Search
  • Follow NativePlanet
Share
» »காவிரில அணை கட்டப்போறதா சொல்ற இந்த மேகதாது எங்க இருக்கு தெரியுமா

காவிரில அணை கட்டப்போறதா சொல்ற இந்த மேகதாது எங்க இருக்கு தெரியுமா

PC: Sugan Raj S

மேகதாது கர்நாடக மாநிலத்தின் அழகிய அதே சமயம் அதிக பிரபலமில்லாத சுற்றுலா பகுதி. பெங்களூருவுக்கு மிக அருகில் இருக்கும் இந்த இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டதுதான் தாமதம் இந்திய அளவில் பேசப்படும் பெயராகிவிட்டது. ஆதியிலிருந்தே தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் தண்ணீர் பிரச்சனை. இதை தமிழ், கன்னட வெறியர்கள் சிலர் மொழிப்பிரச்சனையாக உருவாக்கி குளிர் காய்ந்து வருகின்றனர். ஆனால் தமிழ் மக்களோ கன்னட மொழி மக்களுடன் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர். இன்னொரு மொழிப் பிரச்சனையை உருவாக்க தகுந்த சூழ்நிலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

வரும் ஆனா வராது என்று வடிவேலு காமெடி போல ஏற்கனவே தவித்துக்கொண்டு காவிரி நீரை எதிர்பார்த்திருக்கும் பெருமக்களுக்கு இன்னொரு இடியாக மேகதாது அணை வந்து நிற்கிறது. இது எந்த இடத்தில் வரப்போகிறது, இதனால் கர்நாடகத்துக்கு என்னென்ன பலன்கள், சுற்றுலா அம்சங்கள் குறித்து காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

தமிழகத்துக்கு ஆப்பு கர்நாடகம் பூரிப்பு

ஓடும் ஆற்றில் அணையைக் கட்டினால், அணையைத் தாண்டி நீர் வர அணை நிரம்பவேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.. அணை எவ்வளவு உயரம், எத்தனை கொள்ளளவு, எப்போது நிரம்பி எப்போது தமிழகத்துக்கு தண்ணீர் வரும் என்பதே பெருமக்களின் எதிர்பார்ப்பு. எனினும் இது கர்நாடக முக்கியமாக பெங்களூர் வாசிகளுக்கு சிறந்த வரப்பிரசாதமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதையேத்தான் கர்நாடக அரசும் சொல்கிறது.

எங்குள்ளது

ராமநகரா மாவட்டத்துக்கு உட்பட்ட கனகபுரா எனும் பகுதியில் அமைந்துள்ளது மேகதாது எனும் அழகிய சுற்றுலாத் தளம். இதன் சிறப்பே என்ன என்றால், இப்படி ஒரு அழகிய சுற்றுலாத் தளம் குறித்து உள்ளூர் மக்கள் ஒரு சிலரைத் தவிர்த்து பலருக்கு தெரியாமலிருந்ததுதான். இப்போது இந்தியாவே பேசும் பொருளாகிவிட்டது மேகதாது. இதன் சுற்றுலா குறித்தும், அழகியல் அம்சங்கள் குறித்தும் தொடர்ந்து காண்போம்.

மேகதாது அப்படின்னா என்ன?

மேகதாது அல்லது மேகேதத்து என அழைக்கப்படும் இவ்விடம் சுற்றுலா தளமாக பிரபலமடைந்துள்ளது. இங்கே காவேரி நதியானது குறுகிய அழகுடன் அருவிகளும் காணப்படுகிறது. கன்னட மொழியில், மேகதாது என்பதற்கு அர்த்தமாக 'ஆடுகளின் துணிகரம்' என பொருள்தர, அர்த்தமாக ஆடானது அடுத்த கரைக்கு எளிதாக தாவக்கூடும் என சொல்லப்படுகிறது. இந்த சுற்றுலா தளத்திற்கு வருடந்தோரும் பலரும் வந்து செல்கின்றனர்.

 பெங்களூரு - மேகதாது : வழித்தடம் 1

பெங்களூரு - மேகதாது : வழித்தடம் 1

பெங்களூருவிலிருந்து மேகதாதுவிற்கான சாலை பயணமாக கனகப்புரா சாலையானது வழிகளின் வரைப்படமாக காணப்படுகிறது.

பெங்களூரு - கனகப்புரா - மேகாதாதுவானது எளிதான வழியாகவும் பலரும் வழக்கமாக பயன்படுத்தும் வழியாக அமைகிறது.

நீங்கள் இவ்வழியாக கனகப்புரா பிரதான சாலை வழியாகவும், அதன்பின்னர் நம் பயணமானது தேசிய நெடுஞ்சாலை 948 வழியாகவும் தொடரும். இந்த வழியானது கக்களிப்புரா - ஜக்காசான்ட்ரா - கனகப்புரா - மாலவள்ளி - சர்கூர் - மேகதாதுவாக அமைகிறது.

கனகப்புரா சாலையானது இந்த நாளில் கூட்டமாக காணப்பட, அதனால் கூட்ட நெரிசலை நாம் எதிர்க்கொள்ள தயாராகவும் இருக்க வேண்டும். அத்துடன் ஒட்டுமொத்த தூரமாக 194 கிலோமீட்டரும் உள்ளது.

 பெங்களூரு - மேகதாது : வழித்தடம் 2

பெங்களூரு - மேகதாது : வழித்தடம் 2

வழி வரைப்படமாக பெங்களூருவிலிருந்து மேகதாது சாலை வழிப்பயணம் அமைய, வழியாக மைசூருவும் அமைந்துள்ளது.

மற்ற பிற வழிகளாக பெங்களூரு - பிடாடி - ராமநகரா - மத்தூரு - மாலவள்ளி - சிவானசமுத்ரம் - மேகதாதுவானது அமைந்துள்ளது.

இந்த வழியானது தேசிய நெடுஞ்சாலை 275 மற்றும் அதன்பின்னர் தேசிய நெடுஞ்சாலை 948 வழியாகவும் இணைய, மாலவள்ளி நோக்கியும் செல்லக்கூடும்.

எப்போது செல்லலாம்

டிசம்பர் மாதம் மேகதாதுவைக் காண மிகச்சிறந்த காலமாகும். அக்டோபரில் தொடங்கும் சீசன் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மிக அழகிய விரும்பத்தக்க சூழ்நிலையாக காணப்படும். அதிலும் டிசம்பரில் கடுங்குளிரைப் பொருட்படுத்தாது ஒரு பைக் ரேஸ் சென்றால் அதைவிட அருமையான சுற்றுலா ஒன்று இருக்காது.

போக்குவரத்து வசதிகள்

கர்நாடக மற்றும் பெங்களூர் மாநகர பேருந்துகள் பல கனகபுரா வரை இயக்கப்படுகின்றன. இவை மிக எளிமையாக குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் கிடைக்கும் வகையில் இயங்கி வருகின்றன. மேலும் கனகப்புராவிலிருந்து எப்படி செல்வது என்பதை காண்போம்.

 கனகப்புரா - மேகதாது

கனகப்புரா - மேகதாது

கனகப்புராவிலிருந்து மேகதாது 1 மணி நேர பயணம் செய்து அடையும் தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடம்தான் சரியாக தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இதன் பின்னர் காவிரி ஆறு தமிழக - கர்நாடக எல்லையில் மாறி மாறி எல்லைகடந்து பாய்ந்துகொண்டிருக்கிறது.

சுவையான மீன்கள்

அதிக சுவையுடன் கூடிய மணமணக்கும் ஆற்று மீன்கள் இங்கு பொறித்து சிலர் வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். காலை சற்று சீக்கிரமாக பயணத்தைத் தொடங்கினால் 10 மணிக்கெல்லாம் இந்த இடத்தை அடைந்துவிடமுடியும். இது மிகவும் அழகிய பகுதி.

மேகதாதுவில் பொழுதுபோக்கு

மேகதாது என்னவோ ஒருமுறை பார்ப்பதற்கு மட்டும் என நினைத்துவிடவேண்டாம். அப்படியென்றால் நீங்கள் இதனை குறைத்து மதிப்பிட்டிருப்பதாக பொருள். நீங்கள் இங்கு தாராளமாக இரண்டு மணி நேரங்கள் வரை செலவிடலாம். நீங்கள் களைப்பதுகூட உங்களுக்கு தெரியாது. அந்த அளவுக்கு மகிழ்ந்திருப்பீர்கள்.

கவனத்துடன் இருங்கள்

இங்கு நீரைக் கண்டதும் கால்கள் தானாகவே உள் குதிக்க தூண்டும். ஆனால் இங்கு துணிகள் உடைமாற்ற மறைவான இடங்களைத் தவிர வேறு எந்த வசதியும் இல்லை. பெண்களுக்கு சற்று சிரமமான விசயம் இது. மேலும் இங்கு சற்று தூரம் செல்ல ஆழத்தில் புதைந்திடும் அல்லது வழுக்கும் தன்மையுடன் காணப்படும். பாறைகளிலும் கவனம் தேவை.

பேருந்து பயணம்

இந்த சங்கமா எனும் பகுதிக்கு பேருந்து வசதிகளும் இருக்கின்றன. இது ஒரு சிறிய வகை ஆறு. இங்கு மீன்கள் சமைத்து விற்கப்படுகிறது. மேலும் இந்த பயணம் 10 நிமிடங்கள் வரை எடுக்கும்.

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மேகதாது

மேகதாதுவின் அழகிய புகைப்படங்கள்

Read more about: travel karnataka bangalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more