
நம்ப முடிகிறதா உங்களால். கி.மு 326 ஆம் ஆண்டு பாதி உலகத்தை கைப்பற்றிய பின்னர் தனது கனவு தேசமான இந்தியாவை படையெடுத்து வந்த அலெக்சாண்டரின் படையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் படை வீரர்களுக்கு மேல் இருந்திருகின்றனர். அவர்களில் ஒரு அணி மட்டும் அவர்களின் சொந்த நாடான கிரேக்கத்திற்கு திரும்பி செல்லாமல் இந்தியாவிலேயே தங்கி விட்டார்களாம்.

Photo: Vikram Singh
அவர்களின் சந்ததிகள் என்று தங்களை அழைக்கும் ஒரு சிறு பழங்குடியின மக்கள் இன்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் வெளி உலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட மலானா என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

Photo: Sajith T S
வெளி ஆட்களுக்கு இங்கே வர ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. அந்த கிராமத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள் அதனால் தீண்டதாகதவர்கள் என இங்கு வாழும் மக்கள் கருதுவதால் இந்த கிராமத்தில் உள்ள எந்த பொருளையோ, சுவற்றையோ வெளியாட்கள் தொட அனுமதி இல்லை.
மேலும் அப்படி தவறி செய்தால் அதற்க்கு தண்டனையாக ஒரு பெரும் தொகையை அபராதமாக செலுத்தி ஆடு ஒன்றை பலி கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட பாதை தவிர வேறெதிலும் வெளியாட்கள் நடக்க கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இங்கே உண்டு. அதனால் இங்கே செல்பவர்கள் மிக கவனமாக இருப்பது அவசியம்.

Photo: RuckSackKruemel
வெளி உலகத்துடன் தொடர்பற்ற இந்த கிராமம் சந்தரகனி மற்றும் டியோடிப்பா ஆகிய மலைகளுக்கு நடுவே மாலான நதிக்கரையில் அமைந்திருக்கிருக்கும் இங்கு தான் உலகின் முதல் குடியரசு ஆட்சி முறை கடைபிடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.

Photo: RuckSackKruemel
தங்களது மொழி, உருவ அமைப்பு, பண்பாடு என சகல விதத்திலும் மலானா கிராமம் இதற்க்கு அருகில் இருக்கும் மற்ற பழங்குடி கிராமத்தினரிடம் இருந்து மாறுபட்டே இருக்கிறது. இந்த கிராமத்தில் கனாஷி என்னும் மொழி பேசப்படுகிறது.
அருமையான இயற்க்கை சூழலுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த கிராமத்திற்கு கொஞ்சம் துணிவும், விசித்திரங்களை பற்றி அறிந்துகொள்ள ஆர்வமும் இருந்தால் நிச்சயம் ஒரு முறை சென்று வாருங்கள்.



Click it and Unblock the Notifications





