடங்களில் அமைந்துள்ளன.

ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார் சிவபெருமான். ஒரு இடத்தில் கண்கள் மூடிய நிலையிலும், இன்னொரு இடத்தில் பக்தர்களுக்கு அருள்புரியும் வகையிலும் என்று பல்வேறு வடிவங்களில் சிவன் சிலைகள் காணப்படுகின்றன. மேலும் இந்தியா கோயில்களின் நாடு என்பதால் இங்கு எண்ணற்ற சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூர் ஏர்போர்ட் சாலையில் உள்ள கெம்ப் கோட்டையின் பின்னே இந்த பிரம்மாண்ட சிவன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 65 அடி உயரத்தில் மிகவும் நுணுக்கமாக கலைநயத்துடன் அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது. இது 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை உலகம் முழுவதுமிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்த சிவன் சிலையை வந்து பார்த்து செல்கின்றனர்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் அமைந்திருந்தாலும். அது தமிழகத்துக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. அதாவது தமிழகத்தின் ஒசூருக்கு அருகே ஒரு மணி நேரத்தில் சென்றடையும் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தமிழர்கள் பலர் வாழ்ந்துவருகின்றனர்.

சென்னை, கோவை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் விமான சேவைகளும் சராசரி நேரங்களில் கிடைக்கின்றன. ரயில்களில் செல்ல ஆசைப்படுபவர்களுக்கு, சென்னையிலிருந்து சதாப்தி விரைவுவண்டி, பெங்களூரு கேன்ட் பிரிமியம் சிறப்பு வண்டி, பசாவா விரைவு வண்டி, எஸ்வந்த்பூர் வண்டி, சங்கமித்ரா வண்டி, பாக்மதி விரைவு, வாரணாசி விரைவு வண்டி, காமாக்யா, முசாப்பூர், கவுகாத்தி, திப்ரூகார் விரைவு வண்டிகள் ஆகியவை உள்ளன.

சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்கள்

சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்கள்

மந்திரி ஸ்கொயர் மால், உல்சூர் ஏரி, இந்தியன் அறிவியல் கழகம், இனோவேட்டிவ் திரைப்பட நகரம், கமர்ஷியல் தெரு, காளை கோயில், கப்பன் பூங்கா, லால் பாக் பூங்கா, பெங்களூரு அரண்மனை, பிரமிட் பள்ளத்தாக்கு, வொண்டர்லா, விகாச, விதான சௌதா ஆகியன கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களாகும்.

 ஆர்ட் ஆஃப் லிவிங் இண்டர்நேஷனல் செண்டர்

ஆர்ட் ஆஃப் லிவிங் இண்டர்நேஷனல் செண்டர்

பெங்களூரிலிருந்து 21 கி.மீ தொலைவில் கர்நாடகத்தின் கிராமியப்பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியால் 1981ல் இது துவங்கப்பட்டது. இந்த ஆசிரமத்தின் லட்சியம் மன அழுத்தங்கள் அற்ற, வன்முறைகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதாகும்.

எம். சின்னஸ்வாமி ஸ்டேடியம்

எம். சின்னஸ்வாமி ஸ்டேடியம்

ஐபிஎல் போட்டிகள் உள்பட பல சர்வதேச போட்டிகள் நடைபெறும் சின்னச்சாமி ஸ்டேடியம் பெங்களூரில் அமைந்துள்ளது பலருக்கு தெரிந்திருக்கும். அங்கு எப்படி செல்வது தெரியுமா?

பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 20 நிமிடத் தொலைவில் சின்னச்சாமி ஸ்டேடியத்துக்கு செல்லமுடியும்.

மெஜஸ்டிக்கிலிருந்து எஸ்சி சாலையில் வலப்புறம் திரும்பி, விஜயா கபேவை அடுத்த இடப்புறம் திரும்பவேண்டும். அது இரண்டாவது குறுக்கு சாலை. அது தொடர்ந்து சென்று ராமச்சந்திரா சாலையில் இணையும். பின் மாளிகை சாலை எனப்படும் பேலஸ் ரோட்டில் வலப்புறம் திரும்பி (இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.) தபால் நிலைய சாலையை (போஸ்ட் ஆபிஸ் சாலை) அடையவேண்டும். கே ஆர் சர்க்கில் ரவுண்டானாவில் திரும்பி, அம்பேத்கர் வீதி வழியாக சென்றால் கப்பன் பூங்காவை அடையலாம்,. அதே சாலையில் அமைந்துள்ளது எம் சின்னச்சாமி ஸ்டேடியம்.

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ், உத்தரகண்ட் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள இந்த சிவன் சிலை, கங்கை நதியின் கரையில் கண்கள் மூடிய நிலையில் தியானம் செய்வது போன்று காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பார்மாத் நிகேதன் ஆஸ்ரமத்தில் இருப்பதால் சிலையின் கம்பீரமும், ஆஸ்ரமத்தின் அமைதியும் நம்மை வேறொரு லோகத்துக்கு கொண்டுசென்றுவிடும். 14 அடி உயர இந்த சிலையை கொண்ட பார்மாத் நிகேதன் ஆஸ்ரமதில் பக்தர்கள் தங்குவதற்காக 1000 அறைகள் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


மதுரையிலிருந்து டேராடூன் செல்லும் அதிவிரைவு வண்டி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையிலிருந்து செல்கிறது.

பொதுகட்டணம் 470ரூபாயும், தூங்கும் வசதி கொண்ட கட்டணம் 820ரூபாய் ஆகும்.

மேலும் செயின் டிரெய்ன் எனப்படும் சங்கிலி ரயில்கள் சென்னையிலிருந்து டெல்லி உள்பட மற்ற நகரங்களுக்கு சென்று ஏறும் வகையில் உள்ளன.

சுற்றியுள்ள இடங்கள்

சுற்றியுள்ள இடங்கள்

நீல்கந்த் மகாதேவி கோயில், ஸ்வர்க நிவாஸ் கோயில், ஸ்வர்க ஆசிரமம், ஓம்கிராநந்தா ஆசிரமம், மலையேற்றம், மவுண்டைன் பைக்கிங், கௌடியாலா, கீதாபவன், குஞ்சாபுரி தேவி கோயில், காளிகாம்பிளிவாலே பஞ்சாயத்தி ஷேத்ரா, கடைவீதிகள், ரிஷிகுண்டம், ராம் ஜூலா, ராஜாஜி தேசியப் பூங்கா, தேரா மன்ஜில், திரிவேணி மலை, லட்சுமணன் கோயில், பார்மாத் நிகேதன், பாரத் கோயில் என நிறைய இடங்கள் உள்ளன.

வெள்ளை நீர் சவாரி

வெள்ளை நீர் சவாரி

ரிஷிகேஷ் செல்லும் மக்களால் பெரிதும் விரும்பப்படும் சாகச விளையாட்டாக வெள்ளை நீர் சவாரி விளங்குகிறது. கங்கை நதியில் வேகமான மற்றும் மிதமான நீர் வரத்துகளும் ஒருங்கே அமைந்திருப்பதால் அனுபவமுள்ளவர்களும், இல்லாதவர்களும் கூட இந்த விளையாட்டில் ஈடுபடலாம். இங்கேயே கிடைக்கும் தேவையான உபகரணங்களையும், அனுபவமுள்ளவர்களின் உதவியையும் சுற்றுல்லாபயணிகள் உபயோகித்துக்கொள்ளலாம். உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் இவ்விளையாட்டில் இருக்கும் சாகசத்தை அனுபவிக்க ஏராளமான பயணிகள் இங்கே குவிகிறார்கள்.

லக்‌ஷ்மண் ஜூலா

லக்‌ஷ்மண் ஜூலா

450 அடி உயரத்தில் அமைந்திருக்கும் தொங்கு பாலமான லக்‌ஷ்மணா பாலத்தில் இருந்து பார்த்தால் ரிஷிகேஷில் இருக்கும் கோவில்கள், ஆசிரமங்கள், நதிகளின் அழகை கண்டுகளிக்கலாம். ஆரம்பத்தில் சணல் பாலமாக இருந்ததை 1939ல் இரும்பு தொங்கு பாலமாக மாற்றி அமைத்தார்கள். ராமனின் தம்பி லட்சுமணன் இந்த பாலத்தில் கங்கை நதியைக் கடந்ததாக நம்பப்படுகிறது. அப்போதிருந்து இப்பாலம் லக்‌ஷ்மண ஜூலா பாலம் என வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற சுவர்க்க ஆசிரமம் இந்த பாலத்தில் இருந்து 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 1980ல் லக்‌ஷ்மண ஜூலாவிற்கு அருகில், அதே தோற்றத்தில் கட்டப்பட்ட ராம் ஜூலா எனும் பாலம் பிரபலமான சுற்றுலாதளமாக அறியப்படுகிறது.

முருதேஷ்வர்

முருதேஷ்வர்

முருதேஸ்வர், கர்நாடகா அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான். 123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

பெங்களூருவிலிருந்து 301கிமீ தொலைவில் அமைந்துள்ளது முருதேஷ்வர் ஆலயம். இந்த பயணத்துக்கு வெவ்வேறு வழிகளில் ஏறக்குறைய 5 முதல் ஆறு மணி நேரம் ஆகின்றது.

ரயில் பயணத்தை விரும்புபவர்களுக்காக சென்னை மங்களூர் வழித்தடத்தில் தினசரி ரயில்களாக, எக்மோரிலிருந்து மங்களூர் விரைவு வண்டி பத்து பதினைந்து மணி அளவிற்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் சென்ட்ரலிலிருந்து மேற்குத்தொடர்ச்சி விரைவுவண்டி, மங்களூர் மெய்ல், மங்களூர் விரைவு வண்டி ஆகியன இயக்கப்படுகின்றன.

 சுற்றியுள்ள இடங்கள்

சுற்றியுள்ள இடங்கள்

முருதேஷ்வர் ஆலயத்துக்கு அருகில் காணவேண்டிய இடங்களாக முருதேஸ்வர் கடற்கரை, மிகப் பெரிய சிவன் சிலை ஆகியன உள்ளன. இதைத்தொடர்ந்து கொஞ்சம் தொலைவில், சிக்மகளூரு, சிருங்கேரி, தர்மஸ்தலா, தீர்த்தஹல்லி உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.

அகும்பே

அகும்பே


அரபிக் கடலில் சூரியன் அஸ்த்தமனமாகும் கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமான ஊர் அகும்பே. அகும்பே மால்நாடு பகுதியில் உள்ள மகாகவி குவெம்புவின் சொந்த ஊரான தீர்த்தஹள்ளி தாலுக்காவில் அமைந்துள்ளது. அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாகும்.

அகும்பேவிற்கு அருகில் உள்ள ஓநேக் அபி அருவி, பர்கானா மற்றும் குஞ்சிகள் அருவி, ஜோகிகுண்டி, கூட்லு தீர்த்த அருவி போன்றவை சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய அருவிகள். உடுப்பி ரயில் நிலையம் அகும்பேவிர்க்கு மிக அருகிலேயே இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் சுலபமாக இலக்கை வந்தடையலாம்.

 சிருங்கேரி

சிருங்கேரி

துங்க நதிக்கரையின் கரையில் அமைந்துள்ள அமைதியான இந்த நகரில்தான் ஆன்மீக குரு ஆதி சங்கராச்சாரியார் தன் முதல் மடத்தை நிறுவினார். அதிலிருந்து எழில் கொஞ்சும் இந்த சிருங்கேரி நகரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் முழுதும் விஜயம் செய்யும் ஒரு புனிதத்தலமாகவும் இருந்து வருகிறது.

வித்யாஷங்கர் ஆலயத்தில் 12 தூண்கள் 12 கிரக ராசிகளை ஒத்திருக்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது பிரசித்தம். மேலும் இந்த ஆலயம் வானியல் தத்துவங்களை ஒட்டி கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஜபல்பூர்

ஜபல்பூர்


மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரத்தில் உள்ள கச்னார் எனும் இடத்தில் இந்த சிவன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 76 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருப்பதுடன், கண்கள் மூடிய நிலையில் சாந்தசொரூபராக சிவபெருமான் காட்சி தருவது நம் கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்யும். மேலும் இச்சிலை அமைந்திருக்கும் கச்னார் பகுதி சில மாதிரி ஜோதிர்லிங்கங்களுக்காகவும் பிரபலம்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

நாக்பூரிலிருந்து ஜபல்பூர் 280கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

ரயிலில் பயணம் செய்யவிரும்புபவர்களுக்கு சென்னை எக்மோரிலிருந்து ரயில்கள் உள்ளன. மேலும் ராமேஸ்வரம் - மந்தியாத், ஷ்ரத்தா சேது விரைவு வண்டி, சங்கமித்ரா அதிவிரைவு வண்டி, எஸ்வந்த்பூர் - பாடலிபுத்ரா விரைவு வண்டி, பாக்மதி விரைவு வண்டி, கங்கா காவேரி விரைவு வண்டி ஆகியன இயக்கப்படுகின்றன.

கட்டாயம் பார்க்கவேண்டிய சுற்றுலாத் தளங்கள்

கட்டாயம் பார்க்கவேண்டிய சுற்றுலாத் தளங்கள்

இங்கு வருகை தரும் பயணிகளுக்கு, கட்டாயம் பார்க்க வேண்டிய, மிகவும் பிரசித்தி பெற்ற ஏராளமான சுற்றுலாத் தலங்களை ஜபல்பூர் விருந்தாக்குகிறது. சௌஸாத் யோகினி கோயில், பிஸான்ஹரி கி மடியா மற்றும் திரிபுரசுந்தரி கோயில் ஆகியன இந்நகரில் காணப்படும் முக்கியமான சில கோயில்களாகும். மற்றுமொரு பிரபலமான சுற்றுலாத் தலமான தூம்னா இயற்கை சரணாலயம், விலங்குகள் மேல் அபிமானம் கொண்டோரை வருடம் முழுவதும் ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.

Swapnil.David

 மதன் மஹால்

மதன் மஹால்

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள மதன் மஹால், 11 ஆம் நூற்றாண்டு ஏடியில் ஜபல்பூரை மிக நீண்ட காலம் ஆண்ட ஆட்சியாளர்களின் வாழ்க்கை முறைகளின் சாட்சியாக நிற்கின்றது. நகரத்திலிருந்து சில கி.மீ. தொலைவில், மலையுச்சியில் அமைந்துள்ள மதன் மஹால், ராஜா மதன் சிங் என்ற மன்னரால் கட்டப்பட்டுள்ளது. சர்வ வல்லமை பொருந்திய கோண்ட் ஆட்சியாளராக விளங்கியவரும், ராஜாவின் தாயாருமாகிய ராணி துர்காவதியுடனும் தொடர்புடையது இக்கோட்டை. தற்போது சிதிலமடைந்து காணப்படும் இக்கோட்டை, ராணி துர்காவதியின் புகழ் வெளிச்சத்தையும், வலுவான தளவாடங்களைக் கொண்டு விளங்கிய அவர்தம் நிர்வாகம் மற்றும் போர்ப்படைகளைப் பற்றியும் பறை சாற்றுகின்றது. அரச குடும்பத்தினரின் பிரதான அந்தப்புரம், போர் அறைகள், சிறிய நீர்த்தேக்கம் மற்றும் குதிரை லாயம் ஆகியவை இங்கு கட்டாயமாக பார்த்து ரசிக்க வேண்டியவைகளாகும்.

 துவாதர் நீர்வீழ்ச்சி

துவாதர் நீர்வீழ்ச்சி


துவாதர் நீர்வீழ்ச்சி ஜபல்பூர் மட்டுமல்லாது மத்தியப்பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. சுமார் 10 அடி உயரத்திலிருந்து பாயும் இந்த நீர்வீழ்ச்சி, நர்மதா நதியிலிருந்து உருவான ஒரு அழகிய நீர்வீழ்ச்சியாகும். இந்த எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி, பிரபலமான பளிங்குக்கல் பாறைகளின் வழியே பொங்கிப் பாய்ந்து, தொலைதூரத்திலிருந்தும் கேட்கக்கூடிய பெரும் உறுமலுடன் நீர்வீழ்ச்சியாகப் பரிமளிக்கிறது. திடும் என நீர்வீழ்ச்சியாக கீழ் நோக்கிப் பாய்வதனால், இது துவா என்றழைக்கப்படும் பனிமூட்டம் போன்றதொரு புகைப்படலத்தை உருவாக்குகிறது. அதனாலேயே இதற்கு, துவாதர் நீர்வீழ்ச்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பீஜாப்பூர்

பீஜாப்பூர்

உலகின் உயரமான சிவன் சிலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த சிவன் சிலை பீஜாப்பூரில் உள்ள ஷிவாபூர் எனுமிடத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிவன் சிலை 85 அடி உயரமும், 1500 டன் எடையும் கொண்டது. இதன் காரணமாக இவ்வளவு பெரிய சிவன் சிலையை செய்வதற்கு 13 மாதங்கள் பிடித்திருக்கிறது.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

பெங்களூரிலிருந்து 520கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நகரம். அது மிகவும் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகராகும். தற்போது விஜயநகரா என்று அழைக்கப்படுகிறது.

ரயில் பயண விரும்பிகள் சென்னையிலிருந்து சோலாப்பூர் சந்திப்புக்கு சென்று பின் அங்கிருந்து பீஜாப்பூருக்கு பயணிக்கவேண்டும்.

காணவேண்டிய இடங்கள்

காணவேண்டிய இடங்கள்


மாலிக் இ மைதான், உப்ரி புரூஜ், ஆஸார் மஹால், இப்ராஹிம் ரௌஸா, கோல் கும்பாஸ், கொத்தளம், ககன் மஹால், பரா கமன், ஜூம்மா மசூதி, சந்த் பாவ்டி என நிறைய இடங்கள் காண இருக்கின்றன.

நம்ச்சி

நம்ச்சி


நம்ச்சி என்றால் 'வானுயரம்' என்று அர்த்தமாம். அதேபோல அந்த நகரத்திலுள்ள சித்தேஷ்வர்தாம் எனும் இடத்தில் வானை முட்டும் உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக 103 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த சிவன் சிலை. மேலும் இந்த சிலை அமையப்பெற்றிருக்கும் சித்தேஷ்வர்தாம் பகுதியில் 12 ஜோதிர்லிங்கங்களின் மாதிரி வடிவங்கள் உள்ளன. அதோடு கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தை இந்த இடத்திலிருந்து பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


பேருந்தில் சென்றால் 36மணி நேரம் ஆகும். நிறைய தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.

ரயிலில் செல்வதென்றால், டார்ஜிலிங்க் சென்று அங்கிருந்து சிக்கிம் செல்லவேண்டும்.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X